Results 1 to 11 of 11

Thread: ஒரு கன்னிப் பெண்ணின் புலம்பல் - கவிதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    ஒரு கன்னிப் பெண்ணின் புலம்பல் - கவிதை

    ஐந்து மணிக்கு வேலை முடிந்து ஆறு மணிக்கு வீடு வந்தால்
    - நான் பத்தாம் பசலியாம்

    மொபைல் போனில் இரவு முழுக்க ஆண்களுடன் பிதற்றாவிட்டால்
    - நான் பத்தாம் பசலியாம்

    ஆண்களின் ஆடையணிந்து அங்கங்கே கிழித்துக் கொள்ளவில்லையென்றால்
    - நான் பத்தாம் பசலியாம்


    ஆடை மாற்றுவது போல் ஆடவரை மாற்றாவிட்டால்
    - நான் பத்தாம் பசலியாம்

    உதட்டுக்கு மேல் சாயம் போட்டு தினம் நடிகையாவில்லையென்றால்
    - நான் பத்தாம் பசலியாம்


    ஆடவர் போல் மீசை வளர்த்து இவர்கள் போகும் பார்லர் போகவில்லையென்றால்
    - நான் பத்தாம் பசலியாம்

    கற்ப்பத்தை தினம் கலைத்து கருவறையை பிணவறையாக மாற்றவில்லையென்றால்
    - நான் பத்தாம் பசலியாம்


    கட்டினவன் ஒருவனிருக்க கண்டவனுடன் உறவு கொள்ளும் வேசியாகாவிட்டால்
    - நான் பத்தாம் பசலியாம்

    ஏனடி பெண்ணாக நீ இல்லை என்று கேட்டால் என்னையே நீ பெண்ணா எனும் இவர்களுக்கு
    - என்றும் நான் பத்தாம் பசலிதான்!

    அன்புடன்,

    மோகன்
    http://www.leomohan.net
    http://tamilamudhu.blogspot.com

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். பத்தாம் பசலின்னா என்ன?

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    பத்தாம் பசலி என்றால் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவர் அல்லது 10ம் நூற்றாண்டின் கருத்துக்கள் கொண்டவர். பழமைவாதி எனலாம்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அட... இதுதான் பத்தாம் பசலியா... புது விஷயம் கற்றுக் கொண்டேன்.
    நன்றி.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    நான் கூட பத்தாம் பசலின்னா என்னனு அறிந்திருக்கவில்லை... இப்போது அறிந்து கொண்டேன் நன்றி.
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பல அப்பட்டமான உண்மைகள்
    அழகான கவிதை.......

    படித்தேன்............. ரசிக்கவில்லை

    உங்க கனவு பெண்கள் ரொம்பதான் அட்வான்சா இருகாங்க.....


    பழமைவாதி....(டூப்பு)
    ....ஓவியா..
    Last edited by ஓவியா; 21-11-2006 at 05:27 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    மோகன், குணாக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
    இது மோகன் எழுதிய கவிதையா இல்லை மாலினி(மேற்கே செல்லும் விமானம்)எழுதிய கவிதையா?
    சும்மா தான் கேட்டேன் மோகன்...

    நம் இந்திய பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்துமா?
    நம்ம பொண்ணுங்க எல்லாம் நெஜமா இவ்வளவு அட்வான்ஷா ஆகிடாங்களா?
    சுகுணா ஆனந்தன்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by guna View Post
    மோகன், குணாக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
    இது மோகன் எழுதிய கவிதையா இல்லை மாலினி(மேற்கே செல்லும் விமானம்)எழுதிய கவிதையா?
    சும்மா தான் கேட்டேன் மோகன்...

    நம் இந்திய பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்துமா?
    நம்ம பொண்ணுங்க எல்லாம் நெஜமா இவ்வளவு அட்வான்ஷா ஆகிடாங்களா?
    ஹா ஹா. குணா, இது மாலினி அப்படிங்கற கதாபாத்திரம் மூலம் மோகன் எழுதியது. இந்த கவிதை இந்த கதைக்கு முன்பே எழுதி விட்டேன். இந்த கவிதைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் மாலினி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  9. #9
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    நல்லாருக்குய்யா ஒங்க பத்தாம் பசலி......


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் guna's Avatar
    Join Date
    09 Oct 2006
    Location
    Malaysia
    Posts
    249
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    ஹா ஹா. குணா, இது மாலினி அப்படிங்கற கதாபாத்திரம் மூலம் மோகன் எழுதியது. இந்த கவிதை இந்த கதைக்கு முன்பே எழுதி விட்டேன். இந்த கவிதைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் மாலினி.
    கவிதையும் நன்றாக இருந்தது, கவிதைக்காக மோகன் உருவாக்கின கதாபாத்திரமும் நன்றாக இருந்தது..
    வாழ்துக்கள் மோகன்..
    சுகுணா ஆனந்தன்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by guna View Post
    கவிதையும் நன்றாக இருந்தது, கவிதைக்காக மோகன் உருவாக்கின கதாபாத்திரமும் நன்றாக இருந்தது..
    வாழ்துக்கள் மோகன்..
    மிக்க நன்றி குணா. முழு புத்தகத்தையும் நம் மன்றத்தின் இ-புக்ஸ் ஷேர் பகுதியில் ஏற்றியுள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •