Results 1 to 8 of 8

Thread: இழப்புகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
  Join Date
  05 Apr 2003
  Location
  துபாய்
  Posts
  3,203
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  47
  Uploads
  0

  இழப்புகள்

  இழப்புகள்......................

  ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு
  வாழ்வில் இழந்து போன
  தருணங்களின் நினைவுகளை
  ஒரு பசு மாட்டினைப் போன்று
  அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

  வளையம் வளையமாக
  விரிந்து
  மேலே மேலே போய்க்
  கரைந்து
  கூரையை
  முட்டி முட்டித் திரும்பும்
  புகையைப் போலத் திரும்புகிறது.

  கடந்த காலக் காதலியின்
  நினைவுகளைப் போல
  கனவுச் சுவற்றில்
  மோதி மோதி
  எதிரொலிக்கிறது.

  தூங்க முயற்சித்து முயற்சித்து
  கடைசியில்
  தூங்காமலே போய்விடுவதைப் போல
  விரட்ட முயற்சித்து முயற்சித்து
  விரட்ட முடியாமலே விட்டுவிட்டேன் -
  இழந்து போன தருணங்கள்
  தந்த தோல்விகளை.

  வெற்று வேடிக்கையாய்
  ஜன்னல் வழியே
  வீதி நோக்கினேன் -

  ஊரைக் கழுவிட்ட
  திருப்தியில்
  மேக வேலைக்காரி
  விலகிப் போன மாலை.

  கழிந்த நீரில்
  கப்பல் ஒன்று விட்டு
  கண்டு களித்து
  நின்றது குழந்தை
  சுதேசிக் கப்பல் விட்ட
  சிதம்பரனாரைப் போல.

  முட்டி மோதி கவிழ்ந்து
  வெறும் காகிதமாக விரிந்து
  சிறிது தூரம் போய்
  கரையில் ஒதுங்கியது
  கப்பல்.

  காலமோ
  கருக்கிட்டுக் கொண்டிருந்தது.
  மலை வாயிலில்
  மாலைச் சூர்யன்
  இரத்தக் காயம்பட்டு
  வீழ்ந்து மூழ்கிப் போனான்.

  நீரில் நனைந்து
  நைந்து போன
  காகிதம் கொண்டு
  புதிதாகக் கப்பல் செய்ய
  ஆர்வத்துடன் ஓடினார் -
  சின்னச் சிதம்பரனார்.

  'கப்பல் செஞ்சு விளையாட
  காத்துக் கருப்பு அலையும்
  கருக்கல் நேரந்தான்
  கிடைச்சதா, உனக்கு?'
  பளார், பளாரென்று
  நாலைந்து முதுகில் விழ
  இரைந்து அழுதது குழந்தை.

  அழுதது -
  விழுந்த அடியின் வலியினாலா?
  கப்பல் விட்டு விளையாட
  கிடைத்த சந்தர்ப்பம்
  பேணி வளர்க்கிறேனென்ற பேரில்
  பிடுங்கப் பட்டதாலா?

  எது எப்படியோ,
  இந்தக் கவிதையை
  உங்கள் குழந்தையும்
  ஒரு நாள் எழுதக் கூடும்
  ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு.....
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:42 PM. Reason: யுனிக்கோடாக்கல்

 2. #2
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  வியாபார தலைநகரம&
  Posts
  920
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  நண்பனே ... அருமையாக அனுபவித்து எழுதியுள்ளீர்.
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:43 PM. Reason: யுனிக்கோடாக்கல்

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Apr 2003
  Location
  Indraprastham
  Posts
  2,572
  Post Thanks / Like
  iCash Credits
  5,136
  Downloads
  1
  Uploads
  0
  குழந்தைகளை அடிப்பதை என்றுதான் நிறுத்தப் போகிறோமோ?

  நண்பனே, கவிதையில் கூட குழந்தைகள் அடிபடுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; மன்னிக்கவும்.

  ===கரிகாலன்
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:43 PM. Reason: யுனிக்கோடாக்கல்
  பூவார் சோலை மயிலாட
  புரிந்து குயில்கள் இசைபாட
  நடந்தாய் வாழி காவேரி

 4. #4
  அனைவரின் நண்பர் rambal's Avatar
  Join Date
  30 Mar 2003
  Location
  அன்பால் ஆன உலகம்
  Posts
  1,112
  Post Thanks / Like
  iCash Credits
  10,596
  Downloads
  0
  Uploads
  0

  நினைவுகளை
  ஒரு பசுமாட்டினைப் போன்று
  அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்...


  இந்த வரிகளில் இருக்கும் உருவகம்..


  ஊரைக்கழுவிவிட்ட
  திருப்தியில்
  மேக வேலைக்காரி..


  இதில் இருக்கும் கற்பனை...
  கடைசியில் இந்தக் கவிதையில்
  சொல்லியிருக்கும் கருத்து..

  நண்பனே.. தமிழ் விளையாடுகிறது..
  அடிக்கடி காணாமல் மட்டும் போய்விடாதீர்கள்.. (இது ஒரு அன்பு வேண்டுகோள்)
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:44 PM. Reason: யுனிக்கோடாக்கல்

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,295
  Downloads
  38
  Uploads
  0
  எவ்வளவு நீளமான கவிதை...

  தமிழில் தங்கள் விளையாட்டு வெகு அருமை!!
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:44 PM. Reason: யுனிக்கோடாக்கல்
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
  Join Date
  05 Apr 2003
  Location
  துபாய்
  Posts
  3,203
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  47
  Uploads
  0

  நினைவுகளை
  ஒரு பசுமாட்டினைப் போன்று
  அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்...


  இந்த வரிகளில் இருக்கும் உருவகம்..


  ஊரைக்கழுவிவிட்ட
  திருப்தியில்
  மேக வேலைக்காரி..


  இதில் இருக்கும் கற்பனை...
  கடைசியில் இந்தக் கவிதையில்
  சொல்லியிருக்கும் கருத்து..

  நண்பனே.. தமிழ் விளையாடுகிறது..
  அடிக்கடி காணாமல் மட்டும் போய்விடாதீர்கள்.. (இது ஒரு அன்பு வேண்டுகோள்)
  காணாமல் போகவில்லை .....

  modem failure..... trucker's strike.... இப்பொழுது தான் புதிதாக வாங்கிப் பொருத்தி மீண்டும் உள்ளே நுழைய முடிந்திருக்கிறது.....
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:45 PM. Reason: யுனிக்கோடாக்கல்

 7. #7
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  மீண்டும் இருவரும் வந்து கவியரங்கத்தை தொடருங்கள்!
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:46 PM. Reason: யுனிக்கோடாக்கல்
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
  Join Date
  05 Apr 2003
  Location
  துபாய்
  Posts
  3,203
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  47
  Uploads
  0
  பழைய காலத்தில், கவிதையினுள்ளே, கதைக் கருவை அடைத்து, கவிதை செய்த பொழுது, எழுதியது....

  நன்றி, கவிதா....
  Last edited by அன்புரசிகன்; 01-06-2007 at 08:46 PM. Reason: யுனிக்கோடாக்கல்
  அன்புடன்  நண்பன்
  -----------------------------------------------
  காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
  புறப்பட்டால் புயல்
  ------------------------------------------
  http://www.nanbanshaji.blogspot.com
  nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •