Results 1 to 11 of 11

Thread: தேதியில்லாக் குறிப்புகள் பாகம் III

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,044
  Downloads
  60
  Uploads
  24

  தேதியில்லாக் குறிப்புகள் பாகம் III

  அப்போது வயது சுமார் நான்கு இருக்கும். அன்றய தினம் எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் அக்டோபர் 15, 1988. அதாங்க எனக்குப் பிறந்தநாள். ஐந்தாவது வயது தொடங்குகின்ற நாள். காலையில் வழமை போல அம்மா, அப்பாவின் வாழ்த்துக்கள் மற்றும் உறவினரின் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்து கொண்டது. அத்துடன் அன்று பாலர் பாடசாலைக்கும் கொஞ்சம் சாக்லேட் வாங்கித்தருவதாக அப்பாவேறு கூறி இருந்தார். எனக்கோ ஒரே குஷி.........

  வாழ்க்கையில் முதல் தடவையாக வீட்டிற்கு வெளியே என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றேன். அதனால் கொஞ்சம் பரபரப்பாகவெ இருந்தேன். நான் படித்த பாலர் பாடசாலை ஆசிரியையின் பெயர் பாலா ரீச்சர். இங்கு வழக்கம் என்ன வென்றால் காலையில் சென்றவுடன் அன்றய தினம் பிறந்ததினம் உள்ள மாணவர்கள் சாக்லட் பாக்கை அவரிடம் ஒப்படைப்பர். காலையில் இறைவணக்கம் முடிந்ததும் அவரின் தலமையில் அந்த மாணவனின் சாக்லெட் வினையோகம் நடக்கும்.

  அப்பா காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் எனக்கு ஒரு பை சாக்லெட் வாங்கி வைத்து இருந்தார். அதை எடுத்து எனது நர்சரி பாக்கினுள் வைத்துக்கொண்டேன். காலை 7 மணி ஆகிவிட்டு இருந்தது. வழமைபோல அம்மா என்னை அவசரம் அவசரமாக நெர்சரியில கொண்டு சென்று விட்டா. நர்சரி வாசலுக்கு வந்ததும் எனது மனதில் ஒரு விபரீத ஆசை முளைக்க தொடங்கியது.

  இவ்வளவு சாக்லெட்டையும் நானே சாப்பிட்டால் எப்பிடி இருக்கும். எதுக்கு இந்த பொடிங்களுக்கும் பெட்டைகளுக்கும் ஏன் என்ற அப்பா வேண்டித்தந்த சாக்லெட்ட குடுக்கோணும். என்ன சரியான கேள்விதானே???

  நான் முடிவெடுத்து விட்டேன், அதாவது யாருக்கும் சாக்லெட் குடுப்பதில்லை எல்லாத்தையும் நானே சுடுவதென்று. வகுப்பில் நான் வழமைபோல சென்று உட்கார்ந்து கொண்டேன். அன்றய தினம் எனது வேறு ஒரு வகுப்புத் தோழனுக்கும் பிறந்த நாள். ஆகவே அவனின் ஒரு சாக்லெட்டையும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தது.

  எல்லாம் முடிந்து வீடு வந்து விட்டேன். எனது நர்சரி பையில் இருந்து ஒவ்வொன்றாக சாக்லெட்டுகளை சாப்பிடத் தொடங்கினேன். நான் தொடர்ந்து சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அம்மா கவனித்து விட்டார்.

  தம்பி! என்ன இது சொக்லெட் எல்லாம் சாப்பிடுறாய்?

  அது அம்மா... வந்து நர்சரியில குடுத்தது போக மிச்சம் அது மழலை மொழியில் பொய் சொன்னேன்.

  அம்மாவும் நம்பிவிட்டா. பின்பு அன்று இரவு எல்லாரும் இரவுச் சாப்பாடு சாப்பிடும் போதும் நான் கையில் சாக்லெட்டுகளுடன் இருக்கின்றேன். இப்போது அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது.

  மயூரேசன்! பொய் சொல்ல வேண்டாம். இண்டைக்கு சொக்லேட் ஒண்டையும் வகுப்பில குடுக்கேலத் தானே? உறுக்கலாக அம்மா கேட்டார்.

  இதை கொஞ்சமும் எதர்பார்க்காத நான் பயத்திலே அழத் தொடங்கிவிட்டேன். பிரைச்சனையை பெரிதாக்க விரும்பாத அம்மா அந்த பிரைச்சனையை அத்துடன் முடித்துக்கொண்டார். அத்தனை சாக்லெட்டும் எனக்கே சொந்தமானது.

  மறு நாள் இன்னுமொரு சாக்லெட் பாக் வேண்டப்பட்டது. இந்தத் தடவை என்னிடம் பாக் தரப்பட வில்லை. அம்மாவே அதை நர்சரி ஆசிரியையிடம் கொடுத்தார். ஆகவே அம்மா புண்ணியத்தில் எனக்கு நர்சரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தேறியது. இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும் விடையம் இது.

  இதைப்போல நான் சங்கீதம் படித்தது கூட ஒரு சுவையான கதை. நான் சங்கீதம் படித்த ஆசிரியையின் பெயர் நற்குணம். நாங்களெல்லாம் செல்லமாக நரிக்குணம் என்று கூப்பிடுவம். இவரது அடித்தொல்லையில் இருந்து தப்பாத மாணவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

  சுமார் 4 வயதிலேயே எனது சித்தியின் ஆசையின் பேரில் என்னை சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டனர். இந்த சித்தி என்னை இருக்கேலாமல் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டு தன் பாட்டிற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார். இப்போ எனக்கு சங்கீதம் சொல்லித்தர வீட்டில் யாரும் இல்லை. மிகவும் கஷ்டமான காலம் அப்போதுதான் தொடங்கியது.

  சங்கீத வகுப்பிலோ அடி வேண்டாத நாள் இல்லை. வீட்டில் அம்மாவிடம் அடி விழுந்தது என்று சொல்லவும் விருப்பமில்லை. அதாவது மானப் பிரைச்சனை. என்னோட அம்மா நான் அடி வேண்டின கதையை எல்லாருக்கும் ஏதோ நான் சாதனை செய்தது போல சொல்லுவா. எனக்கு அந்த நடத்தை கொஞ்சம் கூடப் பிடிக்கிறதில்லை. அதனால சங்கீத வகுப்பில் நடக்கிறத எல்லாம் அம்மாட்ட சொல்லுறதே கிடையாது.

  பிஞ்சு மனது துடியாய் துடித்தது கடுமையான மன அழுத்தம்!!!!!!!.

  அப்போது தான் நான் ஒரு முடிவெடுத்தேன் அதாவது ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வகுப்பு செல்வது போல புறப்படுவது. பின்பு திருமலை நகரை வலம்வருவது. வகுப்பு முடியும் நேரத்திற்கு மீண்டு வீடு செல்வது.

  மாலை மூன்று மணி அளவில் வீட்டில் இருந்து புறப்படுவது பின்னர் 5 மணி அளவல் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற தோறணையில் வீடு வருவது. இப்படியே காலம் போனது. எப்பிடியும் ஒரு ஆறு மாசம் என்னுடைய திருவிளையாடல் தொடர்ந்தது. என் கஷ்டகாலம் ஒரு நாள் வீதியில் என்னுடைய சங்கீத டீச்சரும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து விட்டனர். அம்மா கல்வி கற்பிக்கும் பாடசாலைக்கு அருகாமையில்தான் நான் சங்கீதம் கற்ற தட்சின காண சபா இருந்தது.

  என்ன உங்கட மகன் இப்ப சங்கீத கிளாசுக்கு வர்ரதில்ல ???

  இல்லையே அவன் வாறவன். நேற்றுக் கூட வீட்டில இருந்து வெளிக்கிட்டவன் தானே !! அம்மாவுக்கு தலைகால் புரியவில்லை பாவம்

  டீச்சர் உங்கட மகன் ஏதோ விளையாட்டு விடுறான். அவனை நாங்க கையும் மெய்யுமா பிடிப்பம்.

  என்னால நம்ப ஏலாம இருக்குது இந்தப் பொடியன் இப்பிடி செய்யிறான் எண்டு!! அம்மாவிற்கு எதுவுமே புரியவில்லை. மகன் இப்பிடி ஒரு பயங்கரவாதியாய் இருப்பான் என்று அவர் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை அதுவும் இத்தனை சிறிய வயதில். பாவம் அவன் அந்த ரீச்சரிடம் அடிபட்டது இந்த அம்மாவுக்குத் தெரியாது தானே.

  மறு நாள் வழமை போல வீட்டிலிருந்து புறப்பட்டேன். சோனகவாடி பள்ளிவாசல் அருகாமையில் இரண்டு பொடியங்கள் கையைக்காட்டி என்னை மறித்தாங்கள். நானும் வலு கலாதியா சைக்கிளை ஓரம் கட்டிக்கொண்டு. என்ன அண்ணா? என்று கேட்டேன்.

  கிட்ட வந்து சடார் என என்னை மடக்கிக் கொண்டான். அப்பிடியே அலேக்கா என்ன சபாக்கு கொண்டு போயிட்டான் அங்க அம்மா சங்கீத ரீச்சர் எல்லாரும் எனக்கு தட்சிணை போடக் காத்திருந்தாங்கள்.

  ரீச்சர்! இவனுக்கு அடிக்கிறதப் பற்றி கவலப்படாதீங்கோ. நல்லா அடிபோடுங்கோ அம்மா வேறு உத்தரவாதம் கொடுத்துவிட்டுப் போனார்.

  அன்றிலிருந்து இரண்டு மாதத்தினுள் சங்கீதம் முதலாம் தரப்பரீட்சை வர இருந்தது. ஆகவே எனக்கு இரவு பகலாக கடும் சங்கீத வகுப்பு நடைபெற்றது. கடைசியாக சங்கீதப் பரீட்சையும் முடிந்தது. ஆயினும் அது வரைகாலமும் நான் பெற்ற அடிகள் கணக்கில் அடங்கா. இறுதியில் இதற்கு மேல் என்னால் படிக்க முடியாது என்பதை அம்மாவிற்குப் புரியவைத்து நான் சங்கீத வகுப்பில் இருந்து நின்று விட்டேன். ஆனால் இன்று தொடர்ந்து படித்து இருக்கலாம் என்ற ஒரு நெருடல் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றது.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  5,036
  Downloads
  5
  Uploads
  0
  மயூரேசா,
  பின்னுறியேப்பா... உனக்கு நடை வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அழகாக எழுது, நிறைய எழுது.
  சிறு வயது சம்பவங்களைச் சொல்லும் போது நம்மிடம் அப்போதில்லாத நேர்மை சட்டென்று வந்து விடுகிறது இல்லையா? இன்னும் உன் திருவிளையாடல்களைத் தொடர்க.
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  சபாஷ்..... என் அடிமனது உரக்கச் சொல்கிறது -

  மயூரா.... உங்கள் எழுத்தில் சத்தியமும் அழகும் கைகோர்த்துவிட்டன.
  அசத்துகிறீர்கள்.

  உங்கள் சங்கீத வகுப்பு - எனக்கு இந்தி வகுப்பு.
  (முடிவுரை அதேதான்.......)


  பாராட்டுகள் மயூரா.. தொடருங்கள்.
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,044
  Downloads
  60
  Uploads
  24
  Quote Originally Posted by pradeepkt
  மயூரேசா,
  பின்னுறியேப்பா... உனக்கு நடை வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அழகாக எழுது, நிறைய எழுது.
  சிறு வயது சம்பவங்களைச் சொல்லும் போது நம்மிடம் அப்போதில்லாத நேர்மை சட்டென்று வந்து விடுகிறது இல்லையா? இன்னும் உன் திருவிளையாடல்களைத் தொடர்க.
  நன்றி பிரதீப் அண்ணா...
  என் எழுத்துக்கு முதல் இருந்தே ஊக்கம் தருபவர் நீங்கள் உங்கள் அன்புக்கு நன்றி......
  ஆமாம்....சிறுவயது நிகழ்வுகளை அப்படியே சொல்லிவிடுவதில் என்ன தயக்கம். அது அந்த நேரத்தில் பெரிய விடயமாக இருந்தாலும் பின்னர் அது வெறும் சிரிப்புக்குரிய நிகழ்வாகிவிடுகின்றது. இந்த சங்கீத வகுப்புக் கதையை அம்மா இன்று கூட காண்பவரிடம் சொல்லிச் சிரிப்பா. நானும் அசடு வழிந்து கொண்டே சிரிப்பேன்.....

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,044
  Downloads
  60
  Uploads
  24
  Quote Originally Posted by ilasu
  சபாஷ்..... என் அடிமனது உரக்கச் சொல்கிறது -

  மயூரா.... உங்கள் எழுத்தில் சத்தியமும் அழகும் கைகோர்த்துவிட்டன.
  அசத்துகிறீர்கள்.

  உங்கள் சங்கீத வகுப்பு - எனக்கு இந்தி வகுப்பு.
  (முடிவுரை அதேதான்.......)


  பாராட்டுகள் மயூரா.. தொடருங்கள்.
  நன்றி இளசு அண்ணா அவர்களே!
  உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்குவிக்கின்றன.....

  இந்தி யென்றால் என்ன சங்கீதம் என்றால் என்ன சிறுவர் உணர்வுகளைப் பெற்றோர் புரிந்து கொள்வதேயில்லை...
  நாளைக்கு நானும் இதைத்தான் என் குளந்தைக்குச் செய்வேனோ???

 6. #6
  புதியவர் mettilda's Avatar
  Join Date
  16 Sep 2006
  Posts
  13
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  interesting story mr. mayooresan

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
  Join Date
  02 Sep 2006
  Posts
  1,493
  Post Thanks / Like
  iCash Credits
  5,104
  Downloads
  3
  Uploads
  0
  Quote Originally Posted by pradeepkt
  மயூரேசா,
  பின்னுறியேப்பா... உனக்கு நடை வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் அழகாக எழுது, நிறைய எழுது.
  சிறு வயது சம்பவங்களைச் சொல்லும் போது நம்மிடம் அப்போதில்லாத நேர்மை சட்டென்று வந்து விடுகிறது இல்லையா? இன்னும் உன் திருவிளையாடல்களைத் தொடர்க.
  பின்னியது மயூரர் இல்லை.. அவரோட டீச்சர்தான்..

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,044
  Downloads
  60
  Uploads
  24
  Quote Originally Posted by கண்மணி
  பின்னியது மயூரர் இல்லை.. அவரோட டீச்சர்தான்..
  அது சரி நொந்து நூலாப் போனது நானில்லையா???

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  அடடே நம்ம மயூவுக்கு சுட்டுப் போட்டாலும் பாட்டு வராதா...??

  _________________________________________________________________________________________________________________

  உண்மைதான் மயூ, பெற்றோர்கள் சிறுவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் கொஞ்சம்ம் தவறிழைக்க சந்தர்பம் அதிகரிப்பதாகவே எனக்கு தெரிகிறது....

  நாங்கள் பரவாயில்லை, இப்போதுள்ள குழந்தைகள் மகாப் பாவம், காலையில் பாடசாலை, பின்னேரம் மேலதிக வகுப்புக்கள், இரவு வீடு தேடி வரும் விசேட வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களென நொந்து நூலாகிப் போய் விடுகிறார்கள்.....

  குழந்தைகள் உணர்வுகளைப் புரிந்து, அவர்கள் விரும்பும் விடயங்களில் அவர்களை ஊக்குவித்தால் அவர்கள் இயல்பாகவே முன்னேறி விடுவார்களென்பது என் கருத்து....

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  11,044
  Downloads
  60
  Uploads
  24
  அதே அதே...
  நாளைக்கு உங்கட பிள்ளைகளை கரைச்சல் படுத்த மாட்டீங்கள் இல்லே?

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  80,871
  Downloads
  97
  Uploads
  2
  நிச்சயமாக இல்லை, மயூ..!!

  உண்மையைச் சொன்னால், என்னை என் பெற்றோர் கரைச்சல் படுத்தவில்லை என்பதே உண்மை...

  என்னிஸ்டப்படியே நான் வளர்ந்தேன்...

  நான் மேலே குறிப்பிட்டவை, என் வீட்டு அயலில், உறவினரிடை நான் பார்த்து அறிந்த விடயங்களே...

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •