வெளிநாடு வாழ் தமிழர்கள் பார்வைக்கு

வெளிநாடுவாழ் தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை தினமலர் வெப்சைட் உடனுக்குடன் வெளியிட்டு வருவதை அறிவீர்கள். உங்கள் பகுதியில் நடைபெறும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளை உரிய படங்களுடன் அனுப்பி வைத்தால் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அதேபோல் வெளிநாடுகளில் நீங்கள் பணி புரியும் இடங்களில் உள்ள நிறை, குறைகளையும் எழுதி அனுப்புங்கள். தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி வருபவர்களுக்கு, உங்கள் அனுபவத்திலிருந்து கூற விரும்பும் யோசனைகளையும் எழுதி அனுப்புங்கள். அத்தகைய தகவல்கள் புதிதாக வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

செய்திகளை ஆங்கிலத்திலேயே இ மெயிலில் அனுப்பலாம். தமிழில் அனுப்புவதென்றால் பிடிஎப் பார்மேட்டில் அனுப்பி வைக்கவும். படங்களை ஜெபெக் பார்மேட்டில் மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இதற்கான இமெயில் முகவரி ::nrireaders@dinamalar.com
நன்றி தினமலர்