கடிஸ்

1. நாய்க்கு நால் கால் இருக்கலாம், ஆனா அதால லோக்கல் கால், STD கால், ISD கால், ஏன் MISSED கால் கூட பண்ண முடியாது.

2. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், பாவம், அவரால ஒரே ஒரு குரலில்தான் பேச முடியும்.

3. என்னதான் தலை சுத்தினாலும் முதுகைப் பாக்க முடியுமா? (இது கொஞ்சம் பழசு)

4. மீன் பிடிக்கிறவனை மீனவன்னு சொல்லலாம், ஆனால், நாய் பிடிக்கிறவனை நாயவன்னு சொல்லக் கூடாது.

5. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனைத் துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

6. தேள் கொட்டினா வலிக்கும்
தேனீ கொட்டினா வலிக்கும்
முடி கொட்டினா வலிக்குமா?
வழுக்கும்!!!

7. பள்ளி டெஸ்டுல பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்டுல பிட் அடிக்கலாம்
ப்ளட் டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா?

8. பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.
அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா?

9. கோலமாவில் கோலம் போடலாம்
ஆனால் கடலைமாவில் கடலை போட முடியுமா?

10. வாழ்க்கையில் ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும்.
தலையில ஒண்ணுமே இல்லைன்னா க்ளேர் (glare) அடிக்கும்!..