Results 1 to 3 of 3

Thread: தொடர்-3 : எம்.எஸ். பவர்பாயின்ட் (Powerpoint)..

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
    Join Date
    05 Apr 2006
    Location
    இலங்கை
    Posts
    183
    Post Thanks / Like
    iCash Credits
    21,915
    Downloads
    45
    Uploads
    1

    Cool தொடர்-3 : எம்.எஸ். பவர்பாயின்ட் (Powerpoint)..

    (இந்த தொடரினை அச்சிட விரும்புபவர்கள் - கிடையான (Horizontal) நிலத் தோற்றத்தில் (Landscape) அச்சிட்டால் அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பெறலாம்.)

    கடவுளின் நாமத்தால்...

    (என்ன மாணவர்களே.. எல்லோரும் நலம்தானே..? - ம்ஹ்.. தமிழ் மன்ற கண்ணுக் குட்டிகளல்லவா..? சந்தோஷத்திற்கா குறைச்சல் இருக்கப் போகுது..)

    தொடருக்கு செல்லு முன்..

    என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது விஷேட நன்றிகள். இத்தொடரானது, முழுக்க முழுக்க உங்கள் நலன் கருதியே எழுதப்படுகின்ற ஒரு தொடர் ஆகையினால், நிறைகளை மட்டுமன்றி குறைகளையும் அறியப்படுத்துங்கள்.

    இத் தொடர் பற்றிய - உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் விதமாக எனது எழுத்துக்கள் அமைய வேண்டுமானால், நிச்சயமாக உங்கள் பாராட்டுக்களை மட்டுமன்றி பரிசீலனைகளையும், ஆலோசனைகளையும் எனக்கு அறியத் தாருங்கள்.

    பவர் பாயின்ட் யிற்கு - புதியவர்கள், இங்கே எழுதப்படும் தொடர்களை வரிசைக் கிரமமாக அச்சிட்டு (Print Out) வைத்திருந்தாலோ, அல்லது உங்கள் வன்வட்டில் (Hard Disk) பதிவு செய்து வைத்திருந்தாலோ, தேவையானபோது மீட்டல் (Revision) செய்ய வசதியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    மேலும், இக் கட்டுரையில் இடம்பெறும் அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும், என்னால் முடிந்தளவு தமிழ்ப்படுத்திய சொற்களைத் தேடித் தரவேண்டும் என்ற ஒரு ஆர்வத்தில், எனக்குக் கிடைக்கப் பெற்ற அகராதிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சொற்களை - நான் கடந்த தொடரில் பயன்படுத்தி இருந்தேன்.

    இருந்த போதிலும், அவ்வாறான சில ஆங்கிலச் சொற்களுக்கு - நான் பயன்படுத்தியதை விடவும் அழகிய அர்த்தம் கொண்ட தமிழ்ப்படுத்திய சொற்களைப் பின்னர் அறிந்து கொள்ள முடிந்ததால், அவைகளை இங்கே மேம்படுத்தப்பட்ட (Upgraded) சொற்களாக குறிப்பிடுவதோடு, அம் மேம்படுத்திய சொற்களையே தொடர்ந்து எழுதப்படும் - எனது கட்டுரையில் பயன்படுத்த இருக்கிறேன் என்பதையும் வாசக நெஞ்சங்களுக்கு அறியத் தருகின்றேன். (வாசக நெஞ்சங்களும் - நான் பயன்படுத்தும் தமிழாக்கச் சொற்களுக்குப் பிரதியீடாக அதைவிட சிறந்த சொற்களை அறிந்து கொள்ளும் போது, மேம்படுத்தலுக்காக தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்)

    எது மிகச் சிறந்ததோ - அதுவே எம் தமிழ் மக்களின் தெரிவாகட்டும்..



    (தொல்லைகளுடன் மீண்டும் சந்திக்கலாம் என்றேனே, ஆனாலும் இது ரொம்ப அதிகமோ..?)

    இதுவரை..

    ஆம்.. கடந்த தொடரில் - பவர் பாயின்ட் பற்றிய ஓர் சிறிய அறிமுகத்தை அளித்திருந்தேன். மேலும், பவர் பாயின்ட் யினை பயன்படுத்தி செய்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்த்து வரைகலையானது (Presentation Graphics) திட்டமிடல், வடிவமைத்தல், இணைப்புக் கொடுத்தல், அசைவூட்ட வேலைகள், நேர ஒத்திகை என்ற பிரதான 5 விடயங்களைக் கொண்டது என குறிப்பிட்டதோடு, திட்டமிடல் என்றால் என்ன..? என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கியிருந்தேன்.

    அதேபோல், வடிவமைத்தல் என்றால் என்ன..? என்ற விளக்கங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை பார்ப்பதற்கு இடையில், பவர் பாயின்ட் டின் முகப்புத் தோற்றத்திலுள்ள சில பிரதான விடயங்களை விவரிக்கும் படம் ஒன்றையும் கொடுத்திருந்தேன்.

    இனி..ஆரம்பிக்கலாமா..?

    (அடடா.. நீங்க எல்லாரும் கொட்டாவி விடுறத பார்த்தா, குறட்டை விட தயாராவது போல் அல்லவா இருக்கு..? சரி.. சரி.. இன்னைக்கு யாரெல்லாம், கண்முழிச்சு என் பாடத்தை கவனிக்கிறாங்களோ, அவங்களையெல்லாம் ஊக்கப்படுத்தும் விதமாக - ஆளுக்கொரு, தேனீர் மற்றும் இனிப்பான ரொட்டி (Tea + Bun) என்னோட செலவில் வெகுமதியாக வழங்கப்படும். ஆனாலும், ஒரு நிபந்தனை - உள்ளூர் மாணவர்களுக்கு இச் சிறப்புச் சலுகை கிடையாது. இருப்பினும், அவர்களது பொறுமையை பாராட்டி நன்றி நவிலப்படும்.)

    ஆம்..

    கடந்த தொடரில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த, பவர் பாயின்ட் டின் முகப்புத் தோற்றத்திலுள்ள சில பிரதான விடயங்களைப் பற்றி - தனித்தனியாக அறிந்து கொண்டு, எமது அடுத்த விடயமாகிய வடிவமைத்தல் பற்றிய விளக்கங்களை அலசலாம்.

    முகப்புத் தோற்றத்தில் காணப்படும் பிரதான விடயங்கள்..

    1. பட்டியல் பட்டை ( Menu Bar )
    2. கருவிகள் பட்டை ( Tools Bar )
    3. பட வில்லைகள் ( Slides )
    4. தற்போது தெரிவாகியுள்ள பட வில்லை ( Currently Selected Slide )
    5. பட வில்லைக் காட்சி ( Slide Show )
    6. சொற் கலை ( Word Art )
    7. ஆயத்தப் படம் ( Clip Art )
    8. வாசகம் ( Text )
    9. தன் வடிவம் ( Auto Shape )
    10. கொள்பணி சாளர அடுக்கு ( Task Pane )

    1. பட்டியல் பட்டை ( Menu Bar ) :

    பெரும்பாலான மென்பொருட்களில் காணப்படும் - இந்தப் பட்டியல் பட்டை பற்றியும், அதற்குள் காணப்படும் உப பட்டியல்களின் (Sub Menu) பயன்பாடு பற்றியும் பொதுவாகவே நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

    பவர் பாயின்ட்டைப் பொறுத்தவரை, இந்தப் பட்டியல் பட்டையானது �
    � கோப்பு (File)
    � திருத்துதல் (Edit)
    � தோற்றம் (View)
    � செருகு (Insert)
    � வடிவமைப்பு (Format)
    � கருவிகள் (Tools)
    � பட வில்லைக் காட்சி (Slide Show)
    � சாளரம் (Window)
    � உதவி (Help)
    போன்ற பிரதான பட்டியல் (Main Menu) களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

    மேலும், ஒவ்வொரு பிரதான பட்டியல்களையும் சொடுக்கும்போது - அதற்குள்ளே மேலும் பல உப பட்டியல்கள் (Sub Menu) காணப்படுவதை அவதானிக்கலாம். உதாரணமாக கோப்பு பட்டியலை சொடுக்கி திறக்கும்போது, அதனுள்ளே -

    � புதிய (New)
    � திற (Open)
    � சேமி (Save)
    � இப் பெயரில் சேமி (Save as)

    போன்ற - பல்வேறு உப பட்டியல்கள் (Sub Menu) காணப்படுவதைக் குறிப்பிடலாம்.

    இருப்பினும், இத் தொடரைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிரதான பட்டியல்களுக்குள்ளும் (Main Menu) காணப்படும் உப பட்டியல்களை (Sub Menu) விலாவாரியாக அலசிக் கொண்டிருக்காமல் - அவசியத்திற்கேற்ப அவ்வப்போது, தேவையான உப பட்டியல்களின் (Sub Menu) பயன்பாடுகளைக் குறிப்பிடுகின்றேன்.

    (ஆரம்பத்தில் - தமிழ்ப்படுத்திய சொற்களை படிக்கும்போது, நான் கூட தலையை சொறிந்து கொண்டது உண்மைதான். ஆனாலும், நண்பர்கள் கொடுத்த உற்சாக வார்த்தைகளை மனதில் கொண்டு முயற்சித்தேன். கடவுளின் அருளால் - இன்று எம் மன்றத்தின் நிர்வாகி இளசு அவர்களே பாராட்டுமளவிற்கு என் தமிழ்ப் புலமை வளர்ந்திருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அட.. அட.. அட.. மஸாகி - நீ எங்கேயோ போயிட்டேமா.. அகராதிகள் வாழ்க.)

    2. கருவிகள் பட்டை ( Tools Bar ) :

    பட்டியல் பட்டை (Menu Bar) போன்றே பெரும்பாலான பயன்பாட்டு மென்பொருட்களில் காணப்படும் - இந்தக் கருவிகள் பட்டை பற்றியும் நண்பர்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

    அதாவது, பிரதான பட்டியல் (Main Menu) களாகிய - கோப்பு (File), திருத்துதல் (Edit), தோற்றம் (View)�. போன்றவற்றின் உள்ளே காணப்படும் உப பட்டியல்களாகிய (Sub Menu) - புதிய (New), திற (Open), சேமி (Save).. போன்ற கட்டளைகளினை பயன்படுத்தும் போது, ஏற்படக் கூடிய கால தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு இக் கருவிகள் பட்டையில் (Tools Bar) காணப்படும் சிறிய படவுருக்களை (Icons) பயன்படுத்த முடியும்.
    உதாரணமாக - நாங்கள் ஒரு விடயத்தை பதிவு செய்து கொள்ள, கோப்பு பட்டியலில் காணப்படும் சேமி (Save) என்பதை பயன்படுத்துவதற்கு பதிலாக, இக் கருவிகள் பட்டையில் (Tools Bar) காணப்படும் - நெகிழ் வட்டின் (Floppy Disk) தோற்றமுடைய படவுருவை (Icon) சொடுக்குவதன் மூலமாக பதிவு செய்து கொள்ள முடியும்.

    நாம் பெரும்பாலும் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கருவிகளை உள்ளடக்கிய சில கருவிப் பட்டைகளும் - அவற்றுக்கான சிறு விளக்கமும் கீழே தரப்பட்டுள்ளன.



    இந்தக் கருவிப் பட்டையிலுள்ள ஏதாவதோர் படவுருவின் பயன்பாட்டை - சிறு குறிப்பாக தெரிந்து கொள்ள, அதன் மேலே சுட்டியை கொண்டு சென்றால், அருகிலேயே - மஞ்சள் நிற பிண்ணனி கொண்ட சிறு கட்டத்திற்குள் கருவி உதவித் துளி (Tool Tip) தோன்றும்.

    உதாரணமாக : மேலே தரப்பட்டுள்ள படத்தில் - மஸாகி என்ற கருவிப் பட்டையில் காணப்படும் நெகிழ் வட்டின் மேலே சுட்டி முனையை வைக்கும் போது - சேமி (Save) என்று காட்டுவதை அவதானிக்கலாம்.

    (ஆமா.. வடிவமைப்புக் கருவிப் பட்டை (Formatting Tool Bar) பார்த்திருக்கோம்.. தரக் கருவிப் பட்டை (Standard Tool Bar) பார்த்திருக்கோம்.. புதுசா - மஸாகி என கட்டம் கட்டி கலக்கும் இந்த கருவிப் பட்டை - எங்கள் கணினியில் கிடையாதே என யோசிக்கிறிங்களா..? உங்கள் பெயரிலேயே ஒரு கருவிப் பட்டை (Tool Bar) உருவாக்கி, அதில் நீங்கள் விரும்பும் அனைத்து விடயங்களுக்குமான கருவிகளின் படவுருவை (Icon) எவ்வாறு போட வேண்டும் என்பதை - விஷயம் தெரியாதவங்களுக்கு, பின்னர் சொல்லித் தர்ரேன்டா செல்லம்களா..)

    3. பட வில்லைகள் ( Slides ) :

    இதனை நாம், பவர் பாயின்ட் யின் உயிர்நாடி என்று கூறினாலும் மிகையல்ல. ஏனெனில், நாம் விரும்புகின்ற விடயங்களை, தனித் தனி காட்சிகளாக வடிவமைத்து - மக்கள் மத்தியில் அரங்கேற்ற இந்தப் பட வில்லைகளே ( Slides ) பெரிதும் துணைபுரிகின்றன.

    பவர் பாயின்ட் யினை திறக்கும்போது, ஆரம்பத்தில் - வழமையாக ஒரே ஒரு கெடா நிலைப் பட வில்லையுடன் (Default Slide), அது காட்சியளிக்கும். பின்னர், எமது தேவைக்கேற்ப - செருகு (Insert) என்ற பிரதான பட்டியலில் (Main Menu) காணப்படும் புதிய பட வில்லை (New Slide) என்பதனை சொடுக்குவதன் மூலமாகவோ, அல்லது Ctrl + M என்ற விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலமாகவோ, மென்மேலும் புதிய பட வில்லைகளை எமது நிகழ்த்து வரைகலையில் (Presentation Graphics) சேர்த்துக் கொள்ளலாம்.

    (தரப்பட்ட முகப்புத் தோற்ற விவரணப் படத்தில் - திறக்கும்போது கெடா நிலை (Default) ஆக வரக்கூடிய ஒரு பட வில்லையுடன் (Slide) புதிதாக சேர்க்கப்பட்ட 2 பட வில்லைகளையும் சேர்த்து, மொத்தம் 3 பட வில்லைகள் (Slides) காணப்படுவதை அவதானிக்கலாம்)

    (சுருக்கமா சொல்றதுன்னா, ஒவ்வொரு பட வில்லையுமே (Slide) விளையாட்டு மைதானம் மாதிரி. விசைப் பலகையை (Keyboard) ஒரு பக்கமும் - சுட்டியை (Mouse) மற்றொரு பக்கமுமென ஆட்டத்தில இறக்கி விட்டுட்டா, அப்புறமென்ன தூள்தான்..)

    4. தற்போது தெரிவாகியுள்ள பட வில்லை ( Currently Selected Slide ) :

    இந்த முகப்புத் தோற்றத்தில், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் - ஒரு குழந்தையின் புகைப்படத்தை பிண்ணனியாகக் கொண்ட பட வில்லையே (Slide) தற்போது தெரிவாகியுள்ள பட வில்லை ( Currently Selected Slide ) ஆகும்.

    (என்னோட குழந்தைப் பருவ புகைப்படம் ரொம்ப அசத்தலா இருக்குதோ..? அப்பவும் - குறும்பு.. குறும்புதான்..)


    ஏற்கனவே குறிப்பிட்ட படி புதிய பட வில்லைகளை (Slides) சேர்த்துக் கொண்ட பின், இடது பக்க ஓரமாக காணப்படும், ஏதாவது ஒரு படவில்லையை (Slide) நீங்கள் சொடுக்கும் போது � அது தற்போது தெரிவாகியுள்ள பட வில்லை (Currently Selected Slide) ஆக மாறிவிடும்.

    பின்னர், அந்த படவில்லையில் (Slide) உங்களுக்குத் தெரிந்த வித்தைகளை (வடிவமைப்பு வேலைகளை ) காட்ட வேண்டியதுதான்.

    5. பட வில்லைக் காட்சி ( Slide Show ) :

    நாம், பல்வேறு அழகுறு வேலைப்பாடுகளைக் கொண்டு - வடிவமைத்துக் கொண்ட படவில்லைகளை (Slide) காட்சித் திரை (Monitor) முழுவதும் தோன்றும்படி முழுத் திரையாக்கிப் (Full Screen) பார்க்க, பட வில்லைக் காட்சி (Slide Show ) பயன்படுகின்றது.

    மேலும், தோற்றம் (View) என்ற பிரதான பட்டியலில் (Main Menu) காணப்படும் உப பட்டியலான (Sub Menu) - பட வில்லைக் காட்சி ( Slide Show ) என்பதையோ, அல்லது பட வில்லைக் காட்சி ( Slide Show ) என்ற பிரதான பட்டியலில் (Main Menu) காணப்படும் உப பட்டியலான (Sub Menu) � தோற்றக் காட்சி ( View Show ) என்பதையோ சொடுக்குவதன் மூலமாகவும், முழுத் திரையில் தோற்றமளிக்கச் செய்யலாம். (அதே போல் - F5 என்ற செயல் விசையினைப் (Function Key) பயன்படுத்தியும் முழுத் திரையில் தோற்றமளிக்கச் செய்யலாம். )

    இருந்த போதிலும், இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் (முகப்புத் தோற்ற விவரணப் படத்தில் காணப்படும் - கீழே படத்தில் விவரிக்கப்பட்டுள்ள) - குவளை போன்ற அமைப்பை சொடுக்கி, முழுத்திரையாக்கும் போது, தற்போது தெரிவாகியுள்ள பட வில்லை (Currently Selected Slide ) யில் இருந்தே காட்சி ஆரம்பமாகும். ஆகவே, தற்போது தெரிவாகியுள்ள பட வில்லை ( Currently Selected Slide) யில், நாம் ஏதாவது மாற்றங்கள் பண்ணும் போது - அது முழுத் திரையில் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை இடைக்கிடையே பார்வையிட இப்படி முழுத் திரையாக்கும் முறை சிறந்ததாகும்.



    மேலும் பல சுவாரஸியமான விடயங்களுடன் - மீண்டும் சந்திக்கலாமா..?

    நட்புக்கு - மஸாகி
    31.07.2006


    .
    Last edited by மஸாகி; 24-06-2008 at 09:02 AM.
    ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் arul5318's Avatar
    Join Date
    17 Jun 2006
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    9,022
    Downloads
    8
    Uploads
    0
    ஐயோ படித்து முடிந்ததும் எனக்கு தலை சுத்து வந்து விட்டது அப்படியே தூங்கிவிட்டேன் நண்பரே இதனை தமிழ் சொற்களை தவிர்த்திருந்தால் இன்னும் விளங்கியிருக்கும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்னென்னமோ பட்டையென்றெல்லாம் சொல்றீங்கள் அதான் கொஞ்சம் தலைசுத்து வந்தது நீங்கள் விரும்பினால் தமிழைத்தவிர்த்து இன்னுமொரு பதிப்பும் பதிக்கலாம்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மஸாகி

    அற்புதப் பணி. மனமார்ந்த பாராட்டுகள். உற்சாகமாய்த் தொடருங்கள்.

    ( எனக்கு தேநீர் வேண்டாம். ஆனால் நடுவே எனக்கு ஐஸ் கட்டி தந்ததுபோல் சிலீர்...)

    ஒரு காலத்தில் பஸ், டிரான்ஸ்போர்ட், மெட்ராஸ், ஃபைல் என்பவை புழக்க சொற்கள்.

    பேருந்து, போக்குவரத்து, சென்னை, கோப்பு எல்லாம் பழகாத சொற்கள்.

    ஆனால் போகப்போக..

    மணி கட்டும் உங்கள் பின்னால் எங்கள் ஆதரவுக்குரல்...


    இத்தொடர் முடியும்போது நம்மவர்கள் தமிழில் இக்கணினி நுட்பத்தை சரளமாய்க் கையாளுவோம்..


    New - புதிய என்பதற்குப்பதில் புதிது இன்னும் பொருத்தமாய்த் தோணுகிறது.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •