Results 1 to 9 of 9

Thread: அணைக்க மறந்தார்..உயிர் துறந்தார்!

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0

    Question அணைக்க மறந்தார்..உயிர் துறந்தார்!

    குடிபோதையில், படுத்துக் கொண்டே சிகரெட் பிடித்தவர், அதை அணைக்காமல் அப்படியே தூங்கிப் போனதால், படுக்கையில் தீப்பிடித்து கருகி இறந்தார்.

    சென்னை பல்லவாரம் அருகே உள்ள பம்மல் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி வள்ளி.அவர்களுக்கு நரேஷ் என்ற 4 வயது மகன் உள்ளான்.

    குடிப்பழக்கம் உள்ள சீனிவாசன் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் அவருக்கும், வள்ளிக்கும் இடையே தகராறு ஏற்படுமாம். குடிப்பழக்கத்தால் கடனாளியும் ஆகியிருந்தார் சீனிவாசன்.

    சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனுக்கும், வள்ளிக்கும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த மனைவி வள்ளி தனது தாய் வீட்டுக்குக் குழந்தையுடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன், வேலைக்குப் போய் விட்டு இரவு வீடு திரும்பினார். குடிபோதையில் இருந்த அவர் சிகரெட் பற்ற வைத்து அப்படியே படுக்கையில் சாய்ந்தார்.

    போதையில் இருந்த அவர் சிகரெட்டை அணைக்காமல் அப்படியே தூங்கி விட்டார். சிறிது நேரத்தில் சிகரெட் நெருப்பு படுக்கையில் பட்டு தீப்பிடித்துக் கொண்டது.இதில் படுக்கையுடன் எரிந்து சீனிவாசன் சாம்பலானார்.

    சீனிவாசன் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்து பார்த்தபோது படுக்கையில் கரிக் கட்டையாக பிணமாகிக் கிடந்தார் சீனிவாசன்.

    பிணத்தை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும், குடியைக் கெடுக்கும்.


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இதுபோன்று ஏற்கெனவே 10 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. தனக்குத்தானே கொள்ளி வைத்துக் கொள்வது எப்போது ஓயுமோ!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஆமா இதே மாதிரி பத்து வருஷத்துக்கு முன்னே நடந்து இருக்கு...
    ஆனா, தீ காயம் ஏற்ப்படாமலயே தப்பிட்டோம்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv
    ஆனா, தீ காயம் ஏற்ப்படாமலயே தப்பிட்டோம்...
    பென்சு,
    இன்னும் அந்தப் புகை மோகினி உங்கள் உதட்டில் முத்தமிடுகிறாளா?


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    அதென்ன புகை மோகினி..
    அழகான ராட்சசின்னு....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தீ தீயை தூண்டி....
    உயிரை அணைத்து போட்டதோ....

    இதை போல நேற்று.. ஷுவில் உள்ள தேள் கொட்டி மாணவன் சாவு என்ற செய்தி பார்த்தேன்

    இது மாதிரி செய்திகள்.. மனதை பெரிதும் பாதிக்கிறது.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0
    Quote Originally Posted by benjaminv
    அதென்ன புகை மோகினி..
    அழகான ராட்சசின்னு....
    சிகரெட்டை இழுத்து விடும்போது உங்களை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்,


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    புகைப் பழக்கம் மிகவும் தவறு. தன்னையும் கெடுத்து, சுற்றுப்புறத்தையும் கெடுத்து அடுத்தவரையும் கெடுக்கும் இந்தப் பழக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியதே!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நேற்று செய்தியில் படித்தேன், அமெரிக்காவில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட ஒருவர் சிகரெட் பத்தவைக்க ஆஸ்பத்திரியே நெருப்பில் பற்றிக்கொண்டது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •