Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 33 of 33

Thread: பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!

                  
   
   
  1. #25
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jun 2009
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!
    மன்றத்து நண்பர்களுக்கு,

    ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )

    கேள்வி இதுதான்:

    1.

    நாம் ஒரு காட்சியை காணும்போது
    பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
    மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
    மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
    (அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

    2.

    நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
    இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

    இவை பள்ளி பாடத்தில் படித்தது.
    இதற்கான காரணம் தெரியவில்லை.

    இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

    இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

    இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!


    வணக்கம் அன்பரே ,
    தாங்கள் பிழையான விளக்கம் கொண்டு உள்ளீர்கள்.என்னவென்றால் கண்ணில் படும் விம்பம் விழித்திரையில்தான் தலை கீழாக விழுகிறது.ஆனால் அதை மூளையோ சரியாக விளங்கிக் கொள்கிறது.
    மூளைக்கு ஒரு சிறப்பியல்புண்டு,எப்படிப்பட்ட கணத்தாக்கம் தொடர்ந்து கிடைக்கிறதோ அதுக்கு பழகிக்கொள்கிறது.உதாரணமாக,தலை கீழாகவே தொடர்ந்தும் பார்ப்பவர்க்கு முதலில் சிரமமாக இருந்தாலும் காலப்போக்கில் அது நமக்கு தெரிவது போல சாதாரணமாகவே தெரியத் தொடங்கிவிடும்.

    இப்போ இரண்டாவது சந்தேகம் -
    மூளையில் இரு அரைக் கோளங்கள் உண்டு.அவையுடன் தொடர்பாக உள்ள நரம்பின் உடற் கூற்றியல் அமைப்பே(anatomy) இதற்கு காரணம் .

  2. #26
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jun 2009
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    'கிட்னி' பாதிப்பு எவ்வாறு அறிவது?
    அனைவருக்கும் அன்பான வணக்கம்.

    "கிட்னி"" பாதிப்பு எவ்வாறு அறிவது? அதன் நிலைகள் யாவை? அதை குறைக்க முடியுமா? எவ்வாறு? இனிப்பு நீர் நோய் உள்ளவர்களுக்கு எவ்வாறு தற்காக்கலாம்?

    என் தாயாருக்கு 'கிட்னி' பிரச்சனை அரம்ப கட்டத்தில் உள்ளது. அவருக்கு இனிப்பு நீர் மற்றும் இருதய நோய் உள்ளது. அவரின் வயது 59.

    தங்களின் பதில் பலருக்குப் பயன் தரும்.


    இக்கண்,

    இராமகிருஷ்ணன்.
    மலேசியா.
    இன்பமே சூழ்க! என்னோரும் வாழ்க!



    வணக்கம் அன்பரே ,
    தாங்கள் ''இனிப்பு நீர் நோய்'' என்று குறிப்பிடாது நீரிழிவு நோயை என்று நினைக்கிறேன் .

    "கிட்னி"" பாதிப்பு என்கிறீர்கள் ,அது என்ன பாதிப்பு என்று சொல்லவில்லை.ஏனென்றால் சிறுநீரக பாதிப்பு அல்லது நோய் பலவுண்டு.இது தெரியாமல் பதிப்பை கண்டரிவதேப்படி என்றோ அல்லது நிலைகள் பற்றியோ கூறமுடியாது.
    ஆனால்,இதய நோய் உள்ளோர் பெரும்பாலும் உப்பை குறைப்பது நலம்.மீளும் நீரிழிவு நோயுள்ளோர் தொடர்ச்சியான ஒழுங்கான உணவுப் பழக்கத்தின் மூலமும் ,உடற் பயிற்சி மூலமும் குருதி குளுக்கோஸ் மட்டத்தை பேணுவதன் மூலம் எனைய உடல் உபாதைகளை குறைக்கலாம்(சிறுநீரக நோய்கள்,கால் புண்,கண்பார்வை குறைதல்,கால் கையில் உணர்ச்சி குறைதல்).

    * வேறு சந்தேகம் இருப்பின் கேக்கவும் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.

  3. #27
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by mkmaran View Post
    மன்றத்து நண்பர்களுக்கு,

    ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )

    கேள்வி இதுதான்:

    1.

    நாம் ஒரு காட்சியை காணும்போது
    பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
    மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
    மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
    (அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

    2.

    நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
    இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

    இவை பள்ளி பாடத்தில் படித்தது.
    இதற்கான காரணம் தெரியவில்லை.

    இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

    இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

    இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!
    இந்த கேள்விகள் நான் அரிந்த கேள்விகள் போல இருக்கு இருந்தாலும் எனக்கு தெரிந்த ஒன்று.........கூருகிறேன் ,,,,,,!!! நீங்கள் கேட்ட கேள்வி எதாவது இயங்க கூடிய ஒரு பொருளை வைத்து கேட்டிருந்தால் எல்லாருக்கும் பதில் கூற நல்லா இருக்கும்...........'''''''இப்போது ஒரு பதில் கூருகிறேன் .....தியேட்டர் நாம் படம் பார்பது ஒன்று ..........இன்னொன்று தொலைகாட்சி பெட்டி இதில் பிம்பங்கள் தலைகிலாகவே உள்ளன இருந்தாலும் நமக்கு நேராகவே தெரிகிறது,,,, இன்னொன்று பூமியின் சுலற்சி இது நம்மை சுற்றி தலைகிளாக தான் வரும் நாமும் தலைகிலாகதான் சுலன்று வருகிறோம் இருந்தாலும் நமது இயக்கங்கள்,பார்வைகள் எல்லாம் நேறாகவே தெரிகிறது இதுவும் கூட சொல்லலாம்,,இது எதற்க்கு அப்படி தெரிகிறது என்றால் இப்பொது குலியாடி,குவியாடி இது போல நமது கண்னில் உள்ள லென் ரெம்ப பவர் புல்லான ஒரு லென் இது ஒரு அசைவற்றது நாம் படுது இருந்தாலும் ஒரு பொருளை பார்த்தாலும் அது நேராக தான் நம்மால் உணருகிறோம்

  4. #28
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    தோழர் அந்தோணி கூறியது போல் விழியாடி மூலம் நாம் இப்படித்தான் உணருகிறோம் என்பதை...விஞ்ஞானப்பூர்வமாக...மனித உடலியல் பூர்வமாக விளக்கியது சரிதான்...

    ஆனால் அவர் (எம் கே மாறன்) வினவியது அது பற்றியல்ல என்றே தோன்றுகிறது...வலது பக்கத்தை இடது மூளையும் இடது பக்கத்தை வலது பக்க மூளையும் ''கையாஸ்மா'' என்ற '' x '' போன்ற நரம்பு அமைப்புடன் இணைத்து இயக்குகிறது அது ஏன்? அப்படி அமையவேண்டும் என்பதற்கான இயற்கை நியதி அல்லது அப்படி அமைந்ததற்கான அறிவியல் பூரணமான காரணம் என்ன? என்பதே அவரது சந்தேகம்...? அது பற்றித்தான் எழுத்தாளர் சுஜாதா கூறியதாக கூறுகிறார்....

    அதே போன்று தான் விழிஆடி (ஐ லென்ஸ்)....நாம் பார்க்கும் எந்த உருவமும் ஒளியாகி கண்ணின் (லென்ஸ்) விழி ஆடி வழியாக பாய்ந்து உள்ளே விழித்திரையில் தலைகீழாகத்தான் விழும், அதை மூளை நேராக்கி உணருகிறது,

    (சூரிய ஒளியில் பிலிம் வைத்து சிறுவர்கள் சுவற்றில் வெள்ளைத்துணி கட்டி படம் காட்டுவார்கள் அது தலைகீழாக சுவற்றில் விழும்...இரண்டு ஆடி (லென்ஸ் வைத்தால்) வைத்தால் நேராக பிம்பம் விழும்...அப்படித்தான் என நினைக்கிறேன் மறந்து விட்டது) ...

    ஆனால் கண்ணில் அப்படியல்ல விழித்திரையில் தலைகீழாகத்தான் விழும்...நரம்புகள் மூலம் நேராக மாற்றி உணர்ந்து கொள்கிறது மூளை...இந்த நரம்புத்தொடர்பு அறுந்து போனால் காணும் உருவங்கள் எல்லாம் தலைகீழாகத்தான் தெரியும்...அதைத்தான் நண்பர் குறிப்பிட்டிருக்கிறார்.

    அதே போன்று இடது பக்க மூளை, வலது பக்க மூளை கட்டுப்பாடுகளுக்கும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பதை அறிவதற்கான வினவல் என்றே தோன்றுகிறது. இது பற்றி எங்கோ பத்திரிகையில் படித்ததாக ஞாபகம்..(இணையத்திலும் இருக்கும்)....அதுவும் கணிப்பாக வெளியிடப்பட்டிருந்தது...அது பற்றி தகவல் முழுமையாக கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்...நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் நலம்...

    நன்றி!

  5. #29
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    02 Sep 2011
    Location
    talegaon
    Age
    69
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    32,902
    Downloads
    64
    Uploads
    0
    1)புகைப்பட கருவி வேலை செய்யும் விதத்தில் கண் வேலை செய்கிறது
    2)நரம்பு மண்டல இணைப்பு இடம் வலம் மாறி இருப்பதால் இந்த நிகழ்வு

    அன்புடன்,
    குழந்தை வேல். மு

  6. #30
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    02 Sep 2011
    Location
    talegaon
    Age
    69
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    32,902
    Downloads
    64
    Uploads
    0
    (கிட்னி) சிறு நீரகம் இரத்ததை சுத்தம் செய்கிறது .

    சிறு நீர் சோதனை செய்து பார்த்தால் தெரிந்து விடும்.
    காலை( குளுகோஸ்
    பட்டினி -சாப்பாட்டிற்கு -12 மணி நேரத்திற்கு பிறகு ) 80-115
    சரியான உடல் நலம்
    120 க்கு மேல் இருந்தால் நீரழிவு நோய்க்கு வாய்ப்பு அதிகம்.

    பரம்பரை ,மற்றும் உட்கார்ந்து வேலை செய்தல்,
    குறைவான உடல் பயிற்சி ஆகியவை முக்கிய காரணங்கள்.

    முதல் சட்டம்

    கலோரிகளை குறைக்கவும் ( சாப்பாடை)

    கலோரிகளை எரிக்கவும் ( உடல் பயிற்சி )


    அன்புடன்

    குழந்தை வேல்.மு

  7. #31
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2011
    Location
    லண்டன்
    Posts
    36
    Post Thanks / Like
    iCash Credits
    12,391
    Downloads
    12
    Uploads
    0
    இளசுவின் பதில் அருமை

  8. #32
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றல்.
    கண்வில்லை, தலை கீழ் விம்பம் கண்திரையில் அதை நேராய் உணர்தல் நரம்பு மண்டல திருகு -முறுக்கேறிய நிலையினால்.
    'பல்டி' அருமை.
    இளசு அவர்கள் மிக எளிமையைக் கொடுத்துள்ளார் கருத்து. நன்றி.

  9. #33
    புதியவர்
    Join Date
    09 May 2013
    Location
    A, A
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,907
    Downloads
    4
    Uploads
    0
    நண்பர் எம்.கே. மாறன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

    அதற்கு பதில் சொல்லும் முயற்சியில் இந்த பதிவு.

    நமது கண்கள் அழகான உறுப்பு மட்டுமல்ல ஒரு அற்புதமான உறுப்பும் கூட.

    இந்த கேள்விக்கு பதில், நமது கண்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை

    விளக்கும் போது தான் கூற முடிகிறது. அதற்கு நமது கண்ணின்

    அமைப்பையும், அதன் சில பாகங்களையும் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.

    அடிப்படையில் நமது கண்கள் நமது மூளையின் ஒரு நீட்சியே (Extension)

    ஆகும்.

    உதாரணமாக நீங்கள் எதிரில் இருக்கும் உங்கள் நண்பரின் கண்களைப்

    பார்க்கின்றீர்கள்.

    அவரது கண்ணின் முன்புறம் கறுப்பாக ஒரு பகுதி, பலரையும் கவரும்

    விதமாக அழகாக இருக்கிறது.

    அந்த கறுப்பான பகுதி முதல் உறுப்பு அல்ல, நமது கண்ணின் முன்புறம் உள்ள

    முதல் உறுப்பு, கார்னியா (Cornea) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்

    விழி வெண் படலமே ஆகும்.இதற்கு அடுத்து இருக்கும் கருவிழியே

    (ஆங்கிலத்தில் ஐரிஸ் (Iris) என்று சொல்லப்படுகிறது)கார்னியா வழியாக

    தெரிகின்றது.

    கார்னியா ஒரு நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்த

    குழாய்கள் ஏதுமேயில்லாத ஒரு மெல்லிய திசு.

    இதனை நமது கண்களின் கண்ணாடி ஜன்னல் எனலாம்.

    நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கார்னியாவில் தான்

    முதலில் குவிகின்றது. கார்னியா குவிந்த அமைப்பில் இருப்பதனால் எவ்வளவு

    பெரிய பொருளாக இருந்தாலும் அந்த பொருளின் ஒளிக்கதிர்கள் கார்னியாவில்

    குவிகின்றது. (உதாரணம்- நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது,

    உங்கள் கைப்பிடி (handle bar) மற்றும் விசை அழுத்தி (ஆக்சிலேட்டர்)

    அருகே உள்ள பின்னால் உள்ள அல்லது நம்மைத் தொடரும் பொருட்களைக்

    காண்பிக்கும் குவி ஆடியில் (ரியர் வியூ மிரரில்), அது ஒரு குவி ஆடியாக

    இருப்பதனால் உங்களுக்குப் பின்னால் வரும் உங்கள் இருசக்கர

    வாகனத்தைக்காட்டிலும் மிகப் பெரிய பேருந்தின் உருவம் தெரிகிறதல்லவா அது

    போல).

    அடுத்த செயல்பாடு; கார்னியாவிற்கு அடுத்த பகுதியான ஐரிஸ் எனப்படும்

    கருவிழி நமக்கும் அல்லது நமது கண்ணுக்கும், நாம் பார்க்கும் பொருளுக்கும்

    இடையே உள்ள தூரத்தைப் பொறுத்து, கருவிழியானது ஒரு திரையப்போல

    விரிந்தோ அல்லது சுருங்கியோ ஒளிக்கதிர்களை உள்ளே அனுப்புகிறது.

    கருவிழிக்கு அடுத்து இருக்கும், விட்ரியஸ் ஜெல் எனும் திரவத்தினால்

    நிரம்பியிருக்கும் பின் அறை என்னும் பகுதியில் அந்த ஒளிக்கதிர்கள் பயணம்

    செய்து, கண்ணின் பின்புறம் ஆனால் உள் அடுக்கான விழித்திரை எனப்படும்

    ரெட்டினாவில் (Retina) குவிந்து பிம்பம் பதிவாகிறது. இங்கேதான் நாம்

    பார்க்கும் பொருளின் பிம்பம் தலைகீழாக பதிவாகிறது.

    விழித்திரையில் பதிவான பிம்பமானது விழித்திரையைத் தொடர்ந்து இருக்கும்

    பார்வை நரம்பின் மூலமாக பிம்பம் செய்தி மூளையில் உள்ள பார்வை

    மண்டலத்திற்கு செய்தியை எடுத்துச் செல்கிறது.பார்வை மண்டலத்தில்

    பல்வேறு உயிர் வேதி மாற்றங்கள் மூலம் ஒரு பொருளை நாம் பார்க்க

    முடிகின்றது.

    பொதுவாக நாம் அனைவரும் ஒரு நல்ல பார்வையை அனுபவிக்க

    வேண்டுமானால், இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    அப்போது தான் நாம் பைனாகுலர் விஷன் எனப்படும் இரண்டு கண்களும்

    இணைந்து செயல்படும் சிறந்த பார்வையை பெறுகிறோம்.

    நமது கண்ணின் அமைப்பு, நமது வலது கண் நமது மூளையின் பார்வை

    மண்டலத்தில் இடது புறத்தோடும், நமது இடது கண் நமது மூளையின்

    பார்வை மண்டலத்தில் வலது புறத்தோடும் இணைந்துள்ளது.

    நண்பர் திரு எம்கே மாறன் அவர்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல

    ”மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
    மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
    (அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)” என்பது தவறாகும்.

    விழித்திரையில் ஒளிக்கதிர்கள் குவிந்து பிம்பமாக தலைகீழாக பதிவாகிறது

    என்பதே சரி.

    இரண்டாவது கேள்வி; நமது உடலின் வலது பாகத்தை இடது பக்க மூளையும்,

    இடது பாகத்தை வலது பக்க மூளையும் இயக்குகிறது என்பது உண்மை. இது

    மனித உடலியற்கூறு மற்றும் செயல்படும் தன்மை (Anatomy and

    Physiology)ஆகும். இயற்கையின் படைப்பில் அல்லது இறைவனின்

    படைப்பில் மனித உடலியற்கூறு அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதன் காரணம்

    என்ன? என்பது பதில் காண முடியாத புதிர் எனலாம்.






    Quote Originally Posted by mkmaran View Post
    மன்றத்து நண்பர்களுக்கு,

    ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )

    கேள்வி இதுதான்:

    1.

    நாம் ஒரு காட்சியை காணும்போது
    பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
    மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
    மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
    (அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

    2.

    நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
    இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

    இவை பள்ளி பாடத்தில் படித்தது.
    இதற்கான காரணம் தெரியவில்லை.

    இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

    இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

    இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •