Page 1 of 12 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 143

Thread: இந்தியா - பாகிஸ்தான் தொடர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2

    இந்தியா - பாகிஸ்தான் தொடர்

    இன்று தேர்வுக்குழுவினர் கலந்தாலோசித்து இந்தியக் குழுவைத் தேர்வு செய்யப்போகிறார்கள்.

    யார் யார் இருப்பார்கள் என்று ஒரு யூகம் செய்யலாமா?

    எனக்குத் தெரிந்து 16 ஆட்டக்காரகள் இதோ:

    1. திராவிட்
    2. ஷேவாக்
    3. டெண்டுல்கர்
    4. லஷ்மன்
    5. பதான்
    6. கும்ளே
    7. ஹர்பஜன்
    8. யுவராஜ் சிங்
    9. தோனி
    10 கைஃப்
    11. வாசீம் ஜாஃபர்
    12. காம்பீர்
    13. அகர்கர்
    14. ஆர்.பி. சிங்
    15. ஜாஹீர் கான்
    16. கங்குலி

    முரளி கார்த்திக்கிற்கு சந்தர்பம் கிடைப்பது சந்தேகமே. காரணம் கும்ளேயும், ஹர்பஜனும் நன்றாக பந்து வீசுவதால் அவர்கள் இருவருக்குமே சான்ஸ் கிடைக்கும்.

    இந்தியாவிற்கு வேகப்பந்துவீசை ஆடுவதற்கு கொஞ்சம் கஷ்டப்படுமாகையால் அவர்கள் பிட்ச் தயரிக்கும்பொழுது அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்படி செய்வார்கள். ஆகையால் நாம் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்களை நம்புவதே நல்லது. ஆகையால் பதான், அகர்கர், ஆர்.பி. சிங் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள்.

    கங்குலிக்கு எப்படி 11-ல் இடம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. கைஃப்பிற்கு பதில் திராவிட் முதல் டெஸ்டில் இடம் பெறுவார். அதனால் காம்பீருக்கும் பதில் கங்குலி இடம் பெற்றாலும் பெறலாம். அப்படியானால் யார் தொடக்க ஆட்டக்காரராக இடம் பெறுவார். கங்குலி களத்தில் இறங்கினாலும் இறங்குவார். இல்லையென்றால் பதான் அல்லது திராவிட் அல்லது தோனி தொடக்க ஆட்டக்காரராக இறங்கலாம்

    இது கங்குலிக்கு ஒரு முக்கியமான தொடராக இருக்கும். இதுவேகூட கடைசி தொடராகவும் இருக்கலாம்.

    நம் தேர்வுக்குழுவினர் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல விவாதம் ஆரென்...

    கங்குலிக்கு இடம் உண்டா என்பது சந்தேகம்.. கிரிக் இன்போவில் உள்ள தகவல் படி.. இடம் இல்லை என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. கைப் டெஸ்ட் டீமில் இருக்க மாட்டார்....

    இன்சமாம் வேகப்பந்துக்கு சாதகமாக பிட்ச்சை தயாரிக்க சொல்லியிருக்கிறார்.

    முதலையை தண்ணீரில் சந்திப்பது போல் உள்ளது இப்போட்டி... தொடரை சமன் செய்தாலே போதுமானது.. என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர்
    முதலையை தண்ணீரில் சந்திப்பது போல் உள்ளது இப்போட்டி... தொடரை சமன் செய்தாலே போதுமானது.. என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்...
    நிச்சயமாக இந்த தொடர் சாப்பலின் கோச்சிங்கிற்கு ஒரு சவாலாகவே இருக்கும். இந்தியாவில் இந்தியர்களை வெல்வத் அவ்வளவு சாத்தியமில்லை. ஆகையால் இந்தியாவில் பெற்ற வெற்றிக்கு சாப்பல் மட்டுமே காரணமில்லை. இதற்கு யார் கோச்சாக இருந்தாலும் நிச்சயம் இந்தியா சிறப்பாக செய்திருக்கும். ஆகையால் சாப்பலின் கோச்சிங் திறமையை காண்பிக்க பாகிஸ்தான் ஒரு சிறந்த தளம். அங்கே நம் மக்கள் சிறப்பாக ஆடவேண்டும்.

    ஆகையால் இந்தத் தொடர் நிச்சயம் சவாலாகவே அமையும் நம் இந்திய வீரர்களுக்கு. டெண்டுல்கர் இந்த தொடரில் அடிப்பாரா என்று தெரியவில்லை.

    சோஹிப் அக்தரும், ரானாவும், அப்துல் ரசாக்கும், முகமது சாமியும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். அதுவும் அவர்களுது ஆடும் களத்தில். நிச்சயம் நம் மக்களுக்கு இது ஒரு சவாலாகவே அமையும்.

    என்ன செய்யப்போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பாகிஸ்தானின் முக்கிய பலம், அவர்களுடைய கோச் பாப் ஊல்மர். அவருக்கு நம் மக்களின் பலவினம் நன்றாகத் தெரியும்.

    அவர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை நம் இந்திய வீரர்களின் இடுப்பை குறிபார்த்து பந்தை வீசச்சொல்வார். நம் மக்கள் அதை எதிர்த்து விளையாடவேண்டும். உயரம் அதிகமாக இருக்கும் லஷ்மன் மட்டுமே அந்த பந்துகளை எதிர்த்து ஆடும் திறமை படைத்தவர். டெண்டுல்கரும், திராவிடும் அந்த பந்தை ஆடும் திறமை படைத்தவர்கள்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    தாங்கள் இருவருமே.. கேள்வியும் கேட்டு பதிலும் தந்து விட்டீர்கள். நான் இப்போது ஆமாம் சாமி.

    கங்கூலிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் இல்லையா? காம்பீரை எடுத்து விட்டு கங்கூலியை சேர்க்கலாம், டெண்டுல்கரும் கங்கூலியும் துவக்க ஆட்டக்கர்களாக இறங்கலாம்.
    அன்புடன் உதயா

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கங்குலிக்கும் இடம் கொடுத்துவிட்டார்கள். எதிர்பார்த்தபடியே ஜாஹீர் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. இரண்டாவது விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேலுக்கும் இடம் கிடைத்துள்ளது.

    முகமது கைஃப்பிற்கும் முரளி கார்த்திக்கிற்கும் இடமில்லை.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    நல்ல செய்தி
    அன்புடன் உதயா

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கங்குலியின் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு என்ன செய்கிறார் எனப்பார்ப்போம்.. பார்த்தீவ் படேலுக்கும் வாய்ப்பு.......

    தினேஷ் கார்த்திக் பாவம்.....

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    கிரிக்கெட் புலி என்பதை ஆரென் அண்ணா நிறுபித்து விட்டார். பாராட்டுகள்.

    மிகச்சரியான கணிப்பு.

    பார்த்திவ் பட்டேல் ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை வெத்தான போட்டிகளுக்கு பட்டேல் கீப்பீங் செய்யலாம்.
    பரஞ்சோதி


  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    டோனி இப்ப நல்ல கீப்பிங். பார்த்தீவ் பதிலாக கைஃபை சேர்த்திருக்கலாம்.
    அன்புடன் உதயா

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இந்திய வீரர்களுக்கு 2006 வருடத்து காண்டிராக்ட் கொடுத்திருக்கிறார்கள். அதில் கங்குலியையும் சேர்த்திருக்கிறார்கள். இது எதற்கு என்று தெரியவில்லை. இவர் பாகிஸ்தான் தொடருக்குப்பின் குழுவில் இருப்பாரா என்பது சந்தேகமே. அப்படியானால் எதற்காக அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அவரை அகமதாபாத் டெஸ்டில் நீக்கியது பெரிய சர்சையை கிளப்பியது காரணமாக இருக்கலாமோ?

    "ஏ" கிரேடில் இருப்பவர்கள்:

    ராகுல், சச்சின், கங்குலி, ஷேவாக், கும்ளே, ஹர்பஜன், லஷ்மன் மற்றும் பதான்.

    "பி" கிரேடில் இருப்பவர்கள்

    தோனி, யுவராஜ், கைஃப் மற்றும் அகர்கர்

    "சி" கிரேடில் இருப்பவர்கள்

    காம்பீர், ஜாஹீர்கான் மற்றும் முரளி கார்த்திக்.

    இதில் ஜாஹீர்கான் பி கிரேடிலிருந்து கீழிறக்கப்பட்டிருக்கிறார். பதான் பி கிரேடிலிருந்து ஏ கிரேடிற்கு சென்றிருக்கிரார். ஆனால் தோனி நேரடியாக பி கிரேடிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

    நிறைய முரண்பாடு இருப்பது போல் தெரிகிறது அல்லவா?

    பதான் சிறப்பாக ஆடியதால் அவருக்கு உயர்வு கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் பாவம் ஜாஹீர்கானை கீழிறக்கியது கொஞ்சம் அதிகம் என்றுதான் தோன்றுகிறது. அதற்குக்காரணம் அவர் இனிமேல் ஒரு நாள் தொடரில் ஆடமாட்டார் என்று தெரிவதால், டெஸ்ட் தொடருக்கு மட்டும் ஆடுவதால் அவருடைய தொகையை குறைத்திருக்கலாம். அப்படியானால் இது லஷ்மனுக்கும் கும்ளேக்கும் கங்குலிக்கும் பொருந்துமே? அதை ஏன் கடைபிடிக்கவில்லை.

    தோனிக்கு கிரேட் சி கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு கிரேட் பி கொடுத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

    அதே போல் அகர்கருக்கும் கிரேட் ஏ கொடுத்திருக்கலாம் அவருடைய அனுபவத்தை கணக்கில்கொண்டு.

    பயங்கரமாக அரசியல் இதிலு விளையாடுகிறதோ என்னவோ? யார் கண்டது.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பரம்ஸ்
    கிரிக்கெட் புலி என்பதை ஆரென் அண்ணா நிறுபித்து விட்டார். பாராட்டுகள்.

    மிகச்சரியான கணிப்பு.

    பார்த்திவ் பட்டேல் ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை வெத்தான போட்டிகளுக்கு பட்டேல் கீப்பீங் செய்யலாம்.
    இதை நான் இரண்டு நாள் முன்னயே சொன்னேன். அதை நான் கிண்டல் செய்கிறேனோ என்று ஆரென் சந்தேகப்பட்டார். இப்போ பாருங்க என்ன நடந்தது என்று.....!!!!!
    பாராட்டுகள் ஆரென்.....!!!!!
    அன்புடன்
    மணியா....

Page 1 of 12 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •