Results 1 to 8 of 8

Thread: காதல் கொள்வோம் வாரீர்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் kavinila's Avatar
    Join Date
    18 Nov 2005
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    9,489
    Downloads
    94
    Uploads
    0

    காதல் கொள்வோம் வாரீர்

    ஒருவருக்கொருவரென்று
    உள்ளங்கள் இணைந்த போது
    உருவகம் கொண்டதங்கே
    உண்மையான குடும்பமொன்று

    மோகமும் ஆசையும்
    முழுவதுமாய் முடிந்தபோது
    இடையிலே விரிசலொன்று
    எட்டிஎட்டிப் பார்த்ததங்கே

    சுற்றமும் சூழலுமாய்
    சுத்திச்சுத்தி சுருதி போட
    சுகமெல்லம் சொற்பமாக
    சோகங்கள் சூழ்ந்ததங்கே

    விதியாலே இணைந்த காதல்
    வீதியிலே வந்தபோது
    காதலும் கானலாகிக்
    காணாமல் போனதங்கே

    உண்மையாய் காதலித்தால்
    உணர்விலே ஒன்று பட்டால்
    மற்றவர் சொல்வதெல்லாம்
    மறைந்து நின்றாடிடுமோ

    காதலிப்பதென்று சொல்லி
    காதலையழிப்பதை விட்டு
    காதலுடன் அறிவு சேர்த்து
    காதல் கொள்வோம் வாரீர்

    உண்மையான காதலென்றால்
    உணர்வுகளைப் பரிமாறி
    உயிர்களும் இடம் மாறி
    ஒன்று பட்டு இருப்பதன்றோ

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    கவிநிலா,
    அருமையான கவிதை..
    சீரான நடை..
    காதலிக்கும் பொழுது வராத எண்ணங்களும் சிந்தனைகளும்..சமுதாய நெருக்கடிகளும்..
    கலியாணம் முடிந்ததும் வருவதேன்?

  3. #3
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    வாங்க கவிநிலா - நல்லாவே சொன்னிக்க? யாரு இதை புரிஞ்சுக்குவா
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    அபாரம் கவிநிலா.
    உண்மை மட்டுமே உள்ளத்தில் உறையும், உண்மை அறிவதே அறிவு, அது காதலாய் இருந்தாலும். பாராட்டு.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    "உண்மையான காதலென்றால்
    உணர்வுகளைப் பரிமாறி
    உயிர்களும் இடம் மாறி
    ஒன்று பட்டு இருப்பதன்றோ"


    பக்கா..சூப்பர்..

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அழகான கவிதை
    நல்ல கருத்து

    கவிதை அருமை
    பாராட்டுகள் கவிநிலா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    புதியவர்
    Join Date
    03 May 2007
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    கண்ணோடு கலந்து இருந்தால்
    கண்ணீரோடு விட்டிருப்பேன்
    அவள் என்
    உயிரோடு கலந்து விடடாள்
    எப்படி விடுவேன்
    என் உயிரை!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    காதலுக்காக உயிரை பலபேர் விட்டிருக்கிறார்கள்.
    கவிதை நன்று.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •