Results 1 to 10 of 10

Thread: திருத்தி எழுதியவர் (அ.மை.-14)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    திருத்தி எழுதியவர் (அ.மை.-14)

    திருத்தி எழுதியவர் (அ.மை.-14)

    அறிவியல் மைல்கற்கள் -14

    நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
    (1473 - 1543)


    13ம் பாகம் - கலைகளில் பரிமாணம் இங்கே -

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5907

    கிமு 90ஆம் ஆண்டில் பிறந்த டாலமி , பூமியைச் சுற்றியே
    மற்ற கிரகங்களும் , ஏன் சூரியன் கூட சுற்றிவருவதாக நம்பினார்.
    அவரின் கோட்பாட்டை அனைவரும் நம்பினார்கள்.
    பூமியே பிரதானம் என நம்ப விரும்பினர் மக்கள்.
    அந்த நம்பிக்கைக்குத் தீனி போட்டது டாலமியின் கொள்கை.
    வெற்றிக்குக் கேட்பானேன்?

    பல கோளாறுகள், சந்தேகங்கள் சிலரால் எழுப்பப்பட்டாலும்
    பெரும்பான்மையோர் நம்ப விரும்பிய ' பூமியைச் சுற்றும் அண்டம்'
    கொள்கை அடுத்து 1500 ஆண்டுகளுக்கு கோலோச்சியது.

    அறிவை 'நம்பிக்கைகள்' 'சொந்த விருப்பங்கள்'
    'நாமே பிரதானம் ' என்ற ஈகோ - இவை மூழ்கடித்துவிடும்
    என்பதற்கு டாலமியின் வெற்றி (தப்பு) கொள்கையே நல்ல உதாரணம்.

    வலிமையானவர் சொன்ன 'பொய்மை ' பல நூற்றாண்டுகளுக்கு
    உலக மக்களையும், விஞ்ஞானிகளையும் மயக்கி வைத்திருக்கும்
    என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.

    வெற்றுப்பலகையில் எதையும் புதிதாய் எழுதிவிட முடியும்.
    ஆனால், உலகம் மதித்து நம்பிக்கொண்டிருக்கக்கூடிய
    பெரும் வெற்றி (தப்பு) கொள்கைகள் பொறிக்கப்பட்ட அறிவியல் சுவற்றில்
    அதை அழித்து, திருத்தி - சரியாய் மாற்றி எழுதி
    ம()க்கள் கூட்டத்தை நம்பவும் வைக்கவேண்டும்.

    இது என்ன சுலபமான காரியமா?
    இதையும் செய்துகாட்டிய மாபெரும் சாதனையாளர் நம் கோபர்னிக்கஸ்.
    (நாம் செல்லமாய் கோபர் என அழைக்கலாமா?)

    கோபர் போலந்தில் பிறந்தார்;
    இத்தாலியில் மருத்துவம், சட்டம் படிக்கச் சென்றார்.
    சென்ற இடத்தில் வானியலில் ஆர்வம்.
    அப்போது டாலமி சொன்ன 'பூமியைச் சுற்றி' - கோட்பாட்டை ஆராய்ந்தார்.
    பல ஓட்டைகளைக் கண்டார்.குழம்பினார். டாலமி சொல்லிச்சென்றது தவறு
    என்று மட்டும் உணர முடிந்தது. ஆனால் சரியான வானியல் அமைப்பு என்ன
    என கோபருக்கு அப்போது தட்டுப்படவில்லை.

    1503-ல் படிப்பு முடிந்து போலந்து திரும்பி மாமாவுக்கு உதவியாக
    தொழில் புரியலானார். ஆனாலும் வானில் சுற்றும் மாயக்கிரகங்களின் மேல்
    உள்ள மையல் குறையவில்லை. ஓய்வெல்லாம் அதைச் சுற்றியே எண்ணம்- ஆய்வு.

    டாலமி வரைந்த தப்பான அறிவியல் ஓவியத்தை
    அறிவுத் தூரிகை கொண்டு ஒரே 'அடியில்' வீழ்த்தினார்.
    மத்தியில் இருந்த பூமியின் தப்பான முக்கியத்துவத்தை மாற்றினார்.
    அந்த இடத்தில் சூரியனைப் பொருத்தினார்.

    அட, எல்லாக் குளறுபடிகளும் ஒரே மாற்றத்தால் தீர்ந்தன.
    நிலா தனிக்கிரகமல்ல... பூமிக்கு துணையாய் பவ்யமாய் அதனிடத்தில் பொருந்தியது.
    மாத, வருடக் கணக்கு எல்லாம் இப்போது அறிவாய்தலுக்குக் கட்டுப்பட்டன.

    கோபர் கிரகங்களை இரு அணிகளாய்ப் பிரித்தார்:
    1) பூமிக்கு உள்சுற்றாய் உள்ள அணி
    2) பூமிக்கு வெளிச்சுற்றாய் உள்ள அணி.
    எந்த கிரகம் எங்கு என சூரியனிலிருந்து உரிய இடத்தைக் கொடுத்தார்.
    கச்சிதமாய் எல்லாம் சரியாய் அமைந்தது.
    பலநூற்றாண்டு மூடு(ட)பனி விலகியது.
    சூரியனுக்கு உரிய சிம்மாசனம் மீண்டும் கிடைத்தது.
    இப்போது செவ்வாய், சனி, ஜூபீட்டர் போன்றவை
    ஏன் 'ரிவர்ஸ்' பயணம்போல் நமக்கு தெரிகிறது என்பதும்
    இப்போது கோபர் தந்த புதிய வான்குடும்ப ஓவியத்தால் விளங்கியது.

    ஆண்டாண்டுகள் ஆழப்பதிந்திருந்த தவறான கொள்கைகளை
    வேரோடு பிடுங்கி எறிந்து, அஞ்சாமல் புதிய அறிவுவிருட்சம் நட்ட
    நிக்கோலஸ் கோபர்நிக்கஸை இந்த மைல்கல்லின் நாயகனாய்
    சித்தரித்தது மெத்தப் பொருத்தம்தானே நண்பர்களே?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல தகவலுக்கு நன்றி.. இளசு..

    ஆராய்ச்சியில் மற்றவர்களின் கருத்தை மாற்றிச்சொல்லி மக்களை நம்ப வைப்பது சிரமமான செயல்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி அறிஞரே

    உங்கள் அனுபவம் பேசுகிறது...

    வயிற்று அல்சர் - ஹெலிக்கோபேக்டர் விஷயமும் அப்படித்தான்..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5692
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    இன்றைய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும், சாதனைகளுக்கும் சரியான விதத்தில் வழிகாட்டியாக அமைந்தவர் கோபர்நிகஸ்தான் என்பதில் சற்றும் சந்தேகமில்லை அண்ணா. சுருக்கமாக முடித்தது போல தோன்றுகிறது. அரிய விசயங்களை தொடர்ந்து தருவதற்கு மிக்க நன்றி அண்ணா.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அற்புதமான தகவல். என்னதான் பூட்டி வைத்தாலும் உண்மை வெளி வந்து விடும் என்பது இதுதானோ. இது போன்ற தகவல்களை நீங்கள் தர மன்றத்தில் படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான தகவல்கள் அண்ணா.

    பள்ளியில் படிக்கும் போது இவரது புகைபடம் பார்த்து சிரிப்போம், அப்போ எல்லாம் அறிஞர்களின் மகத்தான சாதனைகள் பற்றி தெரியாது தானே. இன்றோ நீங்க சொன்னதை படித்து வியக்கிறேன்.

    மேலே தலை தூக்கி நிலா இருக்கிறதா இல்லையா என்று கூட பார்க்க நமக்கு தெரியவில்லை, அப்படி இருக்கையில் ஒரு மகான் எத்தனை காலங்கள் வீணாக்கி தன் கண்டுபிடிப்புகளை வெளியிட பாடுபட்டிருப்பார்.
    பரஞ்சோதி


  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Dec 2005
    Location
    வட அமெரிக்கா
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0
    ம் .. என்னா... சூரியனைச் சுற்றித்தான் கோள்கள் என்பதைச் சில வருடங்களுக்கு முன்னர் தான் வத்திக்கான் உத்தியோகபூர்வமாக ஒத்துக் கொண்டது என்பதுதான் .... ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதாங்க பெரியவர் சொன்னது (உண்மை/பொய் ) மாற நாளாச்சு

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாரதி,ராகவன்,பரம்ஸ், இளந்திரையன் -

    அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி.

    சிறு இடைவெளி... இன்று அடுத்த மைல்கல்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    1500 வரை டாலமி
    பின்னர் கோப்பர் நிக்கஸ்
    கோபர் கிரகங்களை இரு அணிகளாய்ப் பிரித்தார்:
    1) பூமிக்கு உள்சுற்றாய் உள்ள அணி
    2) பூமிக்கு வெளிச்சுற்றாய் உள்ள அணி.
    எந்த கிரகம் எங்கு என சூரியனிலிருந்து உரிய இடத்தைக் கொடுத்தார்.
    சூரியக்குடும்பத்தின் ஓவியத்தை நமக்களித்த கோபர்நிக்கஸை நாம் உள்ளளவும் மறக்கமுடியாது.

    புளூட்டோவிற்கு அடுத்ததாக ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமீபத்திய செய்தியில் படித்தேன். இது பற்றிய விவரங்கள் உண்மையா அண்ணா?
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கோபர்நிக்கஸை நிச்சயம் உலகம் உள்ளளவும் மறக்கவே கூடாது. இது ஒரு மகத்தான சாதனையே.

    இப்பொழுது Xeno என்றொரு கிரகத்தைக் கண்டுபிடித்த்தாக செய்தியில் படித்தேன்.

    போன வருடம் Sedna என்ற கிரகத்தையும் கண்டுபிடித்ததாக செய்திகளில் படித்தேன்.

    இவை இரண்டு கிரங்களின் விஷயங்களையும் கொஞ்சம் எழுதினால் மேலும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

    டாலமி அவர்களின் கண்டுபிடிப்பையும் நாம் குறைவாக எடை போடக்கூடாது. அவர் கண்டுபிடித்தது கோபர் பிறப்பதற்கு 1500 வருடங்களுக்கு முன்பு. அந்த காலத்தில் எந்த ஒரு பயற்சியும் இல்லாமல், எந்த விதமான அறிவுரைகளும் இல்லாமல் அவருடைய சொந்த முயற்சியில் கண்டுபிடித்து வெளியிட்டார். அப்படி டாலமி கண்டுபிடித்ததாலேயே பல சந்தேகங்கள் கோபருக்கு வந்திருக்கிறது. அதனாலேயே கோபரால் விடையை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

    ஆகையால் இருவரையும் பாராட்டுவோம்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •