Results 1 to 12 of 12

Thread: தீபாவளி - 2005

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0

    தீபாவளி - 2005

    தீபாவளி - 2005

    சின்ன வயசு தீபாவளிகளையும் அதனால் கிடைத்த வலிகளையும் ஒரு பட்டியல் போட்டப்புறம் இந்த வருசம் தீபாவளி எப்படி இருந்ததுன்னு எழுதனுமுன்னு தோணிச்சு. அதான் இந்தக் கட்டுரை.

    பண்டிகைன்னாலே திங்குறதும் கொண்டாடுறதும் தான. ஆகையால தீபாவளிப் பலகாரகங்களைப் பத்தி மொதல்ல பாப்போம்.

    ஊர்ப் பலகாரங்களிலேயே எனக்கு அதிரசமும் சுசியமும் ரொம்பப் பிடிக்கும். அப்படீன்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமுன்னு நினைக்கிறேன். அதிரசம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. சுசியத்துக்கு ஊரூருக்கு ஒவ்வொரு பேரு. உருண்டைய இருக்கும். உள்ள இனிப்பா பூரணம் இருக்கும். அதுதான் சுசியம். எண்ணெய்ல பொரிச்சி எடுக்குறது.

    அதிரசம் கொஞ்சம் சிரமம். ஆகையால இந்த தீபாவளிக்குச் சுசியம் செய்யலாமுன்னு ஆசை. ஆனா எப்படிச் செய்யுறதுன்னு தெரியாது. இனிப்பு உருண்டைய மாவுல முக்கி எண்ணெயில போடுறத பாத்துருக்கேன். முழுப் பாசிப்பருப்புல செஞ்சதுன்னு தெரியும். ஆகையால நானே என்னுடைய ஆராய்சியைத் தொடங்கி சுசியம் சுடலாமுன்னு நெனச்சேன். ஒருவேளை ஆராய்ச்சி தோல்வியாயிட்டா? அதுக்குதான இருக்கு ரவாலட்டு. நானொரு ரவாலட்டு ஸ்பெஷலிஸ்ட். அப்படியே அம்மாகிட்ட இருந்து வந்தது. ரவாலட்டும் செய்வோமுன்னு முடிவு செஞ்சேன். அப்பத்தான் ஒன்னு போனாலும் இன்னோன்னு இருக்குமுன்னு தீபாவளிக்கு மொத நாள் சாங்காலமே ஏற்பாடுகளைத் தொடங்கினேன்.

    மொதல்ல பாசிப்பருப்பைக் கொஞ்சமா தண்ணி ஊத்தி குக்கர்ல வெச்சாச்சு. அப்படியே ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா வறுத்து ஆற வெச்சாச்சு. ஆற வெச்ச ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா அரைச்சுக்கிட்டு அதுக்குப் பாதிக்குக் கொஞ்சம் குறைவா சீனியை அரைச்சிக்கிட்டாச்சு. ரெண்டையும் கலந்து ஒரு சட்டியில எடுத்துக்கிட்டேன். அப்புறம் நெய்யக் காய்ச்சி அதுல முந்திரியும் திராட்சையும் போட்டு, அந்த நெய்யை அப்படியே ரவைக் கலவைல கொட்டி, சூடு ஆறும் முன்னாடியே உருண்டை பிடிச்சாச்சு. கமகமன்னு வாடை. பக்கத்து வீட்டுக்கே போயிருச்சு. அவங்களுக்கு ஒரு அஞ்சு உருண்டை.

    அடுத்தது வெல்லத்தப் பொடிச்சு வேக வைத்த பாசிப்பருப்புல கலந்தேன். என்னவோ கோளாறு. கொழகொழன்னு இருந்தது. கட்டியா இருந்தாதானே உருண்டை பிடிக்க வரும். சரி. ஆண்டவன் விட்ட வழின்னு, கொஞ்சம் அரிசிமாவையும் மைதா மாவையும் கலந்து கரைச்சிக்கிட்டேன். சஃபோலா கரடி ஆயிலை ஊத்திக் காயவெச்சு, உருண்டைய மாவுல முக்கிப் போட்டா..........எல்லாம் ஒடஞ்சு போயி எண்ணெய்யோட கலந்திருச்சி.

    ஒரே சோகம். ச்ச. ஒரு பலகாரம் செய்ய வரலையேன்னு வருத்தப்பட்டு அடுப்ப அணைச்சாச்சு. இப்ப ரெண்டு இனிப்பு ஆச்சு. ஒன்னு ரவாலட்டு. ரெண்டாவது இனிப்புப் பருப்பு. பின்னே அந்தப் பருப்பை என்ன செய்வது?

    தீபாவளி அன்னைக்குக் காலைல ஏழு மணிக்கெல்லாம் ஃபோன். அப்பாதான். வாழ்த்துகள் சொல்லத்தான் எழுப்புனாரு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லீட்டு மறுபடியும் படுத்தாச்சு. அப்படியே ஒரு எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தீபாவளி மெசேஜ் டைப் பண்ணி, அனுப்ப வேண்டியவங்களுக்கெல்லாம் மொபைல்ல அனுப்பினேன்.

    அப்படியே குளிச்சி முடிச்சிட்டு பூஜைய முடிச்சேன். அரளிப்பூவும் குட்டிக்குட்டியா ரோஜாப்பூக்களும் இருந்தது. சாமி ஷெல்ஃபைத் தொடச்சு மறுபடியும் அடுக்கி விளக்கேத்தி சாமியும் கும்பிட்டாச்சு. அப்புறமென்ன சாப்பிட வேண்டியதுதான.

    பக்கத்துல தங்கீருக்குற ரெண்டு நண்பர்களை தீபாவளிக் காலைச் சாப்பாட்டிற்கு வரச் சொல்லீருந்தேன். வந்தவங்கு இனிப்பு வகைகளையும் தோசையும் குடுத்து திருப்திப் படுத்தியாச்சு. அதுல பாருங்க, அந்த இனிப்புப் பருப்பை ரெண்டாவது வாட்டி கேட்டு வாங்கிச் சாப்பிட்டாங்க.

    பெறகு கொஞ்ச நேரம் டீவி. ஆனா ஒழுங்கா டீவி பாக்க யார் விட்டா? ஒரே வேட்டுச் சத்தம். போன வருசத்தை விட இந்த வருசம் சத்தம் கூடியிருக்கு. சின்ன வயசில் இருந்தே அதிர் வேட்டுகளை விட வேடிக்கை வானங்களிலே ஈடுபாடு உண்டு. அதுனால இந்த வருசம் ஒன்னும் வாங்கலை. ஆஃபீசுல தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துல வான வேடிக்கைகள் காட்டுனாங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. அதுலயே திருப்தி வந்துருச்சு.

    சன் டீவிய அப்படியே விட்டுட்டு ஜெயாவைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்ததே. இளையராஜாவுக்கு வயசாச்சுன்னு இந்த நிகழ்ச்சி பாத்துதான் தெரிஞ்சது. ஜெயச்சந்திரன் வந்து பாடுவாருன்னு காத்திருந்தேன். ஆனா நான் காத்திருக்குற வரைக்கும் அவரு வரலை. மதியம் அத்தை வீட்டுக்குச் சாப்பிடப் போகுற நேரம் ஆச்சே. டீவியை நிப்பாட்டீட்டு கெளம்பியாச்சு. ரவாலட்டோடதான். விட முடியுமா?

    ஒரு பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம். பைக்குல ஒருவழியா போய்ச் சேந்தேன். ரோடுகள் ரொம்ப மோசம். பாத்ததும் மாமா கேட்டுட்டார். வேற எத? என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னுதான். கடந்த ரெண்டு மாசத்துல கொஞ்சம் பூசுன மாதிரி ஆயிட்டேன். அதான்.

    மாமா வடகர்நாடகாவைச் சேர்ந்தவர். அதுனால அன்னைக்கு அவங்க முறைப்படி சாப்பாடும் பூஜையும். ஊரிலிருந்து அவங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. ஆகையால அவங்களே சமைச்சிருந்தாங்க.

    கோதுமைப் போளி கடலைப் பருப்பு வெச்சதுதான் அவங்களுக்கு பிரதானம். ஹோளிகே-ன்னு சொல்வாங்க. அதுல நெய்யையும் பாலையும் ஊத்திச் சாப்பிடனும். எனக்கு நெய் தொண்டையில எறங்காது. என்னோட எலையில பெரிய போளிய வெச்சு, மறுக்க மறுக்க நெய்யக் கொட்டுனாங்க. வேற வழி! முடிச்சதும் அப்பளமும் வெங்காய பஜ்ஜி வந்தது. இது அத்தை ஸ்பெஷல். கூட ஊறுகாய். அப்பத்தான் நெறைய ஹோளிகேயைத் திகட்டாம திங்கலாமாம். ஊறுகாய் இல்லாமலேயே திகட்டாமச் சாப்பிட்டான் மச்சினன்.

    கேக்கக் கேக்க விடாம இன்னும் ரெண்டு ஹோளிகேகளையும் அதோட அதுகளுக்கு நெய்க்குளியல் வேற. "முருகா! இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை"ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டேன்.

    அத்தோட விட்டாங்களா? எலைல விழுந்தது ரெண்டு சப்பாத்தியும் சென்னா கறியும். அட ஆண்டவா! வயிறா! வண்ணாந்தாழியா! அப்புறம் சோறு வேறு. இதில் விஷயம் என்னன்னா....ஒரு வாட்டி மட்டும் சோறு போடக்கூடாதம். ஒரு கரண்டி போட்டதும் கண்டிப்பா இன்னொரு கரண்டி போடனுமாம். ஆம்பரான்னு ஒன்னு. நம்மூரு ரசம் போல. அத ஊத்திச் சாப்பிட்டாச்சு. அப்புறம் தயிர். அடேங்கப்பா. எந்திரிக்க முடியல.

    அப்புறம் கொஞ்ச நேரம் பேசீட்டு இருந்திட்டு வீட்டுக்குக் கெளம்புனேன். விஜய் டீவியில மிஸஸ்.டவுட்பயர் ஓடிச்சு. தமிழில். நல்லாவே இருந்தது. அத முழுசும் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில் விட்டு விட்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.

    மதியம் அவ்வளவு சாப்பிட்டாலும் ராத்திரி பட்டினியா கிடக்க முடியும்? மூனு தோசையச் சுட்டுச் சாப்பிட்டேன். தொட்டுக்க வெங்காயம் தாளிச்சுப் போட்ட தயிர். அந்த நேரத்துல வான வேடிக்கைகள் நல்லா இருந்தது. மாடியில நின்னு ரசிச்சுப் பாத்தேன்.

    அப்புறம் சிஸ்சும் பில்லும் ஃபோன் பண்ணினாங்க. சிஸ்-பில்லுன்னா தெரியும் தானே. சிஸ் - சிஸ்டர். பில் - பிரதர் இன் லா. அவங்ககிட்ட கொஞ்ச நேரம் கத பேசீட்டு வெச்சாச்சு.

    அட! ஒரு விஷயத்தைச் சொல்லலையே. பெங்களூர்ல பெஞ்ச மழைல ரோடெல்லாம் சகதி. பைக்லயும் ஒரே சகதி. வண்டியப் பாத்த அத்த, "என்ன ராகவா! வண்டி பழசு மாதிரி தெரியுது"ன்னு வேற சொல்லீட்டாங்க. சாங்காலமா வாளில தண்ணி எடுத்துட்டு வந்து கழுவினேன். நல்லாக் கழுவி வண்டியோட மானத்தைக் காப்பாத்தினேன். (அதுக்கப்புறம் பெஞ்ச மழைல மறுபடியும் வண்டி சகதியானது வேறு கத.)

    நெறைய வெடி போட்டதுல, ஏழெட்டு மணி வாக்குல பயங்கர ஹீட். வீட்டுக்குள்ளயும் வெளியேயும் ஒரே வெக்கை. வெடி மருந்து நாத்தம் வேற. என்னடா வேதனைன்னு நெனைக்கும் போதே மழை பேஞ்சு அத்தனையையும் அமத்தீருச்சு. வருணபகவானுக்கு மானசீக ஃபோன் போட்டு நன்றி சொல்லீட்டுப் படுத்துத் தூங்கியாச்சு. இப்படித்தாங்க போச்சு என்னோட தீபாவளி.

    கடைசியா ஒரு விஷயம். தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாளைக்கு எனக்கு வயிறு சரியில்லைங்க. எல்லாம் ஹோளிகேயின் நெய் வண்ணமுன்னு நெனைக்கிறேன்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு நாள் நினைவுகளை இவ்வளவு 'இனிப்பா' பகிர்ந்துக்கமுடியுமா?

    முடியும் என்கிறது இராகவன் பதிவு.

    சுசியம் பொய்யாகியும் ஜெயித்தது
    என்னை விட்டுவிட்டு ஜெயாவில் ராஜா நிகழ்ச்சி பார்த்தது

    என அவ்வப்போது வயிற்றெரிச்சலோடு படித்து வந்தவன்
    அடுத்த இரண்டு நாள் 'வயிறு சரியில்லை' என்றதும்
    வயிற்றில் பால் வார்த்துக்கொண்டேன்.

    ஹோளிகே-க்கு ஜே!


    விழாநாள் நினைவுகள் -- விருந்தாய் ருசித்தன.

    அருமை இராகவன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஐயா கலக்கிட்டீங்க...
    ரொம்ப வருஷம் கழிச்சு தீபாவளியைக் கூட்டுக் குடும்பமாக் கொண்டாடினோம்.
    அதில் பாருங்க, எங்க தாத்தா வீட்டு டிவி ரிப்பேரு.
    ஆனால் எல்லாரும் ஒண்ணா ஒக்காந்து எண்ணை தேச்சிக் குளிச்சு பக்கத்துப் பெருமாள் கோயிலுக்குப் போயி வந்து அம்மாச்சிகிட்டா ஆசீர்வாதம் (101 ரூவாயி) வாங்கி ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டுச் சின்னப் புள்ளைகளோட வெடி வெடிச்சு... அந்த சந்தோஷத்தில டிவி இல்லாதது மறந்தே போச்சு... அத்தை முறைக்க முறைக்க மாமாகிட்ட டிவியை சரி பண்ணாதீங்கன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஆகா அருமையான தீபாவளி கொண்டாட்டம் போலிருக்குதே.

    எங்க வீட்டில் அதிரசம் செய்ய போக, அது பாதரசம் மாதிரி ஓட, அப்புறம் முறுக்கு, அல்வா, கொக்கிஸ் முருக்கு செய்து தர, தின்று தீர்த்து விட்டேன்.

    நம்ம வயிறு நாம் சொன்னது போல் நடந்து கொள்ளும்.

    இராகவன் அண்ணா வயசு ஆயிச்சு இல்லையா, இனிமேல் வாயடக்கம்,
    நாவடக்கம் வேண்டும்.
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by ilasu
    என அவ்வப்போது வயிற்றெரிச்சலோடு படித்து வந்தவன்
    அடுத்த இரண்டு நாள் 'வயிறு சரியில்லை' என்றதும்
    வயிற்றில் பால் வார்த்துக்கொண்டேன்.

    ஹோளிகே-க்கு ஜே!


    விழாநாள் நினைவுகள் -- விருந்தாய் ருசித்தன.

    அருமை இராகவன்.
    ஆகா! ஆனா மூனாவது நாளில் சரியாப் போச்சே! ஹி! ஹி!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    ஐயா கலக்கிட்டீங்க...
    ரொம்ப வருஷம் கழிச்சு தீபாவளியைக் கூட்டுக் குடும்பமாக் கொண்டாடினோம்.
    அதில் பாருங்க, எங்க தாத்தா வீட்டு டிவி ரிப்பேரு.
    ஆனால் எல்லாரும் ஒண்ணா ஒக்காந்து எண்ணை தேச்சிக் குளிச்சு பக்கத்துப் பெருமாள் கோயிலுக்குப் போயி வந்து அம்மாச்சிகிட்டா ஆசீர்வாதம் (101 ரூவாயி) வாங்கி ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டுச் சின்னப் புள்ளைகளோட வெடி வெடிச்சு... அந்த சந்தோஷத்தில டிவி இல்லாதது மறந்தே போச்சு... அத்தை முறைக்க முறைக்க மாமாகிட்ட டிவியை சரி பண்ணாதீங்கன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன்.
    101 ரூவா வாங்குனீங்க....கால்ல விழுந்தீங்களா? அது ரொம்ப முக்கியம்.

    நானும் இப்பல்லாம் டீவி ரொம்பப் பாக்குறதில்லை பிரதீப். நேரமில்லை. ரேடியோ இருக்கு. புத்தகங்கள் இருக்கு. நிறைய எழுத வேண்டியதும் இருக்கு.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பரம்ஸ்
    நம்ம வயிறு நாம் சொன்னது போல் நடந்து கொள்ளும்.

    இராகவன் அண்ணா வயசு ஆயிச்சு இல்லையா, இனிமேல் வாயடக்கம்,
    நாவடக்கம் வேண்டும்.
    தம்பி வயிறு விஷயத்தில் நான் அகத்தியர். ஆனா நெய்யென்றால் எனக்கு ஆகாது. வெண்ணெய்யும் நெய்யும் எனக்குப் பிடிக்காதவை. அதன் வாடையே உமட்டும். அத்தோடு இப்படி வலுக்கட்டாயமாக சாப்பிட்டால் வலி கட்டாயம்.

    வாயடக்கம். இன்னும் ஒரு மாசத்துக்கு நான் சைவமாயிட்டேன். அதனால முந்தா நேத்து மேரி பிரவுனிலும் நேத்து சுஃபி (பெர்ஷியன்) உணவகத்தில் கட்டு கட்டியாச்சு. ஹி ஹி.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அவரு சொன்ன அடக்கத்தில முக்கியமானதை விட்டுட்டீங்களே...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    அவரு சொன்ன அடக்கத்தில முக்கியமானதை விட்டுட்டீங்களே...
    எத நாவடக்கமா? அப்ப எனக்குப் பேசத் தெரியலைன்னு சொல்றீங்களா?

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நன்னா சாப்பிட்டு கொண்டாடியிருக்கிறீர்கள்....

    ஒரு நண்பர் வீட்டிற்கு வரவழைத்தனர். முறுக்கு, சோமாஸி செய்திருந்தார்கள்.. கூட ஹல்டிராம்ஸ் சோன்பப்புடி..

    இரவு, என் இல்லத்திற்கு 10 நண்பர்கள் வந்தனர்.. இந்திய கடையில் வாங்கிய ஜிலேபி, லட்டுவுடன்.. தீபாவளி கடந்தது...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ரொம்ப பொறாமைப்பட வைக்கிறது நண்பரே..
    எத்தனை அருமையா கொண்டாடி இருக்கீங்க.. தனியா வாழற வாழ்க்கையே வாழ்க்கைதான்போல... (சேரன் இதைப் பார்த்துப்புடாதீங்கப்பா...)

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Dec 2005
    Location
    வட அமெரிக்கா
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0
    அட .. நமக்கெல்லாம் தீபாவளி வந்ததும் தெரியாது போனதும் தெரியாது... அப்பிடீ ஒரு வாழ்க்கை... அனுபவிக்கிறீங்க... அனுபவி ராஜா..... அனுபவீ.. (வவுத்து வலியையும் தான் .... நம்ம வவுத் தெரிச்சலுங்க.... ஹி...ஹி ..)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •