Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: நினைவலைகள் களவும் கற்று மற

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    நினைவலைகள் களவும் கற்று மற



    அப்பா இல்லாத காரணத்தால் சின்ன வயதில், என் அம்மா என்னையும் என் தம்பியையும் வளர்க்க ரொம்ப ரொம்பவே கஷ்டப்பட்டாங்க, குறிப்பாக எங்க உறவினர்கள் முன்னாள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும், யாரும் எங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்லக்கூடாது என்பதே என் அம்மாவின் ஆசை. நானோ நினைத்ததை சாதிக்க துடிக்கும் பயங்கரமான கோபக்கார முரட்டு புத்திச்சாலி, என் தம்பியோ அன்பான அப்பாவி நோயாளி.

    நாங்கள் இருவரும், பொய், திருட்டு, கெட்டு பேச்சுகள், கெட்ட செயல்கள் செய்வதை தடுக்க அம்மா தினமும் அறிவுரைகள், கதைகள் சொல்வார்கள், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், பெரிய பெரிய தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை தினமும் இரவில் சொல்வார்கள். நானும் என் தம்பியும் கூடுமானவரை அம்மாவின் எண்ணத்தை காப்பாற்றியிருக்கிறோம். எங்க தெருவில் மற்ற பையன்கள் வாயிலில் செந்தமிழாய் கெட்ட வார்த்தைகள் வரும், அண்ணன், தம்பியை பார்த்து அவன் பரம்பரையே திட்டுவான். பெத்த அம்மா தன் மகனை நாசமாய் போ என்று திட்டுவதும் உண்டு, சிலரின் திட்டுதல் நன்மையில் கூட முடியும் (எ.கா. கொல்லையில் போ, பேதியில் போ, மருந்து மாத்திரை செலவே இல்லை). அந்த தாயை அழைத்து என் அம்மா அறிவுரை சொல்வார்கள். என் மற்றும் தம்பியின் வாயிலிருந்து ஒரு கெட்ட வார்த்தை தூக்கத்தில் கூட வராது. சில சமயம் அர்த்தம் தெரியாமல் யாராவது திட்டினாலும் என் அம்மா அந்த பையனை அழைத்து, அவன் திட்டியதற்கு அர்த்தம் சொல்வார்கள், இப்போ சொல்லு, நீ உன் தம்பியை திட்டினாயா, அல்லது உன் அம்மாவை திட்டினாயா.

    மாலையில் 6 மணிக்கு மேல் வீட்டு வாசலை தாண்டி வெளியே செல்ல அனுமதி கிடையாது. பள்ளி விட்டு வந்ததும் வெளியே சென்று விளையாட அனுமதி, அதுவும் 6 மணி வரை தான், பல நாட்கள் மாலை 6 மணி கடந்ததை அம்மா கையில் இருக்கும் கொய்யா குச்சி தான் சொல்லும். தம்பி அதிஷ்டக்காரன், அதிகம் விளையாட செல்ல மாட்டான், வயதான பாட்டிகள் மத்தியில் ஊர்க்கதை பேசுவதில் வல்லவன்,யார் யார் கூட ஓடிப் போனார்கள், .

    என்னுடைய நண்பர்களுடன் விளையாடும் போது நேற்றிரவு அந்த தெருவில் நடந்த அம்மன் விழாவில் ரஜினி படம் போட்டார்கள், போய் பார்த்தோம், மேலத் தெரு கல்யாண வீட்டில் வீடியோ போட்டார்கள் என்று எல்லாம் பேசுவதைக் கண்டு நாம மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் மனம் வருந்தியிருக்கிறேன். அம்மா, நம்மை என்று சுதந்திரப்பறவையாக விடுவாங்க என்று பல நாட்கள் கனவு கண்டதுண்டு.

    தினம் தினம் அறிவுரை, கதைகள், அர்ச்சனைகள், போதனைகள் கிடைக்கும். சின்ன வயதில் கடவுள் பக்தி என்பதை விட பயமே அதிகம். தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்திடுவார், கை, கால் ஊனமாகி விடும், படிப்பு வராது, காய்ச்சல் வந்துடும், பேய் பிடித்திடும் இப்படி எல்லாம் எனக்குள் நானே பயந்திருக்கிறேன், அதுவே என்னை ஒழுக்கமானவனாக நடக்க வைத்தது.

    பள்ளியில் பல்பம், பென்சில் கீழே கிடந்தால் யாராவது பார்க்கிறார்களா என்று ஒரு சுற்று பார்த்து விட்டு எடுத்து விடுவேன், அவ்வளவு தான் இதயத் துடிப்பு 100 மீட்டர் ஓடி வந்தவன் போல் அடிக்கும். பின்னர் எனக்கு தெரிந்த அத்தனை கடவுள்களும் கண் முன்னால் ஆயுதங்களோடு வந்து போவார்கள், உடனே ஓடி போய் ஆசிரியரிடம் இது கீழே கிடந்தது என்று கொடுக்க, அவரோ எல்லோரையும் கை தட்டச் சொல்லி, நேற்று பென்சில் திருடியவன் காதை இன்றும் திருகி, இருந்தால் இவனைப் போல் இருக்க வேண்டும் என்று சொல்ல சொல்ல, எனக்கு புகழ் போதை ஏறியது, அதுவே பிற்காலத்தில் என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள தூண்டியது.

    அப்படியே எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு போனால் அம்மா என்னை ஒரு வழி செய்து விடுவாங்க. எனவே பயத்தாலும், புகழாலும் நான் தவறு செய்யாமல் இருந்தேன்.

    சில நேரங்களில் அம்மா, கடைக்கு போயிட்டு வா என்று பைசா கொடுத்து அனுப்புவாங்க, நானும் கடையில் பொருட்கள் வாங்கி வருவேன், அப்போ எப்படியும் 10 முதல் 20 பைசா வரை கமிஷன் அடித்து விடுவேன். அப்போ எல்லாம் பபுள்கம் வாங்க ஆசைப்படுவேன், அதில் ஒரு ஸ்டிக்கர் கொடுப்பார்கள், அதில் கிரிக்கெட் வீரர்களின் பெயரும், ரன், விக்கெட் இருக்கும், அதை சேகரித்தேன்.

    வீட்டில் வந்ததும் அம்மா, கொடுத்த பணத்திற்கும் வாங்கி வந்த பொருளுக்கும் கணக்கு கேட்பார்கள். நான் வரும் போது உருளைக்கிழங்கில் 5 பைசா, கேரட்டில் 10 பைசா ஏற்றி விலையை நிர்ணயம் செய்து மனப்பாடம் செய்து வந்து சொல்வேன். நான் சொல்லும் திருட்டு கணக்கை அம்மாவும் கேட்டு விட்டு போ, போய் படி என்று அனுப்பி விடுவார்கள். ஒரு மணி நேரம் கழித்தப் பின்பு மீண்டும் கணக்கு கேட்க உருளைக்கிழங்கில் ஏற்றிய பைசாவை தக்காளியில் மாற்றி சொல்ல, மீண்டும் கொய்யா குச்சி என் கணக்கு தப்பு என்று சொல்லும். கொஞ்ச காலத்தில் கமிஷன் எடுப்பது என் பிறப்புரிமையாக்கப்பட்டது. கடைக்கு போக வேண்டிய நேரம் வந்ததும் படிப்பதாக புத்தகத்தை எடுப்பது அல்லது கழிவறையில் போய் ஒளிந்துக் கொள்வேன். அம்மாவும் எனக்கு வீட்டில் பொறுப்பு இருப்பதாக எண்ணி கணக்கு கேட்பது கிடையாது.

    என் அம்மா வீட்டில் பணத்தை எடுக்க, வைக்க எங்களையே உபயோகிப்பார்கள். பணத்தை ஒரு நாளும் பெட்டியில் வைத்து பூட்டியது கிடையாது. அஞ்சறைப் பெட்டி, ஊசி நூல் பெட்டி, தையல் மிஷின் பெட்டி, சாமி அறையில் விபூதி பெட்டி இப்படி திறந்த வெளியில் தான் இருக்கும். தையல் தைத்து கிடைத்த பணம், எலுமிச்சை, கருப்பட்டி விற்ற பணத்தை நான் அல்லது தம்பி தான் கணக்கு போட்டு வாங்கி, எங்கே அம்மா சொல்லுறாங்களோ அங்கே வைப்போம். ஒரு நாளும் அந்த பைசாவை எடுக்க தோணியது இல்லை, ஆனால் கடைக்கு போனால் மட்டும் கமிஷன் அடிக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும். சில சமயம் அம்மா பணத்தை எங்கே வைத்து, எப்போவே தேடி, அது கிடைக்காமல், ஒருவேளை நான் தான் எடுத்துவிட்டேன் என்று தவறாக நினைத்து துவைத்து எடுத்த நாட்கள் உண்டு. அது என்னமோ என்ன மாயமோ தெரியாது, என் தம்பிக்கு அடியே விழாது, நான் வேறு பணத்தை எடுத்தேன், இல்லை என்று சொல்வதற்கு பதில் சிரித்துக் கொண்டிருப்பேனா, அதுவே அம்மாவை நல்லா கடுப்பேற்றி விடும். அப்புறம் தவறாக அடித்ததை நினைத்து அம்மா மனம் வருந்துவாங்க, அது தான் சாக்கு என்று சொல்லி, முருக்கு, அதிரசம் செய்யச் சொல்லி ஆர்டர் போடுவேன்.

    சில நேரங்களில் காய்கறி, மளிகைக்கடையில் பணத்தை கொடுத்து பொருள் வாங்கி வரும் போது, கடைக்காரர் ஏதாவது ஒன்றை விட்டோ, அல்லது ஏதோ நினைவில் பணத்தை அதிகமாக கொடுத்து விடுவார். அய்யோ, அந்த பணத்தை வாங்கி நான் படும் பாடு இருக்கிறதே, கடன் கொடுத்து வாங்க முடியாமல் இருக்கும் ஒருவனின் மனநிலை தான். பக், பக் என்று அடிக்கும், எங்கே அந்த பைசாவை அமுக்கி விடலாமா, அல்லது கடைக்காரரிடம் திரும்பி கொடுத்து விடலாமா?

    மாலையில் கிரிக்கெட் பந்து வாங்க வேறு பைசா கொடுக்க வேண்டுமே,இதை அதற்கு உபயோகிக்கலாமா, பபுள்கம் வாங்கலாமா என்று எல்லாம் மனசு நினைக்கும், ஒரு 100 மீட்டர் நடந்ததும், மீண்டும் அனைத்து கடவுள்களும் கண் முன்னால் வந்து மிரட்டுவார்கள், ஊரில் கெட்ட பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வந்து எங்க அணியில் சேர் என்பார்கள், அய்யோ கடவுளே என்னை காப்பாற்று என்று கூறிக் கொண்டு, நல்ல பிள்ளையாக, அண்ணாச்சி, பைசா ஜாஸ்தியாக கொடுத்துட்டீங்க, கொஞ்சம் கணக்கு பாருங்க என்று சொல்லி, குற்றத்திலிருந்து தப்பி விடுவேன், அவ்வளவு அந்த கடைக்காரர் என் சித்தப்பா, மாமா அனைவரிடமும் என் நன்னடத்தைக்கு சான்றிதழ் கொடுப்பார், அதன் பிரதி என் அம்மாவுக்கு வரும், அப்போ என் தாயாரின் மகிழ்ச்சியை கண்டால் அதன் பின்பு கனவிலும் தவறு செய்யவே தோணாது.

    இத்தனை இருந்தும், நான் கள்ள கழவாணிப்பயலாக (நன்றி தேம்பா சகோதரி) இருந்த கதையை சொல்கிறேன்.

    (நினைவலைகள் ஓய்வதில்லை)
    பரஞ்சோதி


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    பதிலேதும் சொல்லாமல் உங்கள் வாழ்க்கைப் பதிவுகளை படிப்பதையே ரசிப்பதையே நான் விரும்புகிறேன்.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    அண்ணா வெளிப்படையான..உண்மையை அப்படியே உரைக்கும் உங்கள் பண்பு உன்கள் மேல் உள்ள நல்லெண்ணத்தை அதிகரிக்கச் செய்கிறது..மேலும் மன்ற நண்பர்கள் அனைவரையும் உங்கள் உறவுகளாய் எண்ணுவதும் புரிகிறது..நிறை ஆளுமை என்பார்கள் இதை...நல்ல அம்மா உங்கள் அம்மா...அவர்களுக்கு எங்கள் வந்தனங்களைச் சொல்லுங்கள்..
    Last edited by thempavani; 16-10-2005 at 11:37 AM.
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    தலைவன் இல்லாத குடும்பத்தில் தலைவிக்கு இருக்கும் பொறுப்பை அம்மாவைப் பார்த்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
    அண்ணா, நீங்கள் இங்கே வரும்போது உங்களைப் பார்த்தே ஆக வேண்டும்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by thempavani
    அண்ணா வெளிப்படையான..உண்மையை அப்படியே உரைக்கும் உங்கள் பண்பு உன்கள் மேல் உள்ள நல்லெண்ணத்தை அதிகரிக்கச் செய்கிறது..மேலும் மன்ற நண்பர்கள் அனைவரையும் உங்கள் உறவுகளாய் எண்ணுவதும் புரிகிறது..நிறை ஆழுமை என்பார்கள் இதை...நல்ல அம்மா உங்கள் அம்மா...அவர்களுக்கு எங்கள் வந்தனங்களைச் சொல்லுங்கள்..
    ஆழுமை என்றால் என்ன? ஆளுமையா சகோதரி! யாரேனும் தெரிந்தால் கூறுங்களேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஆனால் கடைக்கு போனால் மட்டும் கமிஷன் அடிக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்தது போல் இருக்கும்


    தொடரட்டும் உன் ரவுசு ப்ளாஷ்பேக்........ நேரில் பார்த்தால் பேசுவதற்கு ஒண்ணுமே மிச்சம் இருக்காது போலிருக்கே....

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு பரம்ஸ்...
    நினைவலைகளில் இது நான் நனைந்த முதல் அலை..
    உள்ளம் பேசும்போது ஓர் அதீத அழகு..
    பணத்தைப் பூட்டி வைக்காத வீடு - இது ஒன்றே போதும் அம்மா பற்றி அறிய...

    கமிஷன், கடைக்கணக்கு உள்பட எல்லாமும் எல்லார் வாழ்விலும் இருக்கும்..
    எனக்கும் இருக்கு -- ஒரே தகிடுதத்த புராணம்...
    நூறு நல்ல பிள்ளைகளைக் கெடுத்து பாடம் எடுக்கும் அளவுக்கு
    பித்தலாட்ட ஃபிளாஷ்பேக் என்னுடையது.

    பாரதியும், நீங்களும் படைத்து வரும் இவ்வகைப்பதிவுகள்..
    இணையம் நமக்கு அளித்த புது வரம்..

    பூரித்து வாழ்த்துகிறேன்...

    நினைவலைகள் தொடரந்து மன்ற (மனக்) கரையை மோதட்டும்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan
    ஆழுமை என்றால் என்ன? ஆளுமையா சகோதரி! யாரேனும் தெரிந்தால் கூறுங்களேன்.
    எப்பா எழுத்துப்பிழை..மாற்றிவிட்டேன்...
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    நான் முதலில் எழுத்துப் பிழை என தான் எண்ணினேன். பின்னர் அப்படியும் வார்த்தை இருப்பதாக எண்ணிக்கொண்டதால் வந்த வினை!!!

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அண்ணா ஏறக்குறைய நம் இருவருக்கும் ஒரே மாதிரியான குடும்பச்சூழல். நான் நல்லவளாக இருப்பதுவும், இருக்க விரும்புவதும் என் அன்னையால் மட்டுமே. அவர் என்னால் அழுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. தன் குழந்தை எப்படியெல்லாம் வளரவேண்டும் இருக்கவேண்டும் என்று விரும்புவதில் அன்னையின் பங்கு மிக முக்கியமானது. அப்படி நினைத்தபடி வளர்க்க இயலாதவர்கள் என்போன்ற பாவிகள் தான். கடைக்கு அனுப்பும்போது எனது அன்னை எனக்கென்று தனியாக சில்லறைக்காசுகளைத் தந்துவிடுவார்கள். அதை நான் உண்டியலில் சேர்த்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். 4ம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை எனது தோழியின் கைக்குட்டையும் எனது கைக்குட்டையும் ஒன்றுபோல இருக்க மாற்றி நான் எடுத்துவந்து தொலைத்துவிட அவள் எனக்கு வாங்கியே தரவேண்டும் என்று அடம்பிடிக்க....வீட்டில் அம்மாவிற்குத் தெரிந்தால் தொலைத்துக்கட்டிவிடுவார்களே என்றுபயந்து எனது உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொடுத்து அவளைச் சமரசப்படுத்த...அது தெரிந்து அம்மாவிடம் கையில் வாங்கிய சூடு... அந்தத்தழும்பு இன்னும் எரிகிறது. சூட்டின் வலியால் நான் துடித்ததை விட என் அம்மா அழுதது தான் இன்னும் என்னால் மறக்க முடியாதது. அதே போல் பெரியவர்கள் சொல்பேச்சு கேட்கவேண்டும் என்ற எனக்கு இடப்பட்ட ஆணையினாலே தாத்தா, பெரியப்பா அல்லது விருந்தாளிகள் வந்தால் அப்பா பெட்டிக்கடையில் வெற்றிலை, பாக்கு வாங்கிவரச்சொல்வார்கள். எத்தனை சோப்பு போட்டாலும் சரி... அவர்கள் சிகரெட் கேட்டால் மட்டும் வாங்கியே வரமாட்டேன். சொல்பேச்சு கேட்கவில்லை என்று இதற்காக பச்சைக்குச்சியில் அடி கூட வாங்கியிருக்கிறேன். மனசுக்கு ஒப்பாத எதையும் அவர்களுக்காக சமரசம் செய்துக்கொள்ளாத வகையில் இன்றும் எனது பெயர் பிடிவாதக்காரி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அடேங்கப்பா,,,,,,,,,,,,,,,,,கும்சா பரம்ஸ் என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. எல்லாரும் திருடியிருக்கிறோம் என்று தெரிந்து எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறைந்து போயிற்று. ஹி ஹி.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    தலைப்பே நல்லா இருக்கே பரஞ்சோதி. கற்று மறந்தாகி விட்டதா...?!! இல்லை... இன்னுமா..? ஹஹஹா... குறிப்பிட்ட காலச்சூழலில் வாழும் நிர்பந்தமும், பயமும், அன்பும் எவ்விதமெல்லாம் நம்மை பக்குவப்படுத்தி உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப்பதிவு. இந்த அலையின் ஓசையை தொடர்ந்து கேட்க ஆசைப்படும் பலரில் நானும் ஒருவன். பாராட்டுக்கள் பரஞ்சோதி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •