Results 1 to 5 of 5

Thread: நான் எழுதாத சிறு கதைகள்............

  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0

    நான் எழுதாத சிறு கதைகள்............

    அன்பர்களே!
    இனி இப்பகுதியில் நான் படித்த இணையப்பக்கங்களில் வந்த கதைகளை பதிக்கபோகிறேன்.......

    நேரம் கிடக்கும் போது வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

    நான் தரும் முதல் கதை தினத்தந்தியில் வந்த கண்மணி ராஜா எழுதிய அந்த நிமிடம்.

    கதை சம்பந்தமான உங்கள் விமர்சனங்களை வரவேற்கின்றேன்...........

    அந்த நிமிடம்- கண்மணி ராஜா
    தினத்தந்தி

    கலகலவென்ற சிரிப்பொலி மாடியில் எழுந்தது.

    வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த கமலா அப்பொழுதுதான் கண்மூடி தூங்க ஆரம்பித்தவள் திடுக்கிட்டு விழித்தாள்.

    புதிதாக திருமணம் செய்து கொண்ட அவனுடைய தம்பியும், அவனது புது மனைவியும் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந் தனர். கமலா கீழே உள்ள கூடத்தில் தன்னநதனியாக படுத் துக் கிடந்தாள்.

    அந்த கமலாவுக்கு வயது முப்பத்தி நான்கோ முப்பத் தைந்தோ இருக்கலாம். ஆனாலும் அவளால் அவளுடைய வயதை அவ்வளவுக்கு எண்ணிப் பார்க்க மனம் இடம் தரவில்லை. இந்தக் காலத்தில் நான்கு பிள்ளைப் பெற்ற பெண்ணோ, பேரன் பேத்திகளை எடுத்துவிட்ட வயதான பெண்மணியோ தங்க ளுடைய வயதை குறைத்து சொல்லும்பொழுது இன்னும் கன்னி கழியாத அவளால் தன் வயதை அதிகமாக சொல்லிக் கொள்ள எப்படி மனம் இடம் தர முடியும். ஆனாலும் அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும். அது அவளுக்கு வயதாகி விட்டது என்பது.

    கமலா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனுடைய தாய் திடீரென்று ஒரு நாள் ஏற்பட்ட நெஞ்சு வலியால் துடிதுடித்து உயிரை விட்டாள். கமலாவுக்கு ஒரு தம்பி மட்டும் இருந்தான்.

    கமலாவின் தந்தை மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். அதில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் கிடையாது. ஏதோ அன்றைய வயிற்றுப் பாட்டைக் கழுவலாம்.
    தாய் இறந்து விட்டதால் வீட்டில் தந்தைக்கும், தம்பிக்கும் சமைத்துப் போட ஆள் வேண்டும் என்று கமலா தன் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாள்.

    கமலா மாநிறமானாலும் பார்க்க அழகாக அதாவது அம்சமாக இருப் பாள். அவளை ஒரு சில இடங்களி லிருந்து பெண் கேட்டு வந்தனர். கிட்டத்தில் நெருங்கி வநத பின்னர் தாய் இல்லாத பெண், சீர் செனத்தி எல்லாம் யார் செய்வார்கள் என்று தட்டிக் கழித்தனர்.

    இப்படியே எந்த வரனும் அமையாமல் காலம் கழிந்தது. அவனுடைய தம்பியும் படித்து இன்றைக்கு வேலைக்குப் போய் விட்டான். அவனுக்கு பல பேரிடத்தில் ஏற்பட்ட பழக்கத்தினால் மீண்டும் கமலாவுக்கு வரன் வநதது. காலம் கடந்து விட்ட நிலையில் ஏதோ அழகாக இருக்கிறாள் என்று சொன்னது போய் பெண்ணுக்கு வயது அதிகமாக இருக் கும் போலிருக்கிறது என்று சொல்லி வரதட்சணை என்ற பெரிய குண்டைத் தூக்கிப் போட்டனர்.அவளது தம்பி கணேசனோ படித்து விட்டு அரசு வேலை ஏதும் கிடைக் காத நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் சுமாரான சம்பளத்தில் வேலையில் சேர்ந்துள்ளான். கடையிலோ பருப்பிருந்தால் புளி இருக்காது. புளி இருந்தால் மிளகாய் இருக்காது.

    இந்த நிலையில் பெண்ணுக்கு நகை போட்டு, மாப் பிள்ளைக்கு சீர்வரிசை செய்து, சத்திரம் பேசி சாப்பாடு போட்டு திருமணம் செய்து வைக்க எங்கே போவது?

    நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருண்டோடி விட்டன. இவள் ஒருத்திக்கு திருமணம் நடக்க வில்லையென்பதால் மற்றக் காரியங்கள் எல்லாம் ஸ்தம்பித்து போய் விடுமா, என்ன?

    அவனுடைய அருமைத் தம்பி கணேசனோ அவனது அலுவலகத்தில் பணிபுரிந்த டைப்பிஸ்டை காதல் திருமணம் செய்து கொண்டான். எந்த செலவில்லாமலும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு மாலையில் வீட்டிற்கு வந்து தந்தையின் கால்களில் விழுந்து வணங்கினான்.

    அவரோ முகத்தில் எநத உணர்ச்சி யையும் காட்ட முடியாமல் மரமாக நின்றார். வாழ்க்கைப் படகை செலுத்த பணம் என்ற துடுப்பு இல்லாமையால் மட்டுமல்ல, அவரிடத்து இன்னொரு பலவீனமும் அவரை வாய் திறக்காத மவுனியாக்கி விட்டது.

    அவர்களுடைய வீடு இருந்த தெருவிற்கு அடுத்தத் தெருவில் இருந்த விதவைப் பெண் ஒருத்திக்கும் கமலாவின் தந்தைக்கும் ரகிசியத் தொடர்பு உண்டு. கமலாவின் தாய் இறந்துவிட்ட பிறகு ஏற்பட்டது இந்த இரவு சிநேகம். இவ்விஷயம் கமலாவுக் கும், அவள் தம்பி கணேசனுக்கும் தெரிந்தே இருந்தது.தந்தையின் காலில் விழுந்த கணேசன் அவர் ஆசீர்வாதம் செய் யட்டும் என்று காத்திராமல் தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று விட்டான்.

    அது முதல் அந்த மாடி அறையே அவர்களது இன்ப புரியாகி விட்டது.
    கமலா கீழே கூடத்தில் தனியாகப் படுத்துக் கொள்வாள். அவளது தந்தையோ வீட்டின் முன் அறையில் படுத்துக் கொள்வார்.
    பருவ சுகம் என்றால் என்ன வென்றே அறியாத கமலாவுக்கு மாடி யில் இருந்து வரும் சிரிப்பொலி என் னென்னவோ கனவுகளை ஏற்படுத்தும். அந்தக் கற்பனையில் எழும் ஆசைகள் நிராசையாகி அவளுள் எழும் விரக தாபம் அவளைத் தனலாக சுட்டெரிக் கும்.

    ஒரு நாளா?
    இரு நாளா?
    எத்தனை நாட்கள?
    என்னென்ன கனவுகள்?
    எத்தனை கற்பனைகள்?
    அத்தனையும் கான நீரன்றோ!

    இதோ! இன்று வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தவள் கண்ணயர்ந்தபொழுது தம்பியும், தம்பி மனைவியும் செய்த ஆனந்தக் களிப்பில் துக்கம் கெட்டு திடுக்கிட்டு விழித்தாள் கமலா.
    இனி தூக்கமேது!

    அவளது தந்தையோ அடுத்தத் தெருவில் இருக்கும் ஆசை நாயகியைக் காண பூனை போல் மெதுவாக அடி யிட்டு நடந்து தெருக்கதவு தாளைத் திறக்கிறார்.

    டொக்!

    அவளுக்கு திக்கென்றது. இந்த நள்ளிரவில் உலகில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகள் அத்தனையும் அதன தன் இணையோடு பின்னிப் பிணைந்து...

    அப்புறம்!

    அவளுக்கு அதற்கு மேல் கற்பனை எட்டவில்லை.
    அவளுக்கென்று ஒரு நொண்டியோ முடமோ?
    அவளால் பாயில் படுக்க முடிய வில்லை. உள்ளமும், உடலும் துடிக்கின்றன. அவளுள் எழுந்த நெருப்பு கொழுந்து விட்டு எரி கின்றது. எப்படி அணைப்பது? எத்தனைக் குடம் நீரைக் கொட்டி னால் இந்தத் தீ அணையும். எழுகி றாள். சமையல் அறைக்குள் நுழைகிறாள். விளக்கைப் போடுகி றாள்.

    அதோ, அங்கே!

    பிளாஸ்டிக் கேன். மாலையில் சமையலுக்காக வாங்கி வநத மண்எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றுகிறாள். உச் சந்தலையிலிருந்து வழிந்தோடும் மண்எண்ணை. தீப்பெட்டியை எடுத்து ஒரு தீக்குச்சியை உரச முயற்சிக்கும்போது...

    மனதில் ஏதோ ஒரு `பளிச்'.
    ``அந்த சுகம் கிடைக்க லேங்கிறதுக்காக சாகணுமா... அதைவிட வாழ்க்கையில எவ் வளவோ இருக்கே...''
    தவறான முடிவு எடுத்து விட்டோமே என்றபடி பாத்ரூமை நோக்கிப் போனாள்.

    தம்பியின் அறையில் எந்த சத்தமும் இல்லை. இருண்டு போய் கிடந்தது.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    கதையைப் படித்தேன் நாரதரே. இந்தப் பெண் என்ன முடிவு எடுக்க வேண்டும். கண்டிப்பாக திருமணம் என்ற ஒன்று சம்பிரதாயமாக நிகழாது. காலம் முழுதும் கன்னியாகவே இருக்க வேண்டுமா? இல்லை வேறு வழிகளில் அந்த சுகத்தை அடைந்து கொள்ளலாமா? அவளது தந்தைக்குக் கிடைத்த ரகசிய உறவு போல இவளுக்கும் ஒன்று கிடைக்கலாமா? அப்படிக் கிடைத்தால் பண்பாடும் நாகரீகமும் மிகுந்த தமிழ்ச் சமுதாயம் என்ன செய்யும்? அவளை மானம் கெட்டவள் என்று இகழாமல் இருக்குமா? இந்தப் பெண்ணுக்கு என்னதான் முடிவு? மற்ற நண்பர்கள் இந்தப் பெண்ணுக்கு என்ன முடிவு சொல்ல விரும்புகின்றீர்கள்?

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    கதையைப் படித்தேன் நாரதரே. இந்தப் பெண் என்ன முடிவு எடுக்க வேண்டும். கண்டிப்பாக திருமணம் என்ற ஒன்று சம்பிரதாயமாக நிகழாது. காலம் முழுதும் கன்னியாகவே இருக்க வேண்டுமா? இல்லை வேறு வழிகளில் அந்த சுகத்தை அடைந்து கொள்ளலாமா? அவளது தந்தைக்குக் கிடைத்த ரகசிய உறவு போல இவளுக்கும் ஒன்று கிடைக்கலாமா? அப்படிக் கிடைத்தால் பண்பாடும் நாகரீகமும் மிகுந்த தமிழ்ச் சமுதாயம் என்ன செய்யும்? அவளை மானம் கெட்டவள் என்று இகழாமல் இருக்குமா? இந்தப் பெண்ணுக்கு என்னதான் முடிவு? மற்ற நண்பர்கள் இந்தப் பெண்ணுக்கு என்ன முடிவு சொல்ல விரும்புகின்றீர்கள்?
    தங்கர் பச்சான் குஷ்பு பிரச்சனை ஒரு வழியாக முடியும் தருவாயில்.....
    இப்படி ஒரு கேள்வி தேவவயா ராகவா?

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    கதையைப் படித்தேன் நாரதரே. இந்தப் பெண் என்ன முடிவு எடுக்க வேண்டும். கண்டிப்பாக திருமணம் என்ற ஒன்று சம்பிரதாயமாக நிகழாது. காலம் முழுதும் கன்னியாகவே இருக்க வேண்டுமா? இல்லை வேறு வழிகளில் அந்த சுகத்தை அடைந்து கொள்ளலாமா? அவளது தந்தைக்குக் கிடைத்த ரகசிய உறவு போல இவளுக்கும் ஒன்று கிடைக்கலாமா? அப்படிக் கிடைத்தால் பண்பாடும் நாகரீகமும் மிகுந்த தமிழ்ச் சமுதாயம் என்ன செய்யும்? அவளை மானம் கெட்டவள் என்று இகழாமல் இருக்குமா? இந்தப் பெண்ணுக்கு என்னதான் முடிவு? மற்ற நண்பர்கள் இந்தப் பெண்ணுக்கு என்ன முடிவு சொல்ல விரும்புகின்றீர்கள்?
    இந்தப் பெண் எடுக்கும் முடிவுகளால் அவளுடைய ஆசைகள் நிறைவேறுவது என்பதைவிட அவளுக்கு அடுத்து நேரப்போவதைப் பற்றித்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். உடல் பசியை எப்படி வேண்டுமானாலும் தீர்த்து கொள்ளலாம். அதன் விளைவுகளை அவள் எவ்விதம் எதிர் கொள்வாள். தாய்மை அடைந்தால் என்ன செய்வாள். வாழ்க்கையில் காமம் என்பது ஒரு பகுதிதானே தவிர அதுவே வாழ்க்கை அல்ல. ஏனெனில் பிணைப்பு இல்லாத எந்த ஆணும் தன் இச்சைக்கு பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கி எறிந்து போய்விட வாய்ப்பு உண்டு. கடைசியில் எந்தவித பிடிப்பும் இன்றி வாழும் நிலைக்கு தள்ளப்படுவாள். முறை இல்லா உறவுகளால் அவள் மன அழுத்தம் கூடுமே தவிர குறையாது....

    ஏனென்றால் அவள் எதிர்பார்ப்பது வெறும் உடல் சுகம் மட்டுமா?
    இல்லையே. தன்னை தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள புரிந்து கொள்ளக்கூடிய துணையைத்தானே. ஏன் அதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. காமத்தோடு நின்று விடுவது ஏன். இதுதான் பெண்ணை கேவலப்படுத்தும் செயல்....

    Quote Originally Posted by Narathar
    தங்கர் பச்சான் குஷ்பு பிரச்சனை ஒரு வழியாக முடியும் தருவாயில்.....
    இப்படி ஒரு கேள்வி தேவவயா ராகவா?

    நாராயணா. பதட்டம் வேண்டாம்.......

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பிரியன்
    இந்தப் பெண் எடுக்கும் முடிவுகளால் அவளுடைய ஆசைகள் நிறைவேறுவது என்பதைவிட அவளுக்கு அடுத்து நேரப்போவதைப் பற்றித்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். உடல் பசியை எப்படி வேண்டுமானாலும் தீர்த்து கொள்ளலாம். அதன் விளைவுகளை அவள் எவ்விதம் எதிர் கொள்வாள். தாய்மை அடைந்தால் என்ன செய்வாள். வாழ்க்கையில் காமம் என்பது ஒரு பகுதிதானே தவிர அதுவே வாழ்க்கை அல்ல. ஏனெனில் பிணைப்பு இல்லாத எந்த ஆணும் தன் இச்சைக்கு பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கி எறிந்து போய்விட வாய்ப்பு உண்டு. கடைசியில் எந்தவித பிடிப்பும் இன்றி வாழும் நிலைக்கு தள்ளப்படுவாள். முறை இல்லா உறவுகளால் அவள் மன அழுத்தம் கூடுமே தவிர குறையாது....

    ஏனென்றால் அவள் எதிர்பார்ப்பது வெறும் உடல் சுகம் மட்டுமா?
    இல்லையே. தன்னை தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள புரிந்து கொள்ளக்கூடிய துணையைத்தானே. ஏன் அதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. காமத்தோடு நின்று விடுவது ஏன். இதுதான் பெண்ணை கேவலப்படுத்தும் செயல்....

    நாராயணா. பதட்டம் வேண்டாம்.......
    காமத்தோடு மட்டும் நிற்கவில்லை பிரியன். இனி அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும் என்றுதான் கேள்வி. காதலோடு சேர்ந்து துய்க்கும் காமம் கிடைக்காத நிலையில் கன்னியாக வாழ்வதே விதியா என்பது கேள்வி.

    சரி. எனக்கெதுக்கு வம்பு. நல்ல நாளிலேயே என்னோட வாய் சும்மா இருக்காது. அதுல நாரதர் வேற வாய்த் தொறந்துட்டார். நான் மூடிக்கிறேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •