Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: பூகம்ப பலி 50000 ஆக உயர்வு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0

    Angry பூகம்ப பலி 50000 ஆக உயர்வு

    டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாகிஸ்தானும் ஆப்கானிதானிலும் இன்று காலை மிகப் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவு கோளில் 7.4 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 9.20க்கு ஏற்பட்ட இந்த அதிக சக்தி வாய்ந்த பூகம்பத்தால் நாட்டின் வட பகுதி குலுங்கியது.
    இதில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
    வீடுகள் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பாகிஸ்தானிலும் ஆப்கானில்தானிலும் 9.00 மணியளவில் இந்த பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இந்த பூகம்பம் பாகிஸ்தான் முழுவதுமே உணரப்பட்டுள்ளது.
    பூகம்பத்தின் மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத் நகரில் இருந்தது.
    பல இடங்களில் பூகம்பம் 1 நிமிடம் முதல் பல நிமிடங்கள் வரை நீடித்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
    பாகிஸ்தானை இரண்டு முறை இந்த பூகம்பம் அடுத்தடுத்து குலுக்கியது. பாகிஸ்தான் நாடு முழுவதுமே இந்த நிலநடுக்கத்தால் குலுங்கியுள்ளது.
    ஜம்மூவில் பல கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் காஷ்மீரில் தொலைத் தொடர்பு, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    இன்று காலையில் தாக்கிய மிக பயங்கரமான பூகம்பத்தால் ஜம்மூகாஷ்மீரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு உயிர்ச் சேதம் மிக அதிகமான அளவில் இருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உதம்பூர் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் ஒருவர் பலியாகியுள்ளது உறுதியாகியுள்ளது. மற்ற உயிர்ச் சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை. காஷ்மீரில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டவண்ணம் உள்ளது.
    இந்த மிக சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் இமாயமலைத் தொடரே அதிர்ந்துள்ளது. காஷ்மீரின் ஊரி மாவட்டம் தான் மிகப் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு பெரும்பாலான வீடுகள் இடிந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
    எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனாலும் உயிர்ச் சேதம் மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இங்கு பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
    இங்கு மீட்புப் பணியில் ராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
    பல மலைக் குன்றுகளில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் காஷ்மீரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முஸாபராத்தில் தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டிய இந்திய எல்லைப் பகுதியில் தான் மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எல்லையை ஒட்டிய 3 மாவட்டங்களுக்கும் ராணுவ மீட்புப் படைகள் விரைந்துள்ளன.

    xxxxxxxxxxxxxxxxxxx

    இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நாடே ஒட்டு மொத்தமாக அதிர்ந்துள்ளது. அதே போல ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளும் நில நடுக்கத்தால் குலுங்கின.
    இஸ்லாமாபாத்தில் 19 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தின் அளவு 7.4 முதல் 7.6 வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
    ராவல்பிண்டியில் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்து குழந்தைகள் காயமடைந்தனர்.
    பாகிஸ்தானால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் பெரும் உயிர்த் சேதம் ஏற்பட்டுள்ளது.
    ஆப்கானிஸ்தானில் குவெட்டா, காபூல் உள்ளிட்ட நகர்கள் இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பங்க்ராமில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உயிரிழப்பு ஏதும் இல்லை.

    நன்றி - thatstamil.com
    Last edited by பிரியன்; 08-10-2005 at 07:00 AM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    செய்திகளுக்கு நன்றி பிரியன்..நானும் படித்தேன் ...நம்ம கரிகாலன் அண்ணா எப்படி இருக்கிறார் என்று விசாரியுங்கள்...
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    தில்லியில் எதுவும் உயிர்ச் சேதம் இல்லை என்றே இதுவரை வந்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

    என்றும் அன்புடன்
    பிரியன்

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பிரியன், தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா?

    இந்தியாவில் இருப்பவர்கள் சொல்லலாமே.
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    தி ஹிந்து செய்திக்கு சுட்டியை தட்டுங்க..

    http://www.hindu.com/thehindu/holnus...0510081101.htm

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    செய்திகளுக்கு நன்றி... சுட்டிக்கு நன்றி அன்பரே

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0

    Angry நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் 18000 பேர் பலி

    நேற்று ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்துக்கு பாகிஸ்தானில் மட்டும் 18,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 17,000 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.


    இறந்தவர்களில் 200 பேர் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆவர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவர்கள் பலியாகியுள்ளனர். இங்கு பெரும்பாலான கிராமங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன.
    இந்த நில நடுக்கத்தால் 41,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    இதற்கிடையே மீட்புப் பணியில் பாகிஸ்தான் ராணுவமும் போலீசாரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் இடிந்து விழுந்த 19 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 82 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
    மீட்புப் பணிகளில் பாகிஸ்தானுக்கு உதவ ஐ.நா. தனது குழுவையும் அனுப்பி வைத்துள்ளது.
    இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நானும் படித்தேன்.. கடந்த வாரத்தில் நிகழ்ந்த மூன்றாவது இயற்கை சீற்றம் இது எனவும் கேள்விப்பட்டேன்.. வாரத்துக்கு மூன்று என்று கணக்கு வைத்தால் .....

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பலியான அப்பாவி மக்களுக்கு என்னுடைய அனுதாபவங்கள்.

    இன்னமும் உயிரோடு புதையுண்டு இருப்பவர்கள் பத்திரமாக மீட்க இறைவன் அருள்புரிவாராக.
    பரஞ்சோதி


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    பாகிஸ்தானில் இன்னமும் பூமி குலுங்கிக் கொண்டிருப்பதாகவே அங்கிருக்கும் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்..நேற்று இரவு பாகிஸ்தானியர் பலர் வீடுகளுக்கு வெளியேதான் தூங்கியிருக்கிறார்கள்..இன்னமும் 48மணிநேரத்திறகு இப்படித்தான் பூமி குலுங்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது..

    பூகம்ப மையம் முசாராபாத்தில் ஒரு மருத்துவமனை அப்படியே நொறுங்கி அதில் இருந்தவர்கள் நோயாளிகள், மருத்துவர்கள் எல்லாரும் மரணமடைந்துள்ளார்கள்..காஷ்மீரப்பகுதிகளில் தற்போது குளிர் துவங்கியிருக்கிறது..எனவே மக்கள் வெளியில் தங்குவதும் இயலாத காரியம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன...

    பூகம்பத்தை அனுபவித்த பாகிஸ்தானியர்களின் அனுபவங்கள் அச்சமூட்டுபவையாய் உள்ளன..நான் என்னுடன் பணியிரியும் பாகிஸ்தானியர்களின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடினேன்...
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    சாவு எண்ணிக்கை 30,000த்தையும் தாண்டி விட்டது.

    இந்த வருடம் இயற்கையின் பேரழிவுகளால் ஆன வருடம் என்றே நினைக்கிறேன். சுனாமி - காத்ரீனா - இப்போழுது நிலநடுக்கம்,

    இயற்கை தன்னாலான பாடங்களை மனிதனுக்கு முயன்று சொல்லி வருகிறது. ஆனாலும் அவன் கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

    விடாது கருப்பு மாதிரி விடாது இயற்கை....

    எச்சரிக்கை....
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    தமிழ்மன்றம் சார்பில் எமது ஆழ்ந்தானுதாபங்களை இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தெரிவிப்பதைத்தவிற வேறென்ன செய்ய முடியும் இயற்கையின் சீற்றத்தின் முன்னே?

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •