Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 23 of 23

Thread: உதிர்த்தல்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by kavitha

    எந்த நோக்கில் எழுதப்பட்டதோ அதே நோக்கிலேயே கவிதை புரிந்துக்கொள்ளப்படும்பொழுது மகிழ்ச்சி இரட்டிப்படையும்.
    எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு. இதை நான் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். மூடிய நிலையில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு இதுவாக இருக்கும் என்று அனுமானித்தல் வாசகனுடையது. மூடிய நிலையில் என்ன இருக்கிறது என்பது எழுதியவருக்கே நிச்சயம். இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இங்கு முக்கியமானது கவிதை வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது ஒரு வாசகனால்.

    Quote Originally Posted by kavitha
    அது தவிர வேறு கோணத்திலும் அதை உணரமுடிந்தால் அது வாசிப்பவர்களின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கும். நண்பன் நீங்கள் எந்த வரியை வைத்து இப்படி கூறியிருக்கிறீர்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. எழுதியவர் பெண் என்பதையும் அந்த வரியையும் முடிச்சுப் போட்டு பார்க்கும்பொழுது உங்களுக்குத் தோன்றியருப்பது இயல்பானதே.
    எந்த வரிகள் - ? முழுக்கவிதையுமே....

    ஜீவனுள்ள மரம் - முதலில் ஒரு மனிதன் என்று நினைத்துக் கொண்டாலும் மறுவாசிப்பில் அதை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டேன்.

    இயற்கையானதே - ஒரு இயல்பைப் பற்றி பேசுகிறீர்கள்.

    உதிர்தல்
    துளிர்த்தல்
    மீண்டும் உதிர்தல்

    இது ஒரு கால சுழற்சியைக் குறிக்கிறது. இயற்கையையும் கால சுழற்சியையும் குறிப்பாக சொல்லியதாக நான் எடுத்துக் கொண்டேன்.

    உதிரம் பாயும் மட்டும் என்பதும் பொருத்தமான சூழலிலே தான் வருகிறது. உதிரம் பாய்வது நின்றுவிட்டால் பிறகு அந்தப் பிரச்சினையே வருவதற்கில்லையே.

    அதனால் தான் அதைப் பெண்களின் பிரத்யேக பிரச்னையாக பார்க்கிறேன்.

    நீங்கள் பெண் என்று சொன்னது உங்களின் நினைவூட்டலின் பிறகு தான் நினைவிற்கு வருகிறது.

    சரி போகட்டும் - நீங்கள் சொன்ன துறவற மனிதனின் பிரச்சினைக்கு இது பொருந்துமா?

    துறவறம் என்பது இயல்பு நிலை அல்ல. மனிதன் முனைந்து திட்டமிட்டு இறங்கும் ஒரு துறை அது. அது இயற்கையானதல்ல. நீங்கள் இயற்கை என்று குறிப்பிட்டதால் அது துறவறத்தைக் குறிப்பதாக நான் எண்ணவில்லை.

    Quote Originally Posted by kavitha

    எனது கோரிக்கை எழுதுபவரோடு எழுத்தை ஒப்பிடவேண்டாம் என்பது தான். இந்தக்கவிதை பொதுப்படையாக எழுதியது தான். எனது பயமெல்லாம், எங்கே எனது கவிதைகள் பெண்ணியம் சார்ந்ததாக ஒதுக்கப்பட்டுவிடுமோ என்பது தான். இந்த பயத்தினாலே, இந்த தன்னம்பிக்கையின்மையினாலே எழுதியவைகளை எல்லாம் பதிக்காமலேயே உறங்குகின்றன. உடல்கூற்றை மட்டுமே பிரதிபலிப்பதாக நிச்சயம் எனது கவிதைகள் இருக்காது என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதன் அர்த்தம் உடல்கூறை கேவலமாக நினைக்கிறேன் என்பது அல்ல. உள்ளம் விசை, எண்ணம் ஆக்கம், உடல் தானே செயல்! ஆனால் மனத்தின் வெளிப்பாடு செயலாக மாறும் பின்னணிதான் கரு. உங்களது கண்ணோட்டத்திலேயே வைத்துக்கொண்டாலும்
    பைகள் நிரம்பினால் வழிவது இயல்பானது. இதில் ஆணென்ன? பெண்ணென்ன?
    நீங்கள் நான் எழுதிய மனுஷ்யபுத்திரன் கவிதை நூல் விமர்சனம் பின்னர் அவரின் பேட்டி பின்னர் அதற்கான விமர்சனம் இவற்றைப் படித்தீர்களா?

    அதில் அவர் சொல்கிறார் - நான் என் பிரச்சினைகளை எழுதவில்லை - ஆனால் அவைகள் என் பிரச்சினைகளாகப் புரியப்பட்டன என்கிறார். ஆமாம் இது எல்லோருக்குமே நிகழ்கிறது. தவிர்க்க முடியாது. இதற்குக் காரணம் அறிமுகம் ஆனவர் என்பதால்.

    ஆனால் உங்களின் ஒவ்வொரு கவிதையையும் அதன் இயல்பை ஒட்டித் தான் வாசித்து வருகின்றனே தவிர வேறு எதைக் கொண்டும் அல்ல. எங்கே பெண்ணியம் சார்ந்ததாக என் கவிதைகள் ஒதுக்கப்பட்டு விடுமோ என நீங்கள் அஞ்சுவதாக குறிப்பிடுகிறீர்கள். முதலில் பெண்ணியம் பேசுவதில் என்ன தவறு? இன்னும் சொல்லப் போனால் பெண்ணியம் பேச நீங்கள் தவறுவதால் தான் இன்று பல ஆண்களும் பெண்ணியத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு பேசவும் எழுதவும் முற்படுகிறார்கள்.

    ஒவ்வொரு கவிஞனும் - தன் அனுபவங்களை எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் பொழுது அது இயல்பாக இருக்கும். நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுதும் பொழுது அது உங்கள் பார்வையில் எவ்வாறு இருக்கின்றன என்று தெரியவரும். இப்பொழுது நான் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதும் பொழுது அது உண்மையான ஒரு பெண்ணின் வலியாக இருக்காது. மாறாக நான் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணின் வலிக்கான அனுதாபமாகத் தான் இருக்கும். பகிர்ந்து கொண்டமையாக இருக்கலாம். ஆனால் அந்த வலி - வலிபட்டவர்களின் வாயிலிருந்து தான் வரவேண்டும். உலகளாவிய பார்வை என்று சொல்லிக் கொண்டு தன் உடலில் உள்ளத்தில் கிளரும் பிரச்சினைகளை திரையிட்டு மறைக்க வேண்டிய அவசியமென்ன வந்து விட்டது.?

    கவனம் பெறுவதற்காக உடலுறுப்புகளை முன்னிறுத்தும் சில பிரபல கவிஞர்களின் அற்பத்தனத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் அனுபவத்தில் எழும் பெண்களின் பிரச்சினைகளை தொடர்ந்து எழுதுங்கள்.

    இதைத் தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்...
    Last edited by Nanban; 15-10-2005 at 07:18 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  2. #14
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by பிரியன்
    .

    இந்த அச்சம் தேவையற்றது. மேலும் அதில் எந்த விதமான தவறும் இல்லையே. பெண் என்பவள் தன் பிரச்சனைகளை கவிதை மொழியில் சொல்வதை புறக்கணிப்பு வளையத்துக்குள் ஏன் சிக்க வைக்கிறீர்கள். நீங்கள் தன்னம்பிக்கை இழக்குமளவுக்கு இதில் என்ன நேர்ந்து விடுகிறது. .
    உங்களது ஊக்கத்திற்கு நன்றி பிரியன்.
    மற்றொன்று கவிதையும் கவிதை புனைபவரையும் எல்லா நேரங்களிலும் பிரிக்க முடியாது. கவிஞனுடைய உணர்வைத்தான் மொழி சொல்கிறது. அதில் பால் பார்க்கத்தேவையில்லை என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.
    நன்றி

    உங்களது இந்தக்கவிதை இருவேறு வாசிப்புகளை தந்திருக்கிறது. இன்னும் உங்கள் மொழிநடையில் மாறுதல்கள் வரும் போது இது போன்ற முரண்கள் தவிர்க்கப்படலாம்.
    இருக்கலாம். அதில் தவறிருப்பதாகவும் கருதவில்லை. என்னுடன் எனது கவிதை ஒப்பிடப்படுகிறதோ என்ற தொடர் ஐயத்திலே வினவினேன். உங்களது கருத்துக்கள் எனது அடுத்தகவிதைகளுக்கு மறுபரிசீலனைக்குரியதாய் இருக்கும். நன்றி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #15
    இனியவர் தஞ்சை தமிழன்'s Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    குடந்தை
    Posts
    719
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    கவிதாவின் கவிதையும் அதை தொடர்ந்த நண்பணின் விமர்சனமும் அதற்கான பதிவுகளூம் மிகவும் சிந்திக்கக்கூடியவை.

    நண்பணின் பதிவு சிறப்பாக இருக்கிறது.

    சகோதரி கவிதாவுக்கு ஒரு செய்தி,

    ஜெயகாந்தனின் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தார். அவரது படைப்புகளுக்கு பாராட்டுதலை விட அதிகம் விமர்சனங்கள்தான் வந்தன என்று. அதனால்தான் என்னவோ அவர் ஒரு சிற்ந்த இடத்தை தமிழ் இலக்கியத்தில் பெற்றார், அவரது கதைகள் வெளியிட்ட நாட்களை விட கூடுதலாக அவரது படடப்பு குறித்த விவாதங்கள் அதிகமாக வெளியிடப்பட்டன.

    ஒரு படைப்பளியின் படைப்பு அதற்கு பலதரப்பட்ட விமர்சங்களும் கருத்துக்களும் வரும்போதுதான் முழுமையடைவதாக நினைக்கிறேன்.

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by kavitha
    உங்களது ஊக்கத்திற்கு நன்றி பிரியன்.
    நன்றி


    இருக்கலாம். அதில் தவறிருப்பதாகவும் கருதவில்லை. என்னுடன் எனது கவிதை ஒப்பிடப்படுகிறதோ என்ற தொடர் ஐயத்திலே வினவினேன். உங்களது கருத்துக்கள் எனது அடுத்தகவிதைகளுக்கு மறுபரிசீலனைக்குரியதாய் இருக்கும். நன்றி.
    அந்த அச்சம் தேவையில்லை கவிதா. விமர்சனங்கள் கவிதைகளையும் கவிதை சொல்ல வந்ததைப் பற்றியும்தான்....
    Last edited by பிரியன்; 22-10-2005 at 04:04 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #17
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    [/quote]
    Quote:
    Originally Posted by kavitha
    எந்த நோக்கில் எழுதப்பட்டதோ அதே நோக்கிலேயே கவிதை புரிந்துக்கொள்ளப்படும்பொழுது மகிழ்ச்சி இரட்டிப்படையும்.
    Quote:
    Originally Posted by Nanban
    எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு. இதை நான் பல்வேறு சமயங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். மூடிய நிலையில் சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு இதுவாக இருக்கும் என்று அனுமானித்தல் வாசகனுடையது. மூடிய நிலையில் என்ன இருக்கிறது என்பது எழுதியவருக்கே நிச்சயம். இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இங்கு முக்கியமானது கவிதை வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது ஒரு வாசகனால்.
    [/quote]
    அனுமானித்தல் வாசகனுடையது. இதை மறுக்கவில்லை நண்பன். அதே போல் நான் எதை நினைத்து எழுதியிருக்கிறேன் என்று சொல்வது எனது உரிமையும், நேர்மையும் ஆகும். ஒரு வாசகனால் கவிதை வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளமுடிகிறது என்பதே கவிதைக்குக்கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

    எந்த வரிகள் - ? முழுக்கவிதையுமே....
    ஜீவனுள்ள மரம் - முதலில் ஒரு மனிதன் என்று நினைத்துக் கொண்டாலும் மறுவாசிப்பில் அதை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டேன்.
    ....
    ....
    இப்பொழுது என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. நீங்கள் பலதரப்பட்ட கண்ணோட்டத்தில் அதன் உட்பொருளை ஆய்கிறீர்கள். இப்படியாகவோ அப்படியாகவோ இருந்திருக்கலாம் என்று அனுமானிக்கிறீர்கள். நன்று.
    எனது கவிதை எனும்போது நீங்கள் அப்படியெல்லாம் சிந்தித்திருக்கமாட்டீர்கள் என்ற எனது கணிப்பினாலேயே அவ்வாறு கேட்டுவிட்டேன். மனதில் வைத்துக்கொள்வதைவிடவும் நண்பர்களிடம் நேரில் கேட்டுவிடுவது சாலச்சிறந்ததல்லவா?

    இயற்கையானதே - ஒரு இயல்பைப் பற்றி பேசுகிறீர்கள்.
    உதிர்தல்
    துளிர்த்தல்
    மீண்டும் உதிர்தல்
    இது ஒரு கால சுழற்சியைக் குறிக்கிறது. இயற்கையையும் கால சுழற்சியையும் குறிப்பாக சொல்லியதாக நான் எடுத்துக் கொண்டேன்.
    உதிரம் பாயும் மட்டும் என்பதும் பொருத்தமான சூழலிலே தான் வருகிறது. உதிரம் பாய்வது நின்றுவிட்டால் பிறகு அந்தப் பிரச்சினையே வருவதற்கில்லையே.
    அதனால் தான் அதைப் பெண்களின் பிரத்யேக பிரச்னையாக பார்க்கிறேன்.
    ம்... என்னைப்பொறுத்தவரை இது பிரச்சனையும் இல்லை; பாக்கியமும் இல்லை.
    வியர்வைச் சுரப்பிகளைப்போல அது அதன் வேலையைச்செய்துக்கொண்டிருக்கிறது. இதற்காக நான் எனது சராசரி வேலைகளையோ... திட்டங்களையோ மாற்றி அமைத்துக்கொண்டது கிடையாது. எனது தோழிகள் கூட நீ ரொம்ப தைரியசாலி என்பார்கள். நிற்க!
    நான் அந்த வரியை எழுதியதற்கான காரணம், "ரத்தம் சுண்டும்வரை ஆடுகிறார்கள். சுண்டியபின் சுருங்கிப்போகிறார்கள்" என்ற பொதுமக்களின் கூற்றினால் தான்.

    நீங்கள் பெண் என்று சொன்னது உங்களின் நினைவூட்டலின் பிறகு தான் நினைவிற்கு வருகிறது.
    மகிழ்ச்சி.


    சரி போகட்டும் - நீங்கள் சொன்ன துறவற மனிதனின் பிரச்சினைக்கு இது பொருந்துமா?
    துறவறம் என்பது இயல்பு நிலை அல்ல. மனிதன் முனைந்து திட்டமிட்டு இறங்கும் ஒரு துறை அது. அது இயற்கையானதல்ல. நீங்கள் இயற்கை என்று குறிப்பிட்டதால் அது துறவறத்தைக் குறிப்பதாக நான் எண்ணவில்லை.
    ம்... இந்தக்கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை நண்பன். தன்னை விடுவித்துக்கொள்பவர்களால் துறவறத்தில் நீடித்திருக்கமுடியுமா என்பது கேள்விக்குறியே!
    துறவறம் என்பது தப்பித்துக்கொள்வதோ அல்லது பொறுப்பேற்றுக்கொள்வதோ இல்லை. அதுவும் இயல்பான ஒன்றாகவே கருதுகிறேன். மதங்களும் அதைத்தான் சொல்கின்றன.
    "மின்சாரக்கனவு" என்ற திரைப்படத்தில் கூட அதை மிக அழகாகச் சொல்லி இருப்பார்கள்.
    கஜோல் கதாபாத்திரமும், நன் சிஸ்டராக வருபவரின் கதாபாத்திரமும் எனக்கு மிகப்பிடித்தவை.


    நீங்கள் நான் எழுதிய மனுஷ்யபுத்திரன் கவிதை நூல் விமர்சனம் பின்னர் அவரின் பேட்டி பின்னர் அதற்கான விமர்சனம் இவற்றைப் படித்தீர்களா?
    ஏற்கனவே சேமித்து வைத்திருந்தபோதும் நீங்கள் சொன்னதால் இப்பொழுது படித்துவிட்டுத்தான் உங்களுக்குப் பதில் எழுதுகிறேன். அதனாலேயே இந்தத் தாமத பதில்.


    அதில் அவர் சொல்கிறார் - நான் என் பிரச்சினைகளை எழுதவில்லை - ஆனால் அவைகள் என் பிரச்சினைகளாகப் புரியப்பட்டன என்கிறார். ஆமாம் இது எல்லோருக்குமே நிகழ்கிறது. தவிர்க்க முடியாது. இதற்குக் காரணம் அறிமுகம் ஆனவர் என்பதால்.
    ம். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கவே செய்கிறது. ஏனெனில் தானல்லாது வேறு ஒரு கருப்பொருளை நாம் எடுத்துக்கொண்டால் கூட கலம் என்னவோ நாமாக மாறிவிடுகிறோம். எனில் நமது வடிவமும் அங்கே பிரதிபலிப்பது இயல்பானதே! எழுதுபவரின் கண்ணோட்டம் அதில் இல்லாமல் இருக்காது.


    ஆனால் உங்களின் ஒவ்வொரு கவிதையையும் அதன் இயல்பை ஒட்டித் தான் வாசித்து வருகின்றனே தவிர வேறு எதைக் கொண்டும் அல்ல.
    மகிழ்ச்சி


    எங்கே பெண்ணியம் சார்ந்ததாக என் கவிதைகள் ஒதுக்கப்பட்டு விடுமோ என நீங்கள் அஞ்சுவதாக குறிப்பிடுகிறீர்கள். முதலில் பெண்ணியம் பேசுவதில் என்ன தவறு?
    ஒரு தோழியாக நீங்கள் இப்படி கேட்கலாம். அதனால் பாதிக்கப்படக்கூடிய ஒரு ஆண்மகனாகவும் நீங்கள் கருதினால் இவ்வாறே பேசுவீர்கள் என்றால் எனக்கும் உளமார்ந்த மகிழ்ச்சி தான் நண்பன்.
    இதை ஏன் சொல்கிறேன் என்றால்... சராசரிக் (எங்கள்) குடும்பத்தில் உள்ள ஆண்களிடமும் நான் பெண்ணியம் பேசியதுண்டு. சற்று பரந்த கண்ணோட்டமுள்ள ஆண் கவிஞர்களிடமும் பேசியதுண்டு. அறிவு-தர்க்க ரீதியாக அவர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் மனரீதியாக இதை அவர்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே நான் கண்ட உண்மை.
    இன்னொரு விசயம் தெரியுமா? காதல்ரசம் சொட்டச்சொட்ட எழுதும், தற்போதைக்குக் முன்னணியில் இருக்கும் பிரபல கவிஞர்கள்/பாடலாசிரியர்கள் பலர் தங்களது சொந்த வாழ்க்கையில் காதலில் நம்பிக்கையற்று இருப்பதாக பேட்டியளித்திருப்பது இன்னொரு வேடிக்கையான வினோதம்! How practical they are!!!
    இதை ஏன் சொல்கிறேன் என்றால் கவிஞர்கள் தாங்கள் எழுதும் கவிதைகளுக்கும்-அவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை உணர்த்துவதற்காகத்தான்!

    இன்னும் சொல்லப் போனால் பெண்ணியம் பேச நீங்கள் தவறுவதால் தான் இன்று பல ஆண்களும் பெண்ணியத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு பேசவும் எழுதவும் முற்படுகிறார்கள்.
    இந்த வரிகளின் அர்த்தத்தை உங்களது "வாழ்த்துக்கள், இதர தலைப்புகள்" பதிவிற்குப்பிறகு புரிந்துக்கொள்ள முடிந்தது. பெண்ணியம் என்பதை அந்த காலந்தொட்டு ஆண்கள் தான் முன்னெடுத்து வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் முதலில் அவர்களுக்கு ஒரு வந்தனம்! (அதேபோல் அதன் பின்னணி ஒரு பெண்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை)

    நிச்சயமாக பெண்ணியம் என்பது மனம்போன போக்கிலோ, உடல் போகும்போக்கிலோ போவது அல்ல. "மனத்துக்கண் மாசிலன் ஆதல்.." என்பது தான் எனது கொள்கையும்.
    என்னைக்கேட்டால் பெண்ணியம் என்ற வார்த்தையையே உடைத்தெறியவேண்டும் என்பேன். உண்மையைச்சொல்லவேண்டுமானால் அந்தவார்த்தையை அறியும் முன்பே நான் அதைப்பற்றி எங்கள் வீட்டில் பேசஆரம்பித்துவிட்டேன். நானும் எனது அண்ணனும்(பெரியப்பா மகன்) ஒரு வருட இடைவெளியில் இருந்தவர்கள் எனினும் இருவரும் ஒரே வகுப்பிலேயே படித்தோம். படிப்பில் நான் அவனைவிடவும் கெட்டி. இருந்தபோதிலும் எனக்கும் அவனுக்கும் ஒரே மாதிரியான சலுகைகளை இந்தச்சமூகமோ எனது குடும்பமோ வைத்ததில்லை. அவன் சம்பாதிக்கப்போகிற பிள்ளை; அதனால் படிக்கவேண்டும். நாங்கள் ஏதோ ஒரு வீட்டிற்கு பொங்கிப்போடப்போகிறவர்கள்; அவன் தான் எங்களுக்கு சீர் செய்துக்கொடுக்கவேண்டும். அதனால் நாங்கள் அவனுடைய துணிகளைத் துவைத்துத் தரவேண்டும். ஆண்கள் உண்ட பிறகே நாங்கள் உண்ணவேண்டும். நாங்கள் பரிமாறவேண்டும். அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை நாங்கள் கழுவவேண்டும். அவர்கள் நடுவீட்டில் அமர்ந்து டிவி பார்க்கவும், பத்திரிகை படிக்கவும், தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், உலக ஞானங்களை(?) அறிய ஊர் சுற்றவும் அனுமதிக்கப்படுவர். அவர்கள் துடைப்பத்தை எடுத்தால் "லட்சுமி வீட்டை வீட்டு ஓடி விடுவாள்" என்றெல்லாம் கதைகள் கேட்டிருக்கிறேன்.


    ஆனால் இந்தக்கட்டுக்தைகளுக்கெல்லாம் ஒருபோதும் நான் செவிசாய்த்ததில்லை. அந்த விதத்தில் என் தகப்பனார் எனக்கு மிக உதவியாக இருந்தார். என்னை வீட்டு வேலைகள் செய்யாமல் பார்த்துக்கொண்டதிலும், படிக்கவைப்பதிலும், நூலகங்களுக்கு மற்றும் வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் அவர் இருந்தவரை ஒரு சிட்டுக்குருவி போலவே இருந்தேன். இத்தனைக்கும் நான் எனது அப்பா செல்லம். என் அண்ணன் என் அம்மா செல்லம். (வேலைக்குச் சென்றபிறகு அண்ணன் பெரிதாகத் தனக்குச் செய்யப்போகிறான் என்ற எனது அன்னையின் கனவு தவிடு பொடி ஆனது வேறொரு சோகக்கதை)


    சுதந்திரம் என்பதே சரியான வார்த்தை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் என்பதும், அந்தரங்கம் என்பதும் உண்டு. அதை நாம் கண்டிப்பாக மதித்துத்தான் ஆகவேண்டும். அவரவர் உணர்வுகள் அவரவருடையது. அதில் ஆண், பெண் பால்வேறுபாடு கிடையாது. அதே போல் கட்டுப்பாடில்லாத சுதந்திரமும் ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஒருவருடைய சுதந்திரம் என்பது அவர்க்கு மட்டுமே உரிமையானது. அதில் மற்றவர்கள் தலையிடமுடியாது. உரிமை இருப்பவர்கள் வேண்டுமானால் கண்டிக்கலாம். அவர்களது சுதந்திரம் மற்றவர்களை பா¡திக்குமானால் கண்டிப்பாக தண்டிக்கலாம்.
    அதைவிடுத்து, சம்பந்தமில்லாத ஒருவர் பகிரங்கமாக..மூக்கிற்கு நேராகச் சென்று நீ செய்வது சரியல்ல என்று சொல்வதோ.... அல்லது திரைமறைவில் அவர்களைப்பற்றி அவதூறு செய்வதோ நாகரீகமற்றச் செயலாகவே கருதுகிறேன். இதனால் தனிமனித வக்ரம்தான் கூடுமே அன்றி எந்தச் சமுதாய நலனும் ஏற்படப்போவதில்லை.

    ஒவ்வொரு கவிஞனும் - தன் அனுபவங்களை எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் பொழுது அது இயல்பாக இருக்கும். நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுதும் பொழுது அது உங்கள் பார்வையில் எவ்வாறு இருக்கின்றன என்று தெரியவரும். இப்பொழுது நான் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதும் பொழுது அது உண்மையான ஒரு பெண்ணின் வலியாக இருக்காது. மாறாக நான் அன்பு செலுத்தும் ஒரு பெண்ணின் வலிக்கான அனுதாபமாகத் தான் இருக்கும். பகிர்ந்து கொண்டமையாக இருக்கலாம். ஆனால் அந்த வலி - வலிபட்டவர்களின் வாயிலிருந்து தான் வரவேண்டும்.
    நான் எழுதுவதற்கே எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பலரின் மத்தியில் உற்சாகமாக வரவேற்கும்
    உங்களது ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது; நன்றி நண்பன்.
    அப்படி என்னைச்சார்ந்த எனது அனுபவங்களை எழுத ஆரம்பித்தால் பேனா முனை நீலத்திற்குப் பதில் சிவப்பைக் கொட்டக்கூடும். வாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் அது தீனியாக இருக்கலாம். ஆனால் அதில் வசிப்பவர்களுக்கு அது தீ அல்லவா?

    உலகளாவிய பார்வை என்று சொல்லிக் கொண்டு தன் உடலில் உள்ளத்தில் கிளரும் பிரச்சினைகளை திரையிட்டு மறைக்க வேண்டிய அவசியமென்ன வந்து விட்டது.?
    அவசியம் இருக்கத்தான் செய்கிறது. நாம் ஏதோ மூலையிலோ அல்லது எல்லோரையும் தாண்டிய உயர்ந்த சிம்மாசனத்திலோ (கவிஞர்களின் மன நிலையை விட்டுத்தள்ளுங்கள்) அமர்ந்திருக்கவில்லை. இந்தச் சமுதாயத்தில் தான் உலவிக்கொண்டிருக்கிறோம். மேலும் தனி மனிதராக இல்லை. குடும்பம் சார்ந்த அமைப்பில் இருக்கிறோம்.
    ஆரோக்கியமான ரசிகர்களையும், ஊக்கம் தரும் குடும்பச்சூழலையும், எழுதுவதையே முழு நேரமாகவும் கொண்டிருக்கும் தாங்களே கவிதைத்தொகுப்பு வெளியிடுவதில் தயக்கம் காட்டும்பொழுது.....
    பெற்றோர்களின் ஆதரவு இருந்தும் எதிர்காலத்தை நினைவில் வைத்து பிரியன் அவர்களும் தனது கவிதைத்தொகுப்பை வெளியிடக்காலம் தாழ்த்தும் பொழுது .....
    எனது சூழலில் நான் எனது சார்பாக எழுதுவதென்பது தற்போதைக்கு தாமதமான செயலே!

    கவனம் பெறுவதற்காக உடலுறுப்புகளை முன்னிறுத்தும் சில பிரபல கவிஞர்களின் அற்பத்தனத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் அனுபவத்தில் எழும் பெண்களின் பிரச்சினைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
    ஒரு பாட்டில் டானிக்கை ஒன்றாகக் குடித்தது போல் இருந்தது நண்பன் உங்களது வார்த்தைகள். நன்றி.
    அதேபோல் அந்தப்பிரபல கவிஞர்களின் அற்பத்தனங்களின் வரிசையில் எப்போதும் தாங்கள் சேர்ந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அத்தகைய வார்த்தைகளை உச்சரிக்கும்போது உங்கள் உதடுகளைப்போலவே, பெண் ரசிகைகளும் முகம் சுழிப்பார்கள்.
    இதைத் தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்...
    __________________
    அன்புடன்
    நண்பன்
    ------------------------------------------------------------------------------------------
    இறுக்கமான பணி, உடல் நலக்குறைவு என்றபோதும் இன்று எப்படியாவது பதில் எழுதி அனுப்பிவிடவேண்டுமென்று எழுதியிருக்கிறேன் நண்பன். நீங்கள் என்னைச் சொல்லிவிட்டு நீங்கள் உங்களது கருத்தை எழுதாமல் இருக்கக்கூடாது. என்ன? சரிதானே!
    Last edited by kavitha; 22-10-2005 at 10:51 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  6. #18
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    சகோதரி கவிதாவுக்கு ஒரு செய்தி,

    ஜெயகாந்தனின் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தார். அவரது படைப்புகளுக்கு பாராட்டுதலை விட அதிகம் விமர்சனங்கள்தான் வந்தன என்று. அதனால்தான் என்னவோ அவர் ஒரு சிற்ந்த இடத்தை தமிழ் இலக்கியத்தில் பெற்றார், அவரது கதைகள் வெளியிட்ட நாட்களை விட கூடுதலாக அவரது படடப்பு குறித்த விவாதங்கள் அதிகமாக வெளியிடப்பட்டன.

    ஒரு படைப்பளியின் படைப்பு அதற்கு பலதரப்பட்ட விமர்சங்களும் கருத்துக்களும் வரும்போதுதான் முழுமையடைவதாக நினைக்கிறேன்
    ஏதோ அவ்வப்போது ஒன்றிரண்டு எழுதுகிறேன். அதிலும் சலசலப்பா... என்ற சின்ன பயம் தான் அண்ணா. மற்றபடி நீங்கள் சொன்னதைக்கேட்கும் போது உற்சாகமாகவே இருக்கிறது.

    பலதரப்பட்ட கருத்துகளை வரவேற்பதில் எனக்கும் உடன்பாடுண்டு. உங்களது ஊக்கத்திற்கு நன்றி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  7. #19
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அந்த அச்சம் தேவையில்லை கவிதா. விமர்சனங்கள் கவிதைகளையும் கவிதை சொல்ல வந்ததைப் பற்றியும்தான்....
    __________________

    என்றும் அன்புடன்
    பிரியன்
    நன்றி பிரியன். உங்களைப்போன்றோரின் ஊக்கங்கள் தான் மீண்டும் என்னை எழுதவைக்கிறது.
    Last edited by பிரியன்; 22-10-2005 at 04:05 PM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    இந்தவிதமான கருத்துப்பரிமாற்றங்களை பெறத்தானே கவிதை எழுதுகிறோம். கவிதை எழுதுவதற்கு கவிதை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். சின்ன வயதில் சந்தமாக எழுத தெரிந்திருந்தது என்பதனாலே எனக்குள் கர்வம் இருந்தது நான் கவிஞனென்று. அது கிணற்றுத் தவளை நிலை. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில்தான் கவிதை வாசிப்பது, அது குறித்து கலந்துரையாடுவது என மாற்றம் வந்த பிறகு கர்வம் ஓடி அச்சம் அதிகம் வந்துவிட்டது. இன்னமும் கவிதைகளை முழுமையாய் உணர்ந்து கொள்ளும் அறிவுத்தேர்ச்சி வரவில்லை. அதனாலே பெரும்பாலும் உங்கள் கவிதை, நண்பன் கவிதைகள் என்றல் வேகமாக வாசித்து விட்டு ஓடி விடுவேன். இனிமேலாவது தொடங்கிய பயிற்சியைத் தொடர வேண்டும்......

    தீபங்கள் பேசும் தொகுப்பை வைத்துக்கொண்டு என்னை நான் கவிஞன் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அது என் உள்ளத் தெளிப்பு. நான் கவிஞனென்று நிறுவ என் கவிதைகள் கொண்டே இன்னும் கடுமையாக போராட வேண்டும்.
    Last edited by பிரியன்; 22-10-2005 at 04:06 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by kavitha

    ம்... இந்தக்கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை நண்பன். தன்னை விடுவித்துக்கொள்பவர்களால் துறவறத்தில் நீடித்திருக்கமுடியுமா என்பது கேள்விக்குறியே!
    துறவறம் என்பது தப்பித்துக்கொள்வதோ அல்லது பொறுப்பேற்றுக்கொள்வதோ இல்லை. அதுவும் இயல்பான ஒன்றாகவே கருதுகிறேன். மதங்களும் அதைத்தான் சொல்கின்றன.
    "மின்சாரக்கனவு" என்ற திரைப்படத்தில் கூட அதை மிக அழகாகச் சொல்லி இருப்பார்கள்.
    கஜோல் கதாபாத்திரமும், நன் சிஸ்டராக வருபவரின் கதாபாத்திரமும் எனக்கு மிகப்பிடித்தவை.
    தன்னை தன்னிலிருந்து விடுவித்து கொள்ளவே துறவறம். பற்றுகள் இருக்கும் வரை முடிவுகளும் சார்பாகவே இருக்கும். தன் உணர்வுகளை ஒரு மூன்றாவது மனிதனைப் போல விருப்பு வெறுப்புகளற்று அணுகுபவனுக்கே ஞானம் கிடைக்கும். துறவறம் என்பதே ஞானத்தை தேடும் பயணம்தானே.

    ஆனால் இன்று தாங்களே கடவுள் என்று சொல்லித்திரியும் ஆன்மீகத் து(ரோகி)றவி களுக்கு இது பொருந்தாது........
    Last edited by பிரியன்; 22-10-2005 at 04:03 PM.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  10. #22
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    உங்களின் பதிலுக்கு நன்றி பிரியன்.
    உங்கள் அறை நண்பன் என்ன தான் சொல்கிறார்??
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by kavitha View Post
    இலைகளை உதிர்க்கிறது
    ஜீவனுள்ள மரம்
    மீண்டும் துளிரும் என்பதறியாமல்.
    உதிர்ப்பவை பழையவை.
    துளிர்பவை புதியவை.
    புதிய இலைகள்
    பழையக் காம்புகளில் ஒட்டுவதில்லை.
    ஆனால்
    துளிர்பவையும் ஒருநாள் உதிரும்.
    உதிரம் பாயும் மட்டும்
    உதிர்க்க உதிர்க்கத் துளிர்வது
    இயற்கை தானே!
    பழையவை உதிர்கின்றன.
    புதியவை துளிர்க்கின்றன.
    உலர்ந்த சருகுகளின் ஜீவனற்ற சலனத்தையும்
    பசிய இலைகளின் உயிர்ப்புள்ள ஆடலையும்
    பார்த்து
    நிலையாமை உணர்ந்து
    நிலை பெயராமல் நிற்கிறது
    விருட்சம்

    நிலையாமை உணர்த்தும் கவிதை அருமை, வாழ்த்துக்கள் கவிதா
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •