Results 1 to 8 of 8

Thread: விதி...விலக்கு!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    விதி...விலக்கு!

    இரைதேடும் பறவை...
    எதிர்ப்பட்டவையெல்லாம்
    கழுகுகளாகவே...

    எதிர்ப்பார்ப்புகள்
    ஏமாற்றப்பட்டன..

    பார்வையில் பிழையல்ல..
    பருவத்தில்!..


    குலைந்துபோன கூடு..
    கலைந்துபோன கனவு..


    பிணம் தின்னும்
    கழுகுகளோடு பயணம்..
    தீர்க்கமானது பார்வை...
    தீர்வென்ன..


    கடலின் நடுவே
    இறக்கிவிடப்பட்ட தேவதை..
    கரை மறந்தாள்..
    கரமும்....


    விடியலைத்தேடும்
    பயணத்தில் விலாசம்
    தொலைக்க துணிந்தாள்..


    அறியாமையா..
    அறிவின்மையா..


    வினாக்களுக்கு
    விடையளிக்க இயலவில்லை..
    அந்த இரவுப்பாடகிக்கு..
    அது அவளுக்கு
    அவசியமானதாகவுமில்லை....

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    இரவின் பாடல்களில்
    இயலாமையைச்
    சொல்ல முடியாது தான்.

    கேட்க வந்திருப்பவர்களின்
    காதின் சவ்வுப் பறைகள்
    காமரசத்திற்குத் தான் பசித்திருக்கின்றன

    தர்மத்தின் குரல்கள்
    அங்கு காவலிருக்கும்
    செருப்புகள் விடப்பட்ட இடத்தில்

    மாட்டிக் கொள்பவர்கள்
    மறுநாள் நீதி சொல்வார்கள்
    மரத்தடியில் நாட்டாமையாக
    வழக்காடு மன்றத்தில்
    சட்ட மன்றத்தில்
    பத்திரிக்கை வளாகத்தில்

    எல்லாவற்றையும்
    சிரித்துக் கொண்டே
    அவிழ்ந்த புடவையை
    கட்டிக் கொண்டிருப்பாள்
    இரவுப் பாடகி
    பகலின் இருளில்....


    (பாராட்டுகள் பூ - கவிதைக்கு
    சந்தோஷம் - ரொம்ப நாளைக்கப்புறம் சந்திக்க முடிந்ததற்கு...)
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அவரவர்க்கும் செய்யும் தொழிலே தெய்வம்.

    இதில் பாடுபவர்களைக் குறை சொல்வதா? இல்லை கேட்பவர்களையா?
    தீர்வு காணுதல் அத்தனை எளிதல்ல.

    கவிதை நன்றாக உள்ளது பூ.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  4. #4
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    குலைந்துபோன கூடு..
    கலைந்துபோன கனவு..


    பாராட்டுகள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வீரியக்கவிதைகளுக்கு உரித்தான தம்பிக்கு

    விலக்கு அளிப்பதற்காகவே சில விதிகள்..
    தலைப்பே சொல்லி விட்டது இந்தச் சமூக முரணை..

    எங்கும் உன் கவிதைகள் மன்றத்தில்..
    ஒவ்வொன்றாய் படித்துவிட எண்ணம் என் உள்ளத்தில்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அண்ணா....

    ஆஆஆஆஆஆஆஆஆஆஅ... அதிர்ச்சி..இன்ப அதிர்ச்சி!

    இந்த நொழியில் என் உள்ளம் அடையும் பூரிப்பை சொல்ல முடியவில்லை!

    அண்ணா.. இன்றைய ராசிபலனை (கன்னி ராசிக்கு!) படியுங்களேன்.. நீண்டநாட்களுக்குபின் முக்கியமானவரை சந்திப்பீர்கள் என போட்டிருந்தார்கள்!

    உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும்வரை நானும்.. கவிதைகளும் என்றென்றும்!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தம்பிக்கு
    என்னால் இத்துணை மகிழ்ச்சி தருவிக்க இயலுமென்றால்...
    என் ஜென்மம் பூரணம் அடைந்துவிட்டதாகவே நினைக்கிறேன்..

    பனிக்கும் கண்களுடன்..
    அண்ணன்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பூவின் கவிதை அருமை... நண்பனின் கவிதை மேலும் சிறப்பு சேர்க்கிறது..

    கவி சொல்வதுபோல் யாரை குறை சொல்ல இயலும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •