Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 36

Thread: காதல் தோழி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0

    காதல் தோழி

    தோழியிடம் சொல்வதற்கென்ன??
    தைரியமாய் சொல்லிப்போ
    என்னை காதலிப்பதாய்

    உன் உணர்ச்சிகளின்
    வடிகால் தானே நான்
    இதில்
    காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

    புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்
    புரிந்து கொண்டதாக செய்யப்படும்
    (திரு)மணங்களில்
    விருப்பமில்லை எனக்கு
    வா
    புரிந்துகொள்வோம்
    நம்
    தேவைகளை
    அறிந்து கொள்வோம்
    நம் மனங்களை.

    மனிதனை கொன்று
    சம்பிரதாயம்
    காக்கத் துடிப்பவர்களுக்கான
    தண்டனையாய்
    தோற்கடிப்போம்
    சம்பிரதாயத்தை

    (திரு)மணத்தினால் அல்லாமல்
    மனத்தினால் பந்தம்
    செய்து கொள்வோம்

    விரும்பும் வரை

    நீ உன் வீட்டிலும் நான்
    என் வீட்டிலும்
    தங்கிக்கொள்வோம்

    உனக்குத் தேவை
    என்கிறபோது
    நானும்
    எனக்குத் தேவை என்கிறபோது
    நீயும்
    சமரசம் செய்துகொள்வோம்
    விருப்பு வெறுப்புகளை
    தீர்த்துக் கொள்வோம்
    அது இச்சையே ஆனாலும்.

    நீ
    எனக்காக பேசு..
    பெண்ணியம் பேசு
    கலவியில் கூட
    வேண்டுவன கேள்
    என பேசு.

    மனைவி தோழியானால்
    ஆச்சர்யம்
    தோழி மனைவியானால்
    அதிர்ஷ்டம்
    சொல்லிப்போ
    காதலிப்பதாய்

    இப்போதும் நான் உன்
    தோழி
    இப்போது தான் நான்
    தோழி
    தைரியமாய் சொல்லிப்போ
    என்னை காதலிப்பதாய்

    - பிரேம்
    Last edited by kalvettu; 14-09-2005 at 08:31 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    கல்வெட்டு மிகவும் வீரியமான கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். இதில் எனக்கும் ஓரளவு ஒப்புதல்.

  3. #3
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல வரிகள். அருமையான கவிதை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கல்வெட்டு -

    An act without responsibility என்று சொல்வார்கள் தெரியுமா அது மாதிரி இருக்கிறது.

    கமலஹாசன் - இவ்வாறு தான் தன் மனைவியை வைத்திருந்தார். குழந்தைகள் பெற்றுக் கொண்டார். ஆனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கமலஹாசன் ஒரு intellectual ஏன்பதை யாராலும் மறுக்க முடியாது. (வேண்டுமானால் அவர் இயங்கும் தளத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் தன்னை நடத்திக் கொள்ளும் விதத்தையும் விமர்சனம் செய்யலாம்.) ஆனாலும் அவர் இறுதியில் திருமணம் என்ற ஒரு பந்தத்திற்குள் நுழைந்து தான் ஆக வேண்டியதிருந்தது. இந்தக் கவிதையில் குறிப்பிட்டது போல எத்தனை பேர் Living in என்று வெளிநாட்டில் குறிப்பிடப்படும் ஒப்பந்தமின்றி மண வாழ்க்கை என்ற வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடியும்?

    சரி கவிதைக்குள் வருவோம்.

    சில வரிகள் - கமலதாஸை நினைவு படுத்துகிறது.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    கமலாதாஸ் எழுதிய சில வரிகள் இதோ:

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4907

    மாயக் கண்ணாடி..... கமலா தாஸ்

    உன்னிடத்தில் கலவி புரிய
    ஒரு ஆணைக் கண்டுபிடிப்பது
    உனக்கு எளிது தான்.

    ஆனால், பெண்ணாகிய
    உன் தேவைகளைப் பற்றி மட்டும்
    நேர்மையாக இரு.

    .............
    .............
    ...............

    இதற்கு மேல் அதை மொழி பெயர்த்தால், அடிக்க வருவீர்கள் என்பதால், பாதியிலேயே விட்டுவிட்டேன்....
    ஒரு பெண் தன் தேவைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என கூறும் வகையில் அமைத்திருக்கும் அந்த கவிதை.

    ஆனால் கல்வெட்டு, உங்கள் கவிதையில் உடலுறவிற்காக சமரசம் செய்து கொள்ள விரும்பும் இருவரைத்தான் தெரிகிறதே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஒரு வேளை தமிழில் சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் வந்தது - அதாவது ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர் என்று. அந்த திரைப்படத்தின் தாக்கமா அல்லது அந்த திரைப்படத்தின் மூல ஆங்கில திரைப்படத்தின் தாக்கமா என்று தெரியவில்லை - உங்கள் கவிதை.

    மேலும்...
    Last edited by Nanban; 14-09-2005 at 06:34 PM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    உன் உணர்ச்சிகளின்
    வடிகால் தானே நான்
    இதில்
    காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?
    மிக மிக சரியான எதிர்பார்ப்புகள் - ஆத்மார்த்மான தோழியுடன் பகிர்ந்து கொள்ளப்படும் காமம். ஆனால் அந்தப் பெண் மற்ற சமூக நிர்ப்பந்தங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் - அது முடியுமா? திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் - கலவி கள்ள உறவாகி விடும். அக்கா தங்கைகள் அற்றவளாக இருக்க வேண்டும் - அல்லது இவளின் செயல் அவர்களைப் பற்றியும் பாதிப்பதாக ஆகிவிடும். பெற்றவர்கள் அற்றவளாக இருக்க வேண்டும். அல்லது அவர்கள் தலை குனியும் படி நேரிடலாம். அப்படியானால் அவள் அநாதையாகத் தான் இருக்க வேண்டுமா? அல்ல - அவள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையைக் கடந்தவளாக இருக்க வேண்டும். அவள் குடும்பத்தாரும் சமூக நிர்ப்பந்தங்களை பணபலம் கொண்டு வாயடைக்கச் செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.

    இத்தகைய வலுவான தோழிகள் - மேல் மேல் தட்டில் தான் கிடைப்பார்கள். அல்லது நடிகைகளாக இருக்க வேண்டும்.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்
    புரிந்து கொண்டதாக செய்யப்படும்
    (திரு)மணங்களில்
    விருப்பமில்லை எனக்கு
    திருமணம் முதலிரவிற்காகவோ அல்லது உடலுறவிற்காகவோ நடத்தப்படவில்லை, திருமணங்கள் பல - ஆண் பெண் புரிதல் அன்றி செய்யப்படுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தப் புரிதல் உடலுறவு எவ்வாறு நிகழ வேண்டும் என்ற புரிதலாகவா இருக்க வேண்டும்? திருமணத்தைப் பற்றிய புரிதல் உங்கள் கண்ணோட்டத்தில் மிகத் தவறானதாக இருக்கிறது. உடலுறவு மட்டுமே காதல் என எண்ணும் நீங்கள் ஆண் / பெண் உறவையே தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.

    புரிந்துகொள்வோம்
    நம்
    தேவைகளை
    அறிந்து கொள்வோம்
    நம் மனங்களை.
    எதைப் புரிந்து கொள்ள அழைக்கிறீர்கள். நம் தேவைகள் என்கிறீர்கள். எது நம் தேவை?


    உனக்குத் தேவை
    என்கிறபோது
    நானும்
    எனக்குத் தேவை என்கிறபோது
    நீயும்
    சமரசம் செய்துகொள்வோம்
    விருப்பு வெறுப்புகளை
    தீர்த்துக் கொள்வோம்
    அது இச்சையே ஆனாலும்
    விருப்பு வெறுப்புகள் இச்சை - இவையெல்லாம் தான் தேவைகளா? விருப்பு இருக்கலாம். ஆனால் வெறுப்பு எங்கிருந்து வந்தது? திருமணம் என்ற பிணை தேவை அல்ல என்ற பிறகு வெறுப்பு வருகிறதா? அவள் அவளின் அப்பன் வீட்டில் இருந்து கொள்ள வேண்டும். இவன் அவன் அப்பன் வீட்டில் இருந்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் வெறுப்பு வருகிறது என்றால், திருமண பந்தத்திற்குள் இந்த வெறுப்பு வருவதில் தவறென்ன.? உங்களுடைய திருமணமற்ற உடலுறவு - எந்த விதத்தில் உயர்ந்தது.?
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    தோழி என்பது காதலியை விட புனிதமான உறவாகக் கருதுபவன் நான். அந்தத் தோழியையே மனைவியாகக் கிடைக்கும் வரமும் பெற்றவன். இன்னும் மனைவி அளவிற்கு நேசிக்கவும் மதிக்கவும் எனக்குத் தோழிகள் உண்டு. அதனால் தோழிகள் என்ற உறவை கொச்சைப்படுத்தும் வகையில் எழுத வேண்டாம்.

    நீங்கள் சொல்ல வரும் கருத்து கிட்டத்தட்ட என்ன என்று என்னால் ஊகிக்க முடிகிறது. ஆனால் அதை சொல்லியவிதம் அல்லது நீங்கள் அத்தகைய உறவை அணுகும் விதம் - இவற்றில் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறீர்கள்.

    நீங்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் - கதை வாசித்திருக்கிறீர்களா? அதில் வரும் கங்கா தன்னுடைய கல்லூரிக் காலத்தில் கற்பழித்தவனையே பின்னாளில் தேடிக்கண்டுபிடித்து, கோபம் தாழ்ந்து பின்னர் ஆத்மார்த்தமான சிநேகமாகி பிறகு பிரிந்து விடுகிறார்கள் - அந்த மனிதனின் குழந்தையின் மனைவியின் விருப்பத்திற்காக என்று வரும். அது ஒரு விநோதமான உறவு. கங்கா - தனித்தவளாக இருப்பாள் ஒரு வயதான் தாயின் துணையுடன். அவன் அவள் வீட்டிற்கு வருவான். மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பான். தன்னுடைய அத்தனை பிரச்னைகளையும் அவளுடன் பகிர்ந்து கொள்வான். அங்கேயே உட்கார்ந்து தண்ணீ கூட அடிப்பான் - அவள் அப்பளம் பொரித்து போட. சில சமயம் அங்கேயே தூங்கியும் கூட போய்விடுவான். ஆனால் ஒரு சமயம் கூட அவர்களுக்கிடையே உடலுறவு நிகழவில்லை. ஆனால் வாசிக்கும் நமக்கோ அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமே என்ற ஆதங்கம் வரும். ஆனால் ஒருபோதும் நம் மனம் ஏங்கியதில்லை எப்பொழுது அவர்கள் உடலுறவு செய்து கொள்வார்கள் என்று. ஏனென்றால் ஆண் / பெண் உறவில் உடலுறவு என்பது ஒரு அங்கமே அல்ல.

    உடலுறவு மட்டுமே தேவை தோழியுடன் என்ற உங்கள் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால் கூட, அந்த உறவிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டுமல்லவா? அதென்ன நீ உன் வீட்டில் நான் என் வீட்டில் ? தோழமை என்பதே ஒருவருக்கு மற்றவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று தானே? அவரவர் வீட்டில் இருந்து கொண்டு தேவை என்று வந்ததும் சந்தித்து கொள்வீர்களா? உடலுறவிற்கான உந்துதல் மணி அடித்ததும் எழும் பசி மாதிரியா? ஒருவரை மற்றவர் பார்த்து ரசித்து சிறுசிறு அசைவுகளில் மனம் கிளர்ந்து மணம் நுகர்ந்து சிறு சிறு ரகசிய மொழிகள் பேசி பேசி பாதி இன்பத்தை ஒருவர் மற்றவரை தீண்டும் முன்னே அனுபவித்து பின்னரே அந்த இன்பம் நிகழும். நீங்கள் சொல்வது போல உந்துதல் ஏற்பட்டவுடன் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு சுகம் அனுபவிக்கும் முறைமை அல்லப்பா அது.
    அதற்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள் - விபச்சாரம். (அவள் வீட்டில், அவன் வீட்டில் - என்றால் வேறு எங்கு வைத்து இச்சை தீர்க்க முடியும் - லாட்ஜில் தானே?)

    சார், நீங்க மேலை நாட்டு நாகரீகத்தில் நிகழும் சில தனித்த நிகழ்வுகளைக் கேட்டு எந்த பொறுப்புணர்ச்சியையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வெறும் உடலுறவிற்காக மட்டும் ஒரு தோழியைத் தேடுகிறீர்கள் - அதுவும் அவளுக்கான செலவுகளைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்து.

    ஏற்கனவே எழுதியிருந்தேன் - Living in என்ற முறையைப் பற்றி. இது பெரும்பாலும் Scandinavian countries என்றழைக்கப்படும் வட ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கின்றது. அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் நபரை நான் சந்தித்திருக்கிறேன். சுவீடனைச் சார்ந்தவர். அஸ்ட்ராஜெனிக்கா என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தைத் திறப்பதற்காக வந்திருந்தார். அவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் உண்டு. திருமணம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் சம்பாதிக்கிறார்கள் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். குடும்பச் செலவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குழந்தைகளிடம் கடமை உணர்வு மிக்க பெற்றோர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதிக்கும் நண்பர்களாக வாழ்கிறார்கள்.

    நான் நினைக்கிறேன் - நீங்கள் சொல்ல வந்ததும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறையைத் தான். ஆனால் ரொம்பவும் குழம்பிப் போய் இருக்கிறீர்கள். திருமண வாழ்க்கையில் புரிதல் இல்லை என்கிறீர்கள். அங்கு இல்லாத புரிதல் என்பது நான் மேலே குறிப்பிட்ட இந்த ஒருவர் மீது மற்றவருக்கான மரியாதை. Respecting beyond the Egos. Not harming the self esteem of the person. அகங்காரம், அகம்பாவம் அற்ற அடுத்தவரின் தன்மானத்தைப் பாதிக்காத நட்பு. இது தான் ஆண் பெண் உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும். அதை விட்டு நான் கூப்பிட்டதும் நீ உன் அப்பன் வீட்டில் இருந்து நான் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விடு என்று அழைப்பது - மகா கேவலம் - It doesn't even qualify for an erotica written by an anonymous author.

    Please have respect for others.
    மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு நண்பர் கல்வெட்டிற்கு......

    பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது உங்கள் கவிதை. அத்தனையும் விவாதத்திற்குரியவை.
    நட்பு, காதல், கற்பு, பெண்ணியம், கலாச்சார விழுமியங்கள் எல்லாவற்றை பற்றியுமான உங்கள் எண்ணங்களை சொல்லியிருக்கிறீர்கள்...

    ஆனால் எண்ணத்திலும், சொல்லிய விதத்தில் எல்லாம் ஊனமாகி கிடக்கிறது.....

    தோழி, காதலி, மனைவி என்று எல்லா நிலைகளிலும் ஒரு தெளிவற்ற தன்மையை மட்டுமே காண முடிகிறது...

    ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஒரே விசயம் இன்பம் தூய்த்தல் என்று முடிவுகட்டி தோழி காதலி மனைவி என எல்லா
    உறவு நிலைகளிலும் தேவையே அதுதான் என்ரறு சொல்லி விட்டீர்கள்.....

    நட்பு பவித்திரமானது... ஆண் - பெண் நட்பின் குணங்களை மிக அழகாக சொல்லியிருக்கும் கவிதைத் தொகுப்பு அறிவுமதி அண்ணனின் நட்புக் காலம்

    துளியே
    கடல்
    என்கிறது
    காமம்

    கடலும்
    துளி
    என்கிறது
    நட்பு

    xxxxx
    ஒரு ஞாயிற்றுக்கிழமை
    மதியத்தில் தாமதமாய் வந்து
    என்னை எழுப்பாமலேயே
    நீ சொல்லியபடி
    நான் சமைத்து வைத்திருந்த
    உணவை நிதானமாகச்
    சாப்பிட்டுவிட்டு
    என் பக்கத்திலேயே வந்து
    படுத்துத் தூங்கிவிட்டும்
    போயிருக்கிறாய் என்பதைச்
    சொல்லிப் பரிகசித்தன
    என் தலையணையில்
    சில
    மல்லிகைகள்...


    உண்மையான நட்பு அத்தனை ஆழமானது..... அங்கு பேசுபுவை மனங்களின் மொழிதான். உடலின் மொழி அல்ல...

    தோழியோ, காதலியோ - தோழனோ காதலனோ உடல்தேவையின் வடிகாலாய் மட்டும் பார்க்கும் போதே அங்கே நட்பும்
    செத்து விடுகிறது காதலும் செத்து விடுகிறது.....

    திருமண பந்தம், தாலி இவற்றை உதறுவதா பெண்ணுரிமை, பெண்ணியம்.... அது சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையை பொறுத்தது.
    பெண்களுக்கு சம உரிமை, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்று அவர்களை சமநிலையில் வைப்பதே.
    மாறாக
    உடல் சுகத்திற்கான சுதந்திரம்தான் பெண்ணுரிமை , பெண்ணியம் என நினைப்பது அபத்தம்...
    மனிதனைக் கொன்று சம்பிரதாயத்தை காப்பவர்களுக்கு தண்டனையாக அந்த சம்பிரதாயத்தை தோற்கடிக்க நினைக்கிறீர்கள்
    எப்படி முறையற்ற உறவாலா?

    பெரும்பாலான திருமணங்கள் புரிதல் இல்லாமல் நடக்கிறது. ஆகையால் புரிந்து வாழ்வோம் வா என்கிறீர்கள். வரவேற்கக்குடியதே..
    ஆண்-பெண்ணிற்கான உறவு ஒருவருக்கொருவரை புரிந்து தேவைகளை அறிந்து இணையும்போது அர்த்தப்படுகிறதே தவிர இரவின் இன்பத்தில் மட்டும் அல்ல.

    திருமண பந்தத்தில் இது கிடைப்பதில்லை. ஆனால் மொத்த திருமண வாழ்க்கையை இரவின் சில மணித்துளி இன்பத்திற்காக மட்டுமே என்பதுகண்ணை மூடிக்கொண்டு உலகமே
    இருளாக இருக்கிறது என்று சொல்லுவதற்கு சமம்.
    சமரசம் புரிவது எதற்காக?
    விருப்பு வெறுப்புகளை தீர்ப்பது எதற்காக?
    பெண்ணியம் பேசுவது எதற்காக?
    எல்லாம் உடல் தேவைக்கு மட்டுமென்று வந்த பிறகு அவள் விபச்சாரியாகவே இருந்துவிட்டு போகட்டுமே.....

    ( கவிதையில் நீங்கள் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்லாதபோது இதுபோன்ற வாசகனின் புரிதல்கள் தவிர்க்க முடியாதவை )

    என்றும் அன்புடன்
    பிரியன்

  10. #10
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    நட்பு பவித்திரமானது... ஆண் - பெண் நட்பின் குணங்களை மிக அழகாக சொல்லியிருக்கும் கவிதைத் தொகுப்பு அறிவுமதி அண்ணனின் நட்புக் காலம்
    http://premkalvettu.blogspot.com/200...g-post_27.html

  11. #11
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    திருமணம் முதலிரவிற்காகவோ அல்லது உடலுறவிற்காகவோ நடத்தப்படவில்லை, திருமணங்கள் பல - ஆண் பெண் புரிதல் அன்றி செய்யப்படுகின்றன என்பது உண்மை தான்
    அதென்ன நீ உன் வீட்டில் நான் என் வீட்டில் ? தோழமை என்பதே ஒருவருக்கு மற்றவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்று தானே? அவரவர் வீட்டில் இருந்து கொண்டு தேவை என்று வந்ததும் சந்தித்து கொள்வீர்களா? உடலுறவிற்கான உந்துதல் மணி அடித்ததும் எழும் பசி மாதிரியா? ஒருவரை மற்றவர் பார்த்து ரசித்து சிறுசிறு அசைவுகளில் மனம் கிளர்ந்து மணம் நுகர்ந்து சிறு சிறு ரகசிய மொழிகள் பேசி பேசி பாதி இன்பத்தை ஒருவர் மற்றவரை தீண்டும் முன்னே அனுபவித்து பின்னரே அந்த இன்பம் நிகழும். நீங்கள் சொல்வது போல உந்துதல் ஏற்பட்டவுடன் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு சுகம் அனுபவிக்கும் முறைமை அல்லப்பா அது.
    அதற்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள் - விபச்சாரம். (அவள் வீட்டில், அவன் வீட்டில் - என்றால் வேறு எங்கு வைத்து இச்சை தீர்க்க முடியும் - லாட்ஜில் தானே?)

    விரும்பும் வரை

    நீ உன் வீட்டிலும் நான்
    என் வீட்டிலும்
    தங்கிக்கொள்வோம்

    திருமணம் செய்தவுடன் பெண்கள் கிளம்பி உங்களுடன் வந்துவிட வேண்டும் என்பது தான் தங்கள் நியாயம் என்றால் மன்னித்துக் கொள்ளவும்

  12. #12
    புதியவர்
    Join Date
    02 Sep 2005
    Location
    Bangalore
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    ஆனால் எண்ணத்திலும், சொல்லிய விதத்தில் எல்லாம் ஊனமாகி கிடக்கிறது.....
    மனுஷ்யபுத்திரன் சொல்லியதாக ஞாபகம்...

    கவிதையினுடைய தளத்தை யாருக்கும் விளக்கவேண்டாம்....எப்போது வாசிப்பவன்
    அந்த தளத்தை அடைகிறானோ அப்போது தானாக புரிந்து கொள்வான்...

    ஆதலால் ஊனமாகி இருப்பதும் இல்லாததும் அவர் அவர் எண்ண ஓட்டங்களை பொறுத்தது..எடுத்துக் கொள்ளும் முறையை பொறுத்தது.

    தோழியோ, காதலியோ - தோழனோ காதலனோ உடல்தேவையின் வடிகாலாய் மட்டும் பார்க்கும் போதே அங்கே நட்பும்
    செத்து விடுகிறது காதலும் செத்து விடுகிறது.....

    உன் உணர்ச்சிகளின்
    வடிகால் தானே நான்
    இதில்
    காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

    இந்த வரிகளில் இருந்துதான் மேற்கூரிய கருத்தை புரிந்து கொண்டீர்களானால்.....
    என்னை விட்டு விடுங்கள்....

    தோழி...காதலி அல்லது மனைவி இருவருக்குமான வேறுபாடு என்ன என்ற தளத்திலிருந்து யோசித்தால்... கொஞ்சம் அடிவிழாமல் தப்பிப்பேன் என்று நினைக்கிறேன்
    Last edited by kalvettu; 15-09-2005 at 07:47 AM.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •