சவால்களைச் சந்திப்பதற்கான திறன்கள் - பிரதமர்
புத்தாக்கம், தரம் முத்திரை மற்றும் தலைமைத்துவம் ஆகிய மூன்று கூறுகள்தான், உலக நாடுகள் உடனான போட்டியிடும் தன்மைக்கு வித்திடுகின்றன என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
சவால்கள் நிறைந்த இந்நவீன காலக்கட்டத்தில் இதர நாடுகளோடு போட்டியிட்டு முன்னேறுவதற்கு அம்மூன்று கூறுகளும் இன்றியமையாதது என அவர் மேலும் கூறினார். கோலாலம்பூரில் நடந்த உலகளாவிய தலைமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
புத்தாக்கம் எனும் அம்சம் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருவதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் நாடாக திகழும் மலேசியா மேலும் பல துறைகளில் சாதனை படைத்திட புத்தாக்கம் மிக அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்.
--------------------------------------------------------------

Hologram முத்திரையின் அவசியம்
Hologram முத்திரை பதிக்கப்படாத மருந்து வகைகள் மட்டுமே சந்தையில் விற்கப்பட வேண்டும் எனும் சட்ட அமலாக்கத்திற்குப்பின்,போலி மருந்து வகைகள் விற்கப்படுவது வெகுவாக குறைந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.
இருப்பினும்,மருந்தக சேவை பிரிவினர் அவ்வப்போது சந்தையில் விற்கப்படுகின்ற மருந்து வகைகள் தொடர்பாக தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் கூறினார்.
சுகாதார அமைச்சின் அனுமதி அல்லது அங்கீகாரம் பெறப்பட்ட மருந்து வகைகளை இதர போலி மருந்து வகைகளிலிருந்து தரம் பிரிப்பதற்கு உதவும் Hologram முத்திரை மிகவும் அவசியம் என SUBANG JAYA-வில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சீனாவில் முதலீடு செய்ய பிரகாசமான வாய்ப்புகள்
சீனாவில் கிடைக்கப்பெறும் வாணிப வாய்ப்புகளை மலேசிய முதலீட்டாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக தேவைப்படும் உதவிகளைச் செய்ய தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அதன் அமைச்சர் Datuk Khaled Nordin தெரிவித்தார்.
சீன நாட்டில் வாணிபத்தில் ஈடுபடுவதற்கான விதிமுறைகள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி பிரிவு ஒன்று அவ்வமைச்சில் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். சீன நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் மலேசிய முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் அவ்வமைச்சு முதலீட்டளர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் சீன நாட்டில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகளை மலேசிய முதலீட்டாளர்களுக்கு விளம்பரப்படுத்தவும் அவ்வமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.


துணைப் பிரதமர் நஜீப் நாடு திரும்பினார்
துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak சீனாவிற்கான தனது ஏழு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பினார். நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் Hongqiao அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அவர் புறப்பட்டார்.
அவரது இப்பயணத்தில் அவரது துணைவியார் Datin Seri Rosmah Mansor, வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் Datuk Seri Ong Ka Ting, மின்சாரம், நீர், மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் Datuk Seri Lim Keng Yaik உட்பட இதர முக்கிய பிரமுகர்களும் கலந்துக்
கொண்டனர்.

துணைப் பிரதமர் சீனாவில் அந்நாட்டு பிரதமர் Wen Jiabao-யைச் சந்தித்து பேச்சு நடத்திய பின், அந்நாட்டு துணைப் பிரதமர் Huang Ju-வையும் அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.
தற்காப்பு அமைச்சருமான நஜீப் இரு வழி நல்லுறவு தொடர்பில் ஒரு சந்திப்பு கூட்டத்தில் அந்நாட்டு தற்காப்பு அமைச்சருடன் கலந்துக் கொண்டார். இரு நாட்டின் தற்காப்பு தொடர்பான இரு வழி நல்லுறவு புரிந்துணர்வு திட்டம் ஒன்று அச்சந்திப்புக் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டது.


ஆற்றில் மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன
Tanah Merah, Belimbing தேசிய பள்ளியைச் சேர்ந்த காணாமல் போன இரு மாணவர்கள் Sungai Kelantan-இல் அக்கிரமத்து பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டனர்.
12 வயது மதிக்கத்தக்க Mohd Aswadi Sukarno என்னும் மாணவனும் 11 வயதுடைய Tasuin Salleh என்னும் மாணவனும் ஆற்றில் பிணமாக கிடந்ததாக Tanah Merah வட்டாரத்தின் தீயணைப்பு படை அதிகாரி Ariff Yusoff தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களும் மருத்துவ பரிசோதனைக்காக Tanah Merah மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார். பிணமாக கிடந்த அவ்விரு மாணவர்களும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் தொழில்நுட்ப துறையின்வழி மற்றுமொரு சாதனை

உலகமயமாக்குதலுக்கு ஏற்ப பொது அறிவும் கல்வியறிவும் கொண்ட குடிமக்களை உருவாக்கும் நோக்கில் மற்றுமொரு கட்டண தொலைக்காட்சி நிறுவனமான mitv தனது ஒளிபரப்பை தொடங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
R&D அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் புதிய சாதனை இது எனவும் பிரதமர் புகழ்ந்துள்ளார். அதிநவீன தொழொல்நுட்ப கூறுகளுடனான ஒளிபரப்பை இந்த புதிய ஒளிபரப்பு வழங்கிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறையின்வழி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அரிய வாய்ப்பு இது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
JOHOR-இல் போதைப்பித்தர் கும்பல் முறியடிப்பு
ஆகஸ்ட் 29-ஆம் தேதியிலிருந்து கடந்த ஞாயிறு வரை JOHOR மாநிலத்தில் மட்டும் 144 போதைப்பித்தர்களும் ஒரு போதைப்பொருள் விநியோகிக்கும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக JOHOR மாநில போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இலாகாவின் இயக்குனர் ACP Abdul Halim தெரிவித்தார்.
Batu Pahat, Johor Baharu Utara, Kota Tinggi,Pontian, Mersing மற்றும் Kluang ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள்,அதிரடி நடவடிக்கைகளின்வழி இவர்கள் பிடிபட்டார்கள் என அவர் மேலும் கூறினார்.
பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் மூலமும் புகார்களின் தொடர்பிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
--------------------------------------------------------------
மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
தெற்கு மும்பையில் உள்ள ஜஸ்லோக் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் தெரியவில்லை.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. மும்பையிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த மருத்துவமனையின் நான்காவது மாடியில்தான் 11 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
--------------------------------------------------------------
கனத்த மழையால் இலங்கையில் நிலச்சரிவு : நால்வர் பலி
இலங்கையில் நேற்று முன்தினம் பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கையில் தேயிலை அதிகம் பயிரிடப்படும் மத்திய குன்றுப்பகுதியில் உள்ளது ரத்னாபுரா நகரம்.
கொழும்பில் இருந்து 70 கி.மீ., தென் கிழக்கு பகுதியில் உள்ளது. இந்நகரின் புறநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோ ர் இங்குள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை வெள்ளமும், வறட்சியும் அடிக்கடி ஏற்படக் கூடியது. கடந்த டிசம்பரில் வடக்கு மற்றும் வடக்கு மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எகிப்து தியேட்டரில் தீ விபத்து 29 பேர் பலி: நூற்றுக்கணக்கானோர் காயம்
எகிப்து நைல் நதி அருகே உள்ள பெனி சுயப் நகரில் ஒரு தியேட்டரில் நேற்று இரவு 11.45 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென தீப்பிடித்தது. இதɡல் தியேட்டருக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் 29 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈராக்கில் அமைச்சகம் மீது தாக்குதல்
ஈராக்கில் நேற்று முன்தினம் அதிகாலையில் முப்பது தீவிரவாதிகள் 10 கார்களில் வந்து உள்துறை அமைச்சகத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் பலியாகினர். ஐந்து பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகள், சிறு பீரங்கிகள், தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கினர். இதையடுத்து அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் நகரெங்கும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
--------------------------------------------------------------
U.S.Open Tennis: பயஸ் & நவரத்திலோவா ஜோடி தோல்வி
நியுயார்க் நகரில் U.S.Open Tennis போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் & நவரத்திலோவா ஜோடியும் கட்டரினா & ஜிம்மோன்ஜிக் ஜோடியும் மோதின.
இதில் கடுமையாக போராடி பயஸ் நவரத்திலோவா ஜோடி 6-7, 7-5, 9-11 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.

நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி