Results 1 to 4 of 4

Thread: செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை மலேசிய செய்தி

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை மலேசிய செய்தி

  இராக்: நெரிசலில் இறந்தோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது
  இராக்கில் பாக்தாத் நகரில் Shia வழிபாட்டுத் தலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டிவிட்டது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
  இந்த துயர சம்பவத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. Shia புனிதத் தலத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களை கலைந்து ஓடச் செய்து இந்தக் களேபரத்தை தீவிரவாதிகள் நடத்தினர்.
  Saddam-இன் ஆதரவாளரும் Al-Qaedah முக்கிய தலைவர்களில் ஒருவருமான அபு முஸாப் அல்-சர்காவியின் தலைமையிலான தீவிரவாதிகள் தான் இதற்குக் காரணம் என இராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
  துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து லட்சக்கணக்கானவர்கள் கலைந்து ஓடியபோது மிதிபட்டும், நெரிசலில் சிக்கியும், பாலத்தைக் மொத்தமாகக் கடந்தபோது அது உடைந்து விழுந்ததிலும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
  மேலும் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த பிறகு நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்கள், அசம்பாவிதங்களிலேயே மிக மோசமான சம்பவம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  -------------------------------------------------------------
  வெடிகுண்டு சம்பவத்தில் மலேசியரும் காயமுற்றார்
  தெற்கு தாய்லாந்து Sungai Golok-இல் நேற்று முன்தினம் ஏற்பட்ட மூன்று தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் 17 பேர் காயமுற்றனர்.
  அவர்களில் 13 பேர் ஆண்கள் எனவும், 4 பேர் பெண்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, காயமுற்றவர்களில் ஒருவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர் எனவும் அவருக்கு தலை மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

  கிளாந்தான் மாநிலத்தை சேர்ந்த 39 வயது Cheng Tuck Wah தற்போது Kota Baharu மருத்துவமனையிம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  போக்குவரத்து சம்மன்களை செலுத்துபவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு உயர்வு
  48-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்னும் போக்குவரத்து சம்மன்களை செலுத்தாதவர்கள் தங்களின் சம்மன்களை செலுத்தலாம் எனவும், அவர்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் Bukit Aman கூட்டரசு போக்குவரத்து போலீஸ் தலைவர் Datuk Gingkoi Seman Pancras அண்மையில் தெரிவித்தார்.
  கடந்த வியாழன்கிழமை முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 22-ம் திகதி வரையில் சம்மன்களை செலுத்துபவர்களுக்கு மட்டுமே 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
  இதனைத்தொடர்ந்து, அதிகமான வாகனமோட்டிகள் தங்களின் சம்மன்களை செலுத்த முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதர நாட்களை காட்டிலும், Bukit Aman, Ampang, Shah Alam மற்றும் Petaling Jaya வட்டாரங்களில் உள்ள போக்குவரத்து சம்மன்களை செலுத்தும் நிலையங்களில் சம்மன்களை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ACP Hamza Taib தெரிவித்தார்.

  1999-ம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையில் செலுத்தப்படாத சம்மன்கள் மட்டும் சுமார் 3.4 மில்லியன் ரிங்கிட்டை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
  தேசிய தின விழா தொடர்பான ஆலோசனைக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம்-Kadir
  தேசிய தின விழா தொடர்பான ஆலோசனைக் குழு தலைவர் பதவியை தாம் ராஜினாமா செய்யவிரும்புவதாக தகவல் அமைச்சர் Datuk Seri Abdul Kadir Sheikh Fadzir தெரிவித்தார்.
  கடந்த 6 ஆண்டுகளாக தாம் வகித்து வந்த அப்பதவியை விட்டு விலகும் எண்ணத்தை விரைவில் பிரதமரிடம் தெரிவிக்கப்போவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

  அப்பதவிக்கு நியமிக்கப்படவிருக்கும் புதிய நபர் மேலும் சிறந்த கருத்துகளையும் தலைமைத்துவ திறனையும் கொண்டிருப்பார் என தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
  Jerangau-Jabor சாலையில் விபத்துக்களை குறைக்க உடனடி நடவடிக்கை
  Kuala Terengganu, Dungun மாவட்டத்தில் உள்ள Jerangau-Jabor சாலைகளில் அதிகமான சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், Terengganu மாநில பொதுப்பணித்துறை அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குனர் Datuk Ir Mohd Hussin தெரிவித்தார்.
  அதன் முதல் கட்டமாக, பள்ளி மற்றும் சாலை சந்திப்புகளில் இன்னும் அதிகமான அறிவிப்பு பலகைகளை வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  அன்மைய காலங்களில் அப்பகுதிகளில் தொடர்ச்சியான சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  இதனிடையே, ஆறு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட சாலைவிபத்தில் எட்டு பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வாகனமோட்டிகளும் அச்சாலையில் வாகனங்களை செலுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
  எல்லையில் பலத்த பாதுகாப்பு
  தாய்லாந்திலிருந்து மலேசிய எல்லையின் வழி இங்கு சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க கிளந்தான் போலீசார் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
  எல்லையில் மேலும் அதிகமான அதிகாரிகளை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கிளந்தான் தலைமை போலீஸ் அதிகாரி Zulkifli Abdullah தெரிவித்தார்.
  தாய்லாந்தில் தற்போது குண்டுவெடிப்பு சம்பவங்கள்,பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு வருவதால் பாதுகாப்பைத் தேடி அந்நாட்டவர்கள் மலேசியாவிற்கு நுழையும் வாய்ப்புள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
  -------------------------------------------------------------
  பொறியியல் கல்லூரிகளில் கைத்தொலைபேசி, கவர்ச்சியான ஆடைகளுக்கு நேற்று முதல் தடை!
  தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 227 பொறியியல் கல்லூரிகளில் நேற்று முதல் செல்போன்கள் பயன்படுத்தவும், கவர்ச்சியான உடைகளை அணியவும் தடை விதிக்கப்படுகிறது.
  தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் கவர்ச்சியான ஆடைகளை அணிவது அதிகரித்து வருகிறது.
  மேலும் கேமரா கைத்தொலைபேசிகள் மூலம் பெண்களை தவறாக படமெடுப்பது உள்பட பல்வேறு விபடரீதங்கள் நடந்து வருகின்றன. மேலும் வகுப்புகள் நடக்கும்போதே மாணவர்கள் கைத்தொலைபேசிகளில் பேசுவதும், குறுந்தகவல்களை அனுப்பி விளையாடுவதுமாக வகுப்பறைகளின் ஒழுக்கம் கெட்டு வருகிறது.

  இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இனிமேல் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்லூரி வளாகத்திற்குள் செல்போனை கொண்டு வரக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
  மதக் கலவரத்தை தூண்டுவோரை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம்
  மதக் கலவரத்தைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
  இதற்கான மசோதா ஒரு வாரத்தில் உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் விவாதத்துக்கு வைக்கப்படும் என இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மூன்று வரைவு மசோதாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
  இறுதி மசோதா தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது விரைவில் இணையதளத்தில் போடப்படும். இந்த மசோதா குறித்த ஆலோசனைகள், கருத்துக்களை மக்கள் தெரிவிக்கலாம். அதன் பின்னர் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
  முன்னதாக தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் தீவிரவாதத்தையும் மதக் கலவரத்தைத் தூண்டுவோரையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம். தீவரவாதம் மதக் கலவரம் மூலம் யாரும் அப்பாவி மக்களைக் கொல்வதை சகித்துக் கொள்ள முடியாது.
  மதக் கலவரத்தை யார் தூண்டினாலும் கடும் தண்டனைகள் கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
  ------------------------------------------------------------
  New Orleans நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
  அமெரிக்காவின் கடற்கரையோர மாநிலங்களை புரட்டி போட்ட Katrina சூறாவளியால் New Orleans நகரமே தண்ணீரில் மூழ்கி விட்டது.
  தற்போது அப்பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஏழு லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான திருடர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அனைத்தையும் கொள்ளையடித்து செல்கின்றனர்.
  அமெரிக்காவில் கடற்கரையோர மாநலங்களான Louisiana, Mississippi, Alabama ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன் Katrina என்ற பயங்கர சூறாவளி வீசியது. இதில் கடல் நீர் உட்புகுந்ததில் ஏராளமான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி விட்டன.

  இது வரை நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டு இருக்கும் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
  அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்-போப் ஆண்டவர்
  போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் ரோம் நகரின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் சிறிது நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார்.
  விடுமுறையை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் வாடிகன் நகருக்கு திரும்பிய போப் ஆண்டவர் விசேஷ பிரார்த்தனை ஒன்றை நடத்தினார்.
  சில நாடுகளில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவது வேதனை அளிப்பதாகவும், இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல எனவும் அப்பிரார்த்தனையின் போது அவர் கருத்து தெரிவித்தார். இதனால், அந்த நாட்டின் சக்தி குறைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  ஆதலால், மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும், குழந்தைகள் கடவுளால் கொடுக்கப்படும் வரம் எனவும் அவர் கூறினார். வாழ்க்கை வளத்துக்கும் குடும்ப பாதுகாப்புக்கும் குழந்தைகள் மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
  --------------------------------------------------------------
  US Open Tennis பெண்கள் ஒற்றையர் பிரிவு : இரண்டாம் சுற்றில் Sania Mirza வெற்றி
  US Open Tennis வரலாற்றில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனை படைத்தார் Sania Mirza.
  Grandslam அந்தஸ்து பெற்ற US Open Tennis தொடர் நியூயார்க்கில் நடக்ககிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் இந்தியா நட்சத்திர வீராங்கனை Sania Mirza, 81-வது நிலையில் உள்ள இத்தாலியின் Maria Elena Camerin-னை சந்தித்தார்.
  இதில் Sania 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று US Open Tennis மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  நன்றி வணக்கம்மலேசியா.காம்


  மனோ.ஜி

 2. #2
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  இராக்: நெரிசலில் இறந்தோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியது
  இராக்கில் பாக்தாத் நகரில் Shia வழிபாட்டுத் தலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டிவிட்டது
  அந்த தினத்தில் இறப்பவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்று சொல்கிறார்களே! அதற்கு ஏதேனும் வேத ஆதாரங்கள் உள்ளனவா?
  அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்-போப் ஆண்டவர்
  போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் ரோம் நகரின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் சிறிது நாட்கள் தங்கி ஓய்வு எடுத்தார்.
  விடுமுறையை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் வாடிகன் நகருக்கு திரும்பிய போப் ஆண்டவர் விசேஷ பிரார்த்தனை ஒன்றை நடத்தினார்.
  சில நாடுகளில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவது வேதனை அளிப்பதாகவும், இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல எனவும் அப்பிரார்த்தனையின் போது அவர் கருத்து தெரிவித்தார். இதனால், அந்த நாட்டின் சக்தி குறைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  ஆதலால், மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும், குழந்தைகள் கடவுளால் கொடுக்கப்படும் வரம் எனவும் அவர் கூறினார்.
  பிறகு அவர் ஏன் இப்படி இருக்கிறாராம்?

  புரியாமல் - கவிதா

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0
  Quote Originally Posted by kavitha
  பிறகு அவர் ஏன் இப்படி இருக்கிறாராம்?

  புரியாமல் - கவிதா

  ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு அல்ல கவி.  மனோ.ஜி
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 4. #4
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  Quote Originally Posted by Mano.G.
  ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு அல்ல கவி.  மனோ.ஜி
  பதிலுக்கு நன்றி அண்ணா.
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •