புனித தலத்தில் கூட்ட நெரிசல், பாலம் உடைந்து 630 பேர் பலி!
இராக் தலைநகர் பாக்தாதில் ஒரு புனித தலத்தில் மனித வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், பாலம் உடைந்ததில் ஆற்றில் விழுந்தும் 630-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Tigris நதியின் அருகே உள்ள Shia பிரிவினரின் Imam Musa al-Kadhim புனித தலத்தில் இமாமின் நினைவு தினத்தையொட்டி நேற்று லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது அந்த இடத்துக்கு அருகே சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் புனிதத் தலத்தில் கூடியிருந்த கூட்டத்துக்குள் இரு தற்கொலைப் படையினர் உடலில் குண்டுகளுடன் புகுந்துவிட்டதாக புரளி பரவியது. இதையடுத்து மக்கள் சிதறி ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் Tigris நதியின் மீது உள்ள பாலத்தின் வழியாக தப்பியோடினர்.
ஆயிரக்கணக்கானவர்கள் அந்த சிறிய பாலத்தில் ஓடியதால் அந்தப் பாலம் உடைந்து விழுந்தது. இதில் பலர் நதியில் விழுந்தனர். அவர்களில் பலரும் உயிரிழந்தனர். மொத்தத்தில் இப்பகுதியில் 630 பேர் வரை உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-------------------------------------------------------------
வரலாற்று சிறப்புமிக்க நாள்....
மலேசியாவின் 48-வது தேசிய தின கொண்டாட்டம் வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது.
PUTRAJAYA-வில் சுமார் 32,000 பேர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பில் தேசிய கொடி கம்பீரமாக பறக்கவிடப்பட்டன.தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தேசிய தின கொண்டாட்டம் பற்றிய நேரடி ஒளி,ஒலிபரப்புகள் இருந்தன.
கம்பீரமான குதிரை வண்டியில் மாமன்னர் Yang di-Pertuan Agong Tuanku Syed Sirajuddin Syed Putra Jamalullail மற்றும் Raja Permaisuri Agong Tuanku Fauziah Tengku Abdul Rashid அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாமன்னர் தம்பதியினரை பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi மற்றும் துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak வரவேற்றனர்.பல்லின மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய இவ்வாண்டின் தேசிய தினம் வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினால் அது மிகையாகாது.
தேசத்தை நேசிக்கும் அதே வேளையில்...
நாட்டின் 48-வது தேசிய தினத்தை கொண்டாடும் வேளையில் பொருளாதார நிலையில் உயர்ந்து கொண்டிருக்கும் மக்கள் பண்பாடிலும் சிறந்து விளங்க வேண்டுமென பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi கூறியுள்ளார்.
உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டுள்ள நாம் தொடர்ந்து அது நீடித்து நிலைக்க முயற்சி செய்ய வேண்டுமென அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.அது தொடர்பாக,கல்வியறிவு கொண்ட தொழிலாள வர்க்கத்தை உருவாக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

தேசத்தை நேசிக்கும் அதே வேளையில் கடுமையாக உழைப்பவர்களாகவும் நற்பண்புள்ளவர்களாகவும் அவர்கள் திகழ வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில தேசிய தின கொண்டாட்டம்
இவ்வாண்டின் சிலாங்கூர் மாநில தேசிய தின கொண்டாட்டம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது.ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலம் என்ற அந்தஸ்தத்தில் உள்ள சிலாங்கூரில் இவ்வாண்டின் தேசிய தின கொண்டாட்டம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது என சிலாங்கூர் Menteri Besar Datuk Seri Dr Mohamad Khir Toyo தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களின் வாழ்க்கை தரம்,பொது வசதிகள்,பல்வேறு துறைகளில் முதலீடு தொடர்பான முன்னேற்றங்களினால் சிலாங்கூர் மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தற்போது கருதப்படுகின்றது.

பொருளாதார ரீதியிலான வளர்ச்சி கண்டுவரும் அதே வேளையில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,புரிந்துணர்வு போன்ற பண்புகள் கொண்டவர்களாகவும் சிலாங்கூர் மாநில மக்கள் திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Pemadam கழகத்தில் சேருங்கள்...
நாடளவில் உள்ள 5 மில்லியன் மாணவர்களும் Pemadam எனும் மலேசிய போதைப்பொருள் தடுப்பு கழகத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என Pemadam அறிவுறுத்தியுள்ளது.
2012-ஆம் ஆண்டிற்குள் மாணவ சமுதாயம் முற்றிலும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் Pemadam இவ்வாறு தெரிவித்துள்ளது.
இருப்பினும்,அந்நோக்கத்தை அடைய நிதி பிரச்சனை ஒரு தடங்கலாக இருக்கும் என அக்கழகத்தின் மேலாளர் Datuk Zainal Abidin Zin கூறினார்.

இதுவரை 6 மில்லியன் மாணவர்கள் Pemadam உறுப்பினர்களாக உள்ளதாகவும் அவ்வெண்ணிக்கை உயர மாணவ சமுதாயம் தோள் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தையினால் பிரச்சனையை தீர்க்கலாம்
எவ்வித பிரச்சனை ஏற்பட்டாலும் அதனால் ஏற்படுகின்ற மன உளைச்சலை தவிர்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் தகுந்த ஆலோசனையும் பேச்சுவார்த்தையும்தான் சிறந்த வழியாகும்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான பிரச்சனைகளுக்கும் இது விதிவிலக்கல்ல.வர்த்தகம் ரீதியான நீதிமன்ற வழக்குகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூகமான பேச்சுவார்த்தை சிறந்த தீர்வாகும் என தேசிய நீதிமன்ற தியான ஆலோசனைக்குழு தலைவர் Hendon Mohamed தெரிவித்தார்.
வழக்கறிஞர் இல்லாமலேயே பல நீதிமன்ற வழக்குகளை சுமூகமான பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்த்துவிட முடியும் என அவர் தெரிவித்தார்.பல வருடங்களாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க இம்மாதிரியான வழியை பின்பற்றுவது முறையாகும் என அவர் மேலும் கூறினார்.
--------------------------------------------------------------
டெல்லி ஜனாதிபதி மாளிகையின் காவலர் மர்ம மரணம்
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மத்தியப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் குண்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடல் நேற்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிருஷ்ண குமார் (வயது 29) என்ற அந்த மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையின் காவலர் ஜனாதிபதி மாளிகை வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதிகாலை 3 மணியளவில் அவர் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
சட்டீஸ்கர் மாநலத்தைச் சேர்ந்த குமார், சிஐஎஸ்எப் படையின் 81-வது பட்டாலின் பிரிவைச் சேர்ந்தவர். விடுப்பில் சென்றிருந்த அவர் நேற்று முன்தினம் தான் பணிக்குத் திரும்பினார்.
இச் சம்பவம் குறித்து அறிந்ததும் டெல்லி காவல்துறையின் த்த அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அல்லது தவறுதலாக அவர் சுடருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திருப்பதி செல்கிறார்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திருப்பதி வெங்கடேச பெருமானை தரிக்க இம்மாதம் 21-ம் தேதி திருப்பதி கிறார். பிரதமர் இம்மாதம் 21-ம் தேதி காலை டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருப்பதி விமான நிலையம் விருக்கிறார்.
அங்கிருந்து நேராக திருமலைக்கு செல்லும் பிரதமர் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் கோயிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்Ţகிறார்.
பின்னர் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடையும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீ அரிகோட்டா சென்று விண்வெளி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்று மாலை டில்லிக்கு புறப்படுகிறார்.
--------------------------------------------------------------

Katrina சூறாவளி¢ɡ மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவில் Hurricane Katrina என அழைக்கப்படும் சூறாவளி காற்று மணிக்கு 230 கி.மீ., வேகத்தில் வீசியதில் Louisiana, Mississippi, Alabama மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள.
80-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூறாவளி வீசிய பகுதிகள் தற்போது தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதிகளில் மீட்பு பணி தாமதமாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் ஒன்றான New Orleans நகரம் கடல் மட்டத்தை விட தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது.
சூறாவளி வீசினால் இந்த நகரம் கடுமையாக பாதிக்கப்படும் என முன்பே கணித்து வைத்திருந்தனர். அது போல் Katrina சூறாவளி சுழன்று அடித்து வீசியதில் New Orleans நகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடல் நீர் சூழ்ந்து கொண்டதால் ஏராளமானவர்கள் வீட்டு கூரைகளில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தனர். இதனிடையே Katrina சூறாவளி காற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க விமானப்படைகள் தாக்குதலில் 47 பேர் பலி
ஈராக்கில் Al-Qaeda தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்கள் மீது அமெரிக்க விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் Saddam ஆட்சி வீழ்ந்த பின்னர் அவரது ஆதரவு கொரில்லாக்கள் அரசு படைகள் மீதும் வெளிநாட்டு படைகள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கார் குண்டு வெடிப்புகள் தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டன.
இதற்கிடையே சிரியா நாட்டு எல்லைக்கு அருகே உள்ள கரபில்லா என்ற இடத்தில் Al-Qaeda ஆதரவு பெற்ற தீவிரவாதி Abu Islam மற்றும் அவனது கூட்டாளிகள் பதுங்கியிருந்ததை கண்டு பிடித்த அமெரிக்க படையினர் அங்கு விமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மூன்று முறை நடந்த விமான தாக்குதலில் எட்டு குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் Abu Islam மற்றும் அவனது கூட்டாளிகள் 47 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள், பெண்களை கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு
ஆபாச தொழிலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகள், பெண்களை கடத்திச் செல்வது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் 'ஆசிய மற்றும் பசிபிக் மனித உரிமைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மியான்மர், கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தப்படும் குழந்தைகள், பெண்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கு விபச்சார விடுதிகளில் அடிமைகளாக வைக்கப்படுகின்றனர் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவர் லூயிஸ் ஆர்பர் தமது உரையில் தெரிவித்தார்.

--------------------------------------------------------------
US Open Tennis: Roger Federer வெற்றி, Tim Henman தோல்வி
US Open Tennis-ல் நடப்பு சாம்பியன் Roger Federer அபார வெற்றி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் முதல்நிலை வீரரான switzerland நாட்டை சேர்ந்த Federer, செக் குடியரசின் Ivo Minar-ஐ எதிர்த்து களமிறங்கினார்.
முதல் செட்டை 16 நிமிடங்களில் வென்ற Federer 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். வெறும் 61 நிமிடங்களில் வெற்றியை வசப்படுத்திய இவர் இரண்டாம் சுற்றுக்கு எளிதாக முன்னேறினார்.
அசைக்க முடியாத வீரராக விளங்கும் Federer தொடர்ந்து 19-வது போட்டியில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் நட்சத்திர வீரரான Tim Henman முதல் சுற்றிலேயே வெளியேறினார். இவர் Spain-இல் Fernando Verdasco-விடம் 4-6, 2-6, 2-6 என்ற செட்களில் தோற்றார்.நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி