Results 1 to 2 of 2

Thread: ஆகஸ்ட் 30, செவ்வாய்கிழமை மலேசியாவிலிருந்த

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஆகஸ்ட் 30, செவ்வாய்கிழமை மலேசியாவிலிருந்த

    எண்ணெய் மான்யத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும்
    அரசாங்கம் எண்ணெய் மான்யத்தைக் குறித்து மறு ஆய்வு செய்யும் எனவும் தேவைப்பட்டால் எண்ணெய் மான்யத்தைக் குறைக்கவுள்ளதாகவும் துணை நிதியமைச்சர் Datuk Dr Ng Yen Yen தெரிவித்தார்.
    நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கு இந்நடவடிக்கை அவசியம் எனவும் தற்பொழுது அரசாங்கம் இதன் தொடர்பில் மறுபரிசீலனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    எண்ணெய் மான்ய குறைப்பு எப்பொழுது அமலுக்கு வரும் என்பது பற்றி அவர் கருத்து எதுவும் கூறவில்லை. எண்ணெய் மான்ய குறைப்பு நடவடிக்கையால் பயனீட்டாளர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் விளைவுகள் பற்றி 2006-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எனப்படும் வரவு செலவு பட்டியலின் போது அரசாங்கம் விரிவாக விவாதிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
    --------------------------------------------------------------
    போக்குவரத்து சம்மன்களை செலுத்த 50 விழுக்காடு தள்ளுபடி
    எதிர்வரும் 48-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்னும் போக்குவரத்து சம்மன்களை செலுத்தாதவர்கள் தங்களின் சம்மன்களை செலுத்தலாம் எனவும், அவர்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் Bukit Aman கூட்டரசு போக்குவரத்து போலீஸ் தலைவர் Datuk Gingkoi Seman Pancras தெரிவித்தார்.
    இதனைத் தொடர்ந்து, வாகனமோட்டிகள் தங்களின் போக்குவரத்து சம்மன்களை இவ்வார வியாழக்கிழமை முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 22-ம் திகதி வரையில் செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.
    இருப்பினும், Ops Sikap திட்டத்தின் வழி சம்மன்கள் விதிக்கப்பட்டவர்களுக்கும், கைது ஆணை பிறப்பிக்கப்பட்டவர்களுக்கும் 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படாது எனவும், அவர்கள் தனியாக போலீஸ்காரர்களைச் சந்தித்து சம்மன்களைச் செலுத்த வேண்டும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    1999-ம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையில் செலுத்தப்படாத சம்மன்கள் மட்டும் சுமார் 3.4 மில்லியன் ரிங்கிட்டை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


    IJN விரிவாக்கம் செய்யப்படும்
    IJN எனப்படும் தேசிய இருதய மையத்தில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நோயாளிகள் 2008-ஆண்டு முதல் 6 மாதங்களாகவோ அல்லது ஒரு வருட காலமாகவோ காத்திருக்க தேவையில்லை. அக்காலக்கட்டங்களில் நோயாளிகள் மூன்று அல்லது ஆறு மாதங்களே அறுவை சிகிச்சைக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.
    இருதய அறுவை சிகிச்சைக்காக 209 மில்லியன் செலவில் அவ்வமைச்சு IJN-மையத்தை மேலும் விரிவாக்கம் செய்வதால் நோயாளிகள் இனி நீண்ட காலம் காத்திருக்கும் சிரமத்தை எதிர்நோக்க தேவையில்லை என அவர் கூறினார்.
    IJN மையத்திற்கு சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டு காலமாக
    அதிகரித்துக் கொண்டே வருவதால் அவ்வமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அவர் விளக்கமளித்தார். இந்த விரிவாக்கப் பணிக்கான கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.



    பிரதமர் புருணைக்குப் பயணம்
    புருணையில் ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi நேற்று புருணைக்குச் சென்று சேர்ந்தார். புருணை சுல்தான் Hassanal Bolkiah அவர்களுடன் பிரதமர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
    பிரதமரின் இப்பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar, உள்துறை அமைச்சர் Datuk Seri Azmi Khalid மற்றும் பிரதமர் துறை அமைச்சர் Datuk Dr Abdullah Md Zin ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
    நேற்று காலை 11.15 மணியளவில் புருணையிலுள்ள Barakas அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்று சேர்ந்தனர். பிரதமரை வரவேற்க புருணையின் கல்வி அமைச்சர் Datuk Seri Setia Awang Abdul Rahman உட்பட இதர அமைச்சர்களும் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.


    மேம்பாட்டை நோக்கி கிழக்குக்கரை மாநிலங்கள்...
    9-வது மலேசிய திட்டத்தின்கீழ் கிழக்குக்கரை மாநிலங்கள் தொடர்பான மேம்பாடு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என பிரதமர் துறை அமைச்சர் Datuk Mustapa Mohamed தெரிவித்தார்.
    பெரும்பாலான வட மாநிலங்கள் மேம்பாடு அடைந்துவிட்டதாகவும் கிழக்குக்கரை மாநிலங்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    அது தொடர்பாக,மேம்பாடு திட்டங்களையும் அதனால் ஏற்படவிருக்கும் மாற்றங்களையும் எதிர்கொள்ள அம்மாநில மக்கள் தயாராய் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.KUALA TERENGGANU-வில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.



    ISA-விடம் Suhakam கோரிக்கை


    உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் அல்லது ISA கீழ் கைது செய்யப்பட்டவர்களின் சிந்தனை மற்றும் நடத்தையில் நல்ல மாற்றம் தென்பட்டால் அவர்களை விடுவிப்பதே முறையாகும் என ISA-விடம் மலேசிய மனித உரிமை ஆணையம் அல்லது Suhakam கோரிக்கை விடுத்துள்ளதாக Suhakam ஆணையரான Datuk Mohd Hamdan Adnan தெரிவித்தார்.
    ISA கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் நிலையான வருமானம் இன்றி தவிப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை அவசியம் என அவர் மேலும் கூறினார்.
    அது மட்டுமின்றி,குடும்பத்தார் அனுப்புகின்ற கடிதங்களை கைது செய்யப்பட்டவர்களுக்கு முறையாக சமர்ப்பிக்காதது, அமல்படுத்துகின்ற மாற்றங்களை கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு தெரிவிக்காதது ஆகிய புகார்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.



    உயிரியல் தொழில்நுட்ப துறையில் முன்னேறுவோம்


    எதிர்காலத்தில் நாட்டிற்கு அதிகளவு வருமானத்தையும் பயனையும் அளிக்கவல்ல உயிரியல் தொழில்நுட்ப துறையில் சிலாங்கூர் மாநிலம் கவனம் செலுத்தும் என சிலாங்கூர் மாநில முதலீட்டு மையத்தின் இயக்குனர் Datuk Md Jabar Ahmad Kembali தெரிவித்தார்.
    சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்பற்ற பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
    அது மட்டுமின்றி,உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஐயமின்றி சாதனைகள் படைக்கலாம் எனவும் அதற்கு அரசின் முழு ஆதரவு உள்ளது எனவும் அவர் கூறினார்.
    --------------------------------------------------------------
    மும்பை கட்டடம் சரிந்து விழுந்தது: 5 பேர் பலி
    தெற்கு மும்பையில் உள்ள மெரின்லைன் பகுதியில் 3 மாடி கட்டடம் இடிந்து சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய 5 பேர் பலியானார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
    சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்க தீயைணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களும் மீட்பு பணியைச் செய்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் கட்டடம் இடிந்து விழுவது இது 3 வது முறையாகும்.
    --------------------------------------------------------------
    இஸ்ரேலில் குண்டுவெடிப்பு ஐந்து பேர் காயம்
    இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் தற்கொலைப் படையைச் சேர்ந்தவன் தன் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பாலஸ்தீன தீவிரவாதிகள் கடந்த சில மாதங்கள் அமைதியாக இருந்தனர்.
    பாலஸ்தீன பகுதியிலிருந்து இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள பீர்ஷெபா நகரின் பஸ் நிலையத்தில் பாலஸ்தீன தற்கொலைப் படையைச் சேர்ந்தவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை நேற்று முன்தினம் காலை வெடிக்கச் செய்தான்.
    இந்த சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அந்த தற்கொலை படை தீவிரவாதி உடல் சிதறி பலியானான். இந்த சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


    ஈரானில் உளவு விமானம் நொறுங்கியது
    ஈரானில் பறந்து கொண்டிருந்த ஆளில்லாத உளவு விமானம் விழுந்து நொறுங்கியது. ஈரானில் லோரெஸ்தான் மாநிலத்தில் பறந்து கொண்டிருந்த "ட்ரோன்' ரக ஆளில்லா விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.
    இந்த விமானம் எங்கிருந்து வந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
    ஈரானில் உள்ள அணு ஆயுத தயாரிப்பு மையங்களைக் கண்டறிவதற்காக இந்த உளவு விமானத்தை அமெரிக்கா அனுப்பியிருக்கலாம் என ஈரானிய உள்துறை அமைச்சகம் சந்தேகிக்கிறது.


    இலங்கை அதிபர் சந்திரிகா சீனாவுக்கு பயணம்
    இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சீனா சென்றார். "பெய்ஜிங் பெண்கள் அமைப்பின்' பத்தாவது மாநாடு சீனாவில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் சந்திரிகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சீனா சென்றுள்ளார்.
    சீன அரசின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். இலங்கை வெளியுறவு அமைச்சர் அனுரா பண்டாரநாயகே, கலாசாரத்துறை அமைச்சர் மஹிந்தா யாபா அபய்வர்த்தனா ஆகியோரும் அதிபருடன் சென்றுள்ளனர்.
    சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை நேரில் சந்தித்து சந்திரிகா ஆலோசனை நடத்துகிறார். இருதரப்பு பொருளாதார உறவுகள், சர்வதேச நிலவரங்கள், பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர். நிதி, சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
    --------------------------------------------------------------
    US Open Tennis நேற்று தொடங்கியது
    இந்த ஆண்டின் இறுதி Grandslam தொடரான US Open Tennis தொடர் அமெரிக்காவின் New York நகரில் நேற்று துவங்குகியது. நடப்பு சாம்பியனாக களமிறங்கும் Roger Federer இம்முறையும் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
    பெண்கள் பிரிவில் Maria Sharapova, Kim Clijsters என நிறைய பேர் போட்டி போடுகின்றனர். இந்திய நட்சத்திர வீராங்கனையான Sania Mirza-வும் சாதிக்க களமிறங்குகிறார்.

    நன்றி வணக்கம்மலேசியா.காம்

    மனோ.ஜீ

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா,
    இந்த தடவை சானியா இன்னும் முன்னேறட்டும்
    இஸ்ரேல் குண்டு வெடிப்பும் மும்பை கட்டடச் சரிவும் தொடர்கதையாகி வருகிறதே
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •