Results 1 to 3 of 3

Thread: ஆகஸ்ட் 27, சனிக்கிழமை மலேசியா செய்திகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஆகஸ்ட் 27, சனிக்கிழமை மலேசியா செய்திகள்

    சீனா-மலேசியா நல்லுறவு நீடிக்க வேண்டும்
    மலேசியாவும் சீனாவும் தற்காப்பு தொடர்பாக நல்லுறவை வளர்த்துக் கொள்ள எண்ணம் கொண்டுள்ளன என துணைப்பிரதமர் மற்றும் தற்காப்பு அமைச்சருமான Datuk Seri Najib Tun Razak கூறினார்.அதன் தொடர்பாக MoU எனும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
    கோலாலம்பூரில் 2005-ஆம் ஆண்டின் அறிவியல் மாநாட்டை தொடக்கிவைத்தபின் அமைச்சர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    தற்காப்பு தவிர்த்து,மற்ற துறைகளிலும் சீனா மலேசியாவோடு நல்லிணக்கத்தை கொண்டுள்ளதாகவும் சீனாவில் மலேசியர்கள் முதலீடு செய்ய இது பேருதவியாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
    --------------------------------------------------------------
    Toll கட்டண அதிகரிப்பை முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே உரிமை உள்ளது
    தற்போது அமலில் இருக்கும் பினாங்கு பாலத்தின் toll கட்டணத்தை ஏழு ரிங்கிட்டிலிருந்து, எட்டு ரிங்கிட் ஐம்பது சென்னுக்கு அதிகரிக்க PBSB எனப்படும் Penang Bridge Sdn Bhd கடந்த மாதம் அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்ததாக PBSB தலைமை இயக்குனர் Datuk Mohd Nor Idrus நேற்று முன்தினம் அறிவித்தார்.
    இவ்விவகாரம் குறித்து, பொதுப்பணி அமைச்சர் அதிருப்தி அடைவதாகவும், toll கட்டண அதிகரிப்பின் முடிவுகளை எடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே உரிமை உள்ளதாகவும் துறை அமைச்சர் Datuk Seri S.Samy Vellu நேற்று தெரிவித்தார்.
    மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் toll கட்டணத்தை அதிகரிக்கும் திட்டத்தை முதலில் அரசாங்கத்திடம் அறிவித்து அனுமதி பெற வேண்டும் எனவும் அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டுமே அறிக்கைகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
    இதனிடையே, toll கட்டண அதிகரிப்பு திட்டதை அரசாங்கம் அங்கீகரிக்கும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காத்திருக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.


    Halmahera பகுதியில் லேசான நிலநடுக்கம்

    சபா மாநிலத்தில் Halmahera பகுதியில் நேற்று நண்பகல் 1.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்நில நடுக்கம் தீபகற்ப மலேசியாவில் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடலில் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அம்மையம் மேலும் அறிவித்தது.


    பிரதமர் புருணைக்கு இரு நாட்கள் பயணம்
    பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi எதிர்வரும் 29-ஆம் திகதி புருணைக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். புருணை சுல்தானுடன் 9-வது கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள அவர் இப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
    புருணை நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இரு வழி நல்லுறவு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாக Wisma Putra வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
    இக்கலந்துரையாடலுக்குப் பின் பிரதமர், புருணை சுல்தான் Hassanal Bolkiah-வுடன் இரவு விரிந்துபசரிப்பில் கலந்துக் கொள்வார் எனவும் மறுநாள் பிரதமர் புருணையிலுள்ள மலேசியர்களைச் சந்தித்து உரை நிகழ்த்துவார் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


    எல்லையில் கடத்தல் முறியடிக்கப்பட்டது
    மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு கடத்திச்செல்லப்படவிருந்த சுமார் 9,580 DVD-க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக UPP ALLATHU கடத்தல் ஒழிப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
    95,800 ரிங்கிட் மதிப்பிலான அந்த DVD-க்கள் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவ்வமைச்சின் அதிகாரி Noorazman Darus தெரிவித்தார் து தொடர்பாக, 42 மற்றும் 25 வயதிலான இரு தாய்லாந்து ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    இது மாதிரியான கடத்தல் சம்பவங்களை முறியடிக்க சம்பந்தப்பட்ட இடங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


    எரியூட்டப்பட்ட நிலையில் பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
    Jalan Tanjung Pondok, Selama-வில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பெண்மணி ஒருவரின் சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
    அப்பெண்மணி தொடர்பாக எந்த தகவலும் போலீசாருக்கு இன்னும் கிடைக்கவில்லை என Larut Matang மற்றும் Selama வட்டாரத்தின் துணைப் போலீஸ் அதிகாரி Syed Abdul Wahab Syed Majid தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட அப்பெண்மணி தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்காததால் போலீசார் சிரமத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
    தற்பொழுது அப்பெண்மணியின் சடலம் Taiping மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாக அப்போலீஸ் அதிகாரி கூறினார். இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தங்களுடன் 05-8082222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
    --------------------------------------------------------------
    அசாமில் நிலச்சரிவு : 12 பேர் பலி
    அசாமில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.அசாம் கவுகாத்தியில் முன்பு எப்போதும் நிகழாத அளவிற்கு மிக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    நேற்று முன்தினம் பெய்த கடும் மழையால் இந்நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏழு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாயினர். பத்து பேர் காயமடைந்தனர்.
    தற்பொழுது அப்பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதால் மலைப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    --------------------------------------------------------------
    ஆஸ்லோவில் அமைதி பேச்சு : புலிகள் கோரிக்கை நிராகரிப்பு
    'கடந்த மூன்றரை ஆண்டாக அமலில் இருக்கும் சண்டை நிறுத்தத்தைப் பராமரிப்பது குறித்து, ஆஸ்லோவில் அவசர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வு காண நோர்வே அமைதிக் குழுவினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    சர்வதேச நிர்பந்தங்கள், நோர்வே குழுவின் முயற்சி ஆகியவற்றால், இலங்கை அரசுக்கும் & விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டாக சண்டை நிறுத்தம் அமலில் இருந்தாலும், அவ்வப்போது இரு தரப்பிலும் சிலர் பலியாயினர். அதன் உச்சக்கட்டமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    இதையடுத்து இலங்கையில் அமைதி பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 'சண்டை நிறுத்தத்தை தொடர்ந்து முழு அளவில் அமல்படுத்துவது குறித்து ஆஸ்லோவில் அவசர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் கோரிக்கையை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
    இதுகுறித்து இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் நிமால் ஸ்ரீபாலா டி சில்வா நேற்று கூறுகையில், 'சண்டை நிறுத்தத்தை மீறி வன்முறை சம்பவங்கள் நடந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில், சண்டை நிறுத்தத்தை பலப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், அது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கையில் தான் நடக்க வேண்டும். அதுவே நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்று. புலிகள் சொல்வது போல் ஆஸ்லோவில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது,' என்று திட்டவட்டமாகக் கூறினார்.


    ஈராக்கில் படைகள் வாபஸ்?
    'ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெற்றால், அது மிகப் பெரிய தவறாகி விடும். கூடுதலாக ஆயிரத்து 500 வீரர்களை ஈராக்குக்கு அனுப்பி வைப்பேன்,'என்று அமெரிக்க அதிபர் புஷ் திட்டவட்டமாகக் கூறினார். ஆப்கான், ஈராக் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுத்த பின், சர்வதேச அளவில் நிலைமை மாறிவிட்டது.
    அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக தீவிரவாதிகள் அவ்வப்போது பயங்கரத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். 'ஈராக்கில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் வாபஸ் பெற வேண்டும். அதுவரை தாக்குதல் தொடரும்' என்று தீவிரவாதிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். படைகளை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிக்கும்படி அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
    ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெற முடியாது. நான் அதிபர் பதவியில் இருக்கும் வரை... ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கி இருக்கும். தீவிரவாதத்தை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போரிடுவோம். அதில் வெற்றி பெறுவோம். படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று கூறுபவர்கள் தப்புக் கணக்கு போடுகின்றனர். அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் ஆயிரத்து 500 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளேன் என அதிபர் புஷ் தெரிவித்தார்.


    பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகள் கடத்தல்
    பாகிஸ்தானில் இருந்து நும்ற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் உபரிப் பாகங்களை கடத்தியதாக 17 பேர் மீது சீன நீதிமன்றத்தில் விசாரணை துவங்கப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படலாம்.
    சீனாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் தனிப்பட்ட வகையில் வைத்திருப்பது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. சீனாவில் திபெத் எல்லை பகுதியில் உள்ள மேற்கு மாநிலமான கிங்காய் பகுதியில் ஆயுத கடத்தல் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 900 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரத்து 500 உபரி பாகங்களைப் பாகிஸ்தானில் இருந்து கடத்தியதாக 17 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
    சீனாவின் கிங்காய் மாநில தலைநகர் ஜின்ஜியாங். இப்பகுதியில் கிழக்கு துர்கிஸ்தான் தனி மாநிலம் கேட்டு முஸ்லிம்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இவர்களை சீன அரசு தீவிரவாதிகள் என பட்டியலிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானிலிருந்து இவர்களுக்காக ஆயுதம் கடத்தப்பட்டதா என விசாரணை நடக்கிறது.
    சீன அரசு இரும்புத்திரை பொருளாதார கொள்கைகளைத் தளர்த்தி தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தி வருகிறது. இதை விரும்பாத பழமைவாதிகள் வன்முறையை தூண்டுகின்றனர். இவர்களுக்காக துப்பாக்கிகள் கடத்தப்பட்டனவா என்றும் விசாரணை நடக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு மரண தண்டனைவரை வழங்க சீன அரசியல் சட்டத்தில் வாய்ப்பு உள்ளது.
    --------------------------------------------------------------
    Roger Federer மீண்டும் கலம் இறங்குகிறார்
    US Open Tennis போட்டி எதிர்வரும் திங்கள்கிழமை நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. இப்போட்டி சுமார் இரண்டு வார காலம் வரையில் நடைப்பெறவுள்ளது.
    ஆடவர் பிரிவில், switzerland சேர்ந்தவரும் உலகின் முதல் நிலை வீரருமான Roger Federer இப்போட்டித் தரநிலையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
    அவர் செக். குடியரசின் Ivo Minar-ருடன் முதல் சுற்றில் விளையாடுகிறார் கடந்த முறை கைப்பற்றிய US Open பட்டத்தை, தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளார். Federer இம்முறை பட்டம் வென்றால், அவர் கைப்பற்றும் 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அது அமையும்.

    நன்றி வணக்கம்மலேசியா.காம்

    மனோ.ஜி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    செய்திகளுக்கு மிக்க நன்றி மனோ அண்ணா.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    மிக்க நன்றி மனோ.ஜி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •