குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவித்தொகை
ஆண்டு இறுதியில் கட்டங் கட்டமாக அமைக்கப்படும் சமூக பாலர்பள்ளிகள் மூலமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாலர் பள்ளிக்கான கட்டணமாக மாதம் 100 வெள்ளி உதவித் தொகையாக அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி நேற்று அறிவித்தார்.
மகளிர் உச்சநிலை மாநாடு 2005-ஐ தொடக்கி வைத்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவருடைய உரையை வாசித்தார். நகர்ப்புறங்களில் குறைந்த வருவாய் பெறும் குடும்பங்கள் அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பாலர்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இவர்களின் சுமையைக் குறைப்பதற்காக சமூக சிறுவர் பாலர்பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.
நகர்ப்புறங்களில் மாத வருமானமாக 2,000 வெள்ளி பெறும் குடும்பங்களுக்கும் புறநகர்ப் பகுதிகளில் 1,200 வெள்ளி பெறும் குடும்பங்களுக்கும் அரசாங்கம், பாலர்பள்ளி உதவித் தொகைகளை வழங்கும் என்று பிரதமர் அப்துல்லா தெரிவித்தார்.
--------------------------------------------------------------
எனது சேவை தேவைப்படும் வரை அரசியலில் இருப்பேன்: சாமிவேலு
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற எண்ணம் கொண்டிருந்தாலும்,இந்திய சமூகத்துக்கு தனது சேவை தேவைப்படும் வரை தான் அரசியலில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக ம.இ.கா தேசிய தலைவர் DATO SERI S.SAMYVELLU தெரிவித்தார்.
ஆகையால், எப்பொழுது ஓய்வு பெறுவேன் என்பதை உறுதியிட்டு இப்பொழுது கூற முடியாது என அவர் தெரிவித்தார். நேற்று, ம.இ.கா தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"ம.இ.கா-விலிருந்து யாரையும் ஓரங்கட்ட நான் எப்பொழுதும் நினைத்ததில்லை. கட்சியில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் மரியாதையும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதனை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு பதில் வேறொருவரை அவ்விடத்தில் அமர்த்த கட்டாயம் ஏற்படுகின்றது," என அவர் தெரிவித்தார்.

இதனிடையே,150 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 318 தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைக்குமாறு அண்மையில் கல்வி அமைச்சர் DATO SERI HISHAMUDDIN TUN HUSSEIN கூறிய பரிந்துரை தொடர்பில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துகளைக் கேட்டறிய ஒரு மாநாட்டிற்கு ம.இ.கா ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் கூறினார். அங்கு முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் கல்வி அமைச்சிடம் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

R&D தொடர்பாக ஆராயப்படும் - நஜீப்
அரசு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது R&D தொடர்பான ஆய்வறிக்கை மற்றும் செயல்திட்டங்களை அரசு மீண்டும் ஆராயவிருக்கிறது என துணை பிரதமர் Datuk Seri Najib Tun Razak கூறினார்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் R&D தொடர்பான செயல்திட்டங்களை கண்காணித்து அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.
R&D தொடர்பான செயல்திட்டங்களை செயல்படுத்த பல வரையரைகள் உள்ளதால்,அதன் தொடர்பான ஆராய்ச்சியில் தாமதம் ஏற்படுவதாகவும் அவ்வரையரைகளை நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.


சாலை விபத்தில் ஐந்து நண்பர்கள் பலி
Dungun-இல் உள்ள Jalan Jerangau-Jabor 108.3 கிலோமீட்டர் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 5 நண்பர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியானார்கள்.
அந்நண்பர்கள் ஏறிச் சென்ற கார் ஒரு லாரியுடன் எதிரும் புதிருமாக மோதி கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்தது என பொது அமைதி இலாகா மற்றும் மாநில போக்குவரத்து தலைவர் Farid Mahmud தெரிவித்தார்.

Kuala Terengganu-வை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேளையில் அவர்களின் கார் Dungun சாலையில் லாரியுடன் மோதியதாக அவ்வதிகாரி கூறினார்.

சவுதி அரேபியவுடனான இரு வழி நல்லுறவு மேலும் வலுப்படும் - பிரதமர்
சவுதி அரேபியாவின் ஆளுநரான Abdullah Abdul Aziz Al-Saud அவர்களின் ஆட்சியின் கீழ் சவுதி அரேபியாவுடனான மலேசியாவின் இரு வழி நல்லுறவு மேலும் வலுப்படும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு தனது ஒரு நாள் பயணத்தை பிரதமர் நேற்று முன்தினம் மேற்கொண்டார். Abdullah Abdul Aziz Al-Saud அவர்களின் அரண்மனையின் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Fahd Adul Aziz Al-Saud மன்னரின் இறப்பிற்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை மலேசிய மக்கள் சார்பில் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

பினாங்கு பாலத்தின் toll கட்டம் அதிகரிக்கப்படுமா?
தற்போது அமலில் இருக்கும் பினாங்கு பாலத்தின் toll கட்டத்தை ஏழு ரிங்கிட்டிலிருந்து, எட்டு ரிங்கிட் ஐம்பது சென்னுக்கு அதிகரிக்க PBSB எனப்படும் Penang Bridge Sdn Bhd அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தது.
மேலும், இவ்விவகாரம் குறித்து கடந்த மாதம் அரசாங்கத்திடம் அறிவிக்கப்பட்டதாக PBSB தலைமை இயக்குனர் Datuk Mohd Nor Idrus நேற்று தெரிவித்தார்.
முன்னதாக கையெழுத்திட்டப்படி, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை toll கட்டணத்தை உயர்த்தலாம் எனவும், ஆனால் 1985-ம் ஆண்டு முதல் இன்றுவரை பினாங்கு பாலத்தின் toll கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, அண்மையில் ஏழு ரிங்கிட்டிலிருந்து, ஏழு ரிங்கிட் ஐம்பது சென்னுக்கு விலையேற்றம் கண்ட Ferry கட்டணத்திற்கும், பினாங்கு பாலத்தின் toll கட்டண விண்ணப்பத்திற்கும் தொடர்பு இல்லை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


தங்கத்தை கொள்ளையிட்டு தப்பிய ஆசாமி!
முகமூடி அணிந்த ஓர் ஆடவன் துப்பாக்கி ஏந்திய நிலையில் கோலாலம்பூரில் Pudu Plaza பேரங்காடியின் Nam Kong Jewellery எனும் நகை கடையில் 30,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளான். துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு வெளியேறியபோது அங்குள்ள காவலாளி அவனை தடுத்து தரையில் விழ செய்துள்ளார்.
இருப்பினும், சுதாகரித்து கொண்ட அத்திருடன் அங்கே அவனுக்காக காத்திருந்த தன் நண்பனோடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பேரங்காடியில் பொருத்தப்பட்டிருக்கும் ரகசிய அல்லது கண்காணிப்பு கேமராவின் இயக்கம் சம்பவம் நடந்த 20 நிமிடங்களுக்குமுன் நிறுத்தப்பட்டதால், அத்திருட்டு சம்பவம் கேமராவில் பதியவில்லை என தெரிகிறது.
--------------------------------------------------------------
தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களுக்கு கூட்டணி ஆட்சி தடை : பிரதமர் மன்மோகன்சிங்
கூட்டணி ஆட்சியில் உள்ள இடதுசாரி கட்சிகளின் கடுமையான போக்கால் தொழிலாளர் நல சீர்திருத்தங்களைக் கொண்டு வர இயலவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மார்கசிஸ்ட் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு தொழிலாளர் நலச் சீர்திருத்தங்கள் நன்மை அளிக்கும் என்றால் அவை நாட்டிற்கும் நன்மை தரும் என்பதை இடதுசாரி கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
_______________________________________________________________________
புஷ் தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தங்கியிருந்த இடத்திற்கு மேல் சந்தேகப்படும்படியாக இரண்டு விமானங்கள் பறந்தன. ஆனால், அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டானெல்லியில் உள்ள வடக்கு பாய்ஸ்சிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடகோ மலைப்பகுதியில் உள்ள டமராக் ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு மேலே வான் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென இந்தப் பகுதியின் மேல் இரண்டு விமானங்கள் சந்தேகப்படும்படியாக பறந்தது. இதனால், அதிபருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இரண்டு விமானங்களும் தரையிறக்கப்பட்டு, சட்டப்படி விமானிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

காசா பகுதிக்கு எகிப்து போலீஸ்

பாலஸ்தீனத்தில், காசாமுனை பகுதியில் கடந்த 38 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்த இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்படுகிறது. இப்பகுதிகளில் வசித்த யூத குடும்பங்கள் நேற்று முழுமையாக வெளியேற்றப்பட்டன.
இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காசாமுனை இருந்ததால், எகிப்தில் இருந்து பாலஸ்தீனத்துக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வந்தது. இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்பட்டால், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்காக எகிப்தில் இருந்து ஆயுதங்களை எளிதாக கடத்தும் வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்க, இஸ்ரேல் & எகிப்து அரசுகள் கெய்ரோவில் பேச்சு நடத்தின. இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்பட்டதும், காசாமுனை எல்லையில் எகிப்து போலீஸ் படை நிறுத்தப்பட உள்ளது. எல்லையில் 750 போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த எகிப்து திட்டமிட்டுள்ளது.
இதற்கான, ஒப்பந்தத்தை இஸ்ரேல் & எகிப்து அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். இருநாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதும், ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறது.

நேப்பாளத்தில் அரசு அதிகாரி சுட்டுக்கொலை

நேப்பாளத்தில் பாங்கே மாவட்ட கண்காணிப்பு குழுவில் உயர் அதிகாரியாக இருந்தவர் அஜய்ராஜ் சிங்.
நேப்பாள்கன்ச்சில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர். இதன் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
_________________________________________________________________________
சானியா மிர்சாவுக்கு அர்ஜுனா விருது
2004 ஆண்டிற்கான அர்ஜுனா விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஹாக்கி வீரர் தீபக் தாகூர் உட்பட 14 பேருக்கு இந்த அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோருக்கு ராஜிங்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி அப்துல் கலாம் விருதுகளை வழங்கவிருக்கிறார்.


நன்றி வணக்கம்மலேசியா.காம்


மனோ.ஜி