Results 1 to 2 of 2

Thread: ஆகஸ்ட் 20, சனிக்கிழமை மலேசியாவிலிருந்து உல

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  ஆகஸ்ட் 20, சனிக்கிழமை மலேசியாவிலிருந்து உல

  யூதர்கள் வெளியேற்றம்-மலேசியா ஆதரவு
  பாலஸ்தீனத்திற்கு சொந்தமான இடங்களிலிருந்து யூதர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மலேசியா முழுமையாக ஆதரிக்கின்றது என வெளியுறவு துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தெரிவித்தார்.
  இதுவே பாலஸ்தீனத்திற்கு முழுமையான அமைதியையும் சுபிட்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
  சட்டவிரோதமாக பாலஸ்தீனத்தில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த யூதர்கள் வெளியேற்றப்படுவது சரியான நடவடிக்கையே என அவர் PUTRAJAYA-வில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
  அது மட்டுமின்றி,வெளியேற்றப்படுகின்ற யூதர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதால் இவ்விஷயம் எந்த ஒரு தரப்பினருக்கும் அதிருப்தியை அளித்தால்,அது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் மேலும் கூறினார்.
  --------------------------------------------------------------
  தகுதியில்லாதவர் பதவிக்கு போட்டியிட வேண்டாம்
  ம.இ.கா-க்கு மிக சிறந்த தலைமைத்துவம் மற்றும் செவ்வனே கடமைகளையாற்றும் வல்லமை கொண்ட தலைவர்தான் தேவையே தவிர வெறுமனே பதவி ஆசை உள்ளவர்கள் கட்சி பதவிக்கு போட்டியிட தகுதியில்லாதவர்கள் என ம.இ.கா தேசிய தலைவரும் பொதுப்பணி அமைச்சருமான Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
  நாட்டு மக்களின் நலனையே தன் நலனாக கருதி இரவு பகலாக பாடுபடுபவனே உண்மையான தலைவன் எனவும் அமைச்சர் பதவிக்கான ஊதியத்தை மட்டும் பெற்றுக் கொண்டு சுகபோக வாழ்க்கையை விரும்பும் நபர் கட்சி பதவியில் அமர்ந்தால்,அது சமூகத்தின் அவலம் எனவும் அவர் மேலும் கூறினார்.

  TAPAH-வில் Karnival Merdeka PLUS எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தபோது செய்தியாளர்களிடம் அமைச்சர் அவ்வாறு கூறினார்.
  Toll சாவடி கட்டண குறைப்பின் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்
  Toll சாவடி கட்டண குறைப்பின் கால அவகாசம் இன்னும் நீட்டிக்கப்படலாம் என பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்துள்ளார்.
  TAPAH-வில் Karnival Merdeka PLUS எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தபோது செய்தியாளர்களிடம் அமைச்சர் அவ்வாறு கூறினார்.நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவோரின் கட்டண சுமையை சற்று குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் மேலும் கூறினார்.

  PLUS நிறுவனம் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு செலவை மட்டுமின்றி,நெடுஞ்சாலை விரிவாக்க செலவினையும் ஏற்றுக்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
  காட்டுத்தீயால் மேலும் பிரச்சனை
  Rokan Hilir, Riau-இல் காட்டுத்தீயை அணைக்க சென்ற 12 மலேசிய தீயணைப்பு படை வீரர்கள் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அதில் ஒருவரின் நிலை தீவிரமாக உள்ளதாகவும் சுற்றுச்சூழல் தொடர்பான இலாகாவின் அதிகாரி Khairul Zainal தெரிவித்தார்.
  மலேசியாவில் கடுமையான காற்று தூய்மைக்கேட்டை விளைவித்த SUMATERA தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க SMART குழுவின் 128 பேர் அங்கு சென்றனர்.
  கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று சென்ற அவர்கள் அங்குள்ள மேலும் 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக சேவையாளர்களோடு சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  சிங்கப்பூரிலிருந்தும் 54 பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  அணையப்போகும் காட்டுத்தீ
  Riau,Sumatera-வில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க செயற்கை மழையை ஏற்படுத்துவதற்கான முயற்சி எதிர்வரும் திங்கள் அன்று தொடங்கப்படும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறை அமைச்சர் Datuk Dr Jamaluddin Jarjis தெரிவித்துள்ளார்.
  அதற்காக தனியார் நிறுவன விமானம் மற்றும் அரச மலேசிய ஆகாயப் படையின் விமானம் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் அது தொடர்பாக இந்தோனேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
  Riau,Sumatera-வில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் மலேசியாவில் பல இடங்களில் கடுமையான காற்று தூய்மைக்கேடு ஏற்பட்டு மக்களுக்கு பல பிரச்சனைகளையும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
  --------------------------------------------------------------
  ஆந்திராவில் நக்சலைட்டு தலைவர் வரவரராவ் கைது
  ஆந்திராவில் நக்சலைட்டு தலைவர்களில் ஒருவரான வரவர ராவ் கைது செய்யப்பட்டார். கடந்தவாரம் ஆந்திராவில் எம். எல். ஏ., உள்பட 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
  இதற்கு நக்சலைட்டுகளே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் நக்சலைட்டுகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.
  இந்நலையில் நக்சலைட்டுகளின் தலைவர்களில் ஒருவரான வரவர ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நக்சலைட்டு ஆதரவாளர் பாடகர் கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தின் எதிரே முற்றுகையிட்டார்.
  விமானத்தில் பறவை மோதல் : அவசரமாக தரையிறங்கியது, பயணிகள் உயிர் தப்பினர்
  Jet Airways-க்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் இந்திய நேரப்படி காலை 10.15 மணி அளவில் டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூர் புறப்பட்டது.
  இவ்விமானத்தில் ஒன்பது பணியாளர்கள் உட்பட 101 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் மீது பறவை மோதியதால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார்.
  இதனால் அவர் விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார். விமான நிலையத்தின் அனுமதி கிடைத்தவுடன் காலை 10.30 மணி அளவில் Jet Airways விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
  முன்னதாக, விமானி தரையிறங்க அனுமதி கோரியவுடன் விமான நிலையத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நறுத்தப்பட்டன.
  பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பெங்களூர்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
  --------------------------------------------------------------
  Jamatul Mujahideen தீவிரவாதிகள் அதிரடி கைது : வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்
  வங்கதேசத்தில் தொடர் வெடிகுண்டு பயங்கரம் சம்பந்தமாக 90 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட Jamatul Mujahideen தீவிரவாத அமைப்பே வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணம் என்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
  வெடிகுண்டு தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து முக்கிய எதிர்க் கட்சியான Awami League, இன்று நாடு முழுவதும் ஒருநாள் போராட்டத்தை அறிவித்துள்ளது.
  கடந்த புதன்கிழமை ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. 400க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாயின.
  இதில் இரண்டு பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோ ர் படுகாயம் அடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டுகள் வெடித்த இடங்களில், Jamatul Mujahideen தீவிரவாத அமைப்பின் துண்டுப் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன.

  இந்த அமைப்புக்கு கடந்த பிப்ரவரியில் வங்கதேச அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
  தலிபான் தலைவர் முல்லா ஒமரின் முக்கிய கூட்டாளி பாகிஸ்தானில் கைது
  தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா ஒமரின் முக்கியக் கூட்டாளியான முகமது யாசிர் நேற்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
  தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. முகமது யாசிர் பாகிஸ்தானில் தேடப்பட்டு வரும் குற்றவாளி எனவும் தலிபான் தலைவர் முல்லா ஒமரின் முக்கியக் கூட்டாளி எனவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அப்தாப் கான் ஷெர்பாவோ தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
  மேலும், இவர் பல மாதங்களுக்கு முன்பு தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரப் பிரிவில் பணியாற்றியவர் எனவும் ஆப்கன் பூகாதி தலைவர் அப்துர் ரப் ரசூல் சையாப்ஸ் இட்டிஹாட் இ இஸ்லாமியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் எனவும் அவர் கூறினார்.

  இதையடுத்து முகமது யாசிர், அப்துர் ரப் ரசூல் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய்க்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார் எனவும் அவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார் எனவும் அப்தாப் கான் ஷெர்பாவோ மேலும் தெரிவித்தார்.
  சவுதியில் அதிரடி தாக்குதல் : 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
  சவுதி அரேபியாவில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்தனர். சவுதி போலீசார் அவர்களை பிடிக்க அவ்வீட்டை முற்றுகையிட்டனர். இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  இதன் முலம் கடந்த 2003-ம் ஆண்டு போலீசாரின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 26 பேரில் முன்று பேரைத் தவிர மற்றவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சவுதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாக்குதல் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினார். மேலும், சில தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
  --------------------------------------------------------------
  உலக கோப்பை தகுதி கால்பந்து: ஜப்பான் முதலிடம்
  உலக கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து தொடரில் ஆசிய மண்டலத்தில், ஜப்பான் அணி முதலிடம் பெற்றது. 2006, ஜெர்மனியில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது.
  இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கின்றன. ஆசியாவிலிருந்து ஜப்பான், ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகிய நான்கு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  இதையடுத்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை நிர்ணயிக்கும் போட்டி கடந்த புதன்கிழமை நடந்தது.
  இதில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி 15 புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  நன்றி வணக்கம் மலேசியா.காம்

  மனோ.ஜி

 2. #2
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  விமானத்தில் பறவை மோதல் : அவசரமாக தரையிறங்கியது, பயணிகள் உயிர் தப்பினர்
  Jet Airways-க்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் இந்திய நேரப்படி காலை 10.15 மணி அளவில் டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூர் புறப்பட்டது.
  இவ்விமானத்தில் ஒன்பது பணியாளர்கள் உட்பட 101 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் மீது பறவை மோதியதால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார்.
  இதனால் அவர் விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார். விமான நிலையத்தின் அனுமதி கிடைத்தவுடன் காலை 10.30 மணி அளவில் Jet Airways விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
  முன்னதாக, விமானி தரையிறங்க அனுமதி கோரியவுடன் விமான நிலையத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நறுத்தப்பட்டன.
  பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பெங்களூர்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
  இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •