Results 1 to 3 of 3

Thread: ஆகஸ்ட் 19, வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்த

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  20,005
  Downloads
  91
  Uploads
  0

  ஆகஸ்ட் 19, வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்த

  விவசாய துறையையும் கவனிப்போம்-பிரதமர்
  9-வது மலேசிய திட்டத்தின்கீழ் விவசாயத் துறையில் உணவு உற்பத்தி 7.2 சதவீத வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருகின்றது.விவசாயம் தொடர்பாக அரசு தீர்மானித்திருக்கின்ற ஒவ்வொரு திட்டத்தையும் விவசாய துறையைச் சார்ந்தவர்கள் சரிவர பின்பற்றினால்தான் அத்திட்டம் சாத்தியமாகும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
  பல்வேறு துறைகளில் துரித வளர்ச்சி கண்டுவரும் மலேசியா, விவசாய துறையிலும் மேம்பாடு அடைய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
  மற்ற துறைகளுக்கு ஈடாக விவசாய துறையையும் நாட்டிற்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக மாற்ற முடியும் என அவர் SHAH ALAM-இல் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
  --------------------------------------------------------------
  பெட்ரோல்க்கு மாற்று பொருள் அணுசக்தி மட்டுமே
  பெட்ரோல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 60 டாலர்கள் வரை உயர்ந்திருப்பது நாடளவிலும் உலகளவிலும் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றது.
  ஆதலால்,1970-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அணுசக்தி உருவாக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருவதாக அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையின் துணை அமைச்சர் Datuk Kong Cho Ha தெரிவித்தார்.
  பெட்ரோல்க்கு பதிலாக அணுசக்தியை பயன்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  MINT எனும் அணுசக்தி ஆராய்ச்சி மையம் தவிர்த்து TNB அல்லது தேசிய மின்சக்தி வாரியமும் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்திற்கு பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
  தனிமனித முன்னேற்றமே நாட்டிற்கு முக்கியம்
  தனிமனித நல்லொழுக்க மேம்பாடும், பணியாற்றும் துறைகளில் அடையும் உயர்வான நிலையுமே நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சிறப்பளிக்கும்; சுதந்திர தின சிறப்பை நிலைநாட்டும் என பேராக் Menteri Besar Datuk Seri Tajol Rosli Ghazali தெரிவித்தார்.
  அது தொடர்பாக,மக்களுக்கு கல்வியறிவு,பொது அறிவு மற்றும் பல்வேறு திறன்கள் இருப்பது மிக அவசியம் என அவர் மேலும் கூறினார்.

  மேலும்,2020 தூர நோக்கு இலக்கை வெற்றிகரமாக்க தனிமனிதர்களால் ஆன நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமெனவும் பல துறைகளில் நாடு வளர்ச்சியடைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
  8 மாதங்களில் இத்தணை சம்மன்களா?
  Ops Warta IV திட்டத்தின்வழி நாடளவில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை 161.05 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்து துறை துணை போலீஸ் அதிகாரி ACP O.K. Jalil Othman தெரிவித்தார்.
  சுமார் 160,316 சம்மன்கள் 1.7 மில்லியன் நபர்களுக்கு விதிக்கப்பட்டது.சாலை போக்குவரத்து அதிகாரியிடமோ அல்லது மாவட்ட சாலை போக்குவரத்து போலீஸ் அதிகாரியிடமோ மேல் முறையீடு செய்து சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சம்மன் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.

  கடன் பற்று அட்டை,பணம் அல்லது இணையத்தளம் வழி அவர்கள் தங்களின் சம்மன் தொகையை செலுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
  மக்களின் ஒருமைப்பாடு சுதந்திரத்தின் சின்னம்
  நாட்டின் அனைத்து இன மக்களும் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையுணர்வோடு இருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுபிட்சத்திற்கும் அஸ்திவாரம் ஆகும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
  மதம்,இனம் மற்றும் மொழி ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும் நாட்டு மக்களின் ஒற்றுமையுணர்வே நாடு இதுவரை கண்ட வளர்ச்சிக்கு அடிப்படை எனவும் நாட்டின் சுதந்திர தன கொண்டாட்டத்திற்கு முழு அர்த்தத்தை கொடுக்கிறது எனவும் அவர் மேலும் கூறினார்.

  JOHOR BAHARU-வில் 48-வது சுதந்திர தின விழாவையொட்டி Jalur Gemilang 2005 கருத்தரங்கை தொடக்கி வைத்தபோது பிரதமர் அவ்வாறு கூறினார்.
  எதற்கு மேற்கத்திய கலாச்சாரம்?
  உள்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தை மக்களுக்கு பரப்ப கூடாது என மலேசிய தேசிய பல்கலைக்கழக ( UKM ) பேராசிரியர் Dr Asiah Sarji தெரிவித்துள்ளார்.
  மாறாக உள்நாட்டு கலாச்சாரம்,பண்பாடு மற்றும் நற்பண்புகளை உணர்த்தும் வகையில் தரமான, மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முன்வர வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
  இல்லாவிடில்,நாம் என்றென்றும் மேற்கத்திய கலாச்சாரத்தில்தான் உழன்று கொண்டிருப்போம் எனவும் நமது பாரம்பரிய பண்புகளை குழி தோண்டி புதைக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.
  இருப்பினும்,சில உள்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நம் நாட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கின்றன என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
  --------------------------------------------------------------
  குடியரசுத் தலைவர் மாளிகைக்கு காசோலையை அனுப்பிய இளைஞர்
  சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இந்தியாவின் கடனைத் தீர்ப்பதற்காக தன் பங்குக்கு ரூ. 3000-க்கான காசோலையை அனுப்பினார்.
  இந்த காசோலையை தமிழக அரசுக்கு, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாளிகை அனுப்பி வைத்தது. அக்காசோலையில் ஓர் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தன. அதில், "இந்தியாவின் கடன் சுமைக்கு எனது பங்கை அனுப்பி வைத்துள்ளேன். இதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.
  இந்தக் காசோலை கிடைக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகை, உடனடியாக அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. காசோலையை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பிக் கொடுத்து விடுமாறு குடியரசுத் தலைவர் மாளிகை கேட்டுக்கொண்டது.

  இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இளைஞரை வரவழைத்து அவரிடம் காசோலையை திருப்பிக் கொடுத்தனர்.
  டில்லியில் தமிழக மத்திய அமைச்சர் வீட்டில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி
  புதுடில்லி: டில்லியில் உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீணட்டில் பாதுகாப்பிற்காக இருந்த மத்திய ரிசர்வ் போலீசாரிடையே ஏற்பட்ட மோதலில் சுரேஷ் டோ க்ரா என்ற போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  அவரைச் சுட்டதாக கணேஷ் சுதார் என்ற மற்றொரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கணேஷ் மீதான ஒரு விசாரணையில் அவருக்கு எதிராக சுரேஷ் சாட்சி சொல்ல இருந்தததே தகராறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
  ரயில் கட்டணம் மேலும்குறையும் : லாலு
  ரயில் கட்டணம் மேலும் குறைக்கப்படும் என இந்திய மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
  இன்று மக்களவையில் பேசிய அமைச்சர், ரயில்வே துறையில் சமீபத்தில் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.
  இந்த லாபத்தை மக்களின் நலனுக்காக மேலும் கட்டணங்களை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
  --------------------------------------------------------------
  கொலம்பியா அருகே கப்பல் மூழ்கி 104 பேர் பலி
  தென் அமெரிக்க நாடான கொலம்பியா அருகே பசிபிக் கடலில் Ecuador நாட்டுக் கப்பல் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 104 பேர் நீரில் முழ்கி பலியாயினர்.
  Ecuador நாட்டில் இருந்து கொலம்பியாவில் குடியேற சட்ட விரோதமாக கப்பலில் வந்தபோது இந்த விபத்து நடந்தது. அந்த கப்பல் முழ்கியதில் அதிலிருந்த 113 பேரில் 104 பேர் பலியாகிவிட்டனர்.
  9 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களும் சட்ட விரோதமாக குடியேற முயன்றதற்காக அவர்கள் தண்டனை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த செவ்வாய்கிழமை கொலம்பியா மற்றும் வெனிசுவேலா எல்லையில் விமானம் விபத்துக்குள்ளாகி நூற்றுக்கும் அதிகமானோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  காசாமுனையில் யூத குடும்பங்கள் வெளியேற்றம்!
  பாலஸ்தீனத்தில் Gaza, மேற்கு கரை உள்ளிட்ட பல பகுதிகளை, மத்திய கிழக்குப் போரின் போது 1967-ம் ஆண்டில் இஸ்ரேல் கைப்பற்றியது; இப்பகுதிகளில் இஸ்ரேலியர்களை (யூதர்கள்) குடி அமர்த்தியது.
  தற்போது பாலஸ்தீனம், Gaza-வில் இருந்து வெளியேற மறுத்த யூதர்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வலுக்கட்டாயமாக வெளியேற்ற துவங்கியது.

  காலி செய்யப்பட்டவர்களின் வீடுகள் புல்டோ சர் முலம் இடித்துத் தள்ளப்படுகின்றன. கடந்த 38 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்த யூதர்கள், கண்ணீருடன் குடும்பத்துடன் வெளியேறுகின்றனர்.
  இரவு நேரத்தில் உடனடி சிகிச்சை இல்லாமல் அமெரிக்க நோயாளிகள் அவத
  இரவு நேரத்தில் உடனடி சிகிச்சை இல்லாமல், அமெரிக்க இதய நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
  மாரடைப்பு ஏற்பட்டவுடன் சிகிச்சைக்காக இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செல்லும்போது நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது என ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சாதாரண நேரத்தில், நோயாளிகள் 95 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  பிற நேரங்களில் சராசரியாக 1 மணி 56 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் விதிமுறைகளின்படி, தீவிர சிகிச்சை பிரிவுக்குள் ஒரு நோயாளி நுழைந்த 90 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொள்ள, 10 நோயாளிகளில் நால்வர், இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  தாமதம் காரணமாக நோயாளிகள் இறந்துவிடும் வாய்ப்பு 7 சதவீதம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
  --------------------------------------------------------------
  Denmark அணியிடம் வீழ்ந்த England அணி
  Denmark மற்றும் England அணிகளுக்கிடையே நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் Denmark அணி 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் England அணியை வீழ்த்தியது.
  ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் எந்த ஒரு கோல் எண்ணிக்கையும் இன்றி சமநிலைக்கண்டன.
  ஆட்டத்தின் இரண்டாம் பாதி நேரத்தில், Denmark அணியின் வெற்றி கோல்களை Rommedahl, Tomasson, Gravgaard மற்றும் Larsen புகுத்தினார்கள்.
  இதனிடையே, England அணியின் ஒரே கோலை ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் Rooney புகுத்தினார்.

  நன்றி வணக்கம்மலேசியா.காம்

  மனோ.ஜி

 2. #2
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  மாறாக உள்நாட்டு கலாச்சாரம்,பண்பாடு மற்றும் நற்பண்புகளை உணர்த்தும் வகையில் தரமான, மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முன்வர வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
  இல்லாவிடில்,நாம் என்றென்றும் மேற்கத்திய கலாச்சாரத்தில்தான் உழன்று கொண்டிருப்போம் எனவும் நமது பாரம்பரிய பண்புகளை குழி தோண்டி புதைக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.
  உண்மை தான் அண்ணா. இங்கே அண்ணா பல்கலைக்கழகத்திலும் கூட அப்படி ஒரு விதிமுறை வந்துள்ளது. எனது குழந்தையின் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சினிமா பாடல்கள் எதுவும் இடம்பெறாமலேயே மிகச்சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

  இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,837
  Downloads
  17
  Uploads
  0
  இரவு நேரத்தில் உடனடி சிகிச்சை இல்லாமல் அமெரிக்க நோயாளிகள் அவத
  இரவு நேரத்தில் உடனடி சிகிச்சை இல்லாமல், அமெரிக்க இதய நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
  மாரடைப்பு ஏற்பட்டவுடன் சிகிச்சைக்காக இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செல்லும்போது நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது என ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சாதாரண நேரத்தில், நோயாளிகள் 95 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  பிற நேரங்களில் சராசரியாக 1 மணி 56 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் விதிமுறைகளின்படி, தீவிர சிகிச்சை பிரிவுக்குள் ஒரு நோயாளி நுழைந்த 90 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொள்ள, 10 நோயாளிகளில் நால்வர், இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  தாமதம் காரணமாக நோயாளிகள் இறந்துவிடும் வாய்ப்பு 7 சதவீதம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  அமெரிக்காவிலும் இதே நிலைதானா???
  அன்புடன்
  மன்மதன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •