Results 1 to 2 of 2

Thread: ஆகஸ்ட் 15, திங்கள் கிழமை, மலேசியாவிலிருந்து &

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஆகஸ்ட் 15, திங்கள் கிழமை, மலேசியாவிலிருந்து &

    காற்றின் திசை மறியாதால், மற்ற மாநிலங்களில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது
    கடந்த சனிக்கிழமையை காட்டிலும் நேற்று Manjung, Kangar, Alor Star, Sungai Petani, Langkawi, Pengkalan Chepa மற்றும் Kota Baharu பகுதிகளில் புகைமட்டல காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
    காற்றின் திசை தென்மேற்கில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி செல்வதால் அப்பகுதியில் உள்ள மாநிலங்களில் தற்போது புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    இதனிடையே, கோலாலம்பூர் வட்டரங்களில் நேற்று கனத்த மழை பெய்ததை தொடர்ந்து அப்பகுதிகளில் புகைமண்டல காற்றின் தூய்மைக்கேடு முழுமையாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது
    -----------------------------------------------------------------------
    Koridor Guthrie நெடுஞ்சாலை þýÚ போக்குவாரத்துக்குத் திறந்துவிடப்படும்
    ஷா ஆலம் மற்றும் கிள்ளானுக்குச் செல்லும் Koridor Guthrie எனப்படும் நெடுஞ்சாலை þýÚ நண்பகல் 12.01 மணியளவில் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படவிருக்கிறது. இந்நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்ட உடனே டோ ல் சாவடியில் நெடுஞ்சாலைக்கான பணம் வசூலிக்கப்படும் என பொதுப்பணியமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
    இந்நெடுஞ்சாலையில் கார், வேன், மற்றும் பேருந்துகளுக்கு ஒரு ரிங்கிட் வசூலிக்கப்படுவதாவும், சிறிய லாரிகளுக்கு 2 ரிங்கிட்டும், பெரிய லாரிகளுக்கு 3 ரிங்கிட்டும் மற்றும் வாடகை கார்களுக்கு 50 சென் வசூலிக்கப்படுவதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
    25 கிலோமீட்டார் நீலம் கொண்ட இந்நெடுஞ்சாலையில் Bukit Subang, Elmina மற்றும் Lagong ஆகிய மூன்று டோ ல் சாவடிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். Sungai Siput-இல் மஇகா கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய வேளையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

    இன்று தீயணைப்பு மற்றும் Smart குழுவினர் இந்தோனிசிய செல்கின்றனர்
    இந்தோனிசியவில் தற்போது எரிந்துக் கொண்டிருக்கும் காட்டுத்தீயை அனைக்க இன்று சுமார் நூறு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்களும் இருபத்து ஐந்து Smart குழுவினரும் இந்தோனிசியவிற்கு செல்லவுள்ளனர்.
    மேலும், இவ்விவகாரம் குறித்து இந்தோனிசிய அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அக்குழுவின் சோதனைத்துறை தலைமை அதிகாரி Farhan Sufyan Borhan தெரிவித்தார்.
    இச்சோதனையின் வழி, இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வழுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


    20 காட்டு யானைகளால் விவசாயிகளின் பயிர்கள் நாசம்
    கிளந்தானிலுள்ள Jeli-யில் சுமார் 20 காட்டு யானைகள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்து வருவதாக Ayer Lanas பகுதியின் Mukim மேம்பாட்டு கண்காணிப்புத் தலைவர் Shamsuddin Ismail தெரிவித்தார்.
    அப்பகுதியிலுள்ள நான்கு கிராமங்களில் இந்த காட்டு யானைகள் புகுந்து விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தற்பொழுது அக்காட்டு யானைகள் Sungai Rual-இல் உள்ள விவசாயிகள் நட்டு வைத்திருந்த 20 மரங்களை நாசம் செய்துவிட்டன.
    மரத்திலுள்ள பழங்களை பறித்தி உண்ணும் நோக்கில் இக்காட்டு யானைகள் மரங்களை நாசம் செய்வதாக அவர் கூறினார். சுமார் நூற்றுக்கணக்கான ரப்பர் , செம்பனை மற்றும் வாழை மரங்களை இக்காட்டு யானைகள் நாசம் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
    பிரதமர் துறை அமைச்சரும் Jeli வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Mustapa Mohamed அவர்களிடம் இதன் தொடர்பில் புகார் செய்யப்பட்டுவிட்டதாகவும் மேலும் வன இலாகாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் Shamsuddin தெரிவித்தார்.

    சுமத்ராவில் லேசான நிலநடுக்கம்

    நேற்று அதிகாலை 2.27 மணியளவில் சுமத்ராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
    இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவின் தென்மேற்கு பகுதிகளில் உணரப்பட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    எனினும் இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் மேலும் இந்நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தவில்லை எனவும் வானிலை ஆராய்ச்சி மையத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர்.
    ----------------------------------------------------------------------
    சுதந்திர தின விழா: டில்லியில் பாதுகாப்பு தீவிரம்
    இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றவுள்ளதால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இவ்விழாவில் முக்கிய அரசியல் தலைவர்களும் ராணுவ தளபதிகளும் முக்கிய பிரமுகர்களாக பங்கேற்கவுள்ளனர். விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய ஹெலிகாப்டரில் இருந்தவாறே போலீசார் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    வான் வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதங்களைப் பயன்படுத்தவும், அதிவிரைவு படைகளை நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    -----------------------------------------------------------------------
    நேப்பாளத்தில் 20 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    மாவோ தீவிரவாதிகள் 20 பேர் நேப்பாள பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தென்மேற்கு நவல்பராசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
    முன்னதாக நவல்பராசி மாவட்டத்தில் சோர்மாரா மற்றும் அருண்கோலா பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மாவோ தீவிரவாதிகள் அமைத்திருந்த தடைகளை அகற்றும் நடவடிக்கையின் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பலத்த சண்டை ஏற்பட்டது.
    இதில் ஒரு படை வீரர் கொல்லப்பட்டதுடன் ஐவர் காயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மூண்ட கடும் சண்டையில் 20 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கதிர்காமரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது

    இலங்கை வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் இறுதிசடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் அனைத்துலக நாடுகளிலிருந்து முக்கிய தலைவர்களும் பிரமுகர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
    இந்தியா சார்பில் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    நியூசிலாந்து முன்னாள் பிரதமர் மரணம்

    நியூசிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் லாங் நேற்று முன்தினம் காலமானார். இவர் கடந்த 1984 முதல் 1989 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஆவார்.
    நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் நேற்று முன்தினம் காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    -----------------------------------------------------------------------
    Manchester United 2-0 Everton
    Everton மற்றும் Manchester United அணிகளுக்கிடையே நடைபெற்ற Premiership காற்பந்தாட்டத்தில் Manchester United அணி 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் Everton அணியை வீழ்த்தியது. ஆட்டம் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
    Manchester United அணியின் வெற்றி கோல்களை ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் van Nistelrooy புகுத்தினார். அவ்வணியின் இரண்டாவது கோலை ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் Rooney புகுத்தினார்.

    நன்றி வணக்கம்மலேசியா.காம்


    மனோ.ஜி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சுமத்ராவில் நில நடுக்கம் என்பது வானிலை செய்தி மாதிரி தினச்செய்தியாகி விட்டது கண்டு வேதனையளிக்கிறது.. செய்திகளுக்கு நன்றி மனோ.ஜி
    அன்புடன்
    மன்மதன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •