ஒன்றுமறியா மழலை பருவத்தில்
அம்மா அடித்தால் அழுவேன்..
வலி போய்விடும் சில மணி நேரங்களில்..

கொஞ்சம் விவரமறிந்த விடலை பருவத்தில்..
வாத்தியார் அடிக்கு பயந்து அழுவேன்..
அதுவும் மறைந்து விடும் சில நாட்களில்..

எல்லா விவரமறிந்த கல்லூரி பருவத்தில்
குடும்ப நிலையை அறிந்து அழுவேன்..
அதுவும் நண்பர்களால் மறைந்து விடும்..

இன்று,
அம்மா அடிக்கவில்லை..
வாத்தியாருக்கு வயதாகி விட்டது..
குடும்பத்தை தாங்கும் அளவு சம்பாதிக்கிறேன்..
ஆனாலும் அழுகிறேன்.. என் ஆழ் மனதிற்குள்..
தீராத வலியாக...

யாரடி நீ..
ஏன் எங்கோ இருந்து கொண்டு..
என் நெஞ்சில் அம்பை எய்கிறாய்...

எந்த நண்பனாலும் இதை
சரி செய்ய முடியவில்லையே ஏன்..

காதல் தோற்றால் மனதினில் வலி..
காதல் கிடைக்கா விட்டாலும் வலி..
சரி.. எனக்கேன் இந்த வலி..
நான் என்ன தப்பு செய்தேன்..

நீதான் இல்லையென்றும் சொல்லவில்லை..
ஆம் என்றும் சொல்லவில்லை...

நெருங்கிய நட்பை காட்டும் நண்பர்களிடம் கூட
பங்கிடாத விஷயங்களை
நான் உன்னிடம் கூறீனேனெ.. ஏன்..

ஒருவேளை வாழ்நாள் முழுவதும்
உன்கூட இருப்பேன் என்றா..

ஒன்று மட்டும் கேட்க ஆசை..

கடலளவு நான் காட்டும் அன்பில்..
துளியளவு தூவி விட்டால் குறைந்து விடுவாயா..

இல்லை.. உன் தண்ணிரே வேண்டாம்..
வெறும் கண்ணிருடன் போ என்கிறாயா???

இனியும் தாமதிக்க மாட்டேன்..
நான் நேசிக்கும் கலாமின் மாணவனாக
இருந்து கொண்டு
என் வாழ்க்கையை வீணடிக்க மாட்டேன்..

போதுமடி உன் பாச விளையாட்டு..
என்னிடம் அழுக இன்னும் கண்ணீர் இல்லை..

நீயே வந்து உருகினாலும்..
கலாம் மாணவனாக இருப்பேனெ தவிர
காலம் மறந்தவனாக இருக்க மாட்டேன்..

ஒரு நாள் வரும்..
என் கடந்த கால அன்பை புரிந்து கொள்ள..
அப்படி இல்லையென்றால்
நான் கொண்ட உண்மையான அன்பு
உன்னை காப்பாற்றியது என்று
நினைத்து கொள்...

இவன்
ஜீவா...