Results 1 to 3 of 3

Thread: ஆகஸ்ட் 14, ஞயிற்றுக்கிழமை மலேசியவிலிருந்த

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஆகஸ்ட் 14, ஞயிற்றுக்கிழமை மலேசியவிலிருந்த

    போர்ட் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் ரத்து
    போர்ட் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் புகைமட்டலக் காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு 500-க்கு மேல் இருந்ததால் கடந்த வியாழக்கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
    இருப்பினும், தற்போது காற்றின் தூய்மைக்கேடு சீரடைந்து வருவதாலும், தூய்மைக்கேட்டின் அளவு 500-க்கும் குறைவாக உள்ளதாலும் அவசரநிலை பிரகடனம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.
    மேலும் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-யில் கட்டளையின்படி அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டு என அம்மன்றத்தின் செயலாளர் Datuk Ab Hamid Othman தெரிவித்தார்.
    இதனிடையே, புகைமட்டலக் காற்றின் தூய்மைக்கேடு முழுமையாக சீரடையும் வரையில், பொதுமக்கள் மூக்கு கவசத்தை அணிய வேண்டும் எனவும் குப்பைகளை திறந்த வெளியில் எறிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
    ---------------------------------------------------------------------
    AP பெர்மிட் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியா?

    AP பெர்மிட் விவகாரம் தொடர்பாக இனி தாம் எவ்வித கருத்தையோ கூறப்போவதில்லை என அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz உறுதியாக தெரிவித்துள்ளார்.
    அமைச்சரவையில் தாம் ஏற்கனவே அது தொடர்பான அறிக்கை மற்றும் விபரங்களை சமர்ப்பித்தாகிவிட்டது எனவும் தாம் இனி செய்தியாளர்களிடம் கூற எதுவும் இல்லை என அவர் கூறினார். கோலாலம்பூரில் நேற்று UMNO மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைப்பெற்ற `Sentuhan Kasih' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
    AP பெர்மிட் விவகாரம் தொடர்பாக இனி Rafidah Aziz எவ்வித கருத்தையும் வெளியிட கூடாது என அமைச்சரவை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    குற்றச்செயல்கள் புரியும் இடங்களையும் அரசாங்கம் எப்பொழுதும் நோட்டமிட்டு வரும்
    அந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்ட குற்றச்சியல்களை அரசாங்கம் எப்பொழுதும் கண்கானித்து வரும் வேளையில், அவர்கள் குற்றச்செயல்கள் புரியும் இடங்களையும் நோட்டமிட்டு வருவதாக உள்நாட்டு விவகார அமைச்சர் Datuk Seri Azmi Khalid தெரிவித்தார்.
    மேலும், அவ்விடங்களின் முழு விவரங்களை அரசாங்கம் வைத்திருந்த போதிலும், இன்னும் இதுபோன்று அதிகமான இடங்கள் இருப்பதாகவும், அதனை அரசாங்கம் கண்டுப்பிடிக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    இதனையடுத்து, குற்றச்செயல்களை புரியும் அந்நிய நாட்டினர்களின் மேல் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க, ஒரு போதும் தயங்காது என அவர் கருத்து தெரிவித்தார்.
    இதனிடையே, அந்நிய நாட்டினர்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் சுமார் 9 ஆயிரம் அந்நிய நாட்டினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


    சமூக தலைவன் சிறப்பாக தொண்டு செய்ய குடும்ப நலன் அவசியம்
    தேசிய முன்னனி கட்சி உறுப்பினர்களின் துணைவியார்கள் தத்தம் கணவர்மார்கள் செய்கின்ற சேவைகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட வேண்டுமென பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
    மக்கள் பிரதிநிதிகளாக விளங்கும் தேசிய முன்னனி கட்சி உறுப்பினர்கள் சமூக ரீதீயாகவும் குடும்ப ரீதியாகவும் நன்முறையில் இருந்தால்,மக்களின் ஏளனப்பேச்சிற்கும் பார்வைக்கும் இலக்காக வேண்டியிருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
    KANGAR-இல் நடைப்பெற்ற 2005-இன் நாடளவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் துணைவியார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.குடும்பம் நன்முறையில் இருந்தால்தான்,ஒரு தலைவன் சமூகத்திற்கு சிறப்பாக தொண்டு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    வயல்களை எரிக்கும் நடவடிக்கை காற்று தூய்மைக்கேட்டை மேலும் மோசமாக்குகிறது

    வட Perai-யில் விவசாயிகள் வயல்களை எரிக்கும் நடவடிக்கை தற்போது நாடளவில் ஏற்பட்டிருக்கின்ற காற்று தூய்மைக்கேட்டை மேலும் மோசமாக்குகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.வயல் நிலங்களை மேலும் வளமாக்க விவசாயிகள் அந்நிலங்களை எரிக்கின்றனர்.
    அந்நடவடிக்கை நில வளத்தை ஏற்படுத்தினாலும் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் காற்று தூய்மைக்கேட்டை மேலும் மோசமாக்குகின்றது தெரிய வந்துள்ளது.
    இருப்பினும்,இந்நடவடிக்கை ஒன்றுதான் நில வளத்திற்காக செய்யப்பட வேண்டும் என்றில்லை.காற்று தூய்மைக்கேட்டுக்கு வழிவகுக்காத இதர வழிகளும் உள்ளன என Sungai Dua எனும் மாநில சட்டமன்ற உறுப்பினர் Datuk Jasmin Mohamed தெரிவித்தார்.ஆகவே,விவசாயிகள் JPS அல்லது கால்வாய் மற்றும் நீர் தொடர்பான இலாகாவோடு கலந்துரையாடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

    காற்று தூய்மைக்கேடு வடக்கு நோக்கி செல்கிறது

    தென்மேற்கு பருவக் காற்றில் ஏற்பட்ட மாறுதலினால்,கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்டிருந்த மோசமான காற்று தூய்மைக்கேடு வெகுவாக குறைந்து தற்போது வடக்கு மாநிலங்களில் காற்று தூய்மைக்கேடு பரவி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    நேற்றுவரை,Seri Manjung-கில் 141 மற்றும் Perak-இல் 104 என காற்று தூய்மைக்கேடு குறியீடின் அளவு காட்டுகின்றது.அது மட்டுமின்றி,Prai, Langkawi, Bayan Lepas, Butterworth, Chuping, Kota Baharu, Sitiawan dan Lubuk Merbau போன்ற பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    தற்போது Kalimantan-இல் 43 இடங்களிலும்,தீபகற்ப மலேசியாவில் 14 இடங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    -----------------------------------------------------------------------
    டில்லியில் தொழிற்சாலையில் தீ
    கிழக்கு டில்லி பட்பட்கஞ்ச் பகுதியில் உள்ள தொழிற்சாலை நிறைந்த பகுதியில் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அதில் நேற்று அதிகாலை 2.20 மணிக்கு திடீரென தீ பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.
    25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் கடும் முயற்சி செய்து தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் இதுவரை யாரும் காயமடைந்ததாக உடனடியாக தகவல் தெரியவில்லை.
    -----------------------------------------------------------------------
    அமைச்சர் கொலை எதிரொலி : இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
    நேற்று இரவு கொழும்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் அவர் வீட்டருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இன்று முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார்.
    இதை அதிபரின் செய்தி தொடர்பாளர் எரிக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போலீசார் தற்பொழுது இலங்கை முழுவதும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர் கொலை எதிரொலி : இலங்கையில் இரண்டு பேர் கைது

    நேற்று இரவு கொழும்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் அவர் வீட்டருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலையை அடுத்து இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் நிலவுவதாக அஞ்சப்படுகிறது.

    இந்தியாவுடன் வர்த்தக உறவு இல்லை

    காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத வரை, இந்தியாவுடன் தாராள வர்த்தக உறவை பாகிஸ்தான் வைத்துக் கொள்ளாது என்று பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜிஸ் கூறினார்.
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளில் ஏற்படும் முன்னேற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவுடன் தாராள வர்த்தகமும், முதலீடும் வளர வேண்டும். குறிப்பாக, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத வரை, இந்தியாவுடன் தாராள வர்த்தகத்தை பாகிஸ்தான் வைத்துக் கொள்ளாது.
    காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
    -----------------------------------------------------------------------

    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மன்ஷேர் சிங் 19-வது இடம் பெற்றார்.
    பிரேசிலில் உள்ள அமெரிக்கா நகரில் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. "டபிள் டிராப்' பிரிவுப் போட்டியில் நமது வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இந்தியாவின் நட்சத்திர வீரரான மன்ஷேர் சிங் துவக்கத்தில் அபாரமாக செயல்பட்டார்.
    முதல் மூன்று சுற்றில் முறையே 23, 24, 24 புள்ளிகள் பெற்ற இவர் கடைசி இரண்டு சுற்றில் 21 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 117 புள்ளிகள் பெற்ற இவருக்கு 19-வது இடமே கிடைத்தது.
    மற்ற இந்திய வீரர்களான, ஜராவர் சிங் 116 புள்ளிகள் பெற்று 21-வது இடமும், அன்வர் சுல்தான் 109 புள்ளிகளுடன் 36-வது இடமும் பெற்றனர். ஒலிம்பிக் சாம்பியனான ரஷ்யாவின் அலெக்சி அலிபோவ் 123 புள்ளிகள் பெற்று தங்கம் கைப்பற்றினார்.

    நன்றி வணக்கம்மலேசியா.காம்

    மனோ.ஜி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    செய்திகளுக்கு நன்றி மனோ.ஜி ...
    அன்புடன்
    மன்மதன்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    இந்தியாவின் கடல் சாராத அனைத்து நிலப்பகுதிகளிலும் பிரச்சினை...
    பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இலங்கை என அனைத்தையும் சமாளிக்கக் கூட்டு முயற்சி ஒன்றே பலனளிக்கும்.
    செய்திகளுக்கு மிக்க நன்றி, மனோ அண்ணா
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •