Results 1 to 1 of 1

Thread: ஆகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்த&

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஆகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை மலேசியாவிலிருந்த&

    அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
    கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்ட காற்றுத்தூய்மைக்கேடு மீதான குறியீட்டின் அளவு 510-ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்நிலை உடலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுகாதார அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.
    இதனைத் தொடர்ந்து,Kuala Selangor மற்றும் கிள்ளான் துறைமுக பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிள்ளான் துறைமுகத்தில் 529, Kuala Selangor-இல் 531 என காற்றுத்தூய்மைக்கேடு மீதான குறியீட்டின் அளவு உள்ளது என தகவல்கள் தெரிவித்தன.
    அடுத்தக்கட்ட நடவடிக்கை Datuk Seri Najib Tun Razak விடுக்கும் அறிவிப்பை பொருத்தே எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    -----------------------------------------------------------------------
    சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் மூட உத்தரவு
    நாட்டில் தற்போது புகைமூட்டம் மேலும் மோசமடைந்து வருவதை தொடர்ந்து,சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இவ்வார ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
    தற்போது புகைமூட்ட குறியீட்டின் அளவு 500-ஐ மிஞ்சிவிட்டதால் இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டது என சிலாங்கூர் Menteri Besar, Datuk Seri Dr Mohamad Khir Toyo தெரிவித்தார். இதனிடையே, மக்கள் வெளியில் செல்லும் பொழுது மூக்கு கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


    மலேசிய எந்த நேரத்திலும் இந்தோனிசியாவிற்கு உதவ உள்ளது
    தற்போது அதிகரித்து வரும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த மலேசியா எந்த நேரத்திலும் இந்தோனிசியாவிற்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்துள்ளார்.
    இவ்விவகாரம் குறித்து அவர் இந்தோனிசிய பிரதமர் Susilo Bambang Yudhoyono-விடம் அறிவித்துள்ளார். உதவிகள் தேவைப்பட்டால், மலேசிய தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்களையும் SMART உறுப்பினர்களையும் அங்கு அனுப்பவுள்ளதாக Datuk Seri Abdullah Ahmad Badawi மேலும் தெரிவித்தார்.
    இதனிடையே, நிலைமை மேலும் மோசம் அடைந்தால் அரசாங்கம் செயற்கை மழை அல்லது அவசரநிலையை பிரகடனப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    மக்கள் வாழ்க்கையில் மூன்று முக்கிய அம்சங்களாக திகழ வேண்டும்
    மக்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சமாக திகழும் தகவல் தொடர்பு துறை தகவல் சாதனமாகவும், போதனை அம்சமாகவும் மற்றும் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்க வேண்டும் என துணைப்பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
    நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் அல்லது நிறுவனங்கள் இம்மூன்று அம்சங்களையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டுமென அவர் மேலும் கூறினார்.
    கோலாலம்பூரில் Anugerah Media Pertahanan 2004 எனும் தகவல் தொடர்பு துறை தொடர்பான விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    அது தவிர்த்து, மக்களுக்கு மிக சிறப்பான சேவையை வழங்கிவரும் நாடளவில் உள்ள அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.


    வேலையில்லா பட்டாதாரிகளின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள்
    தேசிய வாணிக நடவடிக்கை கழகத்தின் மூலம் அரசாங்கம், வாணிக திட்ட பிரிவு, பிரதமர் துறை அமைச்சு, ஆகிய இவை அனைத்தும் ஒருங்கிணைந்து பட்டதாரிகளுக்கிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த முக்கிய விவரங்களைச் சேகரிக்கவிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் Datuk Mustapa Mohamed தெரிவித்தார்.
    வேலை கிடைக்காமல் திண்டாடும் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கு ஏன் வேலை கிடைக்காமல் இருக்கிறது என்பது குறித்த தகவல்களையும் அடுத்த மாதம் சேகரிக்க ஆரம்பிக்கவிருப்பதாக அவர் கூறினார்.
    நாட்டில் வேலையில்லா பட்டாதாரிகளின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

    9-வது மலேசியத் திட்ட வரைவு நவம்பரில் நிறைவு பெறும்

    இவ்வருடம் நவம்பர் மாதத்திற்குள் 9-வது மலேசியத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்ட வரைவுகள் நிறைவு செய்து முடிக்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் Datuk Mustapa Mohamed உறுதியளித்துள்ளார்.
    இதன் தொடர்பில் எதிர்வரும் 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அவர் கூறினார். 9-வது மலேசியத் திட்டம் பொது மக்களிடையே நல்ல எதிர்பார்ப்புடன் இருப்பதால் அதனை செயல்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
    பொது மக்களின் முக்கியமான தேவைகளுக்கு அரசாங்கம் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுக்கும் என அவர் மேலும் கூறினார். இந்த 9-வது மலேசியத் திட்டம் வசதி குறைந்த மக்களின் தரத்தை உயர்த்துவதற்கும் திட்டங்களை மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
    -----------------------------------------------------------------------
    மும்பையில் டிங்கி காய்ச்சல் : 10 பேர் பலி
    மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. வெள்ளத்தில் மூழ்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகிவிட்டனர்.
    கால்நடை பிராணிகளும் வெள்ளத்தில் மூழ்கி அங்காங்கே இறந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட சுகாதார கேட்டினால், தற்பொழுது அங்கு டிங்கி காய்ச்சல் பரவி வருகிறது.
    இதுவரையில் இந்த டிங்கி காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. இந்த டிங்கி காய்ச்சலைக் கட்டுபடுத்த அப்பகுதியில் சுகாதார அமைச்சு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    ----------------------------------------------------------------------
    பின்லாந்து நாட்டு ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியது : 14 பேர் பலி
    பின்லாந்து நாட்டு ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியதில் 14 பேர் பலியாகினர். 12 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் உட்பட 14 பேரை ஏற்றிக்கொண்டு பின்லாந்து நாட்டு ஹெல்சிங்கில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கடலில் வீழ்ந்து மூழ்கியதாக கூறப்படுகிறது.
    இதைனையடுத்து அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுளளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    எனினும் மீட்பு பணியினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் கடலில் வீழ்ந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


    டிஸ்கவரி விண்கலத்தில் விஞ்ஞானிகள் குழு தீவிர ஆய்வு
    கடந்த ஜூன் மாதம் 26-ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட டிஸ்கவரி விண்கலம் 9-ஆம் திகதி வெற்றிகரமாக தரையிறங்கியது.
    விண்ணில் செலுத்திய போது டிஸ்கவரி விண்கலத்தின் எரி பொருள் பகுதியில் இருந்து கீழே விழுந்த பொருள் எப்படி விழுந்தது என்பது குறித்து இன்ஜினியர்கள் குழு தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    எனினும் டிஸ்கவரி விண்கலம் பாதுகாப்பாக தரையில் வந்து இறங்கியதைத் தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


    காஷ்மீர் பிரச்சனை நீடிப்பதை ஏற்க முடியாது : பாகிஸ்தான் பிரதமர்
    காஷ்மீர் பிரச்சனை தற்போதுள்ள நிலையில் அப்படியே நீடிப்பதை ஏற்க இயலாது என பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸ் கூறியுள்ளார். ஜப்பான் சென்றுள்ள அவர் தோக்கியோவில் உள்ள சர்வதேச விவகாரங்கள் ஆராய்ச்சிக் ழகத்தில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
    காஷ்மீர் தலைவர்கள், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று தரப்பும் சேர்ந்து காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முயல வேண்டும். ஆனால் இதுவரையில் இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து உட்கார்ந்து பேசும் நிலை ஏற்படாமல் உள்ளது.
    எனினும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுகள் சரியான திசையில் முன்னேறி வருகின்றன. காஷ்மீர் உட்பட அனைத்து முக்கியப் பிரச்சனைகளிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உருவாக்குவதில் பாகிஸ்தானும் இந்தியாவும் ஈடுபட்டு வருகின்றன என்று சௌகத் அஜீஸ் கூறியுள்ளார்.
    ----------------------------------------------------------------------
    CSKA Sofia 1 - Liverpool 3
    CSKA Sofia மற்றும் Liverpool அணிகளுக்கிடையே நடைபெற்ற காற்பந்தாட்டத்தில் Liverpool அணி 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் CSKA Sofia அணியை வீழ்த்தியது. Liverpool அணியின் முதல் கோலை Cisse ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் புகுத்தினார்.
    அவ்வணியின் இரண்டாவது மற்றும் கோல்கலை ஆட்டத்தின் 31-வது நிமிடத்திலும் 58-வது நிமிடத்திலும் Morientes புகுத்தினார்.
    இதனிடையே, CSKA Sofia அணியின் ஒரே கோலை ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் Velizar Dimitrov புகுத்தினார்.



    நன்றி வணக்கம்மலேசிய.காம்


    மனோ.ஜி
    Last edited by Mano.G.; 12-08-2005 at 12:56 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •