Results 1 to 2 of 2

Thread: ஆகஸ்ட் 7, ஞாயிற்றுக்கிழமை மலேசிய செய்திகள

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  Post ஆகஸ்ட் 7, ஞாயிற்றுக்கிழமை மலேசிய செய்திகள

  முக்கிய செய்திகள்.
  நேற்று நடைபெற்ற தமிழ்மன்ற மணிகள் ஒன்றுகூடும் விழா
  விபரங்கள் இன்னமும் நமக்கு கிடைக்காத்தால் எந்த வித விபரங்களும் தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிரோம்.


  நேற்று ஹிரோஷிமா நினைவு தினம்
  இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய 60-ம் ஆண்டு தினம் நேற்று கடைப்பிடிக்கப்படுகிறது.
  இதையொட்டி ஜப்பானில் குண்டு வீச்சில் பலியானர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானை பணிய வைப்பதற்காக அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது முதன் முதலாக அணுகுண்டுகளை வீசியது.
  1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதில் 140,000 பேர் இறந்தனர்.
  உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு 3 நாட்கள் கழித்து நாகசாகி நகரிலும் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. இதில் 80,000 பேர் இறந்தனர். இந்த இரு குண்டு வீச்சிலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர்.
  அணுக்கதிர் வீச்சு ஜப்பானிய சந்ததியினரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குண்டுவீச்சில் இருந்து தப்பிய 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை ஜப்பானியர்கள் "ஹிபாகுஷா' என்று அழைக்கின்றனர்.
  இந்நிலையில் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டதின் 60-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இங்கு இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் சுமார் 55,000த்திற்கும் மேற்பட்டோ ர் கூடி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் இன்று காலை 8.15 மணியளவில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜப்பானிய பிரதமர் ஜுனிச்சிரோ கொய்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  --------------------------------------------------------------
  தனியார் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசனை - டத்தோஸ்ரீ நஜீப்
  தனியார் உயர்கல்வி நிலையங்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலும், அந்நிலையங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும், நாட்டில் இருக்கும் தனியார் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak ஆலோசனை தெரிவித்தார்.
  நாட்டில் தற்போது அதிகமான தனியார் உயர்கல்வி நிலையங்கள் இருப்பதாகவும், ஆனால் குறிப்பிட்ட சில உயர்கல்வி நிலையங்களுக்கு மட்டுமே முழு ஆதரவு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.
  அதிகம் ஆதரவு இல்லாத தனியார் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், நன்கு இயங்கி வரும் மற்ற நிலையங்களின் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என அவர் கருத்து தெரிவித்தார்.
  மலாக்காவில் Multimedia பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆறாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மலாக்கா முதலமைச்சர் Datuk Seri Mohd Ali Rustam மற்றும் முன்னால் பிரதமர் Tun Dr Mahathir Mohamad-ம் கலந்துக் கொண்டனர்.


  ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் - நேர்மையான முறையில் செயல்படுத்தப்படுகிறது
  ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடையேயும் கல்வி அமைச்சு நேர்மையாக நடந்துக் கொள்கிறது என அவ்வமைச்சின் செயலாளர் Tan Sri Ambrin Buang தெரிவித்தார்.
  அரசு தரப்பினர் உதவியோடு தகுதியற்ற சில ஆசிரியர்களுக்கு உடனே பணியிட மாற்றம் கிடைத்துள்ளது என தற்போது நிலவிவரும் குற்றச்சாட்டை மறுத்த அவர்,தேவை மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
  மாநில கல்வி இலாகாவினால் நன்கு ஆராய்ந்த பின்னரே ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் அமல்படுத்தப்படுகிறது என KOTA BAHARU-வில் நேற்று நடைப்பெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.

  2020 தூரநோக்கு திட்டத்தை வெற்றிகரமாக்குவது PIN-னின் குறிக்கோளாகும்
  2020 தூரநோக்கு திட்டத்தை வெற்றிகரமாக்குதல் மற்றும் மலேசிய மக்களை நன்னெறிப் பண்புகள் நிறைந்தவர்களாகக்குதல் ஆகியவையே Pelan Integriti Nasional (PIN) அல்லது 'தேசிய அளவிலான நேர்மை திட்டம்' என்பதன் குறிக்கோளாகும்.
  அது மட்டுமின்றி,பல்வேறு துறைகளில் பல வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவது,அத்துறைகளில் பணிபுரிபவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்து செயலாற்றுதல் ஆகியவற்றிற்கும் PIN தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
  பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் முழு கடமையுணர்ச்சியோடும் ஒற்றுமையுணர்வோடும் செயலாற்றவும் PIN ஆக்ககரமான பல செயல்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  நாட்டின் சுபிட்சம் மக்கள் கையில்...

  அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் நேர்மையான முறையில் அமல்படுத்தப்படுகின்ற ஆட்சி முறையே ஒரு நாட்டின் சுபிட்சத்துக்கும் அமைதிக்கும் மேம்பாட்டிற்கும் வழிகோலாக அமையுமென பேராக் சுல்தான் Azlan Shah தெரிவித்துள்ளார்.
  மனிதநேய அடிப்படையிலும் உதவும் நோக்கிலும் பல பிரச்னைகள் கையாளப்பட்டு வந்தாலும்,சட்ட விதிகளை எவ்விதத்திலும் மீறாமல் அப்பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
  மக்களின் நன்மதிப்பிற்கு இலக்காகியிருக்கும்,நேர்மையான சட்டதிட்டங்களைக் கொண்டுள்ள பொது சேவை துறை தொடர்ந்து தனது நற்சேவையை வழங்கி வருமென அவர் தெரிவித்தார். நேற்று, PENGKALAN HULU-வில் Imigresen Bukit Berapit அரங்கத்தைத் தொடக்கிவைத்தபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


  RTM கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்ப அதிகமான நிகழ்ச்சிகளைப் படைக்க வேண்டும்
  கிராமப்புறங்களில் குறிப்பாக சபா மாநிலத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் மற்றும் விவரங்களை எடுத்துரைக்கும் வகையில் RTM எனப்படும் மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் அதிக நிகழ்ச்சிகளைப் படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களைப் பற்றிய விவரங்களைக் கிராமப்புற மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
  எனவே, RTM அவர்களுக்கேற்ப பல நிகழ்ச்சிகளைப் படைக்க வேண்டும் என விவசாயம் மற்றும் உணவு சார்ந்த தொழில் துறை அமைச்சர் Datuk Abdul Rahim Ismail தெரிவித்தார். RTM-இன் சேவைகளை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.


  பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
  Skudai ஜொகூரில் அமைந்துள்ள UTM பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வுக் கூட்டத்தை நிர்மானிப்பதற்கு மத்திய அரசாங்கம் 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  இந்நிதி ஒதுக்கீட்டை அந்த ஆய்வுக் கூடத்தில் பல அறிவியல் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்த முடியும் என முதலமைச்சர் Datuk Abdul Ghani Othman தெரிவித்தார்.
  அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்கள் மேலும் சிறந்து விளங்குவதற்கு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். மூவாரில் போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கைத் தொடக்கி வைத்த அமைச்சர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
  --------------------------------------------------------------
  கர்நாடகத்தில் கனத்த மழை : 16 பேர் பலி
  கர்நாடகா பெல்காம் மாவட்டத்தில் பெய்த கனத்த மழை மற்றும் வெள்ளத்திற்கு 16 பேர் பலியாகியுள்ளனர். இதுவரையில் ரூ. 129 கோடி அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
  வெள்ளத்திலிருந்து மக்களை காப்பதற்காகவும் வெள்ளத்தில் மூழ்கிய இடங்களிலிருந்து மக்களை
  பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் 56 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  இதுவரை 52 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் எட்டாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  ------------------------------------------------------------
  தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பணியமாட்டோம் : அதிபர் புஷ் திட்டவட்டம்
  Al-Qaeda தீவிரவாதத் தலைவர் அய்மன் அல்&ஜாவாரியின் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை இப்போதைக்கு திரும்ப வாபஸ் பெறமாட்டோ ம் என அமெரிக்க அதிபர் புஷ் தெளிவுபட கூறியுள்ளார்.
  Al-Qaeda அமைப்பின் முக்கியத் தலைவர் அய்மன் அல்&ஜாவாக்ரி லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய டேப் ஒன்று அல்&ஜசீரா "டிவி' யில் ஒளிபரப்பானது.
  அந்த டேப்பில், லண்டனில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பின்னர் பிரிட்டன் பிரதமர் டோ னி பிளேர் எடுத்துள்ள கொள்கை டதியான முடிவு, லண்டனை மேலும் அழிவுக்குள்ளாக்கும் என எச்சரித்திருந்தார். ஈராக்கியர்கள் சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர்.
  ஆனால், அய்மன் அல்-ஜாவாக்ரி போன்றவர்கள் அவர்களை சுதந்திரமாக வாழவிட மாட்டார்கள். ஈராக்கியர்கள் தங்களை காத்துக் கொள்ளத் தேவையான பயிற்சியை எடுத்து முடிக்கும் வரை அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறாது என அதிபர் புஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


  லஷ்கர் தீவிரவாதிகளுக்கு உதவிய அமெரிக்கர் கைது
  பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான லஷ்கர்&இ&தோய்பாவுக்கு உதவி செய்ததாக அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி பாகிஸ்தானில் நடந்த தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களில் அவர்கள்
  பங்கேற்றதை உறுதிப்படுத்தினர்.

  அவனது தொலைபேசி குறிப்பு புத்தகத்தில் முக்கிய தீவிரவாதிகளின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை போலீசார் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் ஆயுத பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி பெற்றதை தாரிக் ஷா என்ற மற்றொரு தீவிரவாதியும் ஒப்புக்கொண்டான்.


  கும்பல் தாக்கி போலீஸ்காரர் கொலை
  இலங்கையில் போலீஸ் எஸ்.பி. ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. கொழும்பில் உள்ள ஓர் முடிதிருத்துநர் கடைக்கு மூன்று பேர் வந்தனர்.
  முடிவெட்டிக் கொண்டிருந்த போது அவர்கள் வைத்திருந்த ஒரு துப்பாக்கி திடீரென வெடித்ததில் முடிதிருத்துநர் உயிரிழந்தார்.
  இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாளிக்க சென்ற போலீஸ் எஸ்.பியை அக்கும்பல் அவ்விடத்திலேயே அடித்துக் கொன்றது.
  --------------------------------------------------------------
  Formula 1 போட்டிகளை தவிர வேறு போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் இல்லை-நரேன் கார்த்திகேயன்
  Motor Sports பந்தயங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது Formula 1 Car Race. இதற்குப் போட்டியாக A1 கார் ரேஸ் பந்தயம் விரைவில் அறிமுகமாகிறது.
  இந்தியச் சாம்பியன் நரேன் கார்த்திகேயனை A1 போட்டிகளில் பங்கேற்கச் செய்ய தற்போது முயற்சிகள் நடக்கின்றன.
  ஆனால், Formula 1 போட்டிகளை தவிர வேறு போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என நரேன் கார்த்திகேயனை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

  நன்றி வணக்கம்மலேசியா.காம்


  மனோ.ஜி

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  5,036
  Downloads
  5
  Uploads
  0
  செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா...
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •