Results 1 to 3 of 3

Thread: ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்.

    Crimea பல்கலைக்கழகம் குறிந்து, உக்ரேன் அரசாங்கத்திடம் விவாதிக்கப்படவுள்ளது
    Crimea பல்கலைக்கழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களை, அப்பல்கலைக்கழகம் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டும் எனவும், ஏஜண்டு மூலம் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ம.இ.கா தேசிய தலைவர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.
    இவ்விவகாரம் குறித்து, அவர் உக்ரேன் அரசாங்கத்திடம் தெரிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
    உக்ரேனில் இருக்கும் மலேசிய ஏஜண்டுகள் உட்பட பல ஏஜண்டுகள், அந்நாட்டில் பயிலும் மாணவர்களை பயம்காட்டி வருவதாகவும், அனைத்து வேலைகளுக்கும் அம்மாணவர்கள் ஏஜண்டுகளையே தொடர்பு கொள்ளுவதாக அவர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
    அதிகமான மாணவர்கள் ஏஜண்டுகளை கண்டு பயப்படுவதாகவும், Visa மற்றும் இதர கட்டணங்களுக்கு வரிப்பணமாக 30,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரையில் ஏஜண்டுகளுக்குத் தருவதாகவும் அவர் அக்கூட்டத்தில் தெரிவித்தார்.
    --------------------------------------------------------------

    சரவாக்கில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகள் தடை செய்யப்படும்
    அரச மலேசிய ஆகாப்படை ஹெலிகாப்டர் உட்பட அனைத்து ஹெலிகாப்டர் சேவைகளும் குறிப்பிட்ட மாதங்களுக்கு சரவாக்கிலுள்ள ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வது தடை செய்யப்படும் என துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
    வானிலை காரணமாக ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கமளித்தார். பெரும்பாலும் ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வானிலை சரியில்லாமல் இருப்பதால் இம்மாதங்களில் ஹெலிகாப்டர் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வது ரத்து செய்யப்படுவது விபத்து நேரிடுவதிலிருந்து தடுக்க முடியும் என அவர் கூறினார்.
    இவ்விவகாரம் தொடர்பில் துணைப் பிரதமர் சரவாக் முதலமைச்சர் Tan Sri Abdul Taib Mahmud அவர்களுடன் விரிவான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


    அறிவியல் தொழிநுட்பத் துறைக்கு நிதி ஒதுக்கீடு
    9-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அறிவியல் தொழிநுட்பத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் Datuk Seri Dr Jamaludin Mohd Jarjis தெரிவித்தார்.
    அத்துறையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அவ்வமைச்சு அரசாங்கத்திடம் விரைவில் கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
    R&D எனப்படும் ஆய்வு மற்றும் மேம்பாடு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாக அவர் கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும் இதுபோன்ற மேம்பாட்டு திட்டங்கள் உதவும் என அவர் தெரிவித்தார்.

    போலீஸ் படையினர் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்

    தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப அதிகாரிகள் மற்றும் போலீஸ் படையினர் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    போலீஸ் படையினர் குற்றவாளிகளைப் பிடிக்கும் சவாலை மட்டும் எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் அவர்கள் நாட்டிலுள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என Yang Dipertua Negeri Tun Abdul Rahman Abbas தெரிவித்தார்.
    தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மக்கள் அறிவாற்றல் மிக்கவர்களாவும் சட்ட விதிகளை அறிந்தவர்களாகவும் திகழ்கின்றனர். பொது மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப போலீஸ் படையினரும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் அறிவாற்றலை மேபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

    ரபீடா ஆகஸ்ட் 9-ஆம் திகதி மீண்டும் தமது பணியைத் தொடங்குவார்

    அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில் துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz எதிர்வரும் 9-ஆம் திகதி மீண்டும் தமது பணியைத் தொடங்குவார் என அவ்வமைச்சு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
    உடல் நலக்குறைவினால் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவரால் பங்குக் கொள்ள முடியாமல் போனது. கடந்த வருடம் அவருக்கு காலில் மூட்டு பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

    அதன் தொடர்பாக மீண்டும் சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் அவரால் அந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது இந்த விடுமுறையை நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Samsuddin Osman உறுதிப்படுத்தினார்.
    நாட்டில் 1,477 புதிய சிறுவர்கள் கல்விக் கூடங்கள்
    அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 1,477 புதிய சிறுவர்கள் கல்விக் கூடங்களை அரசாங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இக்கல்விக் கூடங்களை அமைக்க சுமார் 1.7 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதேசம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் Datuk Seri Abdul Aziz Shamsuddin நேற்று தெரிவித்தார்.
    அமைக்கப்படவுள்ள ஒவ்வொரு கல்விக் கூடங்களும் சுமார் 120,000 ரிங்கிட் மதிப்புடையது என அவர் மேலும் தெரிவித்தார்.
    இதனிடையே, திரங்காணு மாநிலத்தில் மட்டும் சுமார் 100 கல்விக் கூடங்கள் கட்டப்படவுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கல்விக் கூடங்கள் பழமையானதாகவும், சேதமடைந்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    --------------------------------------------------------------
    ஏற்காடு விரைவு ரயில் தடம் புரண்டது
    தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஏற்காடு விரைவு ரயில் நேற்று முன்தினம் அதிகாலை தடம் புரண்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு 11.20 மணிக்கு ஏற்காடு விரைவு ரயில் 21 பெட்டிகளுடன் ஈரோடு புறப்பட்டது.
    ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்தனர். தர்மபுரி லோக்கூர் ரயில் நிலையம் அருகே ரயில் அதிகாலை 4.40 மணிக்கு வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    ஒரு சில பெட்டிகள் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இவ்விபத்தில் ரயில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்த் தப்பினர்.

    ------------------------------------------------------------
    சூடானில் கலவரம் தொடர்கிறது : பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
    சூடான் துணை அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பல இடங்களில் புதிதாகக் கலவரம் வெடித்துள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.
    சூடானில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக நிலவும் உள்நாட்டு கலவரத்திற்குத் தீர்வு கண்டவர் ஜான் கராங். சூடான் வடக்கில் உள்ள மக்களுக்கும், தெற்கில் உள்ள மக்களுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, துணை அதிபராகவும் கடந்த மாதம் 9ம் தேதி பதவியேற்றார்.
    பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதில், ஜான் கராங்கின் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்து தலைநகர் கார்டோ ம் உட்பட பல இடங்களில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பலர் கொல்லப்பட்டனர். பலியானோரின் எண்ணிக்கை தற்போது 46 ஆக உயர்ந்துள்ளது.
    300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க கவச வாகனங்களில் பாதுகாப்புப் படையினர் ரோந்து வருகின்றனர்.

    அமெரிக்க பத்திரிக்கையாளர் ஈராக்கில் சுட்டுக்கொலை

    ஈராக்கின் தென் பகுதியில் உள்ள பாஸ்ரா நகரில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலை ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான வின்சென்ட், இஸ்லாமிய மதத்தில் ஷியா பிரிவு எழுச்சி பற்றி கட்டுரை எழுதி வந்தார். இது தொடர்பாக சில விவரங்களை சேகரிக்க ஈராக் வந்தார்.
    ஈராக்கின் தென் பகுதியில் உள்ள பாஸ்ரா நகரில் மக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டார். அவருக்கு உதவியாக நவுரியா என்ற ஈராக்கியர் செயல்பட்டார்.
    இந்நிலையில், பாஸ்ரா நகரில் நேற்று முன்தினம் வின்சென்ட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மார்பில் மூன்று குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அவர் பிணமாகக் கிடந்தார். அவருக்கு உதவிய நவுரியா குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஈரானின் புதிய அதிபராக அகமதினியாத் பதவியேற்பு

    ஈரான் புதிய அதிபராக தெஹ்ரான் நகர முன்னாள் மேயர் முகமது அகமதினியாத் பொறுப்பேற்றார். கடந்த ஜூன் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அகமதினியாத் அமோக வெற்றி பெற்றார்.
    அணு ஆயுதங்களை ஈரான் ரகசியமாக தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் 49 வயதான பழமைவாதியான அகமதினியாத் அதிபராக பதவி ஏற்றது ஈரானில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடந்த 1979ம் ஆண்டு ஈரானில் நடந்த புரட்சிக்கு பிறகு ஈரானில் அதிபராக பதவியேற்ற மதவாதி அல்லாதவர் அகமதினியாத். நான்கு ஆண்டுகள் இப்பதவியில் அவர் நீடிப்பார்.
    --------------------------------------------------------------
    Zimbabwe செல்லவிருக்கு கிரிக்கெட் அணி
    இந்தியா, Zimbabwe, West Indies நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணியினர் வரும் 23ம் தேதி Zimbabwe பயணம் மேற்கொள்கிறது.
    Zimbabwe செல்லும் இந்திய அணியினர் செப்டம்பர் 25-ம் திகதி வரை Zimbabwe-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    நன்றி வணக்கம்மலேசியா.காம்.


    மனோ.ஜி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஈராக்கில் என்னதான் நடக்கிறதோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
    செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    இன்றைய செய்திகளுக்கு நன்றி மனோ அண்ணா
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •