Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: சதுரங்கம்

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0

    சதுரங்கம்

    நீயும் நானும்
    ஆடும் சதுரங்கம்
    அங்கே
    யானைகள் இல்லை
    குதிரைகள் இல்லை
    சிப்பாய்கள் இல்லை
    ராஜாவும் நீ
    மந்திரியும் நீ
    உனது குறியோ
    எதிர் அரசை வீழ்த்துவது!
    வீழ்த்தத் துவங்கிவிட்டாய்...
    உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
    இங்கே ஆயுதம்
    எனது சேனைகள் தோற்றன
    மந்திரி வியூகம் மழுங்கிப்போனது
    உனக்குத் தடைவைக்கும்
    ஒவ்வொரு சிப்பாயும்
    கடைசிக்கட்டங்களில்
    எதிர் அரசிற்கு
    சாதகமாகிப் போகின்றன
    தோற்போம் எனத்தெரிந்தும்
    தொடுக்கிறேன் போர்
    எனது ஆயுதங்கள்
    ஒவ்வொன்றாய் கழலப்பெற
    நிராயுத பாணியாக நான்
    மௌனத்தில்...
    உன்னை வீழ்த்துவது
    எந்தன் நோக்கமல்ல
    ஆகையினால்
    சரணடைகிறேன்...
    உந்தன் அன்பில் தோற்றுப்போய்...
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    இந்தப் போரில் அன்புதான் ஆயுதம், அன்புதான் கேடயம்...
    அருமையான கவிதை.

    அது சரி, நிராயுதபாணியான பிறகு என்ன வீரம்? (உன்னை வீழ்த்துவது
    எந்தன் நோக்கமல்ல
    ஆகையினால்
    சரணடைகிறேன்...)
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    உண்மையான அன்பினை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது..ஆனால் இங்கே தோல்விதானே வெற்றி..தோற்றவர்தானே வெற்றி பெற்றவர்...

    நல்ல கவிதை கவி..வாழ்த்துக்கள்..
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    ஆட தெரியுமோ தெரியாதோ தெரியலை.... ஆனா ஆட்டத்தை பற்றி நல்ல கவிதை கொடுத்திருக்கா கவிதா....
    அன்புடன்
    மணியா....

  5. #5
    புதியவர் Birundan's Avatar
    Join Date
    31 Jul 2005
    Posts
    38
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை அருமை வாழ்த்துக்கள்
    அன்புடன் பிருந்தன்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    அன்பினால்
    போரையே தவிர்த்திருக்கலாமே,
    ஆனால் இங்கு காதலுக்கு முன்பு உள்ள எதிர்ப்பு போல்
    அல்லவா இருக்கிரது இந்த போர்,
    எப்படி இருந்தாலும் வெற்றி இருவருக்குமே.


    வாழ்த்துக்கள் அருமையான கவிதை.

    மனோ.ஜி

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    இந்தப் போரில் அன்புதான் ஆயுதம், அன்புதான் கேடயம்...
    அருமையான கவிதை.

    அது சரி, நிராயுதபாணியான பிறகு என்ன வீரம்? (உன்னை வீழ்த்துவது
    எந்தன் நோக்கமல்ல
    ஆகையினால்
    சரணடைகிறேன்...)
    ஹாஹ்ஹா... குப்புற விழுந்தும்...மண் ஒட்டாத கதை தான்...
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by thempavani
    உண்மையான அன்பினை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது..ஆனால் இங்கே தோல்விதானே வெற்றி..தோற்றவர்தானே வெற்றி பெற்றவர்...

    நல்ல கவிதை கவி..வாழ்த்துக்கள்..
    நன்றி தேம்பா
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    ஆட தெரியுமோ தெரியாதோ தெரியலை.... ஆனா ஆட்டத்தை பற்றி நல்ல கவிதை கொடுத்திருக்கா கவிதா....
    அன்புடன்
    மணியா....
    சிறுவயதில் (விளையா)ஆடியும் இருக்கிறேன் அண்ணா.
    இப்போ மித்ரா கூட மட்டும்!
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by Birundan
    கவிதை அருமை வாழ்த்துக்கள்
    அன்புடன் பிருந்தன்
    நன்றி பிருந்தன்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by Mano.G.
    அன்பினால்
    போரையே தவிர்த்திருக்கலாமே,
    ஆனால் இங்கு காதலுக்கு முன்பு உள்ள எதிர்ப்பு போல்
    அல்லவா இருக்கிது இந்த போர்,

    எப்படி இருந்தாலும் வெற்றி இருவருக்குமே.


    வாழ்த்துக்கள் அருமையான கவிதை.

    மனோ.ஜி
    போரிடுதல் என்பதும் வீரவிளையாட்டு தானே!
    இந்தக் கவிதை எழுதி பல மாதங்கள் ஆகின்றன. என்னவோ சோம்பேறித்தனம்!
    அதனால்தான் பதியாமல் இருந்தேன்.

    போரைத் தவிர்ப்பது காதல் யுத்தத்தில் சுவாரசியம் இல்லாதது.
    காதலன் ஆசை வார்த்தைகள் சொல்லி போரிடுவதும்,
    காதலி அப்பன், அண்ணன், தோழிகள், போலீஸ் என்று இன்னும் பல படைகளுடன் மோதுவதும்,

    பிறகு அவனன்பில் வீழ்ந்து சரணாகதி அடைவதும்... எல்லா சினிமா படங்களிலும் பார்க்கிற கதைதான் என்றாலும் எனக்கு இது என்னவோ சதுரங்க விளையாட்டு போலவே இருந்தது. சதுரங்க விளையாட்டு அத்தனை எளிதானதல்ல. பலத்தை வைத்து மோத. எங்கே எப்படி எந்த காயை நகர்த்த வேண்டும் என்ற நுணுக்கங்கள் இதில் மிக மிக அவசியம்.

    எனில் அவனோ படைகளற்றவன்.
    இவளிடமோ எல்லா படைகளும் உள்ளன. எனினும் தோற்கிறாள். எப்படி அவனது அன்பு என்ற ஆயுதத்தினால்...
    அதையே தான் கொஞ்சம் டச் வைத்து சொல்லியிருக்கிறேன். கவிதை பிடித்திருந்தால் சந்தோசமே!

    நன்றி மனோ அண்ணா.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  12. #12
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    கவிதை அருமை வாழ்த்துக்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •