Results 1 to 1 of 1

Thread: ஜூலை 14, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  ஜூலை 14, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்

  பாகிஸ்தானில் 3 ரயில்கள் மோதல்: 150 பேர் பலி - 1000 பேர் காயம்
  பாகிஸ்தானில் சிந்து மாநிலத்திலுள்ள கோத்கி என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் மூன்று பயணிகள் ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இச்சம்பவத்தில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 1000-க்கும் மேற்பட்டோர் இவ்விபத்தில் படுகாயமடைந்தனர்.
  சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோர விபத்தில் அதிக பயணிகள் பலியாகி இருப்பதால் எத்தனை பேர் பலியானார்கள் என சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
  ரயில் வழிகாட்டி தவறுதலாக சமிக்ஞையை காட்டியதால் இவ்விபத்து நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ரயில் போக்குவரத்து உயரதிகாரி தெரிவித்தார்.
  _______________________________________________________________________
  போதை பழக்கத்தை ஒழிக்க இளைஞர்களின் ஒத்து¨Æப்பு
  நாட்டில் பரவிவரும் போதை பழக்கத்தை ஒழிக்க இளைஞர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படலாம் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.
  விரைவில் உருவாக்கப்படவுள்ள Belia Benci Dadah எனும் திட்டத்தை குறித்து, உயர்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டு துறை "Anda Pilih...Sengsara atau Bahagia" எனும் கருத்தரங்கை நேற்று தொடக்கி வைத்தபோது அவர் கூறினார்.
  மேலும், தற்போது நாட்டில் பரவிவரும் போதை பழக்கத்தை ஒழிக்க, இளைஞர்களும் சம்பந்தப்பட்ட போதை தடுப்பு இயக்கங்களுடன் இணைந்து தங்களின் சேவைகளை வழங்க வேண்டும் என இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் Datuk Azalina Othman தெரிவித்தார்.


  KWSP-யிலிருந்து பணம் பெற விரும்புவர்களுக்கு நேர்முகத் தேர்வு
  தொழிலாளர் சேமநிதி வாரியம் அல்லது KWSP-யிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக சேமிப்பு தொகையை பெற விரும்புவர்கள் நேர்முகத்தேர்வை எதிர்நோக்க வேண்டும் என KWSP மக்கள் தொடர்பு அதிகாரி Nik Affendi Jaafar தெரிவித்துள்ளார்.
  KWSP-யில் நடந்த பல மோசடிகள் தொடர்பாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.பொது மக்களை அவதிக்குள்ளாக்கும் நோக்கத்தோடு இந்நடவடிக்கை அமல்படுத்தப்படவில்லை;மாறாக KWSP பணம் தவறான காரியங்களுக்கு பயன்படுவதை தடுக்கவே இந்நடவடிக்கை அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.
  KWSP மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருவதாகவும்,KWSP தொடர்பாக எந்தவிதமான மோசடியையும் தடுப்பது KWSP-யின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  நாட்டில் HIV மற்றும் AIDS நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
  நாடு தழுவிய நிலையில் தினசரி 19 பேர் HIV மற்றும் AIDS நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக மலேசிய AIDS கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.
  இதனால், நாட்டில் AIDS நோய் பரவுதல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அக்கழகத்தின் மேலாளர் Nik Mohd Fahmee Nik Hussin தெரிவித்தார்.
  நாட்டில்,கடந்த 2004-ஆம் ஆண்டு வரையில் சுமார் 64,467 பேர் AIDS நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்நோயைத் தடுப்பதற்கான பல நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் அக்கழகம் ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


  மேம்பாலம் சரிந்து விழுந்ததற்கு பணியாளர்களின் அலட்சியபோக்கே காரணம்
  கடந்த ஞாயிறுக்கிழமை Shah Alam, Bukit Raja அருகே கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த Meru-NKVE மேம்பாலம் சரிந்து விழுந்ததற்கு பணியாளர்களின் அலட்சியபோக்கே முக்கிய காரணம் என தற்காலிக பொதுப்பணி அமைச்சர் Datuk Mohamed Khaled Nordin தெரிவித்தார்
  அப்பாலத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அதிகாரிகளின் கட்டளைகள் அல்லது அனுமதி ஏதும் இல்லாமல் அப்பாலத்தின் தற்காலிக கம்பிகளை நீக்கியதால் இச்சம்பவம் ஏற்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
  இதனிடையே, சம்பந்தப்பட்ட பணியாளர்களின் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுப்பதற்கு முன்பு, அக்கட்டுமானப்பணியை பற்றிய சரியான தகவல்கள் பொதுப்பணித்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என அவர் நேற்று நடந்த மக்களவையில் தெரிவித்தார்.


  கிள்ளானில் லோரி தடம் புரண்டது; போக்குவரத்து ஸ்தம்பித்தது
  கிள்ளான் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி செல்வதற்கான மேம்பாலத்தின் பகுதியில் லோரி கவிழ்ந்ததில் கிள்ளான் நகர் போக்குவரத்தால் ஸ்தம்பித்தது.
  இவ்விபத்தில் பினாங்கைச் சேர்ந்த லோரி ஓட்டுநரும் அவரது உதவியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
  லோரி கிள்ளான் மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத வகையில் கார் ஒன்று நடுவே நுழைந்ததால் அக்காரை மோதுவதைத் தவிர்க்க சாலை ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதி லோரி கவிழ்ந்தது.
  இச்சம்பத்தால் நேற்று பிற்பகல் தொடங்கி மாலை வரை கிள்ளான் நகர் மிகப் பெரிய சாலை போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கியது.
  _______________________________________________________________________
  படகு கவிழ்ந்து பெண்கள் உட்பட மூவர் பலி
  இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர். கமல்வாலா கிராமத்தைச் சேர்ந்த 25 விவசாயிகளும் மற்றும் சிலரும் சட்லெஜ் நதியில் படகில் சென்று கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  நீச்சல் தெரிந்த சிலர் நீந்தி தப்பித்துக் கொண்டனர். மற்றவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர். இதுவரை இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
  மற்றவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை.அவர்களைத் தேடும் பணி ராணுவம் மற்றும் அதிரடிப்படையின் உதவியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  ______________________________________________________________________
  லெபனான் அமைச்சர் வெடி குண்டுத் தாக்குதலில் காயம்
  லெபனானின் வடக்கு மாவட்டமான பெய்ரூட்டில் சென்று கொண்டிருந்த லெபனான் பாதுகாப்பு அமைச்சர் எலியாஸ் அல்முர் அவர்களின் வாகனம் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது.
  அத்தாக்குதலில் அமைச்சர் காயமடைந்ததுடன் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து உள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். þதý தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

  தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு

  லண்டனில் தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் தீவிரம் அடைந்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் உள்துறை அமைச்சர்களுடனான மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது.
  இம்மாநாட்டில் 25 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

  இங்கிலாந்தில் அமெரிக்கப் படையினர் பயணத் தடை நீக்கம்

  லண்டனில் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு விமானத் தளங்களில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினர் லண்டனுக்குப் பயணஞ்செய்ய விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
  இங்கிலாந்தில் பல அமெரிக்கத் தளங்கள் அந்த தடை உத்தரவு அவ்வேளையில் முக்கியமானதுதான் என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ரீய்ட் கூறியுள்ளார். ஆனால் இதனை அமெரிக்க நிர்வாகம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
  _______________________________________________________________________
  டேவிட் ஷெபர்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்
  கிரிக்கெட்டின் தலைச்சிறந்த அம்பயராக மதிக்கப்படும் டேவிட் ஷெபர்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டின் அதிகம் மதிக்கப்படும் அம்பயர்களில், இங்கிலாந்தின் டேவிட் ஷெபர்ட் முக்கியமானவர்.
  துல்லியமான தீர்ப்பு, வீரர்களுடன் சுமுகமான உறவு என அனைவரையும் கவரக் கூடியவர் இவர். இங்கிலாந்து கிரிக்கெட் விதிகளின் படி, அம்பயர்களின் ஓய்வு வயது 65.
  தற்போது 64 வயதாகும் ஷெபர்ட், ஒரு வாரம் முன்னதாகவே கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார்.

  நன்றி வணக்கம்மலேசியா.காம்

  மனோ.ஜி
  Last edited by Mano.G.; 14-07-2005 at 05:46 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •