Results 1 to 3 of 3

Thread: ஜூலை 13, புதன் கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0

    ஜூலை 13, புதன் கிழமை மலேசிய செய்திகள்

    லண்டனில் குண்டு வைத்த 30 பேர் அடையாளம் தெரிந்தது
    கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்தின் லண்டன் நகரில் சுரங்க ரயில்கǢலும், மாடி பேருந்துகளிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் சுமார் 52 பேர் உயிரிழந்தனர். இன்னும் பல இடங்களில் உடல்கள் கிடப்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என தெரிய வந்துள்ளது.
    இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு Al-Queda இயக்கம் மற்றும் அதன் பிரிவுகள்தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பில் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
    ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு ரயில் வெடி குண்டு தாக்குதல் நடத்தி 192 பேரை பலி வாங்கிய தீவிரவாதிகளுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கண்டு பிடித்துள்ளனர். மேலும் இத்தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
    _____________________________________________________________________
    வட்டி முதலைகளின் பிரச்சனைகளைத் தடுக்க நடவடிக்கைகள்
    நாட்டில் வட்டி முதலைகளின் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதை தடுக்க, கடந்த வருடம் சுமார் 405 வழக்குகளில் 30 வழக்ககுகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் Datuk Wira Abu Seman Yusop தெரிவித்தார்.
    ஆனால், இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில், வட்டி முதலைகளை சம்பந்தப்பட்ட சுமார் ஐந்து வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மேல் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    மேலும் அதிகமான வட்டி முதலைகள், லைசன்ஸ்சுகள் இல்லாமலையே பணங்களை மக்களுக்கு வட்டிக்கு விடுவதாகவும், சட்டப்படி அச்செயல் குற்றம் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.



    வருடாந்திர விடுமுறைகள் - அடுத்த மாதம் அறிவிப்பு

    ஜூலை 1-ம் திகதி முதல் பொது ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் வருடாந்திர விடுமுறைகளின் ஆய்வுகள் குறித்த விவரங்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தேசிய தலைமை செயளாலர் Tan Sri Samsudin Osman தெரிவித்தார்.
    தற்போது இவ்விவகாரம் குறிந்த ஆய்வுகளை, பொது சேவைத்துறை ஆராந்த்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    மேலும், இனி வரும் காலங்களில், பொது ஊழியர்களின் வருடாந்திர விடுமுறைகள் குறைக்கபடலாமா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக அறிவிக்கப்படும் என அவர் செய்தியாளர்களின் விளக்கினார்.



    August-இல் MCA பொது கூட்டம்
    August-இல் நடைப்பெறவிருக்கும் MCA பொது கூட்டம் அதன் 56 வருட வரலாற்று சம்பவமாக கருதப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்கட்சியின் தலைவர்,துணைத்தலைவர் போன்ற பதவிகளுக்கு இளம் வேட்பாளர்களுக்கும் மூத்த வேட்பாளர்களுக்கும் பலத்த போட்டி நிலவி வருகின்றது.
    MCA தலைவர் பதவிக்கு வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் Datuk Seri Ong Ka Ting மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் Datuk Chua Jui Meng போட்டியிடுகின்றனர்.
    MCA துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் Chan Tsu Yuen-உம் போக்குவரத்து துறை அமைச்சர் Datuk Seri Chan Kong Choy-யும் போட்டியிடுகின்றனர்.



    மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் பயண கண்காட்சி 2006


    2006-இல், Travel Fair 2006 அல்லது பயண கண்காட்சி 2006 என்ற விழாவை MAS நிறுவனம் மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக அதன் இயக்குனர் Wan Mohd Ebrahem Wan Hasnan தெரிவித்தார்.
    கடந்தாண்டு பினாங்கில் நடத்தப்பட்ட இதே போன்ற விழா மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றதாகவும் 9 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பயண டிக்கெட்டுகள் விற்பனையாகின எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
    லண்டன் நகரின் குண்டு வெடிப்பினால்,MAS நிறுவனம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை எனவும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கான விமான டிக்கெட்கள் விற்பனையாகிவிட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.


    மேம்பாலம் சரிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயம்
    Kampung Seligi Tok Harun-இல் உள்ள வெள்ளம் காரணமாக பழுதுப்பட்ட மேம்பாலத்தைக் கடக்க முயன்ற வேளையில் அப்பாலம் இடிந்து விழுந்ததில் மூன்று சகோதரர்கள் காயமடைந்தனர்.
    Sekolah Menengah Seri Maharaja, Bukit Abal மாணவர்களாகிய இம்மூன்று சகோதரர்களும் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அம்மாணவர்களின் தந்தை கூறினார். தற்பொழுது அம்மூன்று மாணவர்களும் Hospital Tengku Anis Pasir சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.


    மீன் விளைவித்த மரணம்
    கெடா, Jitra-வில் எட்டு வயது சிறுவன் தனது அண்ணன் மற்றும் நண்பனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, தவறுதலாக மீன் ஒன்று பாய்ந்து அச்சிறுவனின் வாயில் நுழைந்ததில் மரணமுற்றான்.
    இச்சம்பவம் நேற்று முந்தினம் மதியம் 12.30 அளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. Samiun Ahmad என அடையாளம் கூறப்பட்ட அச்சிறுவன் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை எனவும், அம்மீன் அச்சிறுவனின் தொண்டையில் முழுமையாக சிக்கிக் கொண்டது என மேலும் தெரியவந்துள்ளது.
    இதனிடையே, அச்சிறுவனிம் உடல் அன்று மாலை 6.15 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது.

    இருமல் மருந்துகள் பறிமுதல்

    Johor Baharu Senai, Taman Tun Aminah மற்றும் கிடங்கு ஒன்றில் சுங்கதுறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 1 லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள இருமல் மருந்துக்களை கைப்பற்றினர்.
    இச்சோதனையில் 20 முதல் 27 வயதுக்குற்பட்ட நான்கு இந்தோநிசிய ஆடவர்களையும் ஒரு பெண்மணியையும் தடுத்து வைத்துள்ளதாக அமமாநில சுங்கத்துறை இயக்குனர் Sarmin Md Hussein செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    ______________________________________________________________________
    இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பும் காப்புறுதி நிறுவனம்
    இந்தியாவில் அதிகப்படியான மக்கள் விரும்பும் காப்புறுதி நிறுவனம் LIFE INSURANS COPERATION OF INDIA (எல்.ஐ.சி.,) என்ற தகவல் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
    இந்தியா முழுவதும் 21 நகரங்களில் 7000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
    நிறைய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மிக அதிகமாக எதை விரும்புகின்றனர் என்பது பற்றி தயாரிப்பாளர்களுக்கு விளக்கவும், பல BRAND இன்சூரன்சை விரும்புபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. எல்.ஐ.சி.,க்கு மிகச் சிறந்த இன்சூரன்ஸ் கம்பெனி என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.
    ______________________________________________________________________
    லண்டன் மசூதிகளில் தாக்குதல்
    லண்டன் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த பின், பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகள் மீது வன்முறையாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். மத ரீடதியாகவும், இன ரீடதியாகவும் ஆசிய மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
    கடந்த வியாழக்கிழமை, லண்டன் பாதாள ரயில் நிலையங்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில், 52 பேர் இறந்தனர்.
    இந்தத் தாக்குதலுக்குச் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் அல் குவைதா தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பிரிட்டனில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஆசிய மக்கள் மீது பிரிட்டன் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



    பாகிஸ்தானில் தீவிரவாதம் நீடிப்பு
    பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் இன்னும் செயல்படுகின்றன எனவும் இதற்கான புகைப்பட ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது எனவும் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.
    ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள லண்டன் சென்றுள்ள நட்வர்சிங் செய்தியாளர்களிடம் அவ்வாறு தெரிவித்தார்.
    லண்டனில் நடந்தது போன்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதுவும் இந்தியாவில் நடக்கவில்லையெனில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதி நடவடிக்கைள் தடையின்றி தொடரும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தான் உடனான உறவை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


    ரஷ்யா-மாஸ்கோவில் வெடி குண்டு தாக்குதல் - 16 பேர் பலி


    ரஷ்யா-மாஸ்கோவில் குண்டு வெடித்து 16 பேர் பலியாயினர்;பலர் காயமடைந்தனர்.ரஷ்யாவில் எண்ணெய் வளமிக்க கோமி பகுதியில் யுக்தா என்ற நகரத்தில் இரண்டு அடுக்கு வர்த்தக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை பயங்கர குண்டு வெடித்தது.
    காயமுற்றவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. குண்டு வெடிப்பு குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    _______________________________________________________________________
    கபடி போட்டியில் இந்தியா வெற்றி
    ஆசிய பெண்கள் கபடிப் போட்டி-யில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பெண்களுக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
    இறுதிப் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. துவக்கத்தில், இரு அணிகள் இடையே கடும் போட்டி காணப்பட்டது.
    முதல் பாதியின் முடிவில் நமது அணி 18&15 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தது. பின்னர், இரண்டாவது பாதியில் சுமிதா, தஜஸ்வனி ஆகியோர் அபாரமாக செயல்பட இந்திய அணி 40&27 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    நன்றி வணக்கம் மலேசியா.காம்


    மனோ.ஜி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    செய்திகளை உடனுக்குடன் அள்ளித் தருவதில் மனோஜிக்கு நிகர் மனோஜிதான். நமது மன்றத்தின் செய்திச் சுடர் என்ற பட்டம் கொடுக்கலாம்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    திருவாசகத் தட்டில் முதலிரண்டு பாடல்கள்
    http://www.tamilmantram.com/vb/showt...?t=5294&page=2

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    ரஷ்யா-மாஸ்கோவில் வெடி குண்டு தாக்குதல் - 16 பேர் பலி

    அங்கேயுமா?

    உலகளாவிய செய்திகளைத்தரும் மனோ அண்ணாவிற்கு நன்றிகள்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •