Results 1 to 7 of 7

Thread: ஊஞ்சல்

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0

    ஊஞ்சல்

    ஊஞ்சல்
    -------

    முட்களுக்கும் பூக்களுக்கும்
    இடையேயான பாதையில்
    நாம் செல்லவேண்டியுள்ளோம்

    இது அழகிய புல்பாதை!

    முள்ளை நினைத்து
    பயப்படத்தேவையில்லை
    உனது பாதுகையும்
    முட்களை உதிர்க்கலாம்.

    நிறமும் மணமும் சிந்தும்
    பூக்களைப்பற்றி சுவாரசியம் இல்லை
    நீயும் பூ தான்

    எனவே
    நல்லவைக்கும், அல்லவைக்கும்
    நடுவே
    ஊசலாடத்தேவையில்லை

    பூக்களையும், முட்களையும் நேசி
    நிறத்தையும், மறத்தையும் ரசி

    உல்லாசமாய் ஊஞ்சலாடலாம்
    Last edited by kavitha; 14-07-2005 at 03:48 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    மிகவும் அருமையான பாடல் சகோதரி. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். எல்லாரும் மயில் வாத்து என்று பாடுகையில் காக்கையைப் பாடிய காக்கைப் பாடினியார் ஆகியிருக்கின்றீர்கள்.

    ஆங்காங்கே சில இலக்கணப் பிழைகள் உள்ளன. அவைகளைக் களைந்து எழுதவும்.
    (எ.டு) உனது பாதுகையும்
    முட்களை உதிரலாம்
    இங்கே உதிர்க்கலாம் என்று வந்திருக்க வேண்டும்.

    நல்ல கவிதை கவிதா. இன்னும் தொடர்க.

    அன்புடன்,
    கோ.இராகவன்

    திருவாசகத் தட்டில் முதலிரண்டு பாடல்கள்
    http://www.tamilmantram.com/vb/showt...?t=5294&page=2
    Last edited by gragavan; 13-07-2005 at 05:07 AM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by kavitha
    ஊஞ்சல்
    -------
    எனவே
    நல்லவைக்கும், அல்லவைக்கும்
    நடுவே
    ஊசலாடத்தேவையில்லை

    பூக்களையும், முட்களையும் நேசி
    நிறத்தையும், மறத்தையும் ரசி

    உல்லாசமாய் ஊஞ்சலாடலாம்
    எல்லாவற்றையும் ரசித்து நேசிக்கும்போது எத்தனை உல்லாசமான ஊஞ்சல்.... வாழ்த்துக்கள்... கவி...
    ----
    இலக்கண வாத்தியார் இராகவனுக்கு நன்றி...

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    மிகவும் அருமையான பாடல் சகோதரி. பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். எல்லாரும் மயில் வாத்து என்று பாடுகையில் காக்கையைப் பாடிய காக்கைப் பாடினியார் ஆகியிருக்கின்றீர்கள்.

    ஆங்காங்கே சில இலக்கணப் பிழைகள் உள்ளன. அவைகளைக் களைந்து எழுதவும்.
    (எ.டு) உனது பாதுகையும்
    முட்களை உதிரலாம்
    இங்கே உதிர்க்கலாம் என்று வந்திருக்க வேண்டும்.

    நல்ல கவிதை கவிதா. இன்னும் தொடர்க.

    அன்புடன்,
    கோ.இராகவன்


    அண்ணா சுட்டியமைக்கு மிக்க நன்றி.. சந்தோசமும் கூட... இப்பொழுது தான் எனக்குத்தெம்பு வருகிறது. விரைவில் மரபுக்கவிதைகளும் எழுத விழைகிறேன்.
    முன்பு இளசு அண்ணா, இக்பால் அண்ணா, திருவருள் போன்றவர்கள் பிழைகளைக்கண்டுபிடிப்பர்
    ( தலை, ஐவர் அணியில் மட்டும் )

    அப்புறம், காக்கையைப்பற்றி பாடினேனே! எங்கே அப்படி உள்ளது அண்ணா... என் கண்களுக்குத் தெரியவில்லையே!
    (எப்படியோ காக்கைப் பாடினினு பட்டம் தந்திருக்கீங்க... சந்தோசமா இருக்கு. அவங்க அளவுக்கு நானா? ம்ஹீம் )

    கவிதையின் விளக்கம்:-
    ----------------------------

    உலகில் நல்லவர்கள் என்றோ தீயவர்கள் என்றோ பாகுபடுத்தும் அளவிற்கு சாதாரண மனிதர்கள் கிடையாது. மகான்களாக கருதப்பட்டவர்களும் கூட சறுக்கியதுண்டு. ஒவ்வொருவருக்கும் நல்ல பண்புகளும் உண்டு. அவர்களுக்கே கூட சில விரும்பத்தகாத பண்புகளும் இருக்கக்கூடும்.
    அதனாலேயே அவர்களை ஒதுக்குதலோ, நல்ல பண்புகளைக்கண்டு மயங்குதலோ தேவையில்லை என்பதே இக்கவிதையின் கருத்தாகும்.
    Last edited by kavitha; 14-07-2005 at 03:12 AM.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0

    எல்லாவற்றையும் ரசித்து நேசிக்கும்போது எத்தனை உல்லாசமான ஊஞ்சல்.... வாழ்த்துக்கள்... கவி...
    ----
    இலக்கண வாத்தியார் இராகவனுக்கு நன்றி...
    __________________
    உங்கள் அறிஞர்


    ஆமாம் அறிஞரே. கட்டுப்பாடில்லாத ஆனால், மிகக்கண்ணியமான உணர்வு அது. கோயிலுக்கு செல்வேன். மனமார தரிசிப்பேன். அம்மனோ, முருகனோ, விநாயகரோ, மேரி மாதாவோ, இயேசுவோ - தங்கத்தேரோ, சப்பரமோ, சந்தனக்காப்போ, திரு நீர்ச்சாத்தோ, பூப்பாவாடையோ... அப்படியே லயித்துப் போய் நிற்பேன். ஒன்றுமே எனக்குக் கேட்கத்தோணாது.
    அதே போல் தான் மனிதர்களையும்...அவர்தம் குணங்களையும்.

    நல்லதையும், அல்லதையும் ஒன்றாய் நிறுத்தத்தெரிந்து விட்டால், குறுகலோ -விரிசலோ -வியப்போ நேராது. எல்லோரையும் நேசிக்கும் பக்குவம் கிடைக்கும். சிறிய வயதில் மிகவும் பயந்த சுபாவம் எனக்கு. குழந்தையில் புதியவர்களைக்கண்டால் எனது உடல் நீலமாகி காய்ச்சல் கண்டு விடும் என்பதால் புதியவர்கள் கண்ணில் என்னைக்காண்பிக்கவே மாட்டார்களாம்.
    இப்போதும் கூச்ச சுபாவம் உண்டு என்றாலும் நன்கு பழகியவர்களிடம் கூட அத்தனை அன்னியோன்யம் காட்டிக்கொள்ளப்பிடிக்காது. ஆகவே மிகச்சிறிய வட்டத்திற்குள் இருந்து தொலைவை ரசிப்பவள் நான்.

    தைரியமாய் நின்று அநீதிக்குக்குரல் கொடுப்பவர்கள், நன்றாகப்பாடுபவர்கள், இசை அமைப்பவர்கள் இப்படி இருந்தாலும் மனமார பாராட்டுவேன்.
    அதே போல் சிறிய வயதில் குடிப்பவர்கள், குழந்தைகளையோ, மனைவியையோ போட்டு அடிப்பவர்கள் இப்படி சின்ன சின்ன தவறுகள் செய்பவர்களை எல்லாம் காணும்போது கூட சண்டைக்குப் போய் நிற்பேன் (யாரென்றே தெரியாவிட்டாலும்)



    இப்போது அந்த கோபமும், ரௌத்திரமும் குறைந்து விட்டதாகவே எண்ணுகிறேன். இது பரிணாமவளர்ச்சியின் அடுத்த கட்டம்போல் மனப்பக்குவத்தின் அடுத்த கட்டமாகவே உணர்கிறேன். நினைப்பதை பகிர்ந்து கொள்ளுதல் என்பது என்னளவில் ஏடே..
    ஆகவே அதைக்கவிதையாய்ப் பதித்தேன்.

    உங்கள் அனைவரது கருத்துகளையும் கண்டால் மகிழ்வேன். நன்றி.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    கவிதாஜி

    கவிதை நன்றாக இருந்ததென்றால், அதன் விளக்கங்களும், மேலும் தாங்கள் எழுதிய சுய சிந்தனைகளும் அருமையோ அருமை. வாழ்த்துக்கள்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    "பூக்களையும், முட்களையும் நேசி
    நிறத்தையும், மறத்தையும் ரசி

    உல்லாசமாய் ஊஞ்சலாடலாம்"

    மிகவும் நன்றாக இருக்கிறது அக்கா வாழ்த்துக்கள்!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •