Page 1 of 681 1 2 3 4 5 11 51 101 501 ... LastLast
Results 1 to 12 of 8172

Thread: பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

    நண்பர்களே!

    கைரளி மலையாள தொலைக்காட்சி சேவையில் அசுவமேதா என்ற ஒரு நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருக்கும். அதில் வரும் பிரதிப் என்பவர் எதிரே இருப்பவர் மனதில் நினைத்தவரை கேள்விகள் கேட்டு வெளியே கொண்டு வருவார்.

    அதே மாதிரி இங்கே தொடங்க ஆசைப்படுகிறேன்.

    போட்டியின் பொதுவான விதிமுறைகள்:

    1. போட்டியில் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை எந்த நேரமும் தெரிவிக்கலாம், தனிமடலிலும் தெரிவிக்கலாம் (பரஞ்சோதி, பிரியன், அறிஞர்).

    2. போட்டியிடுபவர்கள் யார் யார் என்பது தெரிவிக்கப்படும், அவர்களிடையே இரண்டு போட்டிகள் நடைபெறும், விடைகளை நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    3. கேள்வி கேட்டப்பின்பு ஆமாம், இல்லை என்பதே பதிலாக இருக்க வேண்டும்.

    4. 15 கேள்விகள் முடிந்தபின்போ அல்லது அதற்கு முன்பே விடையை அனுப்ப நினைப்பவர்கள் நடுவருக்கு அனுப்பி விட்டு, இங்கே விடை அனுப்பி விட்டதாக அறிவிக்கலாம்.

    5. போட்டிகள் முடிந்ததும், விடையை நினைத்தவர் போட்டியின் 15 கேள்வி, பதில்களின் தொகுப்பை கொடுக்க வேண்டும்.

    6. அனைவரின் விடைகளும் வந்தப்பின்பு நடுவர் விடையையும், சரியான விடை சொன்னவர்களின் பெயரையும் மட்டுமே அறிவிப்பார். யார்யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது ரகசியமாக வைக்கப்படும், காரணம் தவறான சொன்னதை வெளியிட்டால் மற்றவர்கள் கிண்டல் செயய்க்கூடுமே என்பதை நினைப்பதை தடுக்க.

    7. விடையாக மிகவும் பிரபலமான தமிழக அளவிலோ (நடிகர் ஜெய்சங்கர்), இந்திய அளவிலோ (லாலுபிரசாத் யாதவ்) அல்லது இந்தியாவை சார்ந்த பிற நாட்டவர் (அன்னை தெரசா) நினைக்கலாம்.

    8. ஒரு பிரபலம் ஒருமுறை தான் விடையாக தேர்வு செய்யப்பட வேண்டும், விடையாக தேர்வு செய்தப்பின்பு அவரையே தேர்வு செய்வது தடை செய்யப்படுகிறது, பட்டியல் கொடுக்கப்படும்.

    9. தர்மசங்கடமான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும் (எ.கா. அவருக்கு சின்னவீடு இருந்ததா? பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா?, விமானத்தில் பயணம் செய்தவரா?).

    10. கேள்விகள் முறையாக கேட்கப்பட வேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பதை தெரிந்தப்பின்னரே அவரது வயதை பற்றிய கேள்வி கேட்கப்பட வேண்டும்.

    11. பொதுவான கேள்விகள் கேட்பதே நல்லது, குறிப்பாக எம்.ஜி.ஆரை விடையாக நினனத்தால் அவரது பள்ளியின் பெயரொ, அவர் திருமணம் செய்த ஆண்டையோ அனைவராலும் சொல்ல முடியாது, ஒருவேளை ஏதாவது ஒரு ஆண்டை சொன்னால், பின்னர் இணையத்தில் எதையாவது தேடி கொடுத்தால் நன்றாக இருக்காது, அப்படி ஒருவர் தவறாக சொல்லியிருந்தால் அதை நடுவர் அவர்களுக்கு தனிமடலில் தான் சுட்டிக்காட்ட வேண்டும், அதை ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பதும் நடுவரின் முடிவைப் பொருத்தது.

    12. ஒருவர் ஒரு முறை தான் விடையை நடுவருக்கு அனுப்ப வேண்டும், முதன் முறையாக அனுப்பியதையே விடையாக ஏற்றுக் கொள்ளப்படும்.

    13. விடைகண்டுபிடிக்ககுறைந்தது 10 கேள்விகள் கேட்க வேண்டும், அதிகப்பட்சம் 3 மதிப்பெண், அப்புறம் 10வதுகேள்வியிலேயேவிடைகண்டுபிடித்தால் 3 மதிப்பெண்கள்,,11, 12 ல் கண்டுபிடித்தால் 2 மதிப்பெண்கள், 13,14,15ல் கண்டுபிடித்தால் 1 மதிப்பெண். அப்படி 15க்குள்அவசரப்பட்டு விடை சொல்லி அது தவறானால் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.விடை கண்டுபிடிப்பவர் விடையை நடுவருக்கு அனுப்பியவுடன் மற்றவர்களும் அனுப்பலாம், அவர்களுக்கும் 3, 2, 1 என்ற விகிதத்திலும், தவறாக சொன்னால் 1 மதிப்பெண். குறையாது.

    14. போட்டியாளர்கள் தவிர மற்றவர்கள் கமெண்ட் அடிக்கலாம், ஆனால் விடையையோ அல்லது கோந்தையோ கொட்டக்கூடாது.

    15. போட்டியாளர்களைத் தவிர மற்றவர்கள், விடை கண்டுபிடிப்பவர் விடையை நடுவருக்கு அனுப்பிவிட்டதாகச் சொன்னப்பின்பு தான் நடுவருக்கு மட்டுமே விடை அனுப்ப வேண்டும்.

    16. விடையை மனதில் நினைத்து போட்டியிட நினைப்பவர், விடையை நடுவருக்கு அனுப்பும் போது அவரைப் பற்றிய சிறு குறிப்பையோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறு காணப்படும் தளங்களின் விபரம் கொடுக்கலாம்.

    17. கேள்விக்கு பதில் சொல்பவர் தவறாக ஆமாம், இல்லை என்று சொல்லி அதனால் விடைக்கான வழி மாறிவிட்டால், அதை நடுவர் தளத்தில் உடனே சரி செய்யலாம், ஒருவேளை போட்டி முடிந்தப்பின்பு கண்டுபிடிக்கப்பட்டால் கேள்வி கேட்டவருக்கு ! மதிப்பெண்ணும், இதர போட்டியாளர்களும் ½ மதிப்பெண்ணும் கிடைக்கும்.

    18. விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படலாம்.

    19.நடுவரின் தீர்ப்பே இறுதியானடு, உறுதியானது, கடுமையானது.
    ---------
    முக்கிய அறிவிப்பு
    பதில் தெரிவிக்கும்போது டைட்டில் (சப்ஜெக்டில்) போட்டி எண் மாத்திரம் குறிப்பிடுங்கள்.

    என் போட்டி, பரம்ஸ் போட்டி என குறிப்பிட வேண்டாம்.
    ஒரு மெயிலில் ஒரு பதில் மாத்திரம் அனுப்புங்கள் (2 அல்லது 3 பதில்களை தெரிவிக்கவேண்டாம், தனித்தனியாக அனுப்பவும்)

    Last edited by அறிஞர்; 07-10-2005 at 02:15 PM.
    பரஞ்சோதி


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    ம். நான் தயார்.

    என்றும் அன்புடன்
    பிரியன்

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    கேள்வி எண் 1.

    அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?
    பரஞ்சோதி


  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    இல்லை

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    கேள்வி எண் 1.

    அரசியல், விளையாட்டு, சினிமாவை சேர்ந்தவரா?
    மூன்று கேள்விகள் ஆகிவிட்டன.... ..நாலாவது கேள்வியை கேள்....
    அன்புடன்
    அம்பயர் மணியா... .

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வித்தியாசமான..முயற்சி... ஜமாயுங்கள்.. அன்பரே...

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    மூன்று கேள்விகள் ஆகிவிட்டன.... ..நாலாவது கேள்வியை கேள்....
    அன்புடன்
    அம்பயர் மணியா... .
    தலை, கலக்குறீங்க, நல்ல வேளை உங்களிடம் கேள்விகள் கேட்கவில்லை.

    அஸ்வமேதா நிகழ்ச்சியில் இது போன்று தான் கேட்பார்கள், ஆனால் உலக அளவில் புகழ் பெற்றவர்கள் பெயர் வரும்.

    இது ஒரு புது முயற்சி தான்.
    பரஞ்சோதி


  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர்
    வித்தியாசமான..முயற்சி... ஜமாயுங்கள்.. அன்பரே...
    நன்றி அறிஞரே! அடுத்ததாக நீங்களும் கேட்கலாம்.
    பரஞ்சோதி


  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by பிரியன்
    இல்லை
    அரசியல், விளையாட்டு, சினிமாவை சேராதவர்.

    கேள்வி இரண்டு.

    2) அவர் ஒரு பெண்?
    பரஞ்சோதி


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    இல்லை

    என்றும் அன்புடன்
    பிரியன்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    அண்ணா அப்படியானால் ஆண்தான்..விடாதீர்கள் பிரியனை...
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    பிரியன் மதம் சார்ந்தவரா?

    (அண்ணா நாங்கள் கேள்வி கேட்கலாமா???)
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

Page 1 of 681 1 2 3 4 5 11 51 101 501 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 4 users browsing this thread. (0 members and 4 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •