Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 79

Thread: சிங்கப்பூர் போலாமா - ஜுலை (2004) மாதநிழற்படம் 17

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    சிங்கப்பூர் போலாமா - ஜுலை (2004) மாதநிழற்படம் 17

    ஜீலை மாத சிங்கப்பூர் பயணம்-1



    கடந்த சில மாதங்களாக ஒவ்வொருவரும் பிரமிக்க வகையில் நிழற்படத்தை அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டீர்கள்....



    தினமும் தளத்தில் ஜாலியாய் எட்டி பார்த்த விளையாடிய எனக்கு... இன்று சிறிய பொறுப்பு... அதாங்க.... நிழற்படம் தயாரிக்கும் பணி.. நேரம் குறைவு, ஆராய்ச்சி வேறு...... இவைகளின் மத்தியில்... பிரமாண்டமாக இல்லாவிட்டாலும்... ஏதோ என்னால் இயன்ற பங்களிப்பு.... சரி நம் பயணத்தை ஆரம்பிக்கலாம்....



    ஜுலை பயணம்... எங்கே போகலாம் என யோசித்தபோது...



    பரம்ஸ்: சிங்கப்பூர் சென்றால் என்ன?

    மணியா : சூப்பர்.... நானும் பார்த்து ரொம்ப நாளாச்சே... அவசியம் செல்லலாம்....

    மன்மதன் : ரொம்ப செலவாகுமே.....

    அறிஞர் : இது இலவச பயணம் நண்பா.....

    மன்மதன்: அப்படின்னா சரி.. சாப்பாடு ஒழுங்கா கிடைக்குமா....

    மைதிலி : எப்ப பாரு உனக்கு சாப்பாடுதான்......

    பூ : அவனை கிண்டல் பண்ணாட்டி உனக்கு தூக்கம் வராதே... சரி சிங்கப்பூர் செல்ல உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா...

    கவி : யாரை பார்த்து என்ன கேள்வி கேட்ட.... நாங்க எல்லாம்.. அந்த காலத்துலேயே எடுத்து.. உபயோகிக்காமல் வைத்துள்ளோம்...

    அறிஞர் : சரி சரி... உங்க கதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். பயணத்திற்கு அனைவரும் ரெடியாகுங்க.... நாளை இரவு குடும்பத்துடன் அனைவரும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்துவிடுங்கள்.... இந்த செய்தியை அனைத்து நண்பர்களுக்கும் தெரிவித்துவிடுங்கள்.. என்ன சரியா.....

    தேம்பா : சரி அண்ணா.....

    -----------------------------------------------------------------

    முதல் ஆளா ஹேமா மாமியுடன், மணியா அறிஞர்

    கவிதா, இக்பால், தேம்பாவணி, மைதிலி, சேரன், மன்மதன், பூ, ப்ரம்ஸ், இளசு, மனோ, பாரதி, நண்பன், திருவருள், அன்பு, இளந்தமிழ்ச்செல்வன், நிதன், நட்சத்திரன், தாமரை, லாவண்யா, அசன்பசர், ஒவ்வொருவராக வந்தனர்...........



    முல்லை மன்றம்

    அறிமுகம், கிறுக்கல்கள்


    பழையவர்கள்.. ஒவ்வொரு சுருக்கமாக தங்களை பற்றி அறிமுகப்படுத்தியவுடன்.. புதியவர்கள்... அறிமுகம் செய்ய ஆரம்பித்தனர்... முதலில்.... AJeevan சொன்னார்.... தனது கலையுலக.... பணி பற்றித்தளங்களை கொடுத்து அனைவரையும் அசரவைத்தவர்.... தன் கலையுலக சேவையை தொடர அனைவரும் வாழ்த்தினோம்....

    அடுத்தது.. நண்பர் சாகரன்தன்னை அறிமுகப்படுத்தினார்

    தமிழ் நெஞ்சங்களுக்கு!..... . தங்கள் எண்ணங்களை நம்முடன் இன்னும் பரிமாற வாழ்த்தினோம்.... பிறகு பணிவான வணக்கம் செலுத்தி நிதன் தன்னை அறிமுகமாக்கி கொண்டார்... அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...





    அறிவிப்புகள், தகவல்கள்


    விமான நிலையத்தில் அனைவரும் கூடினவுடன்...... அனைவருக்கும்... சில அறிவிப்புகள்.. என்றார் இளசு.

    இளசு : விமானத்தில் அனைவரும் சேர்ந்து செல்வதால், நாம் கட்டுப்பாடுடன் செல்லவேண்டும். அதுதான் மன்றத்திற்கு பெருமை சேர்க்கும்.

    மன்மதன் : கட்டுப்பாடா... என்ன அண்ணா... மிலிட்டரி ரேஞ்சுல சொல்லுறீங்க.

    இளசு : நான் சொல்வது.. நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடு.... தம்பி..

    கவி : புரியலையே அண்ணா...

    இளசு : நான் குறிப்பாக சொல்வது விமான பயணத்தில் அளவோடு உற்சாகபானம் அருந்துவது... சந்தோஷத்தின் மிகுதியில் அளவுக்கு அதிக சத்தமாக பேசாமல் இருப்பது....

    மணியா : ஜாலியா இருக்கலாமுன்னா உடமாட்டேங்கிறீங்களேப்பா...

    ஹேமா மணியா : என்னது இங்க ஒரு ஆளு குத்துக்கல்லாட்டாம் இருக்கேன்.... ஜாலி கேட்குதாக்கும்.....

    மணியா : ஜாலியா.. அப்படி ஒன்னும் சொல்லலையே.... ஜாடி என்று சொன்னது.. உனக்கு மாறி காதில் விழுந்திருக்கும்...

    (மைதிலி... ஹேமா அண்ணிக்காதில் ஏதோ கூற)

    மணியா : ஏய் மைதிலி குடும்பத்துல குழப்பத்தை உண்டுப்பண்ணாதே......



    தலைவர் இராசகுமாரன் பற்றி கூறி.. தளத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்..... உடனே நம் நண்பர்.. சிலர் ஆசான்களாகவும், மாணக்கராகவும்.... விருப்பம் தெரிவிக்கின்றனர்.



    இளசு முன்பாக வந்து....

    மே மாதச் சிறந்த பங்காளர் -- பரஞ்சோதி என்ற அறிவிப்பை வழங்க.... தொடர்ந்து சிறப்பானவர் என்ற பரிசை பெற்ற பரம்ஸை அனைவரும் வாழ்த்தினர்......



    திடீரென சேரன் கயல் ஒரே மகிழ்ச்சி......



    இளசு "யார் வெளியிட்டா என்ன சேரன்...... வாழ்த்துக்கள் இருவருக்கும்" என்றார்.....



    பின் நண்பர் திருவருள் முன்பாக வந்து........ நண்பர்களே...உழைப்புக்கு தக்க வகையில்

    ஆனி (ஜூன்) மாத சிறந்த படைப்பாளி யாக கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கிறார்...... கவிக்கு இரட்டை மகிழ்ச்சி...... அனைவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.....



    இராசகுமாரன்... "நண்பர்களே சிங்கப்பூர் நம் ஊர் மாதிரி இல்லை, வீதியில் குப்பை போடக்கூடாது..... கூட்டமாக நின்று.. இரைச்சல் எழுப்பக்கூடாது. வரிசையில் நின்று பஸ் ஏறவேண்டும்....." என பல அறிவிப்புக்களைக்கொடுக்கிறார்.........



    உங்கள் சந்தேகங்கள், நமது தளம்


    இன்னும் விமானநிலைய ஆய்வுக்கு செல்ல 20 நிமிடம் உள்ளது..... சந்தேகம் உள்ளவர்கள்..... கேட்கலாம்... என்றார்... திருவருள்...

    மணியா : எத்தனை இருக்கைக்கொண்ட விமானம் ??

    அறிஞர் : இது 120 இருக்கைகள்.. கொண்ட சிறிய விமான... நமக்காக தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளது ..


    எடை, பரிசோதனை, சுங்க, குடியுரிமை ஆய்வு எல்லாம் நல்லபடியாக முடிய.... அனைவரும் விமானத்தினுள்... நுழைந்தனர்...



    ஜுஸ், சைவ, அசைவ உணவு, காபி, டீ மற்றும் உற்சாகபானம் பரிமாறப்பட்டது....... அனைவரும்.. அருந்தி.. மகிழ்ந்தனர்....



    பிறகு பரஞ்சோதி முன்வந்து.....

    ஓட்டெடுப்பு ஜுன் மாத சிறந்த பங்களிப்பாளர் போட்டி பகுதிகளை அறிவித்தார்...... இது மிகபயனுள்ள பகுதி என்று அவரை பாராட்டினர்....... பரம்ஸ் கொடுத்த பயனுள்ள தகவல்களின் அடிப்படையில்.... சென்ற மாத நடவடிக்கை அழகாக சித்தரித்து வழங்க.... மைதிலி அழைக்கப்பட்டார்..... ஜொலிக்கும் பட்டுபுடவையுடன்..... முன்வந்தார் மைதிலி வர... மன்மதனாக்கு எஸ்கேப்பாவதை தவிர.. வேறு வழி தெரியவில்லை.......


    இதைக்கண்டு அனைவரும் சிரிக்க..... ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.. என்ற அறிவிப்புடன்.. பிரகாசமான விளக்குகள்.. அணைக்கப்பட்டன.. சிலர் உறங்கினர்.... மணியாவின் குறட்டை சத்தத்தால்.... உறக்கத்தை துறந்தோர்...சிலர்....

    மற்ற சிலரோ... இருக்கைக்கு முன் உள்ள சின்னத்திரையில்.. சினிமாப்பாடல், சினிமா, காமெடி என இரசித்தனர்.......

    அதிகாலை வேளையில்.... விமானம் பத்திரமா சிங்கப்பூர் - சாங்கி விமான நிலையத்தை வந்தடந்தது.... அனைவரும் சிங்கப்பூர் பத்திரமாக வந்திறங்க..... முதல் முறை.. சிங்கப்பூர் வரும்.... , வைத்த கண் வாங்காமல்.. சிங்கப்பூர்.... விமான நிலைய உள் அலங்காரத்தை கண்டு வியந்தனர். செம்மொழியாம்.. தமிழில அறிவிப்பு பலகைகளை கண்டு.... அனைவரும் பெருமிதம் கொண்டனர்.....


    எல்லா சோதனைகளும் முடிந்து.... தங்கள்.. பெட்டிகளுடன்.. அனைவரும் வெளிவர.... காத்திருந்த விசேஷ பஸ்கள்.. அனைவரையும் சுமந்த..... விருந்தினர் மாளிகை சென்றது. அனைவரும் சில மணிநேர ஓய்வு எடுத்து.... காலை உணவுக்காக.... சாப்பிடும் அறைக்கு வந்தனர்....

    சுமா : எங்கே சேரனையும், மன்மதனையும் காணோம்.....

    பரம்ஸ் : நேற்று வெள்ளிக்கிழமை.. எனவே அவர்கள் ரொம்ப பிஸி

    தேம்பா : என்ன புல்லா......... பிஸியா...

    பூ : எங்களை நிம்மதியா இருக்க விடமாட்டிங்களே.....

    நாரதர் : நான் போய் எழுப்பி வருகிறேன்...

    லாவண்யா : ஆஹா... கும்பகரண்களை எழுப்ப கிளம்பிட்டாங்கய்யா......


    மல்லி மன்றம்

    செய்திச் சோலை


    காலை உணவருந்திக்கொண்டே....தொலைக்காட்சியை நோக்கினர்.. இராசகுமாரன் திரையில் தோன்றி.. பக்கத்து நாட்டு செய்திகளை....

    மலேசிய செய்திகள் என்று தொகுத்து வழங்கினார்... தினமும் சிறப்பாக பணிபுரியும் அவரை அனைவரும் வாழ்த்தினர்.....



    பிறகு திருவருள் என்று அளிக்க... அனைவரின் கணகளும் குளமாயின....



    சேரனும், மன்மதனும் சாப்பிடும் அறையில் நுழைய...



    நிலா : என்ன புல்லா...... சேரன்..... அண்ணி போன் பண்ணட்டா...

    சேரன் : வேறு பொழப்பில்லை.... பேசாம இருக்கியா கொஞ்சம்... எனக்கே தலை வழுக்குது என.....

    தாமரை : என்ன தலை வழுக்குதா....

    மணியா : அது நாக்கு ஸ்லிப்பாகிடுத்து........

    மைதிலி : அப்படின்னா.....

    தேம்பா : என்னப்பா இது கூட தெரியலையா.... ஐயாவுக்கு தலை வலிக்குதாம்...

    (ஹேமா அண்ணி.. தைலம் கொடுக்க.. அமைதியாகிறார்கள் இருவரும்)



    கவிதைகள், பாடல்கள்


    தொலைக்காட்சியில்.. நண்பன் என கவிதைகள்.. பொழிய.... காலை நேரம்... அருமையாய் கடந்தது......



    அனைவரும் தயாராகி நிற்க



    இக்பால் : இப்ப எங்க போறோம்..

    அறிஞர் : சிங்கப்பூரில் பிரசித்தமான மிருக காட்சி காலை செல்லப்போகிறோம்...

    மன்றத்தில் இத்தனை மிருகங்களை பார்க்கிறோம்... அப்புறம் எதுக்கு அங்க....

    மன்மதன் : என்னத்த அப்படி பார்த்த....

    மைதிலி : உங்களணியை தினமும் பார்க்கிறதைதான் சொல்லுறாங்க.....

    பூ : இது கொஞ்சம் ஓவர்..........

    அறிஞர் : போதும்.. நிறுத்துங்க..... சிங்கப்பூர் மிருக காட்சி சாலை அற்புதமானது.... உலகில் சிறந்த மிருக காட்சிச்சாலைகளில் ஒன்று... இது திறந்தவெளி மிருக காட்சிசாலை....

    தேம்பா : அப்படின்னா.

    பிஜிகே : அது வந்து.. மிருகங்களை அடைத்துவைக்காமல் பிரியா உலாவ விட்டிருப்பார்கள்.....

    சாகரன் : அப்படின்னா... நம்மை வந்து கடிக்காதா.....

    அறிஞர் : அது ஏற்ற பாதுகாப்பு வேலிகள் உண்டு...... கங்காரு போன்ற மிருகங்கள்... ரோடுகளில் நடமாடும்.. நீங்கள்.. தொட்டு விளையாடலாம்....

    ராம்பால் : மன்மதா... கங்காருவை பிடித்து வருவல் பண்ண நினைக்காதே.....



    அனைவரும் பஸ்ஸில் செல்லலாம்...... அனைவரும் zooவை அடைந்தனர்......





    சிரிப்புகள், விடுகதைகள்


    மன்மதன் மிருகங்கள்.. உங்கள் கைவசம் வரும் முன்.....

    மோனலிசா - உங்கள் வசம்.. வரவைக்கிறேன் என்றார்.... எப்படி என்று.. ஆவலுடன் பார்க்க.. ஆஹா உண்மையிலே மோனலிசா... பல முகச்சாயலில்....... அருமை என்றனர்....

    மன்மதன் : இதுக்கே இப்படின்னா...

    புஷ் - உங்கள் வசம்) என்றார். இது என்ன... இப்படி புஷ்ஷை பாடுபடுத்துகிறீர்கள்.. என அனைவரும் சொல்ல.... இது மட்டுமா என்று... இன்னும் சில சிரிப்புக்களை... மேக்ரோ மீடியா பிளாஷ் - சிரிப்புகள்.. ,

    டைட்டானிக் கப்பல் இன்று மூழ்கியிருந்தால் - உலக நாடுகளின் பார்வையில்.. எடுத்துவிடுகிறார் மன்மதன்... அனைவரும் சிரிப்பில் மூழ்க..... மிருக காட்சி சாலையில் உட்புறம் பயணம் தொடர்கிறது.....

    இராசகுமாரன் : யாரும் விலங்குகளும் உணவு கொடுக்காதீர்கள். கொடுத்தால்... அபராத பணம் கட்ட வேண்டி வரும்....

    ஆஹா எத்தனை அழகான விலங்குகள்... ஆஸ்திரேலியா லாமா, கங்காரு, நெருப்புக்கோழி..... அருமையோ அருமை...

    நெருப்புக்கோழி முன்.... அறிஞர்... மெல்கியுடன் படம் எடுத்துக்கொள்கிறார்.....


    சிங்கம், புலி... எல்லாம் அழகாக குகையில் படுத்து இருக்கின்றன....

    அறிஞர்: அதோ பாருங்க, வெள்ளைப் புலி, ரொம்பவும் அபூர்வமானது.




    அன்பு : என்ன தலை ஆடு, மாடெல்லாம் இங்கு இருக்கு....

    மணியா : இந்த ஊருல குழந்தைகளுக்கு இதையெல்லாம் zooவுல பார்த்துதான் தெரிந்துக்கொள்ளனும்லே....

    பனிக்கரடி... தண்ணீரில்... விளையாடுவது அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது..... பெங்குவின் பறவைகளின் அணிவகுப்பு நடை அனைவரையும் கவர்ந்தது...........


    சாகரன் : சிங்கப்பூர் என்னை வியக்கவைக்கிறது..... எத்தனை வளர்ச்சி.... பொறியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்கு.....

    இளந்தமிழ்செல்வன் : பொறியாளர் இல்லாத உலகம் எவ்வாறு இருக்கும்....

    மன்மதன் : அதெப்படியிருக்கும் என நான் சொல்லவா.......

    அறிஞர் ஆராய்ச்சி கூடத்தில் ஐவரணி(2) - பொறியாளர் இல்லாத உலகம்

    அறிஞர் : இது கொஞ்சம் ஓவரலே....

    அனைவரும் சிரிக்க.........

    மனோஜி : இங்கு இவ்வளவு வளர்ச்சிக்கு நல்ல அரசியல் சூழல்தான் காரணம்...

    நிதன் : அரசியல்னா என்னா....

    மது என்றால் என்ன என்பதை சுருக்கமாய் விளக்க... அனைவரும் வியக்கின்றனர்...

    குடும்பத்தை பத்தி உமக்குதான் பேச தெரியுமா எனக்கும் தெரியும் என்று கவிதா... எனச்சொல்ல.... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது...


    என்னது ஆளா.. ஆளுக்கு என்னமோ பண்ணுறாங்க.. என மைதிலி...

    விடுகதைகள் :-), புதிர் பயணம் என கேள்விகணைகளை போட்டுத்தாக்க அவைரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்...... இது மட்டுமா.. இன்னும் என்னிடம் சரக்கு இருக்கு.. என மைதிலி

    போன மச்சினி திரும்ப வந்தாங்க.......... , தஞ்சம்மா.....மஞ்சம்மா என எளிய நடையில் பயனுள்ள தகவல்களை அள்ளி தெளிக்க.... அனைவரும்.. வியந்து வாழ்த்தினர்..

    மந்திரவித்தை கற்று தருகிறேன் என மைதிலி சூ........மந்திரக்காளி காட்ட.... வியந்தனர்...

    zooவை விட்டு வெளியே வர.....

    மன்மதன் : ஆஹா சூப்பர் மிருககாட்சி சாலை... மைதிலியின் நண்பர்களை சந்தித்த திருப்தி....

    மணியா : இதுக்கே இப்படின்னா.. இங்கப்பாரு... அனைத்து மிருகங்களையும் கையில் வரவழைகிறேன் பார்......

    கைகளில் வர்ணஜாலங்கள் - மணியா என கைவிளையாட்டுக்களை காண்பிக்க.....


    அனைவரும் தலையை பாராட்டினர்......

    மன்மதன் : எனக்கு ரொம்ப பசிக்குதே...

    நாரதர் : தேம்பாதான் நொறுக்கு தீனி நிறைய எடுத்து வந்தது.. அதைக்கேள்.....

    தேம்பா : அவனுக்கெல்லாம் கொடுக்க இது பத்தாது.

    அறிஞர் : ஓகே ஓகே...அனைவரும் சாப்பிட்டு... அருகில் பூங்காவுக்கு செல்லலாம்...


    நீதிக்கதைகள், சுவையான சம்பவங்கள்

    சாப்பாடு முடிந்து.. அனைவரும் பூங்காவில் ஓய்வெடுக்கும்போது....

    பரம்ஸ் அழைத்து செல்ல....

    ஆஹா அருமையோ அருமை என வியந்தனர்....

    அறிஞர் : பரம்ஸ் கலக்கிட்டிங்க... உண்மையிலே அனுபவித்து மகிழ்ந்தோம்...

    மணியா : வாழ்த்துக்கள்.. பரம்ஸ்.. நல்ல ஓய்வு.... நல்ல பயணம்...

    கவிதா அளிக்க.... அனைவரும் வாழ்த்தினர்...

    இக்பால் என்று கொடுக்க......

    சாகரன் : அருமையான் கற்பனை.. அழகோ அழகு...

    பிஜிகே வை கொடுக்க... அனைவரும் வாழ்த்த...

    இளசு தருகிறேன் என அள்ளிவிட... அனைவரும் போற்ற.... ஓய்வு நேரம் இனிமையாய் கழிந்தது..

    சுமா : அடுத்து எங்க....

    அறிஞர் : கவியும், மைதிலியும் ஷாப்பிங் செல்லவேண்டும் என நச்சரிப்பதால்..... இப்போது ஷாப்பிங்.....

    தாமரை : எங்க போக போகிறோம்..

    மணியா : லிட்டில் இந்தியாவுக்கு.. அங்கு செல்லும்போது.. நம்மூர் போன்ற உணர்வு.. தெருவோர டீக்கடைகள்... இருக்கும்...

    நிலா : என்னது டீக்கடை ஓரத்தில் ஷாப்பிங்கா...

    அறிஞர் : இல்லை மணியா.... இடத்தை பற்றி சொன்னேன்... ஒரே இடத்தில் எல்லாப்பொருட்களும்.. வாங்கலாம்...

    அஜீவன் : எங்கே????..

    அறிஞர் : அனைவரும் அறிந்த.... 1971ல் ஆரம்பிக்கப்பட்ட முஸ்தபா ஷாப்பிங் சென்டர் செல்லலாம்... அங்கு... சாரி, நகைகள், எலக்டாரானிக்ஸ், எலக்டிரிக், விளையாட்டு பொருட்கள்... என எல்லாம் பொருட்களும்... வாங்கலாம்... என்ன சரியா.....



    அனைவரும் பொருட்கள்... வாங்கி திரும்பும்போது.. புத்தக பிரியர்களுக்காக... புக் ஸ்டோர் சென்று புத்தகங்களை.. வாங்கி இருப்பிடம் திரும்பினர்...


    திடிரென்று, மைதிலி "டேய் மன்மதா, உன் புகைப்படம் எப்படி சிங்கப்பூர் வந்தது" என்று சொல்ல,




    எல்லோரும் ஆவலோடு பார்க்க, மன்மதனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.

    இக்பால்: போதும் போதும் உங்கள் கிண்டல், நேரமாகி விட்டது, கிளம்பலாம்.

    இரவு... உணவு வேளை..... தொலைக்காட்சியில் சில ஒளிபரப்பு...


    இலக்கியங்கள், புத்தகங்கள்

    தொலைக்காட்சியில் இளசு தோன்றி.....

    பாலகுமாரன் கவிதைகள்.. என வழங்க... அனைவரும் இரசித்தனர்... அடுத்து...... நண்பர் ராம்பால் என வழங்க... அனைவரும் மெய்சிலிர்த்தனர்...

    உணவு அருந்தி.... அனைவரும் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு சென்றனர்....

    மணியா : நண்பர்களே.. உறக்கத்திற்கு முன்.. சிறிது நேரம்... தொலைக்காட்சியில் செலவிடுங்கள்.... இன்னும் சில நேரம் ஒளிபரப்பு தொடரும்...


    புதிய சிறுகதைகள், தொடர்கதைகள்

    இளசு திரையில் தோன்றி.. நம் நண்பர் ராம்பால் என்ற கருத்துமிக்க கதையை அளிக்க... அனைவரும் ரசித்து.. பின் உறங்கினர்....

    -----------------------------------------------------------

    குறிப்பு : வேலைப்பளுவின் மத்தியில் விளையாட்டை எழுதப்போய்... நிழற்பட்த்தின் முதல் பாகம் இவ்வாறு உருவாகிவிட்டது..... இரண்டாம் பாகம் உருவாக சற்று நாளாகிவிட்டது....

    ------------------------------------------------------------
    Last edited by மன்மதன்; 20-06-2005 at 10:41 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    அடடா....அமர்க்களம்....... மிகவும் இயல்பாக வந்திருக்கிறது........பாராட்டுக்கள் அறிஞரே....... இன்னும் இரண்டு நாட்கள் வேறு ஆராய்ச்சியில் இறங்காமல் முதலில் மீதி பாகத்தையும் கொடுத்துவிடுங்கள்...... . மிகவும் அனுபவித்து படித்து ரசித்தேன்......

    அன்புடன்

    மணியா
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 09:22 AM.

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அறிஞர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.



    வித்தியசமான நிழற்படம், வித்தியாசமான நடை.



    மாதாமாதம் நிழற்படத்தின் மூலம் புது புது பயணங்கள், அடுத்த பயணம் நிலாவுக்கு தான்.



    விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன், மேலும் சிங்கப்பூர் பற்றிய அனைத்து விபரங்களும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 09:23 AM.
    பரஞ்சோதி


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அருமையான சிங்கப்பூர் பயணம் மூலம் கலகலப்பாக நிழற்படம் தொகுத்த அறிஞருக்கு பாராட்டுக்கள்.. அதிலும் குறிப்பாக சிங்கப்பூரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கொடுத்தது சூப்பர்ப்... அடுத்த பாகம் உண்டா. கலக்குங்க அறிஞரே..



    அன்புடன்

    மன்மதன்
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 09:23 AM.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    Re: (2004) ½- 17

    வாழ்த்திய மணியா, பரம்ஸ் மற்றும் மன்மதனுக்கு நன்றி......



    அடுத்த பாகத்தில்.. சிங்கப்பூரின் முக்கியமான செந்தோசாவும், பறவைகள் பூங்காவும்... வரும்.......
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 09:24 AM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அடடா....அமர்க்களம்.......மிகவும் இயல்பாக வந்திருக்கிறது........பாராட்டுக்கள் அறிஞரே....... இன்னும் இரண்டு நாட்கள் வேறு ஆராய்ச்சியில் இறங்காமல் முதலில் மீதி பாகத்தையும் கொடுத்துவிடுங்கள்...... . மிகவும் அனுபவித்து படித்து ரசித்தேன்......அன்புடன் மணியா


    நன்றி மணியா.. முடிக்க ஆசைதான்.. இன்னும் இரண்டு நாளில்.. ஒரு பிரசண்டேசன்.. உள்ளது... அது முடிந்தவுடன்.. இந்த வேலைதான்....
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 09:24 AM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் mythili's Avatar
    Join Date
    07 May 2004
    Posts
    2,300
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    1
    Uploads
    0
    கலக்கிட்டீங்க அறிஞரே:-)



    சிங்கப்பூர் போய் வந்த திருப்தி.

    அடுத்த பாகத்தையும் சீக்கிரம் குடுங்க :-)



    அடுத்த பாகமும்...இதைப் போலவே படங்களோடு கலர்புல்லா இருக்கும் இல்ல?



    அன்புடன்,

    மைதிலி
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 10:04 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கலக்கிட்டீங்க அறிஞரே:-)



    சிங்கப்பூர் போய் வந்த திருப்தி.

    அடுத்த பாகத்தையும் சீக்கிரம் குடுங்க :-)



    அடுத்த பாகமும்...இதைப் போலவே படங்களோடு கலர்புல்லா இருக்கும் இல்ல?



    அன்புடன், மைதிலி


    ஏதோ என்னால முடிஞ்சா அளவு... உப்புமா கிண்டி கொடுத்தேன்...



    அடுத்த பாகத்தில்... இன்னும் சில படங்கள் அவசியம் தொடரும்.... :wink: :wink: :wink: :wink:
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 10:05 AM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    கலக்கிட்டீங்க அறிஞரே:-)



    சிங்கப்பூர் போய் வந்த திருப்தி.

    அடுத்த பாகத்தையும் சீக்கிரம் குடுங்க :-)



    அடுத்த பாகமும்...இதைப் போலவே படங்களோடு கலர்புல்லா இருக்கும் இல்ல?



    அன்புடன்,

    மைதிலி


    ஜூலை மாத சிங்கப்பூர் பயணம்...நிழற்படம்]



    "சேப்பு கலரு சிங்குசா.....பச்சை கலரு சிங்குசா.....".....

    (ஜாலரா ஒலியை பின்னனியில் கொள்க......)......

    அன்புடன்

    மணியா..... :lol:
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 10:14 AM.

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    Re: (2004) ½- 17

    வாழ்த்திய மணியா, பரம்ஸ் மற்றும் மன்மதனுக்கு நன்றி......

    அடுத்த பாகத்தில்.. சிங்கப்பூரின் முக்கியமான செந்தோசாவும்
    அறிஞர் அவர்களே!

    நீங்க பாட்டுக்கு செந்தோசா என்று சொல்லிட்டீங்க,

    இங்கே மன்மதன் அது எனன் தோசா, எனக்கு உடனே ஒரு செட் தோசா வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.

    சின்னபுள்ளையை கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதே வேலையா போச்சுது.
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 10:15 AM.
    பரஞ்சோதி


  11. #11
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    அறிஞரே... சும்மா சொல்லக்கூடாது.. ஐவர் அணியில் கூட நீங்க இப்படி கலாய்க்கல..சூப்பரா சூப்பர் மார்க்கெட் வரைக்கும் சிங்கப்பூர் கூட்டிட்டு போய் ஜமாய்ச்சிட்டீங்க.

    அடுத்து எங்கே போகப்போகிறோம்??





    ஆவலுடன் - கவிதா
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 10:16 AM.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    " ̺..... ̺.....".....
    (á Ģ ɢ¢ ......)......
    Ҽ ¡.....
    â.. ¡.. Ţ... ...
    Last edited by மன்மதன்; 19-06-2005 at 10:17 AM.

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •