Results 1 to 3 of 3

Thread: ஜூன் 17, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  ஜூன் 17, வெள்ளிக்கிழமை மலேசிய செய்திகள்

  உலகத்தமிழ் மறை மாநாடு

  தலைநகரில் இன்று தொடங்கவுள்ள உலகத்தமிழ் மறை மாநாட்டில் பங்கெடுப்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழறிஞர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

  திருக்குறள் இன்றைய மனித வாழ்க்கைக்கும் பொருத்தமான வழிகாட்டியாகத் திருக்குறள் விளங்கும் நிலையினை பல்வேறு தலைப்புகளில் இப்பேராளர்கள் விவாதிக்கவுள்ளனர்.

  இம்மாநாட்டினை ஒட்டி 1000 பக்கங்கள் கொண்ட சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. நாளைத் திருவள்ளுவரின் சிலை திறப்புவிழா நடைபெறவுள்ளது.

  பொதுப்பணியமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலு தலைமையில் நிகழவுள்ள இச்சிலைத்திறப்பு விழாவிற்கு டான்ஸ்ரீ சோமசுந்தரம் முன்னிலை வகிக்கவுள்ளார்.

  கருத்தரங்கம், கண்காட்சி, நாடகம்,கலைவிழா, பேருரைகள், வெளிநாட்டுத்தலைவர்களின் உரைகள் என பலவகையான நிகழ்ச்சிகள் இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இணையம் வழி பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பம்

  உள்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த SPM கல்வித் தகுதியுடைய மாணவர்கள், இன்று முதல் தங்களின் விண்ணப்ப முடிவுகளை இணையம் வழி அறிந்து கொள்ளலாம் என உயர்கல்வி அமைச்சின் பொது விவகார அலுவலர் Rubaayah Osman தெரிவித்தார்.

  அது தவிர, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து, இடம் கிடைக்காத அல்லது ஏற்ற துறை கிடைக்காத மாணவர்கள் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E-Rayuan எனப்படும் மின்னியல் விண்ணப்பம் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அவர் மேலும் கூறினார்.  இம்மறு விண்ணப்பத்தினை இம்மாதம் 26 -ஆம் திகதிக்குள் இணையம் வழி அனுப்பி வைக்க வேண்டுமென்றும் அவர் நினைவுறுத்தினார். மலாயா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா


  நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான மலாயா பல்கலைக்கழகம் நேற்று நூற்றாண்டு விழா கண்டது.

  UM என்றழைக்கப்படும் மலாயா பல்கலைக்கழகம் மாணவர்கள் கல்வி கற்கும் மையமாக மட்டுமல்லாமல், நாட்டின் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக விளங்குகின்றது என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மலாயா பல்கலைக்கழகம் 89-வது இடத்தில் இருப்பதாகவும், இதை குறித்து தாம் மிகவும் பெருமையடைவதாகவும் அவர் அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

  இந்நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைத் துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

  சிறுநீரக நோய்க்கு கருத்தரங்குகள்

  நாடு தழுவிய நிலையில் சிறுநீரக நோய் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்க சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்து வருவதாக அதன் அமைச்சர் Datuk Dr Chua Soi Lek தெரிவித்தார்.

  சிங்கப்பூரில் இதே போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு முழுமையாக நிறைவேற்றப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

  நாட்டில் ஆண்டுதோறும் சிறுநீரகங்கள் செயலிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவ்வமைச்சுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், சிறுநீரகக் கோளாறுகளினால் அவதியுறும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  பாதுகாப்பு நிலையில் மலேசியர்கள்

  தென் தாய்லாந்தில் பாதுகாப்பற்ற நிலைமை நிலவுவதால் மலேசியர்கள் அப்பகுதியிலுள்ள சில வட்டாரங்களுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென கிளந்தான் மாநில போலிஸ் தலைவர் Datuk Zuber Shariff அறிவுறுத்தினார்.

  Narathiwat, Pattani மற்றும் Yala ஆகிய தென்தாய்லாந்து பகுதிகளில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் சுற்றுலா மேற்கொள்வதை மலேசியர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

  இருப்பினும், இப்பகுதிகளுக்குச் செல்ல அதிகாரப்பூர்வமாக தடை எதையும் மலேசியா பிறப்பிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  ஆனால், அப்பகுதிகளில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடந்து வருவாதல் மக்கள் அங்குச் செல்ல வேண்டாம் என மலேசிய பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவுறுத்தியிருப்பதாக அவர் நினைவுறுத்தினார்.

  பட்டதாரிகள் ஆங்கில மொழித்திறனை வளர்க்க வேண்டும்

  உலகச் சந்தையில் பிற நாடுகளுடன் போட்டியிடும் வலிமையைப் பெற உள்நாட்டுப் பட்டதாரிகள் தங்களின் ஆங்கில மொழியாற்றலை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என மனிதவள அமைச்சர் Datuk Dr Fong Chan Onn கேட்டுக் கொண்டார்.

  ஆங்கில மொழித்திறன் குறைவாக உள்ளதால் பெரும்பாலான பட்டதாரிகள் பணிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார்.

  இத்திட்டத்தில் வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகளுக்கு ஆங்கில மொழியில் உரையாடும் ஆற்றல், கணிணி பயன்பாடு, மின்னனுவியல் மற்றும் பொருளாதாரத்துறை தொடர்பாக பல பயிற்சிகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  அரசாங்கத் துறைகள் இடமாற்றம்


  ஈப்போவில் உள்ள சுமார் 20 அரசாங்கத் துறைகள் மற்றும் இலாகா mini Putrajaya எனப்படும் Bandar Meru Raya-விற்கு இன்னும் ஐந்து வருடங்களில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

  60 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் இப்புதிய திட்டம் குறித்து, சில அரசாங்க துறைகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக பேராக் மாநில மேம்பாட்டு அமைப்பின் அலுவலர் Datuk Samsudin Hashim தெரிவித்தார்.

  இப்புதிய இடமாற்றத்திற்கு இலஞ்ச ஒழிப்பு அமைப்பு, காட்டுவளத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இதர சில துறைகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.


  கம்போடியாவில் பள்ளி மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்
  கம்போடியாவில் உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் சூரியனார் கோவில் அருகே SIEM REAP என்ற இடத்தில் உள்ள ஒரு அனைத்துலகப் பள்ளிக்குள் நேற்று புகுந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, அப்பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பணயக் கைதிகளாக சிறைபிடித்துள்ளது.

  கம்போடிய இராணுவம் அந்த பள்ளியைச் சுற்றி வளைத்துள்ளது. அதிக அளவிலான பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றைத் தரவேண்டும் என அந்த கும்பல் கெடு விதித்துள்ளது.

  புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ள அந்த இடத்தில் உள்ள அப்பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் வசதியான குடும்பத்தினையும், அந்நியநாடுகளையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

  சென்னையில் 1,000 சுனாமி நிவாரண வீடுகள் தீயில் கருகின

  சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சுனாமி நிவாரண தற்காலிக வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

  சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்கில் நகர் பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. தார் ஷீட்டுகளைக் கொண்டு இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 1,700 வீடுகள் இங்கு உள்ளன.


  நேற்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகள் எரிந்து சாம்பலாயின. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

  சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் ஓரளவு தீ அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆயிரம் வீடுகள் வரை எரிந்து விட்டன. தீவிபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. நேற்று முன் தினமும் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு 70 வீடுகள் எரிந்தன. மீண்டும் அதே பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதால், சுனாமியால் பாதிக்கப்பட்டு இங்கு தஞ்சம் புகுந்திருந்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

  கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

  இந்தோனேசியாவில் இருந்து இந்தியத்துறைமுகமான கொச்சிக்கு வந்து கொண்டிருந்த சரக்குக்கப்பல் ஒன்று இலங்கை அருகே கடலில் மூழ்கியது.

  நேற்று இலங்கை அருகே வந்து கொண்டிருந்த அக்கப்பலில் தேங்காய் கழிவுபொருட்களை ஏற்றி வந்தது.

  கடந்த 32 ஆண்டுகளாக வெற்றிகரமாக கடல் பயணத்தை மேற்கொண்டு வந்த அக்கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட பலர் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகத் தெரியவந்துள்ளது. மூழ்கிய கப்பலைத் தேடும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

  முன்னிலையில் German அணி

  German மற்றும் Australia நாடுகளுக்கிடையே நடைபெற்ற Confederations கிண்ண காற்பந்து ஆட்டத்தில் German 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் Australia-வை வீழ்த்தியது.

  German அணி 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் Australia அணியை வீழ்த்துவதைவிட 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி இருந்தால் அவ்வெற்றி பெருமைக்குரியது என German காற்பந்து அணியின் இயக்குனர் Jurgen Klinsmann தெரிவித்தார்.

  எனினும், German இன்னும் அதிக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

  நன்றி வணக்கம் மலேசியா.காம்

  மனோ.ஜி

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  நல்ல தகவல்கள் அன்பரே... ஆங்கில கற்றுக்கொள்ள சொல்லி அரசு எடுக்கும் முடிவுகள்.. பயன் தரட்டும்...

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,837
  Downloads
  17
  Uploads
  0
  Ȣ ..
  ĺ ʨ ..
  Ҽ

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •