Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 53

Thread: அம்மா

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,637
  Downloads
  15
  Uploads
  4

  அம்மா

  அம்மா
  இனிமையான கடற்காற்று வீசும் மாலை நேரம்.... அமெரிக்க நாட்டின் எழில் கொஞ்சும்...மியாமி கடற்கரையில் ஒரு ஓய்வு இருக்கையில்....குமாருக்கு பழைய நினைவுகள்...

  சென்னையில் ஒரு சிறிய வாடகை வீட்டில்... காலை நேரம்.... வாசலில் அழைப்பு மணியின் சத்தம்....

  திறந்தால்.. பக்கத்து தெருவில் இருக்கும் தூரத்து உறவினர்....

  "வாருங்கள் அத்தான்.. என்ன சாப்பிடுறீங்க... காபி, டீ" என்றான் குமார்.

  "அதை அப்புறம் சாப்பிடலாம்...முதல்ல ஒரு முக்கியமான விசயம்....." என்றார் உறவினர்

  "சொல்லுங்க......"

  "கொஞ்சம் தைரியமா இருக்கனும் குமார்.... நான் என் சொல்ல வரன்னா...."

  "என்னதுக்கு சுத்தி வளைக்கிறீங்க.. நேராக விசயத்துக்கு வாங்க... யாரும் இறந்துட்டுங்களா.. சும்மா சொல்லுங்க" என்றான் குமார்..

  "இல்லை நேத்து உங்க அம்மாவுக்கு முடியவில்லை என மதுரையில் மருத்துவமனை சென்றிருக்கிறார்கள்... அம்மாவுக்கு இரத்த புற்றுநோயாம்.... அதுவும் ரொம்ப சீரியஸாம்... வேலூர் அழைத்து சென்றால் நல்லது என்று
  சொன்னார்களாம்.. இதை என் அக்கா ஊரிலிருந்து... போனில் தெரிவித்தார்....." என்றார் உறவினர்...

  கேட்டு ஒரு சில விநாடிகள் அதிர்ந்த குமார் "அது எப்படி அத்தான்.. அம்மாவுக்கா... கேன்சரா.. உடனே உயிருக்கு ஏதும் ஆபத்தா... உங்களுக்கு அது பற்றி ஏதும் தெரியுமா"

  "உடனே பாதிப்பில்லை... ஆனால் சில மாதங்களில் ஏதும் நிகழலாம்..... என்ன பண்ணப்போற" என்றார் கரிசனையுடன்...

  "அம்மாவுக்கு இது பற்றி தெரியவேண்டாம்..... நான் பார்த்துக்கொள்ளுகிறேன்..... "

  "சரி குமார்... நான் வரேன்..." என்று விடைபெற்றார் உறவினர்....

  உடனே எஸ்.டி.டி பூத் சென்று ஊருக்கு போன் பண்ணினான் குமார்...

  "நான் குமார் பேசுறேன்.....அம்மா... எப்படி இருக்கிங்க.." என்றான் குமார்.

  அதற்கு அம்மா, "முடியலைன்னு நேத்து மருத்துவமனை சென்றேன்... ஆனா டாக்டர.. வேலூர் செல்ல சொன்னார்.. என்னன்னு.. தெரியலை.. பயமா இருக்குப்பா...."

  "உங்களுக்கு ஒன்னும் இல்லை.... இன்றிரவு... கிளம்பி.. நாளை இங்க சென்னைக்கு வாங்க.... இரண்டு நாள் கழித்து.. வேலூர் செல்லலாம்...... ஒன்றும் கவலைப்படாதீர்கள்... " என்றான் ஆறுதலாக குமார்..

  "நீ பக்கத்துல இருந்தீனா.... எனக்கு நல்லா இருக்கும்பா"
  "நான் இருக்கேன்ல...ஒன்னும் கவலைபடாம இங்க வாங்க..."
  "சரிப்பா...... அப்பா கிட்ட... இரண்டு வார்த்தை பேசுறீயா...."
  "சரி கொடுங்க...."

  "அப்பா எப்படி இருக்கீங்க..... டாக்டர் என்ன சொன்னார்" என்றான் குமார்
  "அதான் அம்மா பற்றி தான் எனக்கு கவலையா இருக்கு..."
  "ஒன்னும் கவலைபடாதிங்க.. அம்மாவிடம் அவர்களுக்கு உள்ள வியாதி பற்றி சொல்லவேண்டாம்.. இரவு கிளம்பி இங்கு வந்திடுங்கள்.. என்ன சரியா. அப்புறம் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்"
  "சரிப்பா....வச்சுடட்டா......"
  "இல்லை அம்மாட்ட கொடுங்க...."
  "அம்மா... ஒன்னுக்கும் கவலைபடாதீங்க... இங்க வாங்க..." என அம்மாவிடம் சொல்ல....
  "சரிப்பா... வச்சுடுறேன்...." என போனை வைத்தார் அம்மா...

  அடுத்த நாள் பெற்றோர் வர.... அன்புடன் கூட இருந்து கவனிக்கிறான் குமார்.....

  இரண்டு நாள் கழித்து. வேலூரில் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்து... மருத்துவமனையில் ஹேமடாலஜி பிரிவுக்கு சென்றனர்.... காத்திருந்து.... மருத்துவரை பார்த்தார்கள்...

  "மீண்டும் ஒருமுறை இரத்த பரிசோதனை செய்து வாருங்கள்.." என்று மருத்துவர் சொல்ல... இரத்த பரிசோதனை நிலையம் இரத்தம் கொடுத்தார்கள் அம்மா...

  "என்ன அம்மா ரொம்ப இரத்தம் எடுத்துட்டாங்களா.. சோர்வாக இருக்கிறதா..... ஏதாவது குடிக்கவேண்டுமா" என்றான் குமார் பாசத்துடன்..
  "ஆமாமப்பா.... கொஞ்சம் மோர் வாங்கிட்டு வரியா..."
  "சரிம்மா.... " என வாங்கி வந்து தருகிறான்..... குமார்...
  "என்னதான் சொல்லு... நீ பக்கத்துல இருக்கிற மாதிரி வராது.. நீ ஒருவன் இருப்பது.. ஆயிரம் ஆம்பிளை இருக்கிறதுக்கு சமம்" இது அம்மா....

  "அதெல்லாம் இருக்கட்டும்.. இப்ப கொஞ்சம் ஓய்வெடுங்கள்.. நான் போய் தங்குவதற்கு நல்ல விடுதி பார்த்து வருகிறேன்...." என்று கூறி.. குமார் சென்றான்..

  ஒரு விடுதியில் இரவு தங்கி.. அடுத்த நாள் மீண்டும் மருத்துவரை சந்தித்தார்கள்.......
  பரிசோதித்த மருத்துவர்...... எல்லா இரத்த பரிசோதனை.. ஆய்வுக்குறிப்புகளையும் கண்டு... சில மருத்துகளை கொடுத்தார்....

  பிறகு மருத்துவர்.."தம்பி.. உங்க கிட்ட தனியா பேசனுமே......" என்றார் ஆங்கிலத்தில்..... சொல்ல..

  அரைகுறையாய் புரிந்த அம்மா "நீ வேணா.. மருத்துவரிடம் பேசிட்டு வாப்பா.. நான் வெளியில உட்கார்ந்து... இருக்கிறேன்" என நகர்ந்தார்.

  இதை கேட்ட குமாரின் கண்களில்... சிறிதளவு நீர் எட்டி பார்த்தது...
  அம்மா சென்றவுடன்..
  "சொல்லுங்க டாக்டர்" என்றான் குமார்.
  "அது வந்து தம்பி.. இரத்த புற்றுநோயில் பல வகைகள் உண்டு. அம்மாவுக்கு வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.. சதாரணமாக மனிதனுக்கு 4,000-10,000 இருக்கும்.. அம்மாவுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளது... இது ஒரு வகை நோய்"
  "அப்ப என்ன டாக்டர் பண்ணலாம்"
  "அதற்கு சில மருந்துகள் இருக்கிறது.. தினமும் உட்கொள்ளவேண்டும்.. மாதம் கிட்டத்தட்ட 1000 முதல் 1500 ரூபாய் செலவாகும் ஆனால்....சிறிது பக்க விளைவுகள் இருக்கும்.... உடல் சூடு அதிகரிக்கும்..."

  "அப்படியா.. அதை சாப்பிட்டா.. முழுவது குணமாகிவிடுமா... டாக்டர்"
  "இல்லைப்பா... இதன் மூலம் ஆயுள் நாட்களை சில வருடங்கள் அதிர்கரிக்கலாம்..... அவ்வளவு தான்.. அதாவது உங்க அம்மா.. மூன்றிலிருந்து.. ஆறு வருடம் தான் இருப்பார்கள்.... அதுவும் 5ம் 6ம் வருடங்களில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்...மேலும் இரத்தத்தை ஒவ்வொரு மாதமும் தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.." என்றார் மருத்துவர்.

  இந்த வார்த்தைகளை கேட்கும்போது.. மனதில் பாரம்.. 'ஏன் இதுமாதிரி எல்லாம் வருது.....'மனதில் கேள்விகளுடன் குமார்... "என்ன டாக்டர்... இதற்கு வேறு வழியில்லையா.... "
  "இல்லைப்பா.. இப்போதைக்கு எந்த மருந்தும் முழுவதுமாக குணமாக்க கண்டுபிடிக்கப்படவில்லை..... சில வருடங்கள் கழித்து.. எலும்பு மஞ்சை மாற்றும் சிகிச்சை பண்ணலாம்.. அதற்கு சில லட்சங்கள் ஆகும்... ஆனால் அதன் மூலம் ஒரு வருடம் ஆயுளை நீட்டிக்கலாம் அவ்வளவுதான்...."
  "என்னது சில லட்சம் செலவழித்தும்... ஒரு வருடம்தான் நீட்டிக்க முடியுமா... தங்களின் தகவலுக்கு நன்றி டாக்டர்..." என்று கூறி விடைபெற்றான்..

  மனதில் பாரம்... வெளியேற துடிக்கும் கண்ணீர்..... 'இது ஏன்.. யாருக்கு துரோகம் நினைக்காதவர் என் அம்மா.. அவர்களுக்கா.. இப்படியா.... நான் வாங்குவதே... சில ஆயிரம் ரூபாய் சம்பளம்.. இதுல சென்னையில் வீட்டு வாடகை... பிறகு அம்மா செலவை எப்படி கவனிப்பது...... சில லட்சங்களுக்கு என்ன பண்ணுவது' என பல கேள்விகளுடன் எண்ணங்கள் எழுந்தன.......

  "குமார்.. என்னப்பா சொன்னார் டாக்டர்" என்ற அம்மாவின் குரல்..
  எண்ணங்கள் கலைந்து.. சில தடுமாற்றத்துடன்.."அது வந்து... என்ன கேட்டிங்க"
  "இல்லை.. டாக்டர் என்ன சொன்னாருன்னு கேட்டேன்"
  "அதுவா.. உங்களுக்கு ஒன்னுமில்லைம்மா..... உங்களுடைய இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமா இருக்காம்... அதான்.. வேறு ஒன்றுமில்லை..." என்று ஒருவகையாக சமாளித்து... கூறினான் குமார்...

  "அப்படியா.. அதுக்குள்ள ஊரில உங்க பெரியம்மா.. எனக்கு கேன்சர் வந்திருக்குன்னு.. எல்லாரிடம் சொல்லுகிறார்... எனக்கோ பயம் வந்துவிட்டதுப்பா..." என்றார் சற்று தெம்பான குரலில் அம்மா...

  ஊரில் உறவினர்களை எண்ணி குமாரின் மனம் குமுறியது... 'உதவி செய்யா விட்டாலும்.. உபவத்திரமாவது...கொடுக்காம இருக்கனும்.... வியாதியுற்றவர்களுக்கு ஆதரவாய் இருப்பதை விட்டு விட்டு... மனது புண்படும்படியாய் பேச எப்படி மனம் வருகிறது' என....ஆதங்கம். 'நல்ல வேளை..அம்மாவுக்கு வியாதி பற்றி விவரம் தெரியாது' என குமாரின் மனம் கொஞ்சம் ஆறுதல் பட்டது.....

  அம்மாவிடம் "உங்களுக்கு ஒன்னுமில்லை.... கவலைபடாதீர்கள்.. நான் இருக்கேன்ல... "
  "அதான் எனக்கு ஒன்னுமில்லையே... இப்படியே நானும், அப்பாவும் ஊருக்கு போறோம்.. நீ சென்னைக்கு போ... " என்றார் தன் வியாதி பற்றி அறியாத அம்மா...வெள்ளந்தியாக....
  "இல்லைம்மா... என் வீட்டில் சென்னையில் ஓய்வெடுத்து பிறகு ஊருக்கு செல்லுங்கள்... " என்றான் குமார்.....

  மகனுடன் ஒரு வாரம் தங்க முடிவெடுத்து.. தங்கினார்கள்..... நேரம் கிடைத்தபோது அப்பாவிடம் தனியாக அம்மாவின் உண்மை நிலையை கூறினேன்....

  மறுநாள் காலை நண்பனிடமிருந்து.. போன் வந்திருப்பதாக பக்கத்து வீதியில் இருக்கும் அத்தான் கூற அவர்கள் வீடு சென்று.... பேசிவிட்டு திரும்பி வந்தான் குமார்...

  "என்னப்பா... யாரிடமிருந்து போன்..." இது அம்மா...
  "அதுவா... அமெரிக்காவுல இருக்கிற... எழில் இடமிருந்து அம்மா"
  "என்ன சொன்னான்... ஏதாவது விசேசமா....."
  "இல்லை எனக்கு ஒரு கம்பெனியில் அங்கு வேலை பார்த்திருக்கிறானாம்.... அதான் என் முடிவு என்ன என கேட்டான்..."

  "நீ என்ன சொன்னப்பா..." என்றார் கரிசனையுடன்...
  "இல்லையம்மா... நான் யோசித்து சொல்லுகிறேன்னு சொல்லிட்டேன்மா... உங்களுக்கு முடியாத நிலையில் இப்ப எப்படிம்மா.. போறது....." என அம்மாவின் உண்மை நிலையை சொல்ல முடியாமல்.... தடுமாறினேன்...

  "என்ன எனக்கு இரத்த புற்றுநோய் என்று நினைக்கிறாயாடா...." என்றார் அம்மா

  "என்னம்மா சொல்லுறீங்க....."

  "ஆமாம்டா.. நீ நேத்து... சொன்னதை எல்லாத்தையும் அப்பா என்னிடம் சொல்லிட்டார்டா" என்றவுடன்.. குமாருக்கு.. 'இந்த மனுசன என்ன பண்ணுறது, இதை போய் அம்மா கிட்ட சொல்லிட்டாரே' என அப்பாவின் மேல் ஒரே கோபம்.. ..

  "இல்லை அம்மா.. அப்பா கிடக்குறாரு.. உங்களுக்கு ஒன்னுமில்லைம்மா...."

  "மறைக்காதடா.. எல்லாம் எனக்கு தெரியும்.. இருக்கப்போறது சில வருடங்கள்தான்.... அதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்த்து.... உன் பிள்ளைகளை பார்த்தா.. நிம்மதியா கண்ணை மூடிடுவேண்டா..." என்றார் அம்மா.. இயற்கையான அன்னையின் எதிர்பார்ப்புகளுடன்.....

  "சும்மா பேசாம இருக்க மாட்டிங்களா.. இப்ப 24 வயதுதான் ஆகிறது.. அதுக்குள்ள கல்யாணம், குழந்தை என... இப்பவே என் பாடு திண்டாட்டமா இருக்கு.. அதுவும் சென்னையில் வாழ்க்கை என்பது சும்மாவா..... உங்கள் மருத்துவ செலவு வேறு உள்ளது... சும்மா பேசாம இருங்க.. என்னைய கொஞ்சம் சிந்திக்க விடுங்க...." என்றான் குமார் சற்று வெறுப்பான குரலில்.

  ஆனால் அம்மா சாந்தமாக "அப்புறம் எழிலுக்கு என்னதான் பதில் சொன்ன..."

  "அதான்மா... யோசிக்கிறேன்... உங்க நிலையையும் அவனிடம் சொன்னேன்... அங்க வந்தா மருத்துவ செலவுக்கு பிரயோஜனமா இருக்குமே என்றான்.. அதான் யோசிக்கிறேன்.. நீங்க என்ன சொல்லுறீங்கம்மா"

  "என்னை பற்றி கவலைப்படாதே... என்னோட காலம் ஓடிருச்சு.... உன் எதிர்காலம் தான்பா முக்கியம்... என்னால உன் எதிர்காலம் தடைப்படக்கூடாது... என்ன சரியா.." என்றார் உறுதியான குரலில் அம்மா...

  "இல்லை உங்க கூட பிறந்தவங்க எல்லாம் தப்பா நினைப்பாங்களே"

  "அவுங்க கிடங்கிறாங்க.... நல்லா இல்லாட்டி ஏசுவதும், நல்லா இருந்தா பொறாமை படுவதும் அவர்கள் இயல்பு. அவுங்களை நான் பார்த்துக்கிறேன்....நீ கிளம்பு." என்றார் அம்மா ஆதங்கத்துடன்...

  "இப்ப என்னம்மா சொல்லுறீங்க..." என்றான் குமார் ஆர்வமாக...

  "என் பையனோட எதிர்காலம்தான் முக்கியம்..... நீ வெளிநாடு போய்.. முன்னேறி பெத்தவங்களுக்கு, பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கனும்.... இதான்பா என் எண்ணம்.."

  "சரிம்மா.... உங்கள் விருப்பபடியே... போறேன்மா" என்றான் குமார் பவ்யமாக....

  எல்லாம் ஏற்படுகளும் முடிந்து விசா பெற்று... விமானத்தில் பயணம்....

  விமானத்திலும் இன்று வாழ்க்கையிலும் காதில் தொனிக்கிற தன்னலமற்ற அம்மாவின் வார்த்தைகள் "என்னோட காலம் ஓடிருச்சு.... உன் எதிர்காலம் தான்பா முக்கியம்...".

  இது போல அம்மா கிடைக்க என்ன தவம் செய்தோனோ.. என கண்கள் குளமாக இருந்த குமாரை.. "அப்பா இங்க பாருங்க..." என குமாரின் மகன் கடற்கரையிலிருந்து கூப்பிட... நினைவுகள் கலைகின்றன.
  ------------------
  பெரியவர்கள் பலர் உலவும் இடம்.. இதில் என் சிறிய முயற்சி..
  முயற்சி எப்படியிருக்கிறது என கூறுங்கள்.. குறைகளை சுட்டி காட்டுங்கள்...
  Last edited by அறிஞர்; 24-09-2006 at 02:25 AM.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  7,586
  Downloads
  5
  Uploads
  0
  படித்து முடித்தவுடன் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் அறிஞரே.
  அப்புறம் அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே?
  ரொம்ப பாதிச்சிருச்சு உங்க கதை.

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,637
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by pradeepkt
  படித்து முடித்தவுடன் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் அறிஞரே.
  அப்புறம் அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே?
  ரொம்ப பாதிச்சிருச்சு உங்க கதை.
  அதுக்குள்ள படிச்சுட்டீங்களா.... அடுத்த பாகத்தில் அவசியம் வரும் அம்மாவை பற்றி....

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
  Join Date
  14 Jul 2004
  Location
  துபாய்
  Posts
  2,603
  Post Thanks / Like
  iCash Credits
  7,632
  Downloads
  0
  Uploads
  0
  தொடருங்கள் நண்பரே, முதல் கதை என்றாலும் உணர்வுப்பூர்வமான கதை.
  தாய்மையை சொல்லும் கதைகள் எப்போதுமே மனதின் ஆழ ஆழ இடங்களில் பதிந்துவிடும்.முதல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
  Join Date
  24 Mar 2005
  Location
  கனடா
  Posts
  2,620
  Post Thanks / Like
  iCash Credits
  7,734
  Downloads
  0
  Uploads
  0
  அண்ணா கதை மிகவும் நன்றாக இருக்கின்றன அதோடு மிகவும் கவலையா இருக்கு பாவம் அந்த அம்மா. அம்மா என்றாளே ஒரு தனி விதம்தான் இந்த உலகிலே அம்மாவை விட சிறந்தது எதுகுமே இல்லை என்ன வாழ்த்துக்கள் அண்ணா முதல் கதையானாலும் மிகவும் அருமையான கதை.
  Last edited by சுவேதா; 09-06-2005 at 03:06 PM.

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
  Join Date
  13 May 2004
  Location
  மணிலா
  Posts
  2,188
  Post Thanks / Like
  iCash Credits
  13,799
  Downloads
  96
  Uploads
  0
  அறிஞரே..

  என்ன இது...எங்களை அழவைக்க ஒரு முயற்சியா..எளிய நடை..ஆனால் அழுத்தமான உணர்வுகள்...

  பாராட்டுக்கள் அறிஞரே... உணர்வுகளால் வரையப்படும் எந்த பதிவும் மனதில் இடம் பிடிக்கும்..

  அடுத்த பாகத்தை உடனே போடுங்கள்...
  Last edited by thempavani; 10-06-2005 at 01:49 AM.
  என்றென்றும்,
  உங்கள் தேம்பா.

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,637
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by பிரியன்
  தொடருங்கள் நண்பரே, முதல் கதை என்றாலும் உணர்வுப்பூர்வமான கதை.
  தாய்மையை சொல்லும் கதைகள் எப்போதுமே மனதின் ஆழ ஆழ இடங்களில் பதிந்துவிடும்.முதல் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
  நன்றி பிரியன்.. தங்களின் அன்பான கருத்துக்களுக்கு......

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,637
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by சுவேதா
  அண்ணா கதை மிகவும் நன்றாக இருக்கின்றன அதோடு மிகவும் கவலையா இருக்கு பாவம் அந்த அம்மா. அம்மா என்றாளே ஒரு தனி விதம்தான் இந்த உலகிலே அம்மாவை விட சிறந்தது எதுகுமே இல்லை என்ன வாழ்த்துக்கள் அண்ணா முதல் கதையானாலும் மிகவும் அருமையான கதை.
  அம்மாவை விட சிறந்தது எதுவும் இல்லை.. என்பது உண்மைதான் சகோதரியே...... தங்கள் கருத்துக்களுக்கு நன்றி....

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,637
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by thempavani
  அறிஞரே..
  என்ன இது...எங்களை அழவைக்க ஒரு முயற்சியா..எளிய நடை..ஆனால் அழுத்தமான உணர்வுகள்...

  பாராட்டுக்கள் அறிஞரே... உணர்வுகளால் வரையப்படும் எந்த பதிவும் மனதில் இடம் பிடிக்கும்..

  அடுத்த பாகத்தை உடனே போடுங்கள்...
  நன்றி.. தேம்பா...
  ஒரு சின்னா முயற்சிதான்...

  தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது கண்டு மகிழ்ச்சி..

  கதைக்கே அழுகை என்றால்.. இது மாதிரி உண்மை வாழ்வில் நிகழும்போது... எப்படி இருக்கும் எண்ணிப்பாருங்கள்.....

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  16,545
  Downloads
  4
  Uploads
  0
  மனதை நெகிழ வைக்கும் கதை.....இந்த கதையை படிக்கும்போது ஏன் இவ்வளவு நாட்கள் அறிஞர் கதை எழுத முற்படவில்லை என்றுதான் கேட்க தோணுகிறது. மிகவும் இயல்பான நடை.பாராட்டுக்கள் அறிஞரே.....நானும் கதை எழுதிவிட்டேன் என்று நிறுத்திவிடாதீர்கள். தொடருங்கள்...
  பாராட்டுக்களுடன்
  மணியா....

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  38,637
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by mania
  மனதை நெகிழ வைக்கும் கதை.....இந்த கதையை படிக்கும்போது ஏன் இவ்வளவு நாட்கள் அறிஞர் கதை எழுத முற்படவில்லை என்றுதான் கேட்க தோணுகிறது. மிகவும் இயல்பான நடை.பாராட்டுக்கள் அறிஞரே.....நானும் கதை எழுதிவிட்டேன் என்று நிறுத்திவிடாதீர்கள். தொடருங்கள்...
  பாராட்டுக்களுடன்
  மணியா....
  நன்றி மணியா.. தங்களுக்கு கதை படிக்கும் பழக்கம் உண்டா.....

  வாழ்த்துக்களுக்கு, ஊக்குவிப்புக்கும் நன்றி.... திடீரென சிந்தித்து கிறுக்கிவிட்டேன்.... இனியும் தொடர விருப்பம்..... காலம் பதில் சொல்லும்..

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  16,545
  Downloads
  4
  Uploads
  0
  Quote Originally Posted by அறிஞர்
  நன்றி மணியா.. தங்களுக்கு கதை படிக்கும் பழக்கம் உண்டா.....

  வாழ்த்துக்களுக்கு, ஊக்குவிப்புக்கும் நன்றி.... திடீரென சிந்தித்து கிறுக்கிவிட்டேன்.... இனியும் தொடர விருப்பம்..... காலம் பதில் சொல்லும்..
  கதை படிக்கும் பழக்கத்தை விட கதை விடும் பழக்கம்தான் அதிகம். நீங்கள் அடிக்கடி இந்த மாதிரி திடீரென்று சிந்தித்து கிறுக்குங்கள்.....அடுத்த கதையின்.... இல்லை....கிறுக்கலின் தலைப்பு.. காலம் பதில் சொல்லுமாவா......???
  அன்புடன்
  மணியா....

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •