Results 1 to 2 of 2

Thread: ஜூன் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  Post ஜூன் 9, வியாழக்கிழமை மலேசிய செய்திகள்

  Ops Warta-வின் மூலம் 10 லட்சம் ரிங்கிட் வசூலிப்பு

  நேற்று முன்தினம் நாடு முழுவதிலும் நடைபெற்ற நான்காவது Ops Warta நடவடிக்கையின் மூலம் சுமார் 10 லட்சம் ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.

  அதேவேளையில் போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்து கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட சுமார் 70 வாகனமோட்டிகளையும் கைது செய்துள்ளதாகவும் Bukit Aman தலைமையகத்தின் போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

  கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட சுமார் 918 வாகனமோட்டிகளில் 848 வாகனமோட்டிகள் சம்மன் தொகையைச் செலுத்தியதாக அவர் விளக்கமளித்தார்.சாலைக்குற்றங்களை மீறுவோர் மற்றும் நீதிமன்ற ஆணை புறக்கணிப்போர் மீதும் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

  தாய்லாந்து அமைச்சர் மலேசியா வருகை

  தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் Dr Kantathi Suphamongkhon ஐந்து நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். அவருடன் அவரின் துணைவியார் Soparvan Suphamongkhon, தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் வந்துள்ளனர்.

  அவர் இப்பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar-ஐ சந்திக்கவுள்ளதாகவும், நாளை பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-ஐ சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள முக்கிய விவகாரங்களை பற்றி கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

  இதனிடையே அவர், முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad-ஐ சந்தித்து லங்காவியில் தாய்லாந்திற்கான புதிய அலுவலகம் ஒன்றை திறக்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.  மாறுபட்ட கொள்கைகளால் அளவுக்கதிகமான விதிமுறைகள்

  பலதரப்பட்ட தரப்பினர் மாறுபட்ட அல்லது வெவ்வேறு வழிகளில் அரசாங்க கொள்கைகளை அமல்படுத்தி வருவதால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அளவுக்கதிகமான விதிமுறைகள் அல்லது red tape உருவாக்கப்படுவதாக பினாங்கு வீடமைப்பு மேம்பாட்டு துறையின் கிளை இயக்குனர் Datuk Eddy Choong Ewe Beng தெரிவித்தார்.

  இவ்வாறு வெவ்வேறு முறைகளில் அரசாங்க கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால்,நிலம் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டு தரப்பினர் அரசாங்க சம்பந்தப்பட்ட திட்ட வரைவுகளை செயல்படுத்த சிரமங்களும் தாமதமும் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  சிலாங்கூரைவிட பினாங்கில் குறைவான சட்ட விதிமுறைகளே அமல்படுத்தப்படுவதாலும் இது வணிகர்களுக்கு உதவி புரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  2003-இல் 1.9 பில்லியன் மதிப்புள்ள உற்பத்தி மற்றும் தொழில்துறை தொடர்பான முதலீட்டுத் தொகை,கடந்தாண்டு 2 பில்லியனாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு

  Jalan Gasing-கில் அமைந்துள்ள வீடொன்றில், சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  இவ்வெடிகுண்டை, அவ்வீட்டின் சமையல் அறையில், மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த குத்தகையாளர் ஒருவர் கண்டெடுத்ததாக Petaling Jaya குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் ASP Ahmad Asri Jamaluddin தெரிவித்தார்.

  தகவல் கிடைத்த சில மணி நேரத்தில் அங்கு போலீசாரும், சிலாங்கூர் வெடிகுண்டு ஒழிப்பு பிரிவினரும் விரைந்துச் சென்று வெடிகுண்டை மீட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரனை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.  சாலை விபத்தில் இரு இந்தியர்கள் மரணம்

  நேற்று முன்தினம் இரவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 282.5 கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு இந்தியர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் அறுவர் காயமடைந்தனர்.

  இவ்விபத்தில் ஒரு காரும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதாக நெகிரி மாநில போக்குவரத்து அதிகாரி ASP Mohd Shahar Ibrahim தெரிவித்தார்.

  இவ்விபத்தில் காயமுற்றவர்கள் சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். அந்நெடுஞ்சாலையில் ஏற்கெனவே கவிழ்ந்துக் கிடந்த கனரக வாகனம் மீது கார் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.
  மின்சாரம் தாக்கி பஸ் பயணிகள் பலி

  ஆந்திரா ஜம்மலமடுகு என்ற இடத்தில் இருந்து திரும்லரயபள்ளி என்ற இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதால் அதில் பயணம் செய்த 11 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர்.

  மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமுற்ற 14 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  பாரதிய ஜனதா தலைவர் அத்வானி பதவி விலகல்

  pakistan-க்கு தன் குடும்பத்தோடு சுற்றுலா மேற்கொண்ட பாரதிய ஜனதா தலைவர் அத்வானி,pakistan-ஐ உருவாக்கிய MOHD ALI JINNAHவின் கல்லறைக்குச் சென்று ஜின்னாவை திறம் வாய்ந்த தலைவர்;மதம் சார்பற்றவர், உயர்ந்த மனிதர் என்றும் கூறி புகழ்ந்து பேசியதால் சங்பரிவார் இயக்கங்கள் அவரை கடுமையாக சாடின.

  இதை தொடர்ந்து,அத்வானி தனது தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

  இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வெவ்வேறு சுதந்திர நாடாக இருந்தாலும் சில இயக்கங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே நாடாகவும் 'இந்திய ஒன்றியம்' எனவும் இன்னும் கருதுவதாகவும் அத்வானி தெரிவித்த கருத்து இந்தியாவிலுள்ள இந்து இயக்கங்களின் சீற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Maharashtra-வில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள்

  இந்தியாவில் பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவரும் மலேசிய கட்டுமானத்துறை, அந்நாட்டில் துரித மேம்பாடு அடைந்து வரும் மூன்றாவது பெரிய மாநிலமான Maharashtra-வில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் கட்டுமானத்தை தற்போது மேற்கொண்டு வருகிறது என பொதுப்பணித் துறையின் அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.

  மலேசிய கட்டுமான நிறுவனங்கள், இந்தியாவில் 5.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 36 கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டதாகவும், தற்போது 2.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 15 திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  தற்போது, Maharashtra மாநிலத்தில் மூன்று கட்டுமானத் திட்டங்கள் முடிவடைந்து விட்டதாகவும், இன்னும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகமான திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிட்டும் என எதிர்பார்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  ஈராக்கில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்கள்

  ஈராக்கில் நேற்று முன்தினம் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்களில் மூன்று போலீசார்,தீவிரவாதிகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

  இவ்வெடிகுண்டு தாக்குதல், ஈராக்கின் தலைநகர் Baghdad-ல் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Hawija நகரத்தில் ஏற்பட்டது.

  இதன் அருகிலுள்ள பகாராவிலும் தீவிரவாதிகள் நான்கு வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இதனிடையே சம்பவம் நடந்த சில நிமிடங்களில் பகாரா சோதனைச் சாவடி அருகே மேலும் ஒரு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

  இது தொடர்பாக வெடிகுண்டு தாக்குதலை முறியடிக்கவும் கட்டுப்படுத்தவும் கடந்த 2 வாரங்களில் 900 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  உலகில் நிலவப் போகும் நீர் பற்றாக்குறை

  உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென அஞ்சப்படுகிறது.

  சீனாவில் 2030-ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 1.6 பில்லியனாக அதிகரித்தால்,தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும் என அந்நாட்டிற்கான கட்டுமானப் பணிகளுக்கான அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

  உலகின் 21 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள சீனா உலகின் 7 சதவீத தண்ணீர் அளவே கொண்டுள்ளது எனவும்,நீர்த்தூய்மைக்கேட்டினால் இந்நிலை மேலும் மோசமடைய நிறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  இத்தகவலை அடுத்து பல உலக நாடுகள் தத்தம் நாடுகளில் நீர் வளங்களை பாதுகாக்கவும் சேமிக்கவும் பல நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  வெற்றிகரமாக பாய்ச்சப்பட்ட ஏவுகணை

  கடந்த திங்கட்கிழமையன்று,தென் சீன கடலில் 2 ஏவுகணை பாய்ச்சுதலை RSN எனப்படும் சிங்கப்பூர் கடற்படை துறையினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

  இருநாட்டு தடங்கலற்ற பயிற்சி திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க கடற்படை துறைகளும் போர் பயிற்சிகள் மேற்கொண்டதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு துறை அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

  போர் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஏவுகணை பாய்ச்சுதல் நடத்தப்பட்டதென அவ்வமைச்சு தெரிவித்தது.

  அது தவிர்த்து,சிங்கப்பூர்-அமெரிக்க பாதுகாப்பு ஒருங்கிணைப்பையும் இது மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Derby காற்பந்து அணியின் நிர்வாகி பதவி விலகல்

  மார்ச் 2003-ம் ஆண்டிலிருந்து Derby காற்பந்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வந்த அவ்வணியின் நிர்வாகி George
  Burley, தவிர்க்க முடியாத காரணங்களினால் தமது பதவியிலிருந்து விலகி கொண்டார்.


  Derby அணியை மோசமான நிலையிலிருந்து விடுவித்த Burley-யின் இப்பதவி விலகலின் காரணங்கள் விரிவாக கூறப்படவில்லை என அவ்வணியின் தலைவர் John Sleightholme தெரிவித்தார்.

  இருப்பினும், அவ்வணியின் தொடர் முன்னேற்றத்திற்கு வழிவிடவே அவர் இம்முடிவை எடுத்திருக்கும் கூடும் என தாம் நம்புவதாக Sleightholme மேலும் கூறினார்.

  நன்றி வணக்கம்மலேசியா.காம்


  மனோ.ஜி
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  நன்றி மனோ.... நல்லத்தகவல்கள்..

  சிங்கப்பூர்-அமெரிக்க உறவு... பொருளாதாரத்தை வலுபடுத்தினால் நன்றாக இருக்கும்...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •