Results 1 to 10 of 10

Thread: ஜூன் 6, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  ஜூன் 6, திங்கட்கிழமை மலேசிய செய்திகள்

  தேசிய சேவைப்பயிற்சித் திட்டப் பயிற்சியாளராக முன்னாள் இராணுவத்தினர்

  எதிர்காலத்தில் தேசிய சேவை பயிற்சித் திட்டப் பயிற்சியாளர்களாக ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவ்வியக்கத்தின் துணை இயக்குனர் Omar Abdul Rahman தெரிவித்துள்ளார்.


  அப்பயிற்சித் திட்டத்தில் பங்குபெறும் மாணவர்கள் ராணுவ வீரர்களைப் போன்று ஒழுக்கமுடனும் கட்டுக்கோப்புடனும் திகழ்வதற்காகவே, இத்திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறினார்.

  முன்னாள் ராணுவ வீரர்களைத் தேசியசேவை பயிற்சித்திட்டப் பயிற்றுனராக நியமிக்கும் விவகாரம் தொடர்பில் முன்னாள் ராணுவவீரர்கள் சங்கத்துடன் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  போலீசாரும், துப்பாக்கியும்

  தகுந்த சட்ட விதிகளின் அடிப்படையில் கடமையில் ஈடுபட்டிருக்கும்போதும்,மற்ற நேரங்களிலும் துப்பாக்கி வைத்திருக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என உள்நாட்டு பாதுகாப்பு துணை அமைச்சர் Datuk Noh Omar தெரிவித்தார்.


  அவ்வாறு வைத்திருப்பதற்கான சட்ட விதிகள் மிகவும் கண்டிப்பானவை;கடுமையானவை எனவும் குறிப்பட்ட அமைச்சர் அந்த சட்ட திட்டங்களை மீறும் சம்பவங்கள் மிகக் குறைவே என்றும் கூறினார். அவ்வாறு மீறிய போலீசாருக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

  நேற்று bidor-இல் நடைபெற்ற General Operations Force's 3rd Battalion கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.

  Rapid Response Unit-இன் உறுப்பினர்களாகிய போலீசார் கடமையில் ஈடுபடாத வேளையில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என கடந்த புதன்கிழமையன்று போலீசார் 2 இந்தோனேசிய ஆடவர்களை சுட்டதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

  சரவாக்கில் காட்டுத்தீப்புகை

  சரவாக் மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் நகர்ப்புறம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் புகை மண்டலம் பரவக் கூடும் என வானிலை ஆராய்ச்சி இலாகா அறிவித்துள்ளது.

  வழக்கமாக இந்த பருவகாலத்தில் புகைமண்டலம் அவ்வாறு பரவுவது இயல்பானதே என அவ்விலாகாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் Zaidi Zainal Abidin தெரிவித்தார்.

  பொது மக்கள் இது போன்ற காலக்கட்டத்தில் திறந்த வெளியில் குப்பைகளை எரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
  மலேசிய-வங்காளதேசக் கூட்டுக் கூட்டம்  எதிர்வரும் June,7-ஆம் தேதியன்று, மலேசிய- வங்காளதேச கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் எனப்படும் JCM கூட்டம் வங்காளதேசம் தலைநகர் Dhaka-வில், மலேசிய வெளியுறவு துறை அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தலைமையில் நடைபெறவிருக்கிறது.

  Malaysia- வங்காளதேசம் இடையிலான விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்,விவாதங்கள்,கலந்துரையாடல்கள் ஆகியவை நடைபெறவுள்ள இந்த JCM-கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பல அரசுத்துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
  கணினி மென்பொருள் கடத்தல்  சட்டவிரோதமாக கணினி மென்பொருளைக் கடத்தும் நடவடிக்கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடங்களைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் மலேசியாவில் தான் சட்டவிரோத கணினி மென்பொருள் கடத்தல் நடவடிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த அளவைக் குறைக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென Adobe Systems நிறுவனத்தின் மேலாளர் Tan Wee Ling தெரிவித்துள்ளார்.  தீவிர ஆலோசனை அல்லது பரிசீலனைக்குப் பின்னரே அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட துறையினர் கணினி மென்பொருள் தொடர்பான குறுந்தட்டுகளை விநியோகிப்பதற்கான லைசன்ஸ்களை வழங்க வேண்டுமென பெரும்பாலான கணினிமென்பொருள் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  அனைத்துலகப் புகையிலைப் பொருள் கருத்தரங்கம்


  2005 ஆம் ஆண்டுக்கான புகையிலை தொடர்பான அனைத்துலக கருத்தரங்கம் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் தலைநகரில் உள்ள DBKL அரங்கத்தில் நடைபெற உள்ளது.

  இது ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்துலக அளவிலான கருத்தரங்கம் என்ற போதிலும், புகையிலைப் பயன்பாடு தொடர்பாக அரசு கொண்டுள்ள கொள்கைக்கு முரணாக நிகழ்ச்சியை அமைக்க வேண்டாம் என சுகாதார அமைச்சு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

  மலேசியா உலகின் அனைத்துப் பகுதிகளுடனும் சிறப்பான விமானசேவையைக் கொண்டிருப்பதாலும், தரமான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதாலும் அக்கருத்தரங்கு கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


  சிரித்து வாழ வேண்டும்

  சிரிப்பது உடலுக்கு நல்லது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிரிக்கும் போது மனித உடலில் உள்ள கூடுதல் கலோரி எரிக்கப்படுகிறது. சிரிக்கும் போது மக்கள் புத்துணர்ச்சி பெறுவதால் அது உடலுக்கு நல்ல மருந்தாகிறது என்று அம்மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  மனித உடலில் உள்ள கூடுதல் கலோரி, சிரிப்பதன் மூலம் எரிக்கப்படுகிறது. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் சிரித்தால், 10 முதல் 40 கலோரி வரை எரிகிறது.

  எனவே சிரிப்பதன் முலம் உடலில் ஆற்றல் உருவாகிறது என கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள tennesi மாநிலத்தில் நடந்த மருத்துவ மாநாட்டில், Wonderfield பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  விபத்தில் நான்கு பேர் பலி

  PASIR PUTEH, Kampung Kandis-இல் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். மூன்று கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதனால் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

  படுகாயமடைந்த நிலையில் அறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் மரணமடைந்த ஒருவர் Machang-கிலுள்ள Teknologi Mara பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் இடைத் தேர்தல்களில் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி

  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் ஆட்சி அமலில் உள்ள கோவாவில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான சட்டசபை இடைதேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றது.

  இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 21 இடங்களுடன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது.

  இதனையடுத்து முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் ரானே தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
  சீனாவின் தியானென்மென் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலி

  சீனாவில் தியானென்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்ச்சியின் 16ம் ஆண்டு நினைவு தினம், சீனாவில் அசம்பாவிதம் இன்றி அமைதியாக கழிந்தது.

  கடந்த 1989ம் ஆண்டு, சீன அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை சீன ராணுவம் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

  இக்கொடூரச் சம்பவத்தின் 16வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால் Tiananmen சதுக்கத்தை சுற்றிலும் சீன போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஹாங்காங்கில் நேற்று முன் தினம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி நின்று அஞ்சலி செலுத்தினர்.


  இத்தாலி - பிரான்ஸ் சுரங்கப்பாதையில் தீ விபத்து

  இத்தாலியிலிருந்து பிரான்ஸ் செல்லும் Frejus சுரங்கப்பாதையில் தீப்பிடித்து இருவர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

  13 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த சுரங்கத்தில் நேற்று நள்ளிரவு வாகன டயர்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரியில் பிடித்த தீ வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களுக்கும் மளமளவென பரவியது. இதனால் பல வாகனங்கள் தீயில் கருகின.

  தீயணைப்பு வீரர்கள் தற்போது அத்தீயை கட்டுப்படுத்தி விட்டாலும், போக்குவரத்து நிலைக்குத்தியுள்ளது. சுரங்கப்பாதையின் பல பகுதிகள் முற்றிலுமாக சேதம் அடைந்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

  புலிகளுக்கு எதிராக நாடுகளைத் திரட்டும் இலங்கை அரசு

  விடுதலைப்புலிகள் இயக்கம் விமானப்படை அமைத்திருக்கும் முயற்சிக்கு எதிராக உலக நாடுகளின் கருத்தை திரட்டும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு இருக்கிறது.

  இருதினங்களுக்கு முன் இந்தியாவுக்குச் சென்றிருந்த இலங்கை அதிபர் சந்திரிகா இந்தியப்பிரதமருடன் இது தொடர்பாக விவாதித்தாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு அமெரிக்காவுடனும் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து புலிகள் விமானப்படை அமைப்பதை முக்கிய விஷயமாக கருதுவதாக வெளியுறவு அமைச்சர் Condoleeza Rice கருத்து தெரிவித்தார்.

  அண்மைக்காலமாக விமானம் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை சிறிது சிறிதாக சேகரித்து இரு போர் விமானங்களை விடுதலைப்புலிகள் உருவாக்கி இருப்பதாகவும், அடர்ந்த காட்டுப் பகுதியில் அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

  விமானப் படை போர் விமானங்களை வைத்து புலிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை அரசு அச்சம் தெரிவித்துள்ளது.


  வெற்றி வாகை சூடிய Henin

  பிரெஞ்ச் பொது டென்னிஸ் Grandslam போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பத்தாம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் Justin Henin, பிரான்சின் Marie Pears எதிர்த்து களமிறங்கினார்.

  ரஷ்யாவின் Kasnatsova, Maria Sharabova, Nimpthiya Betrova போன்ற முன்னணி நட்சத்திரங்களை வீழ்த்தி ஹெனின் தொடர்ந்து முன்னேறி வந்தார்.

  இறுதிப் போட்டியில் Marie Pears-ஐ எதிர்த்து விளையாடி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார். ஹெனின் கைப்பற்றும் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  நன்றி வணக்கம் மலேசிய .காம்

  மனோ.ஜி

  Last edited by மன்மதன்; 06-06-2005 at 12:05 PM.
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  5,036
  Downloads
  5
  Uploads
  0
  ஐயையோ ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

  பயப்படாதீர்கள் மக்களே, இது நானே போட்ட ???
  சரி மனோஜி, என்ன ஆச்சு?
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  Quote Originally Posted by pradeepkt
  ஐயையோ ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

  பயப்படாதீர்கள் மக்களே, இது நானே போட்ட ???
  சரி மனோஜி, என்ன ஆச்சு?
  காத்திருங்கள் நண்பா.... மீண்டும் அவர் பதிப்பார் என எண்ணுகிறேன்...

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  5,036
  Downloads
  5
  Uploads
  0
  இப்போது அருமையாகத் தெரிகிறதே.
  செய்திகளுக்கு மிக்க நன்றி மனோஜி.

  அன்புடன்,
  பிரதீப்
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0
  மன்னிக்க வேண்டும் சகோதரர்களே
  லீனக்ஸ் மூலம் பதிக்க பட்டது
  இப்பொழுது மாற்றியாகி விட்டது

  படிக்க முடிகிறதா எனக்கூறவும்..

  மனோ.ஜி
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  படிக்க முடிகிறது.. செய்திகளுக்கு நன்றி...

  ஆனால் தலைப்பை எங்களால் மாற்ற இயலவில்லை.....

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  26,837
  Downloads
  17
  Uploads
  0
  தலைப்பில் இன்னமும் ??? இருக்கிறது. தலைப்பை மாற்றும் படி அட்மினுக்கு சொல்லியிருக்கிறோம்.

  செய்திகளுக்கு நன்றி மனோ.ஜி.

  கணினி மென்பொருள் கடத்தல் என்பது தடுக்க முடியாத ஒன்றாகி விட்டது. எங்கே பார்த்தாலும் பைரேட்டட் சிடி கிடைக்கிறது..

  அன்புடன்
  மன்மதன்

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  தலைப்பை மாற்றிவிட்டேன்...
  ------------------------------------
  தைவானுக்கு வாங்க.. எந்த சி.டி எப்படி வேண்டுமானாலும் காப்பி பண்ணிக்கொள்ளலாம்....
  Last edited by அறிஞர்; 06-06-2005 at 02:59 PM.

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  62
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,246
  Downloads
  90
  Uploads
  0

  ஜூன் 7, செவ்வாய்க்கிழமை மலேசிய செய்திகள்

  பொதுப்பணி அமைச்சின் திட்டங்களைக் கண்காணிக்கத் தனிக்குழு

  9வது மலேசியத் திட்டத்தின் கீழ் அமையவுள்ள பொதுப்பணி அமைச்சின் 30 திட்டங்கள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கைக்குழு ஒன்றை அவ்வமைச்சு நியமிக்கவுள்ளது.

  2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டங்களைக் கண்காணிக்கும் அந்நடவடிக்கைக்குழுவுக்குப் பொதுப்பணியமைச்சின் பொது இயக்குநர் Tan Sri Zaini Omar நியமிக்கப்பட்டுள்ளார் என்று
  பொதுப்பணியமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.


  இக்குழு திட்டங்களைக் கண்காணிப்பதுடன் சட்டத்திட்டங்களை மீறும் குத்தகையாளர்களை எச்சரிக்கவும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத குத்தகையாளர்களுக்கு முதல் மாதம் எச்சரிக்கையும், இரண்டாவது மாதத்திற்குள் அப்பணி முடிக்கப்படவில்லை என்றால்குத்தகையாளருடனான பொதுப்பணித்துறையின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என பொதுப்பணி அமைச்சின் உயரதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவிய ம.இ.கா  தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து நிற்கவும், தமிழாசிரியர்களின் பங்கு தொடரவும் ஏதுவாக காலத்தின் கட்டாயம் கருதி ஒவ்வொரு மாநாட்டுக் கூடலின் போதும் அதற்கான முதல் தீர்மானத்தினை நிறைவேற்றி அதனை அரசுக்கு அனுப்பி வைக்கும் பொதுப்பணியமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலு மற்றும் ம.இ.கா. இயக்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ்ப்பள்ளி தேசிய ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகர் Shahul Amid Mydin Sha தெரிவித்துள்ளார்.  தமிழ்ப்போதனா முறை பெற்றவரே தமிழ்ப்பள்ளிகளில் தலைமையாசிரியராக நியமிக்கப்பட வேண்டும் என உறுதியாக இருந்து அதை நிறைவேற்றிய பொதுப்பணியமைச்சரின் செயலை தாங்கள் என்றென்றும் நினைவு கூர்வதாகவும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  நிரந்தரக் குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள்


  உள்நாட்டிலுள்ள ஆடவர்களை திருமணம் செய்து கொண்ட அயல் நாட்டு பெண்கள் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து பெறுவதற்கான கால நீட்டிப்பு எதிர்காலத்தில் குறைக்கப்படும் என உள்துறை அமைச்சர் Datuk Tan Chai Ho தெரிவித்துள்ளார்.

  10,000 வெளிநாட்டு பெண்கள் இதுவரை நிரந்தர குடியுரிமை அந்தஸ்து பெற விண்ணப்பித்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  அதே வேளையில்,அயல் நாட்டவர்களுக்கு போலி MYKAD அட்டையை விற்பனை செய்து மோசடி செய்துவரும் கும்பலை ஒடுக்க தேசியப்பதிவு இலாகா தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிரந்தர குடியுரிமைக்கான அடையாள அட்டை சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  மலேசியாவில் இலங்கைத் தொழிலாளர்கள்

  மலேசியாவிற்கு எண்ணற்ற தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் மற்றும் தருவிக்கும் 15 முக்கிய நாடுகளில் இலங்கை முக்கியமானதாக திகழ்வதாக கோலாலம்பூரில்,மலேசிய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை தொழிலாளர் துறை அமைச்சர் ATHAUDA SENEVIRATNE
  தெரிவித்துள்ளார்.
  கட்டுமானப் பணிகள்,உற்பத்தி,தகவல் தொழில்நுட்பம்,விவசாயம்,சுற்றுலா,சுகாதாரம் ஆகிய துறைகளில் இலங்கை தொழிலாளர்கள் பணிபுரிவார்கள் எனவும் இங்கு பணிபுரிய அவர்களுக்கு ஆங்கில மொழி புலமை இன்றியமையாதது என அவர் தெரிவித்தார்.

  தொழில்நுட்பத்தில் பிறநாடுகளுடன் இணைய மலேசிய விருப்பம்

  தற்போது TELEKOM மற்றும் TMNET STREAMYX கீழ் உள்ள இணைய சேவை அடுத்த ஆண்டுமுதல் எரிபொருள்,நீர் மற்றும் தகவல் துறையின் கீழ் மேலும் தரமான,திறம் வாய்ந்த,குறைந்த விலையில் அமல்படுத்தப்படுமென அதன் அமைச்சர் DATUK SERI DR LIM KENG YAIK
  தெரிவித்துள்ளார்.
  தற்போதுள்ள சுமார் 300,000 இணையப் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை இது அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் சீனா மற்றும் தென்கொரியாவிலுள்ள இணையம், தொழில்நுட்ப நிறுவனங்களோடு மலேசிய நிறுவனங்களும் கூட்டணி சேர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  பினாங்கில் பயணிகள் சேவைக்காகப் புதிய ferry

  பினாங்கில் செயல்பட்டு வரும் Ferry சேவைகளுக்கான Penang Port Sdn Bhd நிறுவனம் அடுத்தாண்டில் பொது மக்களுக்கு கூடுதலான சேவையை வழங்கவிருக்கிறது என அதன் மேலாளர் Datuk Ahmad Ibnihajar தெரிவித்தார்.

  பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக புதிதாக நான்கு ferry-களை அந்நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. அப்புதிய Ferryகள் அனைத்தும் மிகவும் நவீனமானதாகவும் பல வசதிகளுடன் இயங்கக்கூடியது எனவும் அவர் கூறினார்.  பொது மக்களின் வசதிகேற்ப அந்நிறுவனம் இந்த புதிய சேவைகளை அடுத்தாண்டில் தொடங்கவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  புதிய பாதை நிர்மாணிக்கப்படும் வரை சுரங்கத்தைப் பயன்படுத்த அனுமதி

  9-வது மலேசிய திட்டத்தின்கீழ் GUA MUSANG-KAMPUNG BARU SUNGAI MENGKUANG-கில் முறையான சாலை அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுமென GALAS மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் Mohamad Saufi Deraman தெரிவித்தார்.

  அப்பகுதி மக்கள் பயன்படுத்த முறையான சாலை இல்லாததால்,இரயில் சுரங்க பாதையை பயன்படுத்திய Nurul Anis என்ற 5 வயது சிறுமி கடந்த வியாழனன்று இரயில் மோதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  இச்சுரங்கப் பாதையை பயன்படுத்துவதால்,இரயில் மோதும் அபாயம் மட்டுமன்றி, விஷஜந்துகளின் அபாயமும் உள்ளதால், சாலை நிர்மாணிக்கப்படும் வரையில் 250 மீட்டர் நீளமான
  அச்சுரங்கப்பாதையில் விளக்குகள் பொருத்த KTM நிறுவனத்திற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  கருணாநிதியுடன் இளங்கோவன் சந்திப்பு

  திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் இளங்கோவன் நேற்று சந்தித்து பேசினார்.

  மத்திய அமைச்சர் இளங்கோவன், நேற்று காலை கோபாலபுரத்திலுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார். பிறகு இருவரும் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

  அப்போது இளங்கோவன், கருணாநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி அவருக்கு பொன்னாடையும் அணிவித்தார்.

  இதன் பிறகு வெளியே வந்த இளங்கோவன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.

  இலங்கை அரசுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

  விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விமானப்போக்குவரத்து வசதியை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது.

  அதை மீண்டும் தொடங்காவிட்டால் தாங்களே அதற்கான ஏற்பாட்டை செய்து கொள்ளப்போவதாக இலங்கை அரசுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  இதற்கான கடிதத்தை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு அமைப்புக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் S.P.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ளார்.;

  கடந்த வாரம் இலங்கை இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு புலிகளே காரணமென கருதிய இலங்கை அரசு இதற்குப் பதிலடியாக விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் கிளிநொச்சியிலிருந்து திரிகோணமலை செல்வதற்கு விமானம் தர மறுத்துவிட்டது.

  இதனால் அதிருப்தி அடைந்துள்ள புலிகள், சொந்தமாக பயண ஏற்பாட்டை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளனர். புலிகளிடம் இரு விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  தாய்வானின் ரகசிய ஏவுகணை சோதனை

  1000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய Cruise ரக ஏவுகணையை தைவான் வெற்றிகரமாக சோதனை செய்தது.

  தைவான் இராணுவத்தின் அறிவியல் தொழில்நுட்பப் பிரிவான Sangshan மையம் இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது. சீனாவை இலக்காக வைத்து தைவான் இந்த ஏவுகணை சோதனையை நடத்தியதாக சீன நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.  தென்கிழக்குச் சீனாவில் உள்ள இராணுவ முகாம்களைத் தாக்கவல்ல திறனை தைவானின் ஏவுகணை பெற்றுள்ளதாக அந்நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சோதனை எப்போது நடத்தப்பட்டது என்ற விவரத்தை தைவான் இதுவரை வெளியிடவில்லை.

  செவ்வாய் கிரகத்தில் சிக்கிய வாகனத்தை மீட்ட நாஸா

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல்பகுதியில் கடந்த ஐந்து வாரங்களாக சிக்கிக் கொண்டிருந்த அமெரிக்க விண்வெளி மையமான Nasa-வின் Opportunity என்ற ஆய்வு வாகனம், வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவிலிருந்து தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படும் அந்த ஆய்வு வாகனத்தின் சக்கரங்கள் செவ்வாய் கிரகத்தின் மணலில் மாட்டிக் கொண்டதால் அதன் இயக்கம் முற்றிலும் செயலிழந்து போனது.

  1800 மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாக்கப்பட்ட அவ்வாகனத்தை மீட்க பலவாறான முயற்சிகள் செய்து, நேற்று வெற்றிகரமாக Nasa விஞ்ஞானிகள் மீட்டனர்.

  மணலில் இருந்து அவ்வாகனம் வெளிவரும் படத்தை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழு, மீண்டும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி தொடரும் என மகிழ்ச்சி தெரிவித்தது.

  நேப்பாளத்தில் கண்ணிவெடியில் சிக்கி பேருந்து பயணிகள் 37 பேர் பலி

  நேப்பாளத்தின் தெற்குப்பகுதியில் ஒரு பயணிகள் பேருந்து தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்ததில் 37 பயணிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.


  70 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேப்பாளத்தின் Chitwan மாவட்டத்தில், அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து Maoist தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது.

  அந்த இடமே இரத்தக்களறியாகவும், மனித உடல் பாகங்கள் சிதறல்களோடும் காணப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தனர்.

  அரசுப்படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்து வரும் உள்நாட்டுச் சண்டைக் காரணமாக அங்கு இது வரை 12,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  இந்த கோரச்சம்பவத்திற்கு இராணுவமும், தீவிரவாதிகளுமே காரணமென மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

  பிரெஞ்சு கோப்பையை வென்ற Nadel

  பிரெஞ்ச் பொது டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Nadel-லும், Argentina நாட்டைச்சேர்ந்த Buyarda-வும் மோதினர்.

  நேற்று அதிகாலை நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. முதல் செட்டை Buyarda பெற்றார். அடுத்து தொடர்ந்து 3 செட்களை Nadal கைப்பற்றி வெற்றி பெற்றார்.

  Nadal 7-6, 6-3,6-1,7-5 என்ற புள்ளி கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார். டென்னிஸ் ரசிகர்களுக்கு இந்த போட்டி உண்மையிலேயே நல்ல விருந்தாக அமைந்தது.

  அஸ்லான் ஷா கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

  அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்க வைத்துக் கொண்டது. கோல்டன் கோல் மூலம் தென் கொரியாவை 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

  நேற்று முன் தினம் நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, ஆசிய சாம்பியன் தென்கொரியாவை சந்தித்தது. இரு அணி வீரர்களும் துடிப்பாக செயல்பட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது.

  ஒரு கட்டத்தில் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டு, 81வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா கோல்டன் கோல் அடித்து
  கோப்பையைக் கைப்பற்றியது.


  மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி ஐந்தாம் இடம் பெற்றது.

  நன்றி வணக்கம்மலேசியா.காம்

  மனோ.ஜி
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 10. #10
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0
  இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.
  பரஞ்சோதி


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •