Results 1 to 7 of 7

Thread: அக்கரை ஏக்கங்கள்

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர்
  Join Date
  06 Apr 2003
  Posts
  1,716
  Post Thanks / Like
  iCash Credits
  5,051
  Downloads
  0
  Uploads
  0

  அக்கரை ஏக்கங்கள்

  ஒரு நண்பர் அனுப்பிய மின் மடலிலிருந்து

  * இங்கே

  நிலமை வேறு .......!  * எங்காவது தமிழ்

  எழுத்துப் பலகை

  இருக்காதா.....?  * தேடித்தவித்திருக்கிறேன்

  யாராவது தமிழ் பேச

  மாட்டார்களா?  * வாய் பார்த்து

  ஏமாந்திருக்கிறேன்...  * எங்காவது தமிழ்

  பேசுவது கேட்டுவிட்டால்

  என் அனுமதியில்லாமல்

  நீண்டு கொள்ளும்

  என் காது  * படிக்க செய்தித்தாள்கள்

  தாமதமாய்த் தான் வரும்

  இணைய செய்திகளுக்கும்

  வழியில்லை - எனக்கு

  கணினி இயக்க தெரியாததால்....  * தமிழ் தெரிந்தவர் எல்லாம்

  சொந்தக்காரராக சொல்லும்

  என் மனசு.....!  * எதிரியானாலும்

  ஏளனமானாலும்

  தன்மானம் கழட்டி வைத்து

  தமிழ் கேட்டியிருக்கிறேன்  * வடமொழிப்பாட்டுக்களிடையே

  தமிழ்பாட்டை மனதில்

  வைத்து விசிலடித்துக்

  கொண்டிருக்கிறேன்......  * வண்டிப்பதிவெண் பார்த்து

  நிறுத்தி பேசி

  சொந்தம் வளர்த்திருக்கிறேன்.....  * தமிழ் சோறு தேடியலைந்து

  கண்டுபிடித்து

  நண்பர்களை

  அழைத்துப் போய்

  மகிழ்ந்திருக்கிறேன்.....  * புரியாத மொழி கேட்டு

  காது வறண்ட போது

  இளையராஜாவையும்

  ஜானகியையும்

  நண்பர்களிடம் சொல்லி

  ஒலி நாடாக்களாய்

  நாடு கடத்தி

  செவிக்கு இன்பம்

  வளர்த்திருக்கிறேன்  * தொலைபேசி கட்டணம்

  பார்த்து பாசத்தைப்

  பங்கு போட்டபோது

  பரிதவித்துப்போயிருக்கிறேன்.......  * நல்ல தமிழ் சாலை இல்லாத

  துக்கங்களை தொண்டைவரை

  வைத்து விக்கித்துப்

  போயிருக்கிறேன்.........  * நான் ஆங்கிலத்தில் தான்

  பேச வேண்டும் என

  அறிவுறுத்திப் பேசுகிறார்கள்

  நண்பர்கள்....  * அவர்களுக்கு என்ன தெரியும்

  மூச்சுத் திணறியவன்

  நானல்லவா......?  * எனக்கல்லவா தெரியும்

  சுவாசத்தின் அருமை.....?
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:01 AM.
  இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
  ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
  - அன்புடன் லாவண்யா

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  வட இந்தியா என்னும் வெளிநாட்டுக்குப் போய் அவதிப்படும்

  உங்கள் நண்பரின் ஆதங்கம்.... அருமையாய் வெளிப்பட்டிருக்கிறது

  மின்(கவிதை)மடலில்.

  நீரில் மூழ்குபவனுக்கு மூச்சின் மேல் வரும் மூர்க்கக்காதல் போல்....

  இல்லை என்று ஆகும்போது மொழிப்பற்றே வெறியாகிப்போகிறது....  பாராட்டுகள்.....
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:02 AM.
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 3. #3
  அனைவரின் நண்பர் rambal's Avatar
  Join Date
  30 Mar 2003
  Location
  அன்பால் ஆன உலகம்
  Posts
  1,112
  Post Thanks / Like
  iCash Credits
  10,596
  Downloads
  0
  Uploads
  0
  நல்ல கவிதை..

  தமிழகத்தை விட்டு வெளிவந்த

  தமிழ்ப்பற்றுள்ள

  அனைவரின் நிலமையும் இதுதான்..

  அழகாய் சுட்டிக் காட்டியமைக்குப் பாராட்டுக்கள்..
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:02 AM.

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,295
  Downloads
  38
  Uploads
  0
  தமிழனின் மானம் காத்த கவிதையை தந்துள்ளீர்..

  நன்றி!!!!
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:03 AM.
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Posts
  3,716
  Post Thanks / Like
  iCash Credits
  5,052
  Downloads
  0
  Uploads
  0
  அடடா எந்த காலம் இது ? இப்போ தான் டிஷ்பகவான் எல்லா இடத்திலேயும் வந்துட்டாரே லாவ் ?
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:03 AM.

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  அடடா எந்த காலம் இது ? இப்போ தான் டிஷ்பகவான் எல்லா இடத்திலேயும் வந்துட்டாரே லாவ் ?
  தேடுவது தமிழ்க்குளம்

  டிஷ் எல்லாம் கானல்நீர்


  மாமண்டூர் மோட்டலில் விருமாண்டி பாட்டு கேட்டால்..
  மரத்தில் பறித்த காய்


  இணையத்தில் இங்கிருந்து இறக்கிக் கேட்டால்
  டின்னில் வந்த காய்..
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:04 AM.
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
  Join Date
  05 Apr 2003
  Location
  துபாய்
  Posts
  3,203
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  47
  Uploads
  0
  அருமையான ஆதங்கங்கள்.... நிறைய தடவை.....இந்த ஏக்கங்களை அனுபவித்தும் இருக்கிறேன்...... நன்றி லாவண்யா.........
  Last edited by மன்மதன்; 02-06-2005 at 11:04 AM.
  அன்புடன்  நண்பன்
  -----------------------------------------------
  காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
  புறப்பட்டால் புயல்
  ------------------------------------------
  http://www.nanbanshaji.blogspot.com
  nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •