Page 99 of 232 FirstFirst ... 49 89 95 96 97 98 99 100 101 102 103 109 149 199 ... LastLast
Results 1,177 to 1,188 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1177
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    நண்பர்கள் கேலி செய்ததால் காதல் ஜோடி தற்கொலை.....

    வேலூர் : திருப்பத்தூர் அருகே நண்பர்கள் கேலி செய்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் மகன் சிவலிங்கம்(21); கட்டட மேஸ்திரி. குரிசிலாப்பட்டு கல்லுக்குட்டை புதூரை சேர்ந்த பழனி மகள் திவ்யா(14). அவர், வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சிவலிங்கமும், திவ்யாவும் காதல் வசப்பட்டு, பெற்றோருக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்தனர்.அவர்களின் காதல் விவகாரம் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இரு வீட்டாரும் கண்டித்து எச்சரித்துள்ளனர். சிவலிங்கத்தின் நண்பர்களும் சிறுவயது பெண்ணை ஏமாற்றி காதலிப்பதாக கேலி செய்தனர்.மனமுடைந்த காதல் ஜோடி நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யாவும், சிவலிங்கமும் பரிதாபமாக இறந்தனர். கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.

    .....தினமலர் 06.06.2010

  2. #1178
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயருமா?

    புதுடெல்லி, ஜுன்.7-

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்று முடிவு செய்கிறது. பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகள் வரையிலும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.25 முதல் ரூ.50 வரையிலும் உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது.

    ரூ.72 ஆயிரத்து 300 கோடி

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை விலையை விட, விற்பனை செய்யும் எரிபொருளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாக பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு பாரிக்கார் கமிட்டியும் பரிந்துரை செய்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில், `பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் மண்ணெண்ணை போன்றவற்றின் விற்பனை மூலமாக ரூ.72 ஆயிரத்து 300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    எவ்வளவு விலை உயர்வு?

    தற்போது, பெட்ரோல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.3.35ம் டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.3.49ம் சமையல் கியாஸ் விற்பனையால் சிலிண்டருக்கு ரூ.262ம் மண்ணெண்ணை விற்பனையால் ரூ.18.82ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகள் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுபோல, சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.25 முதல் ரூ.50 வரை உயர்த்த தீர்மானித்துள்ளது. மேலும், மண்ணெண்ணெய் விலையிலும் சிறிய அளவு உயர்த்தலாம் என கருதுகிறது.

    மந்திரிகள் கூட்டம்

    இந்த விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில், இன்று பிற்பகலில் கூடும் அந்த கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோரா, விவசாய மந்திரி சரத் பவார், ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரி, ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி, சாலை போக்குவரத்து துறை மந்திரி கமல்நாத் ஆகியோர் பங்கேற்கின்றனர். மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் கலந்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. டீசல் விலையை உயர்த்துவதற்கு மம்தா பானர்ஜி தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே, அவர் சம்மதம் தெரிவித்தால் டீசல் விலையிலும் மாற்றம் இருக்கும் என பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

    இதுபோல, சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.50 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கும் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மம்தா தவிர, வேறு சில கூட்டணி கட்சிகளும் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனவே, கூட்டணி கட்சிகளின் முடிவைப் பொறுத்து சமையல் கியாஸ் விலை உயர்வு அமையும்.

    இது தவிர, ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் மண்ணெண்ணை விலையையும் சிறிதளவாவது உயர்த்த மத்திய அரசு விரும்புகிறது. சமையல் மற்றும் விளக்குகளுக்கு மண்ணெண்ணையை அதிக அளவிலான ஏழைகள் பயன்படுத்துவதால் அதில் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.


    .....தினத்தந்தி 07.06.2010

  3. #1179
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நல்ல செய்திகளை சுடச்சுட எங்களுக்கு தநதுகொன்டிருக்கும் நம்பிதம்பிக்கு எனது பாராட்டுகள்.



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  4. #1180
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    அமெரிக்காவில் குறைந்து வரும் வேலைவாய்ப்புகள்....

    நியூயார்க்: அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை இன்னும் பெற முடியாமல் தவிப்பதால், வேலைவாய்ப்பு மிகமிகக் குறைந்துவிட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் 218000 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் உருவாக்கப்பட்டன. ஆனால் மே மாதம் வெறும் 41000 பணியாளர்களை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நியமித்துள்ளன.

    அரசுத் தரப்பில் 431,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் 411000 வேலைகள் தற்காலிகமானவைதான். எனவே இவர்கள் குறித்த காலத்துக்குப் பின் வேலையற்றவர்களாகவே இருப்பார்கள். ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 9.9 சதவிகிதமாக இருந்தது. மே மாதம் 9.7 சதவிகிதமாக குறைந்திருந்தாலும், இந்த ஜூன் மாதம் 10 சதவிகிதமாகிவிடும் என்று முன்கணித்துள்ளனர் பொருளாதார அறிஞர்கள்.

    வரும் மாதங்களில் தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிகுறியே இல்லை என்பதால் திகைப்பில் உள்ளது ஒபாமாவின் அரசு. பொருளாதார அறிஞர்கள் கணித்த இரண்டாவது வீழ்ச்சி இப்போதே தொடங்கிவிட்டதோ என்று பேசத் துவங்கியுள்ளனர்.

    இன்னொரு பக்கம் ஐரோப்பிய யூனியனின் கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. இது ஐரோப்பிய யூரோ வலயத்தையே சிதறடித்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. அப்படியொரு சூழல் உருவாகும்பட்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் விளைவாக முதலீட்டாளர்கள் ரிஸ்க்கான தொழில்களிலிருந்து தங்கள் பங்குகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நியூயார்க் மெர்க்ன்டைல் எக்ஸ்சேஞ்சில் 1 பேரல் 73.05 டாலராகக் குறைந்துவிட்டது. ஒரே நாளில் 1.56 டாலர்கள் குறைந்துள்ளன (ஆனால் இந்தியாவில் இதுபற்றி அரசு மூச்சுக் காட்டுவதில்லை!)

    இந்த வீழ்ச்சிப் போக்கில் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள சின்ன ஆறுதல், யூரோவின் வீழ்ச்சி. ஒரு வாரத்தில் மேலும் 10 சதவிகிதம் குறைந்து 1.20 டாலராகிவிட்டது யூரோ.

    பங்குச் சந்தையில் வீழ்ச்சி

    அமெரிக்க வேலைச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி, அமெரிக்க பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. டவ் ஜோன்ஸ் எனப்படும் தொழில்துறை குறியீட்டெண்ணில் 160 புள்ளிகள் வீழ்ந்தன.

    சிறிய பங்குகளுக்கான ரஸ்ஸல் 2000 சந்தையில் 1.9 சதவிகித வீழ்ச்சி காணப்பட்டது. நாஸ்டாக்கில் 1.2 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டது.

    .....தட்ஸ் தமிழ், தினகரன். 07.06.2010

  5. #1181
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை....

    புதுதில்லி, ஜுன்.8 (டிஎன்எஸ்) தில்லியில் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று (ஜுன்.7) நடைபெற்றது. கூட்டத்தில், குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் போதிய அமைச்சர்கள் பங்கேற்காததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தும் முடிவு தள்ளிவைக்கப்பட்டது.

    கூட்டத்திற்குப் பின் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்; அமைச்சர்கள் குழு கூட்டத்தை மீண்டும் விரைவில் கூட்டி ஆலோசனை நடத்த இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி கூட்டம் நடைபெறும் தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

    .....ஆறாம் திணை, தினகரன், தினத்தந்தி, தினமலர் 08.06.2010

  6. #1182
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சட்டப்படிப்பில் சேர மாணவர்களுக்கு ஆர்வமில்லை....

    சென்னை, ஜுன் 8-

    சட்டப் படிப்பில் சேர மாணவ-மாணவிகளிடையே ஆர்வம் குறைவாக இருக்கிறது. 5 ஆண்டு பி.எல். படிப்புக்கான விண்ணப்ப விற்பனை மந்த நிலையில் உள்ளது.

    பி.எல். படிப்பு

    தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு பி.எல். படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்தில் செயல்படும் சிறப்பு சட்டக் கல்லூரியில் பி.எல். ஆனர்ஸ் என்ற சிறப்பு சட்டப் படிப்பு உள்ளது.

    ஐந்து ஆண்டு சட்டப் படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது.

    மாணவர்களிடம் ஆர்வம் இல்லை

    அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.பி.எல். படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேசி கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த மாதம் 11-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பி.எல். படிப்புக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. விண்ணப்பம் வழங்க தொடங்கிய நாளில் இருந்தே விற்பனை குறைவாகவே இருந்தது. சட்டப் படிப்பில் சேர மாணவ-மாணவிகளிடம் ஆர்வம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

    நேற்றை நிலவரப்படி அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.கோபால் தெரிவித்தார். 5 ஆண்டு பி.எல். ஆனர்ஸ் சிறப்பு சட்டப் படிப்புக்கு 490 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
    ....தினத்தந்தி 08.06.2010

    இன்னும் சில கல்வி செய்திகள்....

    சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிப் பட்டப்படிப்புகளுக்கும் கட்டாய டிப்ளோமா (தொழிற்பயிற்சி கல்வி) கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

    முதுகலைப்பட்டப்படிப்பில் (தொலைதூரக்கல்வி, அஞ்சல் வழிக்கல்வி) சேர்க்கையின் போதே பாடபுத்தகங்கள் வழங்கப்படும். தேவையற்ற காத்திருப்பு தவிர்க்கப்படும். சான்றதழ் சரிபார்த்த அனைறைக்கே சேர்க்கையும் நடைபெறும்.

    பட்டபடிப்பு படித்து வரும் மாணவர்களில் 15 சதவீதத்தனரே அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் சேருகின்றனர். இதை பயன்படுத்தி மாணவர்களிடம் தனியார் பயிற்சி கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வீயை, வேலைவாய்ப்பு பயிற்சியை பயிற்றுவிப்பதாக கூறி பெருந்தொகையினை பரிக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு இந்த தொழில் கல்வி இலவசமாக பட்டப்படிப்புடன் சேர்த்தே வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

    ....தினகரன் 08.06.2010

  7. #1183
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    திமுக, பாமக நெருங்கி வருவதால் கவலையில் மூழ்கியுள்ள காங்.

    சென்னை: திமுக கூட்டணியில், மீண்டும் பாமக சேருவதை காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பாமகவின் பதிலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

    திமுக, பாமக கூட்டணி அமைவதற்கு எது தடையாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, நீங்கள்தான் என்று தமாஷாக கூறினார் கருணாநிதி. ஆனால் உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் தடையாக மாறுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம்,கூட்டணிக்கு பாமக மீண்டும் வருவதை காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் விரும்பவில்லையாம்.

    முடிந்தவரை கடுமையாக விமர்சித்து விட்டு, தடாலடியாக கூட்டணியை விட்டு விலகிச் சென்ற பாமக, இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணிக்கு முயல்வதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    மேலும் பாமக கூட்டணிக்கு திரும்பினால், வருகிற சட்டசபைத் தேர்தலில் தங்கள் விருப்பப்படியான சீட்கள் கிடைக்காது என்ற அச்சமும் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒன்றின் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், பாமக இன்னும் தனது முடிவைச் சொல்லவில்லை. அது கூட்டணியில் மீண்டும் சேர்ந்தாலும் சரி, சேராவிட்டாலும் சரி, கூட்டணியில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. கூட்டணிக்குப் பலமும் கிடைக்கப் போவதில்லை. பலவீனமாகப் போவதும் இல்லை.

    கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள முக்கியத்துவம் அப்படியேதான் உள்ளது. பாமக சேர்ந்தாலும் கூட அது தொடரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    வருகிற சட்டசபைத் தேர்தலில் 80 சீட் வரை கேட்க காங்கிரஸ் தயாராகி வருகிறதாம். ஆனால் பாமக கூட்டணிக்கு வந்தால் இதில் பாதிப்பு ஏற்படும். பாமக 40 சீட் வரை கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் நேற்று முதல்வர் கருணாநிதியை பாமக தூதுக்குழு சந்தித்தபோது பேசியதாக கூறப்படுகிறது. பாமக 40 சீட் கேட்டால் காங்கிரஸுக்கான சீட் குறையும் என காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.

    இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முடிவை அறிவுக்கவுள்ளார். அதுவரை காத்திருக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    ......தட்ஸ் தமிழ் 08.06.2010

  8. #1184
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மருத்துவப் படிப்பிற்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு....

    சென்னை: தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்திருக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வரும் ஜூன் 9ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படவிருக்கிறது.

    மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் உயிரியல்-வேதியல்- இயற்பியல் பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

    www.tnhealth.org என்கிற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வரும் ஜூன் 9ம் தேதி அன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    ரேண்டம் எண், ஒரே கூட்டு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் வெளியிட உதவுகிறது. இந்த ஆண்டு 18,230 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கின்றனர்.

    தரவரிசைப்பட்டியல் (ரேங்க் பட்டியல்), சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் ஜூன் 11ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினமே, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் தரவரிசைப்பட்டியல் (ரேங்க் பட்டியல்) ஒட்டப்படும். ஜூன் 21ம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் தொடங்குகிறது.

    .....தட்ஸ் தமிழ் 08.06.2010

  9. #1185
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இந்தியாவுக்கு வரும் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் டி.ஜி.பி.க்கு மக்கள

    சென்னை, ஜுன்.8-

    இந்தியாவுக்கு வரும் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இன்று வருகிறார்

    இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர், மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.

    கொலை மற்றும் கடத்தல்

    சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் போலீசாரால் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

    வெளியே வந்த பிறகு 1988-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, ரூ.7 லட்சத்தை பிணையத் தொகையாக கேட்டார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஐகோர்ட்டில் வழக்கு

    1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் நிலையில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வர இருப்பதால் அவரை கைது செய்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ........தினத்தந்தி 08.06.2010

  10. #1186
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ராஜ்யசபா தேர்தல் - மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.........

    சென்னை தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றோடு மனுத் தாக்கல் முடிந்ததால் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.

    ராஜ்யசபாவுக்கு தமிழகத்திலிருந்து 6 காலியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 31ம் தேதி தொடங்கியது.

    இதில் திமுக சார்பில் கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, செல்வகணபதி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பனும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கம், மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் மனு தாக்கல் செய்தார்.

    இன்று பிற்பகலுடன் மனுத் தாக்கல் முடிவடைந்தது. இந்த 6 பேர் தவிர 3 சுயேச்சைகளும் மனுத் தாக்கல்செய்துள்ளனர். மனுக்களை திரும்ப பெற 10-ந்தேதி கடைசி நாள். சுயேச்சைகளின் மனுவை முன்மொழிந்து எந்த எம்.எல்.ஏவும் சான்றளிக்கவில்லை. இதனால், அவர்களது மனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடியாகி விடும். இதையடுத்து கட்சிகளின் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

    வருகிற 10ம் தேதி 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

    .....தட்ஸ் தமிழ் 08.06.2010

  11. #1187
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஆஸ்திரேலியாவில் கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் மர்ம மரணம்

    மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், 61 வயது இந்தியர் கத்தியால் குத்தப்பட்டு, பாலத்துக்கு அடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டாக, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் 61வயது நபர், மெல்போர்ன் நகரம் அருகே உள்ள டோன்கேஸ்டர் என்ற பகுதியில், பாலத்துக்கு அடியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். பாலத்தின் மீது, ரத்தகறை இருப்பதை பார்த்த போலீசார் மேற்கொண்டு ஆராய்ந்த போது, பாலத்துக்கு அடியில் இந்த முதியவர் இறந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான, அவரது மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்த நபரின், விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

    ....தினமலர் 08.06.2010

  12. #1188
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சூர்யா-ஜோதிகாவுக்கு ஆண்குழந்தை சென்னை மருத்துவமனையில் பிறந்தது

    சென்னை, ஜுன்.8-

    நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஏற்கனவே 2 1/2 வயதில், `தியா' என்ற பெண் குழந்தை உள்ளது. ஜோதிகா, இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார்.

    நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக அவரை, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தார்கள். நேற்று அதிகாலை 4 மணிக்கு, ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

    ஆண் குழந்தை பிறந்ததையொட்டி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சூர்யா இனிப்பு வழங்கினார். அவருடைய ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள்.
    ....தினத்தந்தி 08.06.2010

Page 99 of 232 FirstFirst ... 49 89 95 96 97 98 99 100 101 102 103 109 149 199 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 7 users browsing this thread. (0 members and 7 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •