Page 228 of 232 FirstFirst ... 128 178 218 224 225 226 227 228 229 230 231 232 LastLast
Results 2,725 to 2,736 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

  1. #2725
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மம்தாவின் இலங்கை ஆதரவு பேச்சு: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்-சூறை

    புதுச்சேரி: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை தமிழ் அமைப்புகள் தாக்கி சூறையாடின.

    இலங்கை நட்பு நாடு என்பதால், அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி திருவாய் மலர்ந்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூத் தொட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மம்தாவை கண்டிக்க பல வழிகள் இருக்கும் நிலையில், ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்க செயலே.

  2. #2726
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மீனவர் கொலை வழக்கு: 2 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது இத்தாலி

    கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 கடற்படைவீரர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இத்தாலி தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் விசாரணையை எதிர்கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் ஆகியோர், மார்ச் 22ஆம் தேதி இந்தியா திரும்பி விடுவார்கள் என்று இத்தாலி தூதரகம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியாது என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. இதையடுத்து இத்தாலி தூதர் இந்தியாவில் இருந்து வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இத்தாலியின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், திடீர் திருப்பமாக இரு கடற்படை வீரர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இத்தாலி அரசு வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, இரு கடற்படை வீரர்கள் மீது இத்தாலியில் விசாரணை நடத்துவதா அல்லது இந்தியாவில் நடக்கும் விசாரணையை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதா என்பதை முடிவு செய்ய, இத்தாலி ராணுவ வழக்குரைஞர் மார்கோ டி பௌலிஸ் 2 வீரர்களிடமும் புதன்கிழமை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

  3. #2727
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இலங்கை விவகாரம்: வைகோ சொந்த ஊரில் இன்று உண்ணாவிரதம்

    சங்கரன்கோவில்: இலங்கை தமிழர் பிரச்சனையை வலியுறுத்தி மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளார் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    இலங்கை பிரச்சனையில் மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வலியறுத்தி வைகோவின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    இதில் பொதுமக்கள் மற்றும் மதிமுகவினர் கலந்து கொள்கின்றனர். மதிமுக மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகிக்கிறார். கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார். ஏற்பாடுகளை மதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  4. #2728
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தில்லி போலீஸார் சோதனை: ஜும்மா மசூதி பகுதியில் ஏகே47 துப்பாக்கிகள் பறிமுதல்

    தில்லி போலீஸாரின் சிறப்பு செல்- பிரிவு நேற்று இரவு தில்லியில் ஜூம்மா மசூதி பகுதிகளில் திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது, ஜூம்மா மசூதியை அடுத்த ஹோட்டல் ஒன்றில் இருந்து ஏராளமான ஏகே47 ரக துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  5. #2729
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைத் தாக்குவோம்: வடகொரியா

    ஜப்பான் மற்றும் குவாம் தீவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்குவோம் என்று வடகொரிய வியாழக்கிழமை மிரட்டல் விடுத்துள்ளது.

    ""குவாமில் உள்ள ஆண்டர்சன் மற்றும் ஜப்பானின் ஒகினவா ராணுவ நிலைகள் எங்களின் தாக்குதல் எல்லைக்குள்தான் உள்ளது என்பதை அமெரிக்கா மறந்து விடக்கூடாது'' என்று வட கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

    பல்வேறு நாடுகளின் கோரிக்கையை மீறி, வடகொரிய கடந்த மாதம் அணு ஆயுதச் சோதனை நடத்தியது. இதனால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், வடகொரியாவின் இந்த மிரட்டலானது, மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

    ஜப்பானில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்கும் அளவுக்கு பாய்ந்து செல்லும் ராக்கெட்டுகள் வடகொரியா வசம் உள்ளன. ஆனால், குவாம் தீவில் உள்ள நிலைகளைக் தாக்கும் (சுமார் 3, 200 கிலோ மீட்டர்) ராக்கெட்டுகள் அந்நாட்டிடம் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வடகொரியாவின் மிரட்டலை எதிர்கொள்ளும் விதத்தில் அமெரிக்க கடற்பகுதியில் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹெகல் கடந்த வாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

  6. #2730
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தென் கொரிய வங்கிகள் செயலிழப்பு

    தென் கொரியாவின் வங்கிகள், ஊடகங்கள் ஆகியன சைபர் தாக்குதலில் (இணையதளங்களை முடக்குதல், கணினியிலிருந்து தகவல்களைத் திருடுதல்) செயலிழக்கச் செய்யப்பட்டன.

    புதன்கிழமை நடைபெற்ற இத் தாக்குதலை சீனா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    வங்கிகள் மற்றும் ஊடகங்கள் முடக்கப்பட்டதில் சீன ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அதை நிரூபிக்க சில வாரங்கள் ஆகும் என்று தென் கொரிய நிபுணர்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

    தைவான் குற்றச்சாட்டு: மற்ற நாடுகளின் ராணுவம் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை கணினியிலிருந்து திருடும் செயல்களில் (ஹேக்கர்ஸ்) சீனா ஈடுபடுவதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

  7. #2731
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    மீனவர் கொலை வழக்கு: 2 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறது இத்தாலி

    கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 கடற்படைவீரர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இத்தாலி தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் விசாரணையை எதிர்கொண்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோனே, மாசிமிலானோ லடோர் ஆகியோர், மார்ச் 22ஆம் தேதி இந்தியா திரும்பி விடுவார்கள் என்று இத்தாலி தூதரகம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியாது என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. இதையடுத்து இத்தாலி தூதர் இந்தியாவில் இருந்து வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இத்தாலியின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், திடீர் திருப்பமாக இரு கடற்படை வீரர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இத்தாலி அரசு வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, இரு கடற்படை வீரர்கள் மீது இத்தாலியில் விசாரணை நடத்துவதா அல்லது இந்தியாவில் நடக்கும் விசாரணையை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதா என்பதை முடிவு செய்ய, இத்தாலி ராணுவ வழக்குரைஞர் மார்கோ டி பௌலிஸ் 2 வீரர்களிடமும் புதன்கிழமை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    அப்டி வாங்கடா வழிக்கு!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #2732
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    மம்தாவின் இலங்கை ஆதரவு பேச்சு: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்-சூறை

    புதுச்சேரி: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த ஐ.நா. தீர்மானத்துக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை தமிழ் அமைப்புகள் தாக்கி சூறையாடின.

    இலங்கை நட்பு நாடு என்பதால், அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று மம்தா பானர்ஜி திருவாய் மலர்ந்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் அரவிந்தர் ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூத் தொட்டிகளை அடித்து நொறுக்கினர். மேலும அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்கள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மம்தாவை கண்டிக்க பல வழிகள் இருக்கும் நிலையில், ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்க செயலே.
    கத்திக்கு கத்தி. ரத்தத்துக்கு ரத்தம் என்று இருக்கும் மனோநிலை என்றைக்குத் தான் மாறுமோ?

    இந்த வாரம் (இன்று மாலை வெளியாக இருக்கும்) புதிய தலைமுறை நாளிதழின், மாலன் சாரின் 'என் ஜன்னலுக்கு வெளியே' தொடரில் (கிட்டத்தட்ட) இதைப்(புத்த பிட்சு தாக்குதல்) பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. சிறந்த அலசல். விரும்பியவர்கள் வாங்கிப் படியுங்கள். மாலன் சார் ஒப்புதலின் பேரில் மன்றத்தில் அந்தக் கட்டுரையை பதிய முயற்சி செய்கிறேன்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  9. #2733
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இலங்கையை கண்டித்து தீக்குளித்த இன்னொரு `அறிவாளி` உயிரிழப்பு!

    சென்னை நெற்குன்றத்தில் இலங்கையை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழந்தார்.

    சென்னை நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த விக்ரம் என்பவர் தீக்குளித்தார். இலங்கையை கண்டித்து தீக்குளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  10. #2734
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    இலங்கையை கண்டித்து தீக்குளித்த இன்னொரு `அறிவாளி` உயிரிழப்பு!

    சென்னை நெற்குன்றத்தில் இலங்கையை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழந்தார்.

    சென்னை நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த விக்ரம் என்பவர் தீக்குளித்தார். இலங்கையை கண்டித்து தீக்குளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    இவன் நிஜமாவே புத்திசாலியா இருந்தா தீக்குளிச்சுருக்கக் கூடாது. ராஜபக்சேவை தீக்குளிக்க வச்சுருக்கணும்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  11. #2735
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    ராஜபக்சேவை தீக்குளிக்க வச்சுருக்கணும் .
    இந்த வருசத்துக்கான நகைச்சுவையாக இதை சொல்லலாம்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. Likes prakash01 liked this post
  13. #2736
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    இவன் நிஜமாவே புத்திசாலியா இருந்தா தீக்குளிச்சுருக்கக் கூடாது. ராஜபக்சேவை தீக்குளிக்க வச்சுருக்கணும்.
    அந்தாளை எதுவும் பண்ணமுடியாது ; அவரா செத்தாத்தான் உண்டு..!

  14. Likes prakash01 liked this post
Page 228 of 232 FirstFirst ... 128 178 218 224 225 226 227 228 229 230 231 232 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •