Page 227 of 232 FirstFirst ... 127 177 217 223 224 225 226 227 228 229 230 231 ... LastLast
Results 2,713 to 2,724 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #2713
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டுக்கு உத்தரவிட்டது நாராயணசாமி: சோனியா 'காய்ச்சி' எடுத்தார்!



    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட் நடத்த உத்தரவிட்டது மத்திய பர்சனல் மற்றும் பயிற்சித்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நாராயணசாமி தான் என்று தெரியவந்துள்ளது.

    பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் என்றே அதிகமாக வெளியில் தெரியப்பட்ட நாராயணசாமியிடம் தான் Department of Personnel and Training துறை உள்ளது. இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை தான் சிபிஐயின் செயல்பாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றன. ஆனாலும் சிபிஐயின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் நாராயணசாமியின் கையில் தான் உள்ளது.

    இந் நிலையில் தான், காங்கிரஸ் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதாகக் கருதி, இன்று காலை டெல்லியில் இருந்து 7 அதிகாரிகளை அனுப்பி ஸ்டாலினின் வீட்டில் ரெய்ட் நடத்த வைத்துள்ளார் நாராயணசாமி. இந்த விவரம் தெரியவந்தவுடன் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு நேரடியாகவே நாராயணசாமியைக் கூப்பிட்டுப் பேசியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிபிஐ ரெய்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நாராயணசாமியை தொலைபேசியில் பிடித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரை வாட்டி எடுத்ததாகத் தெரிகிறது.

    இதையடுத்து சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் பேசாமல், பிரதமருக்குத் தெரியாமல் நாராயணசாமி இந்த வேலையை செய்திருப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஸ்டாலின் மீதான ரெய்டுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிதம்பரம், பாஜக, இடதுசாரிகள் என அனைத்துத் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பவே, நாராயணசாமி மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறதா காங்கிரஸ் தலைமையா என்பதும் தெரியவில்லை.
    நாராயணசாமி குடுத்த காசுக்கு அதிகமா கூவிட்டாரோ??!!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #2714
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0


    மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு.. சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை..!

  3. #2715
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மீண்டும் சிறைக்கு செல்கிறார் சஞ்சய் தத்- தண்டனையை கேட்டு அழுகை!



    1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்.

    1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 257 பேர் பலியாகினர், 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் தங்கள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் யாகூப் மேமனைத் தவிர மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் விதித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்துள்ளனர்.

    முன்னதாக சஞ்சய் தத் சட்டவிரோதமாக 9 எம்எம் பிஸ்டல் மற்றும் ஒரு ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சஞ்சய் 18 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது. அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும். அவர்கள் ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் தற்போது 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருக்க வேண்டும். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். இந்த தீர்ப்பை நீதிபதிகள் கூறியபோது சஞ்சய் தத்தின் கண்கள் கலங்கின. தற்போது அவர் மீண்டும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  4. #2716
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சிதம்பரத்தின் கடும் எதிர்ப்பால் பாதியில் நின்ற சிபிஐ ரெய்ட்!

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்புத் தெரிவித்த அடுத்த அரை மணி நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

    இன்று காலை ரெய்ட் தொடங்கியதுமே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஸ்டாலின் வீட்டை நோக்கி திமுக தலைவர்களும் தொண்டர்களும் குவிய ஆரம்பித்தனர். இதனால் பெரும் டிராபிக் ஜாம் ஆகிவிட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    இந்த ரெய்ட் நடக்க ஆரம்பித்து தீவிரம் அடைந்த நிலையில், டெல்லியில் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்த ப.சிதம்பரம், இந்த ரெய்ட் சரியல்ல. இதை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகவே நான் அஞ்சுகிறேன். இது குறித்து அந்தத் துறையின் அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார்.

    வழக்கமாக எந்த சர்ச்சைகளிலும் மாட்டிக் கொள்ளாத அளவுக்கு வார்த்தைகளை மிக மிக அளந்து, நிதானமாகப் பேசும் சிதம்பரம், இன்னொரு துறையின் விவகாரத்தை தலையிட்டதை ஒப்புக் கொண்டாரோ, அப்போதே அவர் இந்த ரெய்டுக்கு காங்கிரஸ் தலைமையிடம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது உறுதியாகிவிட்டது. அவர் பேசி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில் ரெய்ட் முடிந்துவிட்டதாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.

    ரெய்ட் நடத்தவில்லை-சிபிஐ பல்டி:

    மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய காரைத் தேடியே வந்ததாகவும், ரெய்ட் நடத்த வரவில்லை என்றும் சிபிஐ திடீர் பல்டி அடித்துள்ளது. காரை ஸ்டாலின் என்ன பெட்ரூமுக்குள்ளா நிறுத்தி வைத்திருப்பார் சிபிஐ அங்கு போய் தேட.?

    எப்ஐஆரில் ஸ்டாலின்-உதயநிதி பெயர் இல்லை:

    மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்), ஸ்டாலின் மற்றும் சிபிஐ குறிப்பிடும் ஹம்மர் காரைப் பயன்படுத்திவரும் அவரது மகன் உதயநிதி ஆகியோரின் பெயரே இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாறாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் மூன்று அதிகாரிகள் பெயர் மட்டுமே புகார்தாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

  5. #2717
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இந்திய ராணுவ உடையணிந்த விடுதலைப் புலிகள்தான் பாலச்சந்திரன் மரணத்திற்குக் காரணம்- பொன்சேகா



    கொழும்பு: பாலச்சந்திரன் உடல்என்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இலங்கை வீரர் என்று சொல்லப்படும் நபர், இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் உள்ளார். இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள்தான், இந்திய ராணுவ சீருடையை அணிந்திருந்தனர் என்று கூறியுள்ளார் அந் நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.

    பொன்சேகாவின் இந்தப் பேச்சு, இந்திய ராணுவத்தினரும் 'பிசிக்கலாக' இலங்கையுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டனரா என்ற புதிய கேள்வியைக் கிளப்பியுள்ளது.
    பாலச்சந்திரன் மரணம் குறித்து இறுதிக் கட்டப் போரின்போது தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா புதிய தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில் ராணு வீரர் ஒருவர் சீருடையில் இருப்பதுபோன்று காட்டப்பட்டுள்ளது. அது இலங்கை ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சீருடை அல்ல. இந்திய ராணுவத்தினர் அணிவது போன்று உள்ளது. விடுதலைப் புலிகள்தான் இறுதிக் கட்ட போரின்போது இந்திய ராணுவ வீரர்கள் போல் உடையணிந்திருந்தனர்.

    மேலும், பதுங்கு குழி ஒன்றில் பாலசந்திரன் அமர்ந்து இருப்பதுபோல புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தினரிடம் அதுபோன்ற சுத்தமான பதுங்கு குழிகள் கிடையாது. அது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியாகத்தான் இருக்க வேண்டும். எனவே பாலசந்திரன் கடைசி கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன்தான் இருந்துள்ளார்.

    சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காட்டப்படும் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டதாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்கு தலைமை வகித்த கமாண்டர் என்ற முறையில் எந்தவிதமான சர்வதேச விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். போரில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகிறார்கள். பலர் தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ள விரும்புகின்றனர். போர் நிகழ்வுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிடவில்லை என்றால் மேலும் பல சர்வதேச குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார் பொன்சேகா.

  6. #2718
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

    தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை...வரி விகிதங்களில் மாற்றமும் இல்லை

    மத்திய அரசின் புதிய நிதி மசோதாவால் மாநிலத்திற்கு பாதிப்பு

    மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் அவரி வருவாய் 500 கோடி குறைந்தது

    திருமண நிதி உதவி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.750 கோடியாக உயர்வு

    வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்க முடிவு

    மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு ரூ.263 கோடி

    இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்கு ரூ.110 கோடி

    இலங்கை தமிழ் அகதிகளுக்கும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

    2023 தொலைநோக்குத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நடைமுறைப் படுத்தப்படும்.

  7. #2719
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

    சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.470 கோடி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற உள்ளாட்சிக்கு ரூ.4887.86 கோடி நிதி ஒதுக்கீடு

    நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.3539.36 கோடி நிதி ஒதுக்கீடு

    திடக் கழிவு மேலாண்மை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்படும்.

    கழிவுகளை சேகரித்துக் கையாளுவதற்கு ரூ.150 கோடி ஒதுகீடு

    தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் ரூ.97.85 கோடி திடக் கழிவு மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

    தனியார் கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

    ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு

  8. #2720
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்


    ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு

    ஆதி திராவிடர் பழங்குடியின மக்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ. 56 கோடி நிதி

    வீடுகள் தோறும் கழிவறை கட்டும் திட்டத்திற்கு ரூ.72.6 கோடி ஒதுக்கீடு

    ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

    சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

    நடப்பு நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்ட முடிவு

    தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.132ல் இருந்து ரூ.148 ஆக உயர்வு

    மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.1500 கோடி

    மாணவர்கள் இடைநிலைக்கற்றலை தடுக்க ரூ. 381 கோடி ஊக்கத் தொகை

    அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு

  9. #2721
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள்

    மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.381 கோடி ஒதுக்கீடு

    தேசிய இடைநிலைக்கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி

    மாணவர்களுக்கு இலவச புத்தகம் வாங்க ரூ.217.22 கோடி

    இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 110.கோடி வழங்க முடிவு

    புதிதாக 8 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க முடிவு

    பள்ளிக்கல்விக்கு ரூ. 16,965.30 கோடி ஒதுக்கீடு

    பெண்கள் மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு

    இலவச மருத்துவ ஊர்தி திட்டத்திற்கு ரூ.77.57 கோடி ஒதுக்கீடு

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

    பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்த ரூ. 169.13 கோடி ஒதுக்கீடு

    மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.20 கோடி

    சுற்றுலா மையங்களை மேம்படுத்த ரூ.67.91 கோடி ஒதுக்கீடு

    தமிழ் வளர்ச்சிப்பணிகளுக்கு ரூ.39.29 கோடி

  10. #2722
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி

  11. #2723
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு- 13 நாடுகள் எதிர்ப்பு

  12. #2724
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பக விசாரணை தேவை: இந்தியா

    மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

    ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூடத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா, போர் முடிவுற்றிருக்கும் தற்போதைய நிலைதான் நல்ல சந்தர்ப்பம். அனைத்து மக்களும் ஏற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

    ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான 13-வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நில உரிமை மதிக்கப்பட வேண்டும்.தமிழர்கள் வாழும் வடமாகாணத்தில் செப்டம்பரில் தேர்தல் நடத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

    இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் சென்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஆராய வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து நாடுகளும் ஏற்கக் கூடிய நம்பகமான சுதந்திரமான விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Page 227 of 232 FirstFirst ... 127 177 217 223 224 225 226 227 228 229 230 231 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 3 users browsing this thread. (0 members and 3 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •