Page 222 of 232 FirstFirst ... 122 172 212 218 219 220 221 222 223 224 225 226 ... LastLast
Results 2,653 to 2,664 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #2653
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    தொண்டி வந்தார் ஆஸ்திரேலிய பெண்: சிறிய படகில் உலகைச் சுற்றுகிறார்



    கின்னஸ் சாதனை படைப்பதற்காக சிறிய படகில் உலகத்தைச் சுற்றும் ஆஸ்திரேலியப் பெண் தொண்டி வந்தடைந்தார்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் சேண்டி (35). இவர் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில், 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து சிறிய படகில் கடல் வழியாக உலகத்தைச் சுற்றி வருகிறார். பல்வேறு நாடுகளுக்குச் சென்ற சேண்டி சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டிக்கு வந்தார். இதுவரை 7 ஆயிரம் கடல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 2016-ல் மீண்டும் ஜெர்மனி திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் தனது சிறிய படகில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

  2. #2654
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இலங்கைக்கு எதிரான தீர்மானம்: "இந்தியா தயங்குவதற்கு காஷ்மீர் பிரச்னையே காரணம்'

    காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவருவதற்குக் காரணமாக அமைந்துவிடுமோ என்கிற அச்சமே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா தயக்கம் காட்டுவதற்கு காரணம் என அந்நாட்டு அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஆனால் இந்த ஆண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதை ஆதரிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் மனித உரிமை மீறப்படுவதாக அங்குள்ள பிரிவினைவாதிகள் தீர்மானம் கொண்டுவந்து விடுவார்களோ என்ற அச்சமே இதற்குக் காரணம் என இலங்கையிலிருந்து வெளிவரும் நாளிதழில் அரசியல் விமர்சகர் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.

  3. #2655
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சென்னை சென்ட்ரல் ; புத்த பிக்கு தாக்கப்படும் காட்சி..


  4. #2656
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    யாழில் வெள்ளை தேள்: இந்திய அமைதிப் படை 'உயிரி ஆயுதமாக' கொண்டு சென்றதாக புது சர்ச்சை

    இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
    இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.

    இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.
    அமைதிப் படையா? சமாதிப் படையா? என்று குழப்பமாக இருக்கிறது.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  5. #2657
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    தொண்டி வந்தார் ஆஸ்திரேலிய பெண்: சிறிய படகில் உலகைச் சுற்றுகிறார்



    கின்னஸ் சாதனை படைப்பதற்காக சிறிய படகில் உலகத்தைச் சுற்றும் ஆஸ்திரேலியப் பெண் தொண்டி வந்தடைந்தார்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் சேண்டி (35). இவர் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில், 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து சிறிய படகில் கடல் வழியாக உலகத்தைச் சுற்றி வருகிறார். பல்வேறு நாடுகளுக்குச் சென்ற சேண்டி சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டிக்கு வந்தார். இதுவரை 7 ஆயிரம் கடல் மைல் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 2016-ல் மீண்டும் ஜெர்மனி திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் தனது சிறிய படகில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.
    தொண்டி வந்த சேண்டி..நீ சாதிக்க வேண்டும் தடைகளைத் தாண்டி.(அடடே ஆச்சர்யக்குறி)
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  6. #2658
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    எஸ்.எம்.எஸ் பரிசு மோசடி: 8 கோடிக்கு ஆசைப்பட்டு 4 லட்சம் இழந்த வாலிபர்

    சுரண்டை அருகே உள்ள ராமனூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேதிகா டேனியல். இவரது மகன் தேவசகாய செல்வம். இவர் பிளஸ்டூ முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. பரிசு விழுந்திருப்பதாக அந்த எஸ்.எம்.எஸ் தெரிவிக்கவே அந்த நம்பருக்கு ,தேவசகாயம் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண் இங்கிலாந்தில் உள்ள பிரபல கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், வருடம் தோறும் ஒரு நபரை தேர்வு செய்து பரிசு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
    இந்தாண்டு உங்களுக்கு ரூ.8 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும், நீங்கள் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் உங்களுக்கு ரூ.8 கோடிய 35 லட்சம் வழங்குவதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.

    இதை நம்பிய தேவசகாயம் முதலில் சுங்கம் மற்றும் கலால் டெல்லி அலுவலகம் மூலம் ரூ.25 ஆயிரம் அனுப்பினார். பின்னர் பல தவணையாக ரூ.4 லட்சத்து 31 ஆயிரம் அனுப்பினார். ஆனால் தேவசகாயத்திற்கு 8 கோடி ரூபாய் வந்தபாடில்லை. இதுகுறித்து தேவசகாயம் அந்த பெண்ணிடம் கேட்டபோது பணம் கொடுக்கும் ஏஜென்ட் வருவதற்கு விமான கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

    இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவசகாயம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தேவசகாயத்தின் தாய் கூறும்போது ரூ.8 கோடி கிடைக்கும் என்ற ஆசையில் கடன் வாங்கி ரூ.4 லட்சம் கட்டினோம். இதற்காக வீட்டை அடமானம் வைத்துள்ளோம். கடனை எப்படி திரும்ப போகிறோமோ தெரியவில்லை என்று கண்ணீர் விட்டார்.
    இங்கிலீஸ் ல பேசி கவுத்திப்புடா மச்சான்!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #2659
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

    சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடாலயத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நேற்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் ரயிலில் இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்தது. இக்குழுவில் புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தாக்குதல் நடத்த சிலர் முயன்ற போது ரயில் பெட்டிக்குள் ஏறி பதுங்கிக் கொண்டார். அவரை தேடிக் கண்டுபிடித்த இருவர் ரயில் நிலைய வளாகத்தில் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.

    "அங்க தமிழனைக் கொன்றுவிட்டு இங்க வர்றீங்களோ?" என்ற ஆவேசக் குரலோடு புத்தபிட்சுவுக்கு தர்ம அடி கொடுத்தனர். அக்குழுவில் இருந்த மற்றவர்களை அவர்கள் தாக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    புத்த பிட்சு மற்றும் யாத்ரீகர்கள் மீதான தனி மனித தாக்குதல் என்பது ஈழத் தமிழர்களுக்கு கூடுதலான சிக்கலையே உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்வதே நல்லது
    யாரோ செய்த தவறுக்கு யாரையோ அடிப்பது என்ன நியாயம்? விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையின் போது சிங்கள ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதுக்கும், இன்று நாம் பிட்சுக்களை வதைப்பதற்கும் அப்படி என்ன பெரிய வித்யாசம்- செயலளவில்? நீதி நியாமென்றால் நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் ஒன்று தான்!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #2660
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    வழிமொழிகிறேன் ராஜி..!

  9. #2661
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    கோவாவில் இருந்து மும்பை சென்ற பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்து: 37 பேர் பலி

  10. #2662
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    2ஜி ஊழலில் திருப்பம்: ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் தான் ஒப்புதல் அளித்தார்-புதிய ஆதாரங்கள்!!

    திமுகவைச் சேர்ந்த ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழியும் கைதானார். மேலும் தயாநிதி மாறனும் பதவி விலக நேர்ந்தது. பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை (first-come-first-served policy) அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத் ராய் குண்டைப் போட்டார். ஆனால், இந்தக் கணக்கு தவறானது, இந்த விவகாரத்தில் ரூ. 2,500 கோடி வரையே நஷ்டம் ஏற்பட்டது என்றும், இந்த விஷயத்தில் வினோத் ராய் மனதுக்குத் தோன்றியதை நஷ்டமாகச் சொல்விட்டார் என்று அதே கணக்கு தணிக்கை அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி வினோத் ராய் மீதே குற்றம் சாட்டியதும் நடந்தது.

    மேலும் நஷ்டத்தை முடிந்த அளவுக்கு உயர்த்திக் காட்டச் செய்ததில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மறைமுக உள்ளடி வேலைகளும் வெளியில் தெரிய வந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ராசா தான் எல்லா முடிவுகளையும் எடுத்தார், பிரதமர் சொல்லியும் கேட்கவில்லை, இதில் சில விஷயங்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கே தெரியாது என்று மத்திய அரசும் சிபிஐயும் நீதிமன்றத்தில் கூறி வருகின்றன. இதேரீதியில் தான் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரான வாகனாவதியும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் (ஜேபிசி) வாக்குமூலம் தந்துள்ளார்.

    அதாவது ராசா மட்டுமே இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்று அவர் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டது மத்திய அரசு.

    இதையடுத்து என்னையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று ராசா விடுத்த கோரிக்கையை அந்தக் குழுவின் தலைவரான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான பி.சி.சாக்கோ மறுத்து வருகிறார். எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் போதும் என்று சாக்கோ கூறுவதை ராசா ஏற்க மறுத்துவிட்டார். ராசா நேரில் வந்து நின்று, குழுவில் உள்ள எதிர்க் கட்சி எம்பிக்களும் திமுக எம்பிக்களும் கேள்விகளை வைக்க, இந்த விவகாரத்தில் பிரதமருக்கு இதெல்லாம் தெரியும் என்று ராசா பதில் தந்துவிட்டால் நிலைமை சிக்கலாகுமே என்ற பயம் மத்திய அரசிடம் உள்ளதாகத் தெரிகிறது.

    இந் நிலையில், 2ஜி விவகாரத்தில் முறைகேடு நடப்பதற்கு முன் ராசாவின் சில தவறான முடிவுகளுக்கு பிரதமரும் பிரதமர் அலுவலகமும் அனுமதி தந்துள்ள விவரம் இப்போது வெளியாகி வருகிறது. இது தொடர்பாக இந்து நாளிதழ் பரபரப்பான விவரங்களை, பிரதமர் அலுவலக பைல்களின் காப்பிகளையே ஆதாரமாக வைத்து வெளியிட்டு வருகிறது.

    குறிப்பாக ராசா எழுதிய கடிதத்தை பிரதமர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் மற்றும் செயலாளர் புலோக் சட்டர்ஜி ஆகியோர் டிசம்பர் 29, 2009 அன்று ஆய்வு செய்து, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய ராசா எடுத்த முடிவுக்கு பிரதமரின் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் ராசாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து இருப்பது தெரிய வருகிறது.
    இந்த புதிய ஆவணங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.தங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டு இந்து நாளிதழ் அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதிலும் வரவில்லையாம்.

    இந்த புதிய ஆவணங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பிரதமருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
    ஆனால், எனக்கு எதுவும் தெரியாது, எல்லாமே ராசா எடுத்த முடிவு தான் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே எஸ்கேப் ஆனது மாதிரி, இப்போதும் கூட இது எனது அலுவலக அதிகாரிகள் எடுத்த முடிவு, இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவாரோ என்னவோ...

    இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தின் பைல்களின் (PMO File No 180/31/C/26/OS.ESI, Vol. IV) நகல்கள் இந்து நாளிதழுக்குக் கிடைத்துள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னிரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்கப் போகிறேன் என்று சொல்லி அனுமதி கேட்டு 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ராசா அனுப்பிய கடிதத்தைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங், இது குறித்து அவசரமாக பரிசீலிக்குமாறு 27ம் தேதி தனது அலுவலகத்தின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் மற்றும் செயலாளர் புலோக் சட்டர்ஜி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து ராசாவின் கடிதத்தைப் படித்த இரு அதிகாரிகளும் ராசாவின் 4 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதோடு, இது தொடர்பாக பிரதமருக்கு சில யோசனைகளையும் முன் வைத்துள்ளனர். மேலும் ராசாவின் முடிவுகள் குறித்து புலோக் சாட்டர்ஜியும் தொலைத் தொடர்புத்துறையின் புதிய செயலாளராக பதவியேற்ற சித்தார்த் பெகுராவும் (இவரும் 2ஜி வழக்கில் கைதானார்) ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

    இந்த ஆலோசனை ஒரு பக்கம் நடக்க, ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஒரு விரிவான விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டதன் பேரில், அப்போது ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கான அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்த வெளியுறவு அமைச்சர் (இப்போதைய ஜனாதிபதி) பிரணாப் முகர்ஜி ஒரு விளக்கத்தை "Top Secret" என்ற நோட்டுடன் பிரதமர் அலுவலகத்திடம் தந்துள்ளார். இந்த விளக்கம் பிரதமரிடம் தரப்பட்டதும் டிசம்பர் 26ம் தேதி தான். இந்த விளக்கம் அடங்கிய பைலுடன் ராசாவின் 6 பக்க கடிதமும் பிரதமர் அலுவலகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த விளக்கத்தை ஆய்வு செய்த புலோக் சாட்டர்ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்பது தொடர்பாக தனது பரிந்துரைகள் அடங்கிய comparative chart-ஐ உருவாக்கி அதை டி.கே.ஏ. நாயருக்கு டிசம்பர் 31ம் தேதி அனுப்பியுள்ளார். இந்த 4 பக்க சார்ட், புதிய 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் விற்பனை தொடர்பானது. இதில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத் தான் ராசா பின்னர் அமலாக்கியுள்ளார். ஆனால், இதைத் தான் ராசா (மட்டும்) செய்த ஊழல் என்று 2011ம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்ய குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் அலுவலகம் ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தைத் தான் சிபிஐ குற்றமாக பதிவு செய்துள்ளது.

    இந்த குற்றப் பத்திரிக்கையில் அடிப்படையில் தான் 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையையே ராசா திருத்தியுள்ளார். விண்ணப்பம் செய்ததை அடிப்படையாக வைத்து முதலில் வந்தவர்கள் என்பதைத் தீ்ர்மானிப்பதற்கு பதிலாக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட புதிய நிபந்தனைகளை ராசா சேர்த்துள்ளார். இதையும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திருத்தம் தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  11. #2663
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இன்னொரு அறிவாளி.. ஈழப்போர் தியாகி..?

    மதுரையில் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை கோரிப்பாளையம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு தேவர் சிலை உள்ளதால் அதிகமான போலீஸôர் எப்போதும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருப்பர். இந்த சந்திப்பில் இருந்து செல்லூர் செல்லும் சாலையோரம் பெட்ரோல் பங்க் உள்ளது.

    திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் செல்லூர் பகுதியில் இருந்து வந்த இளைஞர் ஒருவர், பெட்ரோல் பங்க் அருகே வந்ததும் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்துசென்றை அந்த இளைஞரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

    ஆனால், அதற்குள் அந்த இளைஞர் உடல் கருகி அதே இடத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் அவரைக் காப்பாற்ற முயற்சித்த ஆரோக்கியராஜ் என்ற ஊழியருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்த செல்லூர் போலீஸôர் விரைந்து சென்று இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த இளைஞர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எதற்காக தீக்குளிததார்? என போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தீக்குளித்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  12. #2664
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    வாகனாவதி இல்லை. வாஹன்வாதி (என்று இன்னொரு நாளிதழில் படித்தேன்)
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Page 222 of 232 FirstFirst ... 122 172 212 218 219 220 221 222 223 224 225 226 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •