Page 11 of 232 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 61 111 ... LastLast
Results 121 to 132 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #121
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    காலை வணக்கம்

    அமேரிக்காவின் வெர்ஜினிய டெக் பல்கலைகலகத்தில் 33 அப்பாவி மாணவர்கள் துப்பாக்கி எந்திய ஒரு ஆடவனால் கொடுரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் வருத்தமான செய்தி.


    முதல் துப்பாக்கி சுடு காலை 7:15 வாக்கிலும், இதில் குறைந்தது இரண்டு மாணாக்கள் மட்டுமே சுடப்பட்டதாகவும்,

    இரண்டாவது மோதல் 2 மணி நேரம் கழித்து 9:15 மணியளவில் நடந்துள்ளதாகவும், இதில் குறைந்தது 45 மாணவர்கள் சுடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுல்லது.

    (கவனிக்க, மொத்த போலிஸ் கூட்டமும் அங்கே குழுமிய பிந்தான் இரண்டாவது மோதல் அரங்கேரியுள்ளது)


    இதுவரை நடந்த பல்கலைகலக துப்பாக்கிச் சுட்டு வரலாரிலே முதலிடம் பிடிக்கும் இந்த செய்தி மிகவும் துக்கமான செய்தியாக அன்னாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.


    ஆகக்கடைசி தகவலின்படி,
    அந்த ஆடவன் ஆசியாவை சேர்ந்தவனாகவும், கடந்த ஆகஸ்டு மாதம் 7 திகதிதான் அமேரிக்காவினுல் நுலைந்ததாகவும் தெரிவிக்காப்பட்டுள்ளது.

    மிகவும் இளவதுடையவனாகவும், சம்பவத்தின் பொழுது அவனும் தன்னைதானே சுட்டுகொண்டு, தற்கொலை செய்துகொண்டான் என்றும் கூறப்படுள்ளது.


    நன்றி, வணக்கம்
    Last edited by ஓவியா; 17-04-2007 at 03:11 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  2. #122
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மிகவும் வருந்தத்தக்க செய்தி..
    சம்பவத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

  3. #123
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அமெரிக்க வரலாற்றிலேயே இது ஒரு கருப்புப் புள்ளி என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு எப்போதோ ஒரு சாமியார் பேச்சைக் கேட்டுக் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டனர். இப்போதோ Gun Control அது இது என்று என்ன என்ன எழவோ இருந்தாலும் இப்படி ஒரு படுகொலை. இனிக் காரணங்கள் கண்டு பிடிக்க போலீஸ் புலிகள் அலைவார்கள்.

    இது அந்தச் சமுதாயத்தின் சீரழிவு என்றுதான் கொள்ள வேண்டும்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #124
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    அமெரிக்காவில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நசடைபெறுவது சர்வசாதாரனமாகப் போய்விட்டது

  5. #125
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    மிகவும் கொடுமையான செய்தி.

    கேட்டவுடன் மனம் கலங்கியது, பிள்ளைகளை இழந்த பெற்றோரை நினைக்கயில் கண்ணீர் வருகிறது.
    பரஞ்சோதி


  6. #126
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    மிகவும் வருந்ததக்கசெய்தி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #127
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 Apr 2007
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    என்ன ஒரு வெறிச்செயல் பாருங்கள் செய்தியைக்கேட்ட உடன் பதறிப்போய்விட்டோம் பல்கலைக்கழக வளாகத்தில் இப்படி நடந்திருக்கிறது .இறந்த 33 மாணவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அவர் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார்.
    மாணவர்களிடம் துப்பாக்கி கலாச்சாரம் மலிந்துகிடக்கிறது அங்கே.

  8. #128
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மிகவும் வருத்தமான செய்தி.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #129
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by banupriya View Post
    என்ன ஒரு வெறிச்செயல் பாருங்கள் செய்தியைக்கேட்ட உடன் பதறிப்போய்விட்டோம் பல்கலைக்கழக வளாகத்தில் இப்படி நடந்திருக்கிறது .இறந்த 33 மாணவர்களில் ஒருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அவர் பேராசிரியராக பணி புரிந்திருக்கிறார். மாணவர்களிடம் துப்பாக்கி கலாச்சாரம் மலிந்துகிடக்கிறது அங்கே.
    அவருடைய பெயர் லோகநாதன் என்று அறியப் பட்டுள்ளது.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #130
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    காலநிலை மாற்றம் தொடர்பாக வரலாற்றில் முதற் தடவையாக விவாதிக்கிறது ஐ.நா. பாதுகாப்புச் சபை



    உலகப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை வரலாற்றிலேயே முதன் முதலாக நேற்று செவ்வாய்க்கிழமை கூடியுள்ளது.
    பிரிட்டனால் ஆரம்பித்து வைக்கப்படும் இவ்விவாதத்தின் கருப்பொருள் சக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை என்பன பற்றியதாகும்.

    சர்வதேச நிகழ்ச்சி நிரலில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றுவரும் ஓர் விடயம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது தொடர்பாக நாம் ஆராயவுள்ளோமென தனது பெயரை குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்காலநிலை மாற்றத்திற்கெதிராக செயற்படாமல் இருப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் அதிகளவு விலையைச் செலுத்த வேண்டி வருமென பிரிட்டன் கருதுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாம் கூடுகிறோம். இங்கு என்ன தீர்மானம் எடுக்கப்பட்டாலும் ஐ.நா. பாதுகாப்புச் சபை இதனை ஆராய்வதற்காக முன்வந்தமை தொடர்பில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம் எனத் தெரிவித்தார்.

    பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா. சீனா போன்ற நாடுகள் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்காத போதும் இவ்விவாதத்திற்கு தலைமை தாங்கும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மார்க்கிரட் பெக்கற் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இவ்விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்குமே முக்கியத்துவம் வழங்குவதனால், இதற்கு அப்பாற்பட்ட விடயங்களில் தாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லையென ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகள் தெரிவிக்கின்றன.

    ஆனால், கடந்த திங்கட்கிழமை சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அதிகாரியொருவரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், காலநிலை மாற்றம் நிகழ்காலத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதுடன், இது அமெரிக்கர்களையும் அமெரிக்க இராணுவ செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் . அதேவேளை, உலகில் அதிக பதற்றமான நிலைமையையும் உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் காலநிலை மாற்றம் தீவரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பன வளர்ச்சியடைவதற்கும் அடித்தளமிடுவதுடன், இராணுவச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் ஓர் ஸ்திரமற்ற நிலையைத் தோற்றுவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றம் வளர்ச்சியடைந்து வரும் முக்கிய விடயங்களில் ஒன்றாக இருப்பதனால் நாம் அது தொடர்பாக வித்தியாசமான கோணங்களிலும் வித்தியாசமான முறைகளிலும் சிந்திக்க வேண்டுமென மேற்குலக பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #131
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post
    அவருடைய பெயர் லோகநாதன் என்று அறியப் பட்டுள்ளது.
    வேர்ஜீனியாவில் பலியானவர்களில் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பேராசிரியரும் ஒருவர்

    அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழ்நாடு கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி. எஸ். லோகநாதன்.

    இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான இவர் அமெரிக்காவில் சுமார் 30 வருடமாக வாழ்ந்துவருவதாக அவருடைய சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் தமது கூட்டுக் குடும்பத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


    மனைவி மற்றும் குழந்தையுடன்
    தமது கல்வியறிவை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்க்குடன் அங்கு சென்ற தமது சகோதரர் இப்படியாக ஒரு கல்வி நிறுவனத்தில் பயங்கரத் தாக்குதலில் கொல்லப்பட்டமை தமக்கு மிகுந்த கவலையை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஊடகங்களின் வாயிலாக மாத்திரம் தாம் தீவிரவாதத்தைப் பார்த்து வந்ததாகக் கூறிய அவர், தற்போது அதற்கு தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    இதேவேளை, இந்தப் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்களும் கல்வி பயில்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பான அவர்கள் சிலரின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  12. #132
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    துவக்குச் சூடு முதற் தடவையாக இடம்பெற்றபோது பல்கலைக்கழகத்தை மூடாதது ஏன்?



    அமெரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
    அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிகளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகக் கருதப்படுவதுடன், முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றவுடன் பல்கலைக்கழகத்தை மூடாதது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது.

    எட்டு வருடங்களுக்கு முன்பு கொலம்பைன் உயர்தர பாடசாலையில் 15 பேர் பலியான சம்பவத்தின் பின்னர் தற்போது வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இரு சம்பவங்களில் 33 பேர் பலியாகியுள்ளனர்.

    முதலில் அங்கிருந்த விடுதியினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்று இரு மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்த பிறிதொரு கட்டிடம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர்.

    துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்தவுடன் சில மாணவர்கள் ஜன்னலால் குதித்து தப்பியுள்ளதுடன், சிலர் தங்கள் பக்கம் துப்பாக்கி திரும்புமுன் தப்புவதற்காக இறந்தவர்கள் போல் பாவனை செய்துள்ளனர்.

    துப்பாக்கிதாரியின் நோக்கம் என்ன? அவர் தனித்தே இந்நடவடிக்கையை மேற்கொண்டாரா? போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாத வினாக்களாகவே உள்ளன. இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை.

    முதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பல்கலைக்கழகம் மூடப்படாதது ஏன் என உறவினர்களும் நண்பர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

    வேர்ஜினியா மாநிலம் முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளதுடன், நடைபெறவிருக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இச்சம்பவம் தொடர்பான மேலதிக விடயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

Page 11 of 232 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 61 111 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •