Page 105 of 232 FirstFirst ... 5 55 95 101 102 103 104 105 106 107 108 109 115 155 205 ... LastLast
Results 1,249 to 1,260 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1249
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    300,ஆண்டுகளாகியும் தமிழ் பற்று குறையவில்லை.......

    கோவை, ஜுன் 25-

    ஜெர்மன் நாட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்ப்பற்றும், கலாசாரமும் குறையவில்லை என்று ஆய்வரங்கத்தில் பெண் அறிஞர் பேசினார்.

    உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், தற்போது ஹாங்காங்கில் வசிப்பவருமான கிரிகோரி ஜேம்ஸ் பேசியதாவது:-

    தமிழின் தொன்மை

    தமிழ் சுவடிகளை பார்ப்பதற்காக 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அப்போது அங்கிருந்த நூலகர், இதற்கு முன்பு இந்த நூலகத்திற்கு எப்போது வந்தீர்கள் என்று கேட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்டப்படிப்பு படித்தபோது வந்தேன் என்று சொன்னேன்.

    உடனே அவர் பழைய அலமாரி ஒன்றைத் திறந்து, எனது 23-வது வயதில் நான் கொடுத்த விண்ணப்பபடிவம் ஒன்றை எடுத்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த விண்ணப்ப படிவத்தை இன்னமும் வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சரியமாக கேட்டேன். அதற்கு அந்த நூலகர் கூறும்போது, ``பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த தொன்மையான தமிழ் தொடர்பானவற்றை பத்திரமாக வைத்திருக்கும்போது உங்கள் விண்ணப்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது பெரிய வேலை அல்ல'' என்று தமிழின் பெருமையை கூறினார்.

    இவ்வாறு கிரிகோரி ஜேம்ஸ் பேசினார்.

    தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு

    ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அறிஞர் உல்ரிக் நிக்லாஸ் பேசியதாவது:-

    நீண்டகாலத்திற்கு பிறகு தொன்மையான, பழமையான தமிழ் மொழிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் அன்னைக்கு மேலும் ஒரு ஆபரணம் அணிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மன் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.

    ஜெர்மன் நாட்டில் 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்ப்பற்று, கலாசாரம் குறையவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே ஜெர்மனியில்தான் மிகப்பெரிய தமிழ் நூலகம் உள்ளது. அங்கு 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு தமிழ்தாய்க்கு ஒரு வசிப்பிடம் கட்ட முயற்சித்து வருகிறோம்.

    இங்கு நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன், 9-வது தமிழ் இணைய மாநாடும் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியால், நவீன கணினி உலகில் தமிழ் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெர்மனி எனக்கு பிறந்த வீடு என்றால், தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு. சங்கம் வளர்த்த மதுரையில் மருமகளாக இருக்கிறேன். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாக கருதி வாழ்ந்து வருகிறேன். எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் வழிகாட்டியாக இருந்த டி.வி.கோபால அய்யர், டி.எஸ்.கங்காதரன், டி.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு உல்ரிக் நிக்லாஸ் பேசினார்.

    கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வாழ்த்தி பேசும்போது கூறியதாவது:-

    கணினி மொழியியல் மையம்

    தமிழ் இலக்கியமும், இணையமும் இணைந்து செயல்படும் இந்த மாநாடு ஒரு பெரும் திருப்புமுனையாகும். தமிழ் இணைய மாநாடு நடத்தும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உத்தமம் அமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் இணையத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பல மைல் கண்டு முன்னேறியுள்ளோம். சில மைல்களை கடக்க தவறிவிட்டோம். தமிழ் இணைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் மூலம் இணையதள தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், எதிர்நோக்கும் சவால்களுக்கும் நாம் ஈடுகொடுக்க முடியும். பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் இணையம் பிரபலமாகியுள்ளது. மேலும் பல சாதனைகளை படைப்பதற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி மொழியியல் மையம் தொடங்க வேண்டும்.

    அதுபோல கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுயமொழிபெயர்ப்பு மற்றும் தேடு பொறிக்கான மையம் தொடங்க வேண்டும். மற்ற கல்வி நிறுவனங்களில் கணினி தொழில்நுட்பத்தை கற்கும் முறைகள், தகவல் சேகரிப்பு தொகுப்பு மையம், எழுத்தறிவு கருவிகள் உள்பட 7 விதமான துறைகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.10 கோடி தேவைப்படும். கணினி தமிழ் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் சாதனை

    உலகத்தமிழ் ஆய்வு கழகத்தின் துணைத்தலைவர் வா.செ.குழந்தைசாமி பேசியதாவது:-

    மனித சமூகம் தொடங்கிய காலத்தில் இருந்து 6 நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் 4 அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டன. இப்போது அந்த மொழிகளும், மக்களும் இல்லை. சீன நாகரிகம், இந்திய நாகரிகம் மட்டுமே உள்ளன. இந்திய நாகரிகம் என்றால் அது, வடமொழி, தமிழ் ஆகியவற்றை குறிக்கும். இவை இரண்டும் வழக்கு மொழிகளாக இருந்து வருகின்றன. இந்த தகவல்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இந்திய நாகரிகத்தின் அடிப்படை சமஸ்கிருதமும், திராவிடமும் என்று சி.பி.ராமசாமி அய்யர் கூறியுள்ளார். அந்த அடிப்படையை வரலாறு, சமுதாயவியல், உலகளவில் இடம்பெறச் செய்ய வேண்டும். இது நமது முக்கிய கடமை ஆகும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததும் நான் எழுதிய கட்டுரையில், தமிழும், வடமொழியும் இந்திய பண்பாட்டுத் தூண்கள் என்று எழுதினேன். தமிழின் சாதனை மிகப்பெரியது. அதனை புதிய யுகத்தில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் இன்னமும் நிறைய வெற்றிகளைப் பெற வேண்டியுள்ளது.

    இவ்வாறு வா.செ.குழந்தைசாமி பேசினார்.

    .....தினத்தந்தி 25.06.2010

  2. #1250
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மாநாடு துவக்க விழாத் துளிகள்.....

    * மாநாடு முறைப்படி துவங்குவதற்கு முந்தைய நிமிடம் வரை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மைய நோக்குப் பாடல் தொடர்ச்சியாச ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.

    * அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, சுரேஷ்ராஜன் உட்பட அனைத்து அமைச்சர்கள், வி.ஐ.பி.,களும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்தனர். அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த இன்னொரு முக்கிய வி.வி.ஐ.பி., ஸ்டாலின்.

    * அமைச்சர் நேரு, சட்டைப் பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.

    * வி.ஐ.பி.,களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது.

    * காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது. சிலர் மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி ஆயிரக்கணக்கானோர் சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முனையவில்லை. குடியரசுத் தலைவர் பங்கேற்றும் விழாவில், விழா தொடங்க 20 நிமிடங்களே இருந்த நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பின், நிலைமை மோசமாகி இருக்கும்.

    * சரியாக காலை 10.26 மணிக்கு மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதுவரை ஒலிபரப்பப்பட்ட மைய நோக்குப்பாடல் நிறுத்தப்பட்டு, நாதஸ்வர இன்னிசை துவங்கியது.

    * முதுமுனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாதஸ்வர இன்னிசையில் வாசிக்கப்பட்ட "மகா கணபதி' பாடலை தாளமிட்டு ரசித்தார்.

    * காலை 10.29 அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர வைக்கப்பட்டிருக்க நிதியமைச்சர் அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி வரவேற்றார்.

    * சரியாக 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மேடைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்; கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் அதேசமயம் மேடைக்கு வந்தார். முதல்வர் வந்ததும் "தமிழ் மொழி வாழ்க, செம்மொழி வாழ்க' என முதல்வரை வாழ்த்தும் வகையிலான பாடல் இசைக்கப்பட்டது.

    * ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 10.32 மணிக்கு வழக்கமான பாரம்பரிய உடையில் மேடைக்கு வந்தார்.

    * ஜனாதிபதிக்கு பொன்மஞ்சள் நிறத்திலான பொன்னாடையை முதல்வர் வழங்கினார்.

    * முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். முதுமையின் காரணமாக சிவத்தம்பி மட்டும் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார்.

    * அதைத்தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை, சீர்காழி சிவசிதம்பரம் பாடினார். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க அறிவுறுத்திய அறிவிப்பாளர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதுபோன்று சொல்லாததால், பொதுமக்கள் அமர்ந்து கொண்டே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.

    * தேசிய கீதத்தை நின்றபடி பாடிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது, அமர்ந்து விட்டார்; சிவத்தம்பியும் அமர்ந்தே இருந்தார்.

    * காலை 10.42 மணிக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    * துணைமுதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும், மாநாட்டுப் பந்தலில் உற்சாகச் சலசலப்பு.

    * ஜனாதிபதியை தமிழக மக்கள் சார்பிலும்; கவர்னரை, விழா தலைமைக்குழு சார்பிலும்; முதல்வரை தமிழக மக்கள் சார்பிலும் வரவேற்றார். வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிகள், மொழி வல்லுனர்கள், பொதுமக்களை வரவேற்றார். அவரின் வரவேற்பு பட்டியலில் பத்திரிகையாளர்கள் மட்டும் ஏனோ "மிஸ்ஸிங்'

    * ஸ்டாலின் பேசும் போது, தேவநேயப்பாவாணரின் தமிழ் இனிமை, புதுமை என "மை' விகுதி அமையும்படி பேச, அரங்க முழுவதும் கரகோஷம். ஒண்டமிழ், தண்டமிழ், தேன்தமிழ், தீந்தமிழ் என அடுத்தடுத்து தமிழை எப்படி எல்லாம் சிறப்பிக்கின்றனர் என அடுக்கு மொழியில் பேச, அரங்கத்தினரோடு, முதல்வரும் ரசித்துக் கேட்டார்.

    * ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு துணைமுதல்வர் நினைவுப்பரிசு வழங்க, மற்றவர்கள் அமர்ந்தபடி பெற்றுக் கொண்டனர். அன்பழகன், ஜார்ஜ்ஹார்ட் மட்டும் எழுந்து நின்று பெற்றுக் கொண்டனர்.

    * ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா, சிவத்தம்பி, குழந்தைசாமி என சிறப்பு விருந்தினர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களின் வாழ்த்துரையை முடித்துக் கொண்டனர்.

    * வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் வணக்கம் சொன்னபோது, அரங்கத்தில் மீண்டும் கரவொலி; குழந்தைசாமி தவிர, மற்ற மொழி அறிஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினர்.

    * குழந்தைசாமியின், "விருந்துக்கு பெயர் பெற்றது தமிழர் பண்பாடு; கொங்கு மண்டலம் அதில் தலைமைப்பீடம்; கோவை அதற்குத் தலைமையகம்' என்ற பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது

    .....தினமலர் 23.06.2010

  3. #1251
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    செம்மொழி மாநாடு: மாறன், சுஜாதா, நா.கோவிந்தசாமி, உமர்தம்பி, யாழன் சண்முகலிங்கம் அரங்குகள் ......

    உலகத் தமிழ்ச் செம்மொழி மநாட்டின் இரண்டாம் நாளான இன்று தமிழ் இணைய கண்காட்சி தொடங்கப்பட்டது. இதில் தமிழ் இணைய மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட கணினி அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கணினி அரங்குகளுக்கு மட்டும் 1 கோடிசெலவில் இணைய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. தமிழ்க் கணிமைக்காக சேவை செய்த முரசொலி மாறன், சுஜாதா, நா.கோவிந்தசாமி, உமர்தம்பி, யாழன் சண்முகலிங்கம் ஆகியோரது பெயர்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ் இணைய மாநாட்டை 1999ஆம் ஆண்டு நடத்த பெரும் முயற்சி எடுத்தவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முக்கியமானவர். மின்வழி தமிழ் வளர மென்பொருள் தயார் செய்து தமிழர்களுக்கு வழங்கிட வழிவகை செய்தவர்.

    தமிழ் இலக்கியம் மட்டும் இன்றி, இணையம் மூலமாகவும் தமிழ் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் அமரர் சுஜாதா. சிங்கப்பூரில் தமிழாசிரியராக பணி புரிந்தவர் நா.கோவிந்தசாமி.

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர்தம்பி. எலக்ட்ரானிக்ஸ் துறை நிபுணர். தமிழ் இணைய தளங்களை வாசிக்க ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு எழுத்துரு தேவை என்ற நிலையைப் போக்கி ஒருங்குறி முறையிலான "தேனீ" என்ற எழுத்துருவை அறிமுகம் செய்தவர்.

    இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அமரர் யாழன் சண்முகலிங்கம். மென்பொருள் பொறியாளர். 1995ம் ஆண்டிலேயே ‘யாழன் தமிழ் சொற்பகுப்பி" என்ற தமிழ் மென்பொருளை பயன்படுத்தி பிரபலப்படுத்தியவர்.

    தமிழ் இணைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர்களை கவுரவிக்கும் வகையில் இவர்களது பெயர்கள் அரங்கங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.

    ....இந்நேரம்.காம் 25.06.2010

  4. #1252
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இணையதள மாநாடு துவக்கம்......

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி பழங்கால பொருட்களின் கண்காட்சி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழ் இணைய தள கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.

    இணைய தளத்தில் தமிழை எந்த அளவு மேம்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று (வியாழக்கிழமை) காலை நடந்நது. இணைய தள கண்காட்சியை யுனெஸ்கோவின் இயக்குனர் ஆறுமுகம் பரசுராமென் திறந்துவைக்கிறார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்னிலை வகிக்கிறார்.

    இது தவிர இன்றைய மாநாட்டில் தமிழ் ஆய்வரங்க தொடக்க நிகழ்ச்சியும் கொடிசியா வளாகத்தில் உள்ள இ ஹாலில் மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதை சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கிவைக்கிறார். மத்திய அமைச்சர் ராசா முன்னிலை வகித்தனர். தமிழ் இணைய தள மாநாட்டு குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தமிழ் இணைய தள கண்காட்சி அரங்கில் மொத்தம் 124 நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 40க்கும் மேற்பட்ட நிலையங்களில் அரசுத் துறை நிறுவனங்களின் கணினிப் பயன்பாடு, மின்னணு பயன்பாடு போன்றவற்றின் செயல் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை மாநகராட்சி சார்பில் மின் ஆளுமையை விளக்கும் 2 நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் வரி செலுத்துதல், குடிநீர் கட்டணம் செலுத்துதல், கட்டிட வரைபட அனுமதி பெறுதல் உள்பட தேவையானவற்றை இணைய தளம் மூலமாக பூர்த்தி செய்து கொள்வது எப்படி என்ற விளக்கம் இந்த நிலையங்களில் அளிக்கப்படும்.

    இதுபோல் காவல் துறை மூலமாக குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து கைது செய்வது, போக்குவரத்தை சீரமைப்பது ஆகியவற்றை இணைய தளம் மூலம் மின்ஆளுமை மூலம் செயல்படுத்துவது குறித்த விளக்கமும் இடம் பெறுகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் யு.பி.எஸ். சிஸ்டம் முறையில் பஸ் போக்குவரத்தை கண்காணிப்பது குறித்து இணைய தளம் மூலம் விளக்கப்படுகிறது.

    இது தவிர கிராமங்களில் கணினிப்பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் எல்காட் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கண்காட்சியும் இந்த அரங்கில் இடம் பெறுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் தமிழகத்தில் நிலத்தடி நீர் எந்த ஊரில் உள்ளது, நிலத்தடி நீர் மட்டத்தை இணைய தளம் மூலம் கண்டறிவது, அணைக்கட்டுகளில் உள்ள நீர் மட்டத்தை இணைய தளம் மூலம் கண்டறிவது பற்றிய செயல் விளக்கமும் இடம் பெறுகிறது.

    இதுபோல் பொது சுகாதாரத்துறை, விவசாய துறை, தொழில் துறை, வணிக வரித்துறை உள்பட பல்வேறு துறைகள் பற்றி இணைய தளம் மூலம் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது குறித்த நடவடிக்கை எடுப்பது பற்றி கண்காட்சியில் விளக்கப்படுகிறது. பத்திரப்பதிவு துறை சார்பில் 2 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய தளம் மூலம் இதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்வது எப்படி என்று விளக்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமின்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் 6 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் நடக்கும் உயர்மட்டக்குழு ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது பற்றியும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள் அடங்கிய ஒரு லட்சம் சி.டி.க்கள் இலவசமாக வினியோகிக்கப்பட உள்ளன.

    பார்வையற்றவர்களுக்கு புத்தகம் படிப்பதன் மூலம் ஆகும் நேர விரயத்தை தவிர்க்கவும், புத்தக செலவுகளை குறைக்கவும் கணினி மூலம் படிக்கும் புதிய முறை குறித்து கண்காட்சியில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 200 பக்கம் உள்ள சாதாரண புத்தகம் என்றால் பார்வையற்றவர்களுக்கான புத்தகமாக பிரைலி புத்தகத்தில் 18 ஆயிரம் பக்கம் தேவைப்படும். இதை தவிர்க்க கணினி மூலம் படிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    செல்போனில் தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்புவது, இ.மெயில் அனுப்புவது, ஆங்கில கலைச் சொற்களை தமிழில் மக்கள் தெரிந்து கொள்ள தனியாக அட்டவணை தயாரித்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    ....இந்நேரம்.காம் 25.06.2010

  5. #1253
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ஆஸ்திரேலியாவில் முதல் பெண் பிரதமர் பதவி ஏற்றார்......

    மெல்போர்ன், ஜுன்.25-

    ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஜுலியா கில்லார்டு என்ற பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் இதுவரை துணைப்பிரதமராக இருந்தார்.

    வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

    ஆஸ்திரேலியாவின் பிரதமராக இதுவரை கெவின் ரூத் இருந்து வந்தார். 53 வயதான அவர் 2007-ம் ஆண்டு முதல் இந்த பதவியில் இருந்து வந்தார். அவர் கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் ஜான் ஹோவர்டுவை பெருத்த வித்தியாசத்தில் தோற்கடித்து பதவிக்கு வந்தார்.

    அவரது சில கொள்கைகள் காரணமாக அவருக்கு மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் அவரது ஆதரவு வீழ்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பாராளுமன்ற கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தும்படி துணைப்பிரதமர் ஜுலியா கில்லார்டு கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் பலரும் திரண்டனர்.

    போட்டியின்றி தேர்வு

    கட்சியின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 112 பேரும் ஜுலியாவுக்கு ஆதரவு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஜுலியா போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பில் தனக்கு தோல்வி ஏற்படும் என்பதால் ரூத் கலந்து கொள்ளவில்லை. அவர் கண்ணீர் வழிய தன் பதவியை ராஜினாமா செய்தார்..

    புதிய பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜுலியாவுக்கு கவர்னர் ஜெனரல் குயென்டின் பிரைஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 49 வயதான ஜுலியாவுக்கு சக்தி வாய்ந்த தொழிற்சங்கமும் ஆதரவாக இருந்தது.

    ஆஸ்திரேலியா நாட்டில் இப்போது தான் முதல் முறையாக ஒரு பெண் பிரதமர் ஆகிறார்.

    ....தினத்தந்தி 25.06.2010

  6. #1254
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    மாநாட்டு இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்......

    25.06.2010 தமிழ் மாநாட்டின் இன்றைய கூட்டம்...கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம்....தலைப்பு கிளம்பிற்று காண் தமிழர்ச் சிங்க கூட்டம்..............காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு......

    மாலை 4 மணிக்கு சிறப்பு கருத்தரங்கம் ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' கலைஞர் மு கருணாநிதி தலைமையில்....நேரடி ஒளிபரப்பு கலைஞர் தொலைக்காட்சியில்........

    சிறப்பு பட்டிமன்றம்.....ஒளிபரப்புகளை சன்தொலைக்காட்சி...மற்றும் சென்னை தொலைக்காட்சி நிலையமும் வழங்குகிறது....


  7. #1255
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    கவியரங்கம் கொஞ்ச நேரம் பார்த்தேன், கொஞ்சம் தான் ரசிக்க முடிந்தது.. தமிழன்பன் தமிழ் என்ன ஆனது என்று தெரியவில்லை.. கவியரங்கை துவக்கி வைக்க சொன்ன உற்சாகத்தை சுயத்தை இழந்துவிட்டார் போலும்.. வைரமுத்து வழக்கம் போல வாழ்த்து பாடினார், கொஞ்சம் ரசிக்கும் படியாகவும் இருந்தது அவரின் கவி..

    விவேகா விலக்கப்பட்டிருக்க வேண்டியவர், தமிழ் நாட்டில் புலவர்களுக்கு பஞ்சம் இருப்பது விவேகாவை பார்த்த போதுதான் புரிந்தது..

    நா.முத்துக்குமாரும் வாழ்த்துபாடும் பட்டியலில் சேர்ந்துட்டார், என்றாலும் பல இடங்களில் ரசிக்க வைத்தார்..

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மறைந்து, எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்றாக்கி கொண்டிருக்கிறாரோ கலைஞர் என்று எண்ண வைத்தது..

    கயல்விழி வெங்கடேஷைத்தான் சொல்றேன், அழகிரியின் மகள், இவர் கவிதை வாசித்ததை பார்த்தப்போ சின்ன பிள்ளைங்க பேச்சு போட்டியில் பேசுவாங்களே அது மாதிரி இருந்துச்சு, தலைப்பை விட்டுடு தாத்தாவை பற்றியே பாடிக் கொண்டிருந்தார்.. ஒரு வேளை தா தா எனக்கும் பதவி தா தா னு மறை முகமாய் கேட்டாரோ என்னவோ..

    புலவர் முத்தைய்யா வந்தப்பின் கவியரங்கில் தமிழ் நடமாடக் கண்டேன், நடனமும் ஆடக் கண்டேன்.. முத்தைய்யா அவர்களின் கவியை முழுமையாய் சுவைக்க நேரமில்லை, அலுவலகம் கிளம்பிட்டேன்..
    அன்புடன் ஆதி



  8. #1256
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    பட்டிமன்றம் பரவாயில்லை...புலவர் அறிவொளி, புலவர் இலங்கை ஜெயராஜ் பேச்சுக்கள், நடுவர் சத்தியசீலன் பேச்சு மற்றும் பேரசிரியர் அரங்க மல்லிகை.... அவர்களின் பேச்சுக்களும் அருமை...

    தமிழர் பண்பாட்டுக்கு, வளர்ச்சிக்கு துணை புரிவது.....

    சங்க இலக்கியமா? இடைக்கால இலக்கியமா? தற்கால இலக்கியமா?

    தீர்ப்பு சங்க்கால இலக்கியமே....

    இத்தலைப்புக்கு பங்கு பெற்றவர்கள் இலங்கை ஜெயராஜ், ஆவுடையப்பன்

    இடக்கால இலக்கியம்....அறிவொளி, கேசமங்கையர்கரசி

    தற்கால இலக்கியம்......பேராசிரியர் அரங்க மல்லிகை, தென்னவன்
    Last edited by nambi; 25-06-2010 at 05:10 PM.

  9. #1257
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு [^] சட்டம்': வயதான தந்தையை புறக்கணித்த மகன் கைது......

    சென்னை: வயதான தந்தையை கவனிக்காத, செலவுக்கு பணம் தராத மகன் 'முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை [^] இதுவே ஆகும்.

    சென்னை பட்டாளத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (85), கொத்தவால்சாவடியில் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு முதுமை காரணமாக வீட்டில் இருக்கிறார்.

    இவருக்கு குமார் (55), சேகர், கமலகண்ணன் ஆகிய 3 மகன்கள். முத்துகிருஷ்ணனின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    அதன்பிறகு மகன்கள் சேகர், கமலகண்ணன் ஆகியோர் தந்தையை கவனித்து வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார் இவரை கவனிப்பதில்லை. உணவுக்கும் செலவுக்கும் சில நூறுகள் கூட பணமும் தருவதில்லை.

    இத்தனைக்கும் குமார் ரயில்வே காண்டிராக்டராக உள்ளார். பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். டெய்லர் கடை வைத்துள்ள மனைவி, கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகன் ஆகியோர் மூலம் ரூ. 20,000 வரை ஊதியம் வருகிறது. இருப்பினும் தந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.

    இது குறித்து முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அயனாவரம் போலீசில் புகார் [^] கொடுத்தார். போலீசார் குமாரை அழைத்து, தந்தைக்கு மாதம் ரூ.200 கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தனர்.

    ஆனால், அதன்பிறகு 2 மாதம் மட்டுமே பணம் கொடுத்த குமார், பின்னர் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதையடுத்து முத்துகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் தந்தார். இதை ஏற்ற கமிஷ்னர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் குமாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனக்கே போதிய வருமானம் இல்லை. நானே என் மனைவி பராமரிப்பில்தான் இருக்கிறேன் என்றார்.

    ஆனால், மகன் குமாருக்கு மாதம் ரூ.20,000 வரை வருமானம் வருவதாக முத்துகிருஷ்ணன் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார் குமார் மீது 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதியோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தந்தையை கவனிக்காத மகனை இந்த சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

    வயதான காலத்தில் உள்ள தாய், தந்தையை கவனிக்காமல் துன்புறுத்தும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.


    ............தட்ஸ் தமிழ் 25.06.2010

  10. #1258
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு....

    பெட்ரோல் விலை உயர்வு......
    பெட்ரோல் லிட்டருக்கு 3.73
    டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும்...
    சமையல் எரிவாயு உருளைக்கு (சிலிண்டருக்கு) 35 ரூபாய் விலையும்....

    மண்ணெண்ணெய் லிட்டருக்கு 3 ரூபாய் விலை
    உயர்த்த அமைச்சரவை முடுவு செய்துள்ளது.

    டீசல் விலை கிரித் பரித் குழு பரிந்துரைத்ததின் படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

    ....சன்செய்திகள்...25.06.2010 14.05
    Last edited by nambi; 25-06-2010 at 09:33 AM.

  11. #1259
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    சமையல் எரிவாயு உயர்வு அதன் சில்லறை விநியோகத்திற்கு கூடுதலாக டிப்ஸ் 25 லிருந்து 50 ரூபாய் வரை....அடுக்க்கம் மற்றும் தேநீர் கடை என்றால் 100 லிருந்து 150, 200......(விரைவான விநியோகத்திற்கு, கள்ள விநியோகத்திற்கு) ஆக மொத்தம் சாதாரண மக்களுக்கு தற்போதைய விலையோடு 315 + 35 + 25 (டிப்ஸ் குறைந்த பட்சம்) = 375 ஆகா பேஷ் பேஷ்....ஒவ்வொரு (இருப்பவர்) வீட்டிலும் பாத்திரத்தை வைத்து விட்டு செல்லவேண்டியது தான்...பண்டைய காலத்திற்கு, பழைய பண்பாட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம்....பிச்சை இடுவார்களா? இலவசங்கள் வேறு வேண்டாம் என்ற குரல்....

  12. #1260
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    உலகத்தமிழ் மாநாடு...சில செய்திகள்....

    உலகத்தமிழ் மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் கருத்தரங்கில், டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி, தொல்.திருமாவளவன் பங்கேற்பு.........

    மாநாட்டில் பங்கேற்றவர்களில் அதிக கவனத்தை ஈர்த்தவர்...ஜெர்மன் அறிஞர் உல்கிரிஸ் நிக்கோலஸ் (ஜெர்மன் பெண் தமிழறிஞர்)...தமிழிலேயே பேசி அசத்தியவர்....

    ஜெர்மன் மெழியை தாய் மொழியாக கொண்ட இவர் 1973 இல் தமிழ் பயில ஆரம்பித்தவர் 1980 இல் முதுகலை பட்டம் (எம.ஏ) தமிழில் பெற்றார்....அதன் பின் ஆரய்ச்சி படிப்பு படித்து முனைவர் பட்டமும் பெற்றார் (பி.எச் டி).....

    1980 இல் மூர்மார்க்கெட் எரிந்த பொழுது பல புத்தகங்கள் எரிந்து விட்டதாகவும். அங்கிருந்தே பல புத்தகங்களை வாங்கி சென்று ஜெர்மனியில் தமிழ் நூல்கள் கொண்ட தூலகத்தை நிறுவியுள்ளார். அதில் சுமார் தற்பொழுது 50000 அரிய தமிழ் நூல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மூர்மார்கெட் எரியாமல் இருந்தால் இன்னும் பல நூல்கள் கிடைத்திருக்கும் என்று கூறினார். தமிழ் ஒரு அருமையான மொழி அதற்கு செம்மொழி அந்தஸ்து மிகத்தாமதமாக கிடைத்துள்ளது. என்று கூறினார். தற்பொழுது ஜெர்மன் குளோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராகபணியாற்றிக்கொண்டு வருகிறார். அங்குள்ளவர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு அவர் எடுத்துவரும் முயிற்சிகள் பாராட்டுக்குரியது என இதர அறிஞர் கள் பாராட்டியுள்ளனர். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரை திருமணம் புரிந்து கெண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    (குறிப்பு மூர்மார்க்கெட் வியாபாரிகளை அப்புற படுத்துவதற்காக,.... (அரசு எடுத்த மறைமுக செயல் எம்.ஜி.ஆர் காலத்தில் 1980).... அந்த பழம்பெரும் பாரம்பரிய மார்கெட்டை எரித்ததாக அதிகாரபூர்வமற்றத் தகவல் உண்டு)



    மணிப்பூர் மாநில பெண் தமிழறிஞர் சொயப் ரெபிகாதேவி திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். திருக்குற்ளை பிழையின்றி தமிழில் எழுதுகிறார். தமிழ் ஒரு அழகான, மிகவும் தொன்மையான மொழி எனபது முற்றிலும் உண்மை என ஆணித்தரமாக தெரிவிக்கிறார். அதற்கு செம்மொழி தகுதி மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இந்த அறிவிப்பு மிகவும் தாமதமான ஒன்று எனவும் அனைவரும் ஒருசேர தெரிவிக்கின்றனர்.

    ...ஆதாரம் சன் செய்திகள்...25.06.2010
    Last edited by nambi; 25-06-2010 at 10:51 AM.

Page 105 of 232 FirstFirst ... 5 55 95 101 102 103 104 105 106 107 108 109 115 155 205 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •