Page 103 of 232 FirstFirst ... 3 53 93 99 100 101 102 103 104 105 106 107 113 153 203 ... LastLast
Results 1,225 to 1,236 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1225
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    இன்றைய ஆட்டம்...

    இன்றை ஆட்டம் (இந்திய நேரப்படி)

    குழு B

    முதலா வது ..... கொரிய குடியரசு.... (எதிர்)....கிரீஸ்...மாலை 5.00 மணிக்கு (இடம் நெல்சன் மண்டேலா வளவு, எலிசபத் துறைமுகம்)



    2 வது.... ......அர்ஜன்டைனா.....(எதிர்)......நைஜிரியா...இரவு 7.30 மணிக்கு (இடம் ஜோகன்ஸ்பர்க்)

    ....பிபா இணையத்தளம்.

  2. #1226
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    நள்ளிரவில் சென்னையில் பூமி அதிர்ச்சி; கட்டிடங்கள் குலுங்கின பீதியில், மக்கள் வீடுகளில் இருந்

    சென்னை, ஜுன்.13-

    நள்ளிரவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் சென்னை நகரின் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    நிலநடுக்கம்

    சென்னையில் நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஒரு சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் லேசாக குலுங்கின. வீடுகளில் நிலநடுக்கம் உணரபட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து, தங்கள் குழந்தைகளுடன் வீட்டை விட்டு விட்டு சாலைக்கு ஒடி வந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே சரிந்து விழுந்தன. மேஜை, நாற்காலிகள் அதிர்ந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னையில் தேனம்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, மைலாப்பூர், தியாகராயநகர், திருவான்மிïர், கோபாலபுரம், மதுரவாயல், மின்ட், ராயப்பேட்டை, சாந்தோம், பல்லாவரம், கொடுங்கைïர், கே.கே.நகர். கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 10 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் இரவு பணி பார்த்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    சாலையில் மக்கள் வெள்ளம்

    இந்த திடீர் நிலநடுக்கத்தால் சென்னை நகர் முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. மெரினா கடற்கரையையொட்டிய பகுதிகளில் வசித்தவர்கள் தங்கள் வீடுகளை விட்டு விட்டு கடற்கரை சாலைக்கு வந்தனர்.

    நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி வரக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கடற்கரை பகுதியில் பொது மக்கள் யாரும் செல்லாதப்படி போலீசார் பார்த்துக்கொண்டனர். முன்னதாக அவர்கள் கடற்கரை மணலில் படுத்திருந்த பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விட்டு சாலைகளில் குவிந்தனர். இதனால் சாலைகளில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

    7.7 ரிக்டர் அளவு

    இதற்கிடையில் அந்தமான் நிக்கோர்பார் தீவில் இருந்து 164 கிலோமீட்டர் தூரத்தில் நள்ளிரவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இது பதிவாகி இருந்தது. இதன் எதிரொளியாக சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    .....தினத்தந்தி 13.06.2010

  3. #1227
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    இது உண்மை. சென்னையில் தங்கியிருந்ததால் நானும் இன்று அதிகாலையில் (1 மணியளவில்) உணர்ந்தேன். உறக்கத்தில் இருந்த உறவுகள் அனைவரையும் எழுப்பினேன். யாரும் நம்பவில்லை, ஆனால் பயந்தனர்....அப்பொழுது நின்று விட்டது. இங்கிலாந்து எதிர் அமெரிக்கா உலக கால்பந்து போட்டி முடிந்த அரை மணி நேரத்திற்குள் நிகழ்ந்தது. கணிணி திரை...மேசை... சுழல் நாற்காலி அனைத்தும் 10 வினாடிகள் வரை ஆடியது. துடித்து எழுந்து விட்டேன். கட்ட்டம் விழுந்து விடும் என்றே நம்பினேன். அந்தளவுக்கு ஆடியதை முழுதும் உணர்ந்தேன்......இன்று செய்தி வரும் என்றும் கூறினேன் சரியாக வந்து விட்டது.

  4. #1228
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    அர்ஜென்டினா போட்டியை பார்த்த கால்பந்து ரசிகர்கள் சுட்டுக்கொலை-சோமாலியாவில் பயங்கரம்.....

    ஜோகனஸ்பர்க், ஜுன்.15 சோமாலியாவில் அர்ஜென்டினா- நைஜீரிய அணிகளுக்கிடையே நடந்த கால்பந்து போட்டியை டி.வி.யில் ரசித்த இரு ரசிகர்களை அல்குவைதா ஆதரவு தீவிரவாதக்கும்பல் சுட்டுக் கொன்றது.

    ஆப்பிரிக்க நாடானா சோமாலியாவின் பெரும் பகுதிகள்,அல்குவைதாவுடன் தொடர்புடைய அல்ஷகாப், ஹிஸ்புல் இஸ்லாம் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தலைநகர் மாகதிசு நகரமும் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.உலக கோப்பை கால்பந்து போட்டியை காண சோமாலிய மக்களுக்கு இந்த இயக்கங்கள் தடை விதித்ததிருந்தன.

    இந்த நிலையில் கடந்த 12ந் தேதி நடந்த அர்ஜென்டினா-நைஜீரிய அணிகள் மோதிய ஆட்டத்தை மாகதிசு நகரத்தில், இளைஞர்கள் சிலர் ரகசியமாக பார்ப்பதாக தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து 10 பேர் கொண்ட கும்பல் அந்த வீடு மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. இந்த தாக்குதலில் இரண்டு கால்பந்து ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பின்னர் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் ரகசியமாக கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த மேலும் 12 பேரை கைது செய்து இழுத்து சென்றது.அவர்கள் என்னவானார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    இது குறித்து ஹிஸ்புல் இஸ்லாம் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது அப்தி கூறும் போது, ''கால்பந்தால் நேரமும் பணமும்தான் விரையம் ஆகிறது.மனிதர்கள் மேலேயும் கீழேயும் துள்ளிக் கொண்டு இருக்கும் இந்த ஆட்டத்தால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை.சிறுவர்களும் இளைஞர்களும் கால்பந்து பார்த்து கெட்டுப் போகிறார்கள்.அதனால்தான் கால்பந்துக்கு தடை விதித்துள்ளோம்'' என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    தீவரவாத பகுதிகளில் கால்பந்துக்கு பார்க்க தடை விதிக்கப்பட்டதையடுத்து சோமாலிய இளைஞர்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று போட்டியை ரசிப்பதாக கூறப்படுகிறது. யார் யாரெல்லாம் கால்பந்து போட்டியை பார்க்கின்றனர் என்பது குறித்தும் தீவிரவாத கும்பல் கணக்கெடுத்து வருகின்றனவாம்.
    .....மக்கள் முரசு 15.06.2010

  5. #1229
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    குடும்பத்தில் யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில் என்ஜினீயரிங் வகுப்பில் சேரும் 78 ஆயிரம்

    ('டியுசன்' கட்டணத்தை அரசே செலுத்தும்)


    சென்னை, ஜுன்.16-

    என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரில் 78 ஆயிரம் மாணவர்கள் முதல்தலைமுறையாக பட்டப் படிப்புக்கு செல்ல உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் டிïசன் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

    ரேண்டம் நம்பர்

    என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு கம்ப்ïட்டர் மூலம் ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

    உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி, முதன்மைச் செயலாளர் கே.கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் குமார் ஜெயந்த், துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் முன்னிலையில் கம்ப்ïட்டர் மூலம் ஒரே நொடியில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது.

    என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் சென்று தங்கள் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிட்டு தங்களுக்கான ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்ட பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1.67 லட்சம் பேர் விண்ணப்பம்

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 406 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களில் மாணவர்கள் ஒரு லட்சத்து ஆயிரத்து 234 பேர். மாணவிகள் 66 ஆயிரத்து 172 பேர். விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெறும் பட்சத்தில் அவர்களை தரவரிசை செய்வதற்காக ரேண்டம் நம்பர் வழங்கப்படுகிறது.

    கட் ஆப் மார்க் சமமாக இருக்கும்போது முதலில் கணித மதிப்பெண், அதன்பின், இயற்பியல் இதைத்தொடர்ந்து பிறந்த தினம் அதுவும் ஒருவேளை சமமாக இருந்தால் ரேண்டம் எண்ணை வைத்து தரவரிசை நிர்ணயிக்கப்படும். ரேண்டம் நம்பர் பயன்படுத்துவது மிக மிக அரிதுதான். கடந்த ஆண்டு 12 மாணவர்களுக்காக ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது.

    18-ந்தேதி ரேங்க் பட்டியல்

    என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களின் ரேங்க் பட்டியல் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். விளையாட்டுப் பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு (மொத்தம் 100 இடங்கள்) 21, 22-ந் தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 28-ந் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். என்ஜினீயரிங் படிப்பில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கான கவுன்சிலிங் 29-ந் தேதி தொடங்கி ஜுலை 3-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு (உடல் ஊனமுற்றவர்கள்) 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிறோம். அவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 4-ந் தேதி நடத்தப்படும். பொது கவுன்சிலிங் ஜுலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கவுன்சிலிங் முடிவடைந்து வகுப்புகள் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் தொடங்கப்படும்.

    கல்விக்கட்டண சலுகை

    குடும்பத்தில் யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில் முதல்தலைமுறையாக கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசே கல்விக்கட்டணத்தை செலுத்தும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். இந்த ஆண்டு என்ஜினீயரிங் விண்ணப்பித்த ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேரில் 78 ஆயிரத்து 86 பேர் (50 சதவீதம்பேர்) முதல்தலைமுறை மாணவர்-மாணவிகள்.

    என்ஜினீயரிங் படிப்பில் போதிய இடங்கள் உள்ளன. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்த ஆண்டு தமிழ்வழியில் என்ஜினீயரிங் படிப்பு தொடங்கப்படுகிறது. இதற்கான பாடப்புத்தகங்கள் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக தயாராகிவிடும். பொதுவாக என்ஜினீயரிங் படிப்பில் சேர விரும்பும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் ஐ.டி. இ.சி.இ. என்றுதான் தேர்வு செய்கிறார்கள்.

    கண்காணிப்புக்குழு

    ஒட்டுமொத்தமாக எல்லாருமே ஒரே படிப்பில் சேரும்போது அதற்கு முக்கியத்துவம் குறைந்துவிடும். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிப்பதை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பது பற்றி ஆராயப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

    .....தினத்தந்தி 16.06.2010

  6. #1230
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by செய்தி.... View Post
    இது குறித்து ஹிஸ்புல் இஸ்லாம் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் முகமது அப்தி கூறும் போது, ''கால்பந்தால் நேரமும் பணமும்தான் விரையம் ஆகிறது.மனிதர்கள் மேலேயும் கீழேயும் துள்ளிக் கொண்டு இருக்கும் இந்த ஆட்டத்தால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை.சிறுவர்களும் இளைஞர்களும் கால்பந்து பார்த்து கெட்டுப் போகிறார்கள்.அதனால்தான் கால்பந்துக்கு தடை விதித்துள்ளோம்'' என்று பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


    .....மக்கள் முரசு 15.06.2010
    (மனிதர்களை துப்பாக்கியால்) ''சுட்டு சுட்டு விளையாடுவதால் மட்டும் பலன் உள்ளதா''?......''இவர்களாவது காலால் பந்தை உதைத்து உதைத்து தான் விளையாடுகிறார்கள்''

    (இந்த செய்தியை பார்த்தால்.....திரை நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது ''செத்து செத்து விளையாடுவோமா? (வடிவேல் நகைச்சுவை))

  7. #1231
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர்-மரடோ னா......

    ஜோகனஸ்பர்க், ஜுன்.17 (டிஎன்எஸ்) பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர் என்று அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோ னா மீண்டும் தாக்கியுள்ளார்.

    கால்பந்து மன்னர்கள் பீலேவும் மரடோ னாவும் அடிக்கடி ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வார்கள்.அதுவும் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக மரடோ னா பொறுப்பேற்ற பின்னர் சண்டை இன்னமும் அதிமாகிவிட்டது.ஒருவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தும் இன்னொருவர் பிரேசிலில் இருந்து கொண்டும் வார்த்தைகளால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    சமீபத்தில் ஒரு பிரஸ்மீட்டில் தென்ஆப்பிரிக்காவில் உலக கோப்பை நடைபெறுவதை பீலே விரும்பவில்லை என்று மரடோ னா குறை கூற, பணத் தேவைக்காகவே மரடோ னா அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று பதிலடி கொடுத்தார் பீலே.

    பீலேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மரடோ னா, ''பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர் அவரது விமர்சனங்களை பற்றி தான் கவலைப்படப்போவது இல்லை. என்னை பற்றி பேசுவதை முதலில் பீலே நிறுத்த வேண்டும். அப்போதுதான் நானும் நிறுத்துவேன்'' என்று கூறியுள்ளார்.

    இந்த முறை 'யூபா' தலைவர் மைக்கேல் பிளாட்டினியையும் மரடடீனா விட்டு வைக்கவில்லை. மரடோ னாவுக்கும் பிளாட்டினிக்கும் ஜபுலானியால் சண்டை வந்துள்ளது. பிளாட்டினி ஜபுலானி ஓ.கே என்று கூற மரடோ னாவுக்கு கோபம் வந்து விட்டது. ''பிரெஞ்சுக்காரர்களுக்கு தாங்கள்தான் உலகத்திலேயே சிறந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. பிளாட்டினியும் பிரெஞ்சுக்காரர்தான். அவர் சொல்வதுதான் சரி என்று சொல்வார். வேண்டுமென்றால் ஜபுலானியை வைத்து அவர் விளையாடி பார்க்கட்டும்'' என்று அவரையும் போட்டு வறுத்து எடுத்தார்.

    .....சென்னை ஆன்லைன் 17.06.2010

  8. #1232
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பை நிறவெறியர்களை அமைதிப்படுத்தும்- கேமரூன் கேப்டன் ஈட்டோ......

    ஐரோப்பிய கால்பந்தை ஆட்டிப்படைத்து வரும் நிறவெறி இந்த முறை, தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக உலகக்கோப்பை கால்பந்தை நடத்தி முடிக்கும் போது, அமைதியாகும் என்று ஆப்பிரிக்க அணியான கேமரூன் அணித் தலைவர் சாமியேல் ஈட்டோ தெரிவித்துள்ளார்.

    "என்னுடைய கால்பந்து வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட கடினமான தருணங்கள் ஏராளம். ஆனால் இம்முறை தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் ரசிகர்களின் அணுகுமுறை மாறும் என்று நம்புகிறேன். நான் இம்முறை இத்தாலியில் கடும் நிறவெறி வசைக்கு ஆளானேன், ஆனால் அந்த ஒரு நாடு மட்டும் நிறவெறித் தக்கமுடையதல்ல. ஆனால் இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்." என்றார் ஈட்டோ.

    தென் ஆப்பிரிக்காவில் அதுவும் என்னுடைய ஆதர்சமான தலைவர் நெல்சன் மண்டேலா இருக்கும் நாட்டில் உலகக் கோப்பை போட்டியில் நான் விளையாடுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

    நான் அவரை இரண்டு முறை சந்திக்கும் அதிர்ஷ்டம் பெற்றேன், அந்தத் தருணம் என் வாழ்வில் ஒரு முக்கியமான பொக்கிஷம். இதனால்தான் ஒரு ஆபிரிக்கனாக இந்த உலகக் கோப்பையில் பங்கேற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

    உலகம் ஆப்பிரிக்க நாடுகளை பசி, போர், பிணி, பஞ்சம், வறுமை என்று பார்த்துவருகிறது. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகள் உலகிற்கு ஆப்பிரிக்கா பற்றிய வேறு பார்வையை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். வரலாற்றில் இது சிறந்த உலகக் கோப்பையாக அமைவது குறித்து உலகம் ஆச்சரியமடையப் போகிறது." என்று கூறினார் ஈட்டோ.

    தனது கால்பந்து நாட்கள் முழுதும் நிறவெறித் தன்னை துரத்தியதாகக் கூறினார் சாமியேல் ஈட்டோ.

    "ஆப்பிரிக்க கால்பந்து வீரர்களுக்கு கால்பந்து ஒரு கடினமான பயணமாகவே இருந்து வந்துள்ளது. இன்றும் அப்படித்தான். நான் இதனை அனுபவித்திருக்கிறேன். நான் ரியல் ஜர்கோசா அணியை எதிர்த்து விளையாடும்போது மைதானத்தில் ரசிகர்கள் குரங்கு போல் என்னைக் கேலி செய்து சேஷ்டை செய்வர். மைதானத்தில் நான் செல்லும் இடத்தில் பொட்டுக் கடலைகளை விட்டெறிவர். ஆனால் நான் கோல் அடித்து விட்டு குரங்கு போல் அவர்களிடம் ஆடிக் காண்பிப்பேன்." என்றார் ஈட்டோ.

    2004ஆம் ஆண்டு பார்சிலோனா அணியில் நுழைந்தபோது ஈட்டோ ஒரு முக்கியமான வாசகம் ஒன்றை வெளியிட்டார்: "வெள்ளையர் போல் வாழ, கறுப்பர் போல் ஓடினேன்" என்றார். அப்போது ஈட்டோ மீது பலர் "நிறவெறி" என்று பாய்ந்தனர்.

    "நான் கூறிய அந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்கள் மக்களுக்கு புரியவில்லை. நான் கூற வந்தது என்னவென்றால் மற்றவர்களைப் போல் வாழ்வில் உயர அவ்ர்கள் செய்வதை விட பல மடங்கு கடின உழைப்பை ஒரு ஆப்பிரிக்கன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது." என்ற பொருளில்தான் நான் அதனைக் கூறினேன்.

    மேலும் ஈட்டோ, கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்பிரிக்க அணிகள் முன்னேற முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டினார்.

    1990ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன் முதலாக காலிறுதியில் நுழைந்த ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை கேமரூன் பெற்றது.

    ஆனால் இரண்டு பெனால்டிகள் கேமரூனுக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு சார்பாக வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இங்கிலாந்திடம் கேமரூன் தோல்வி தழுவி வெளியேறியது.


    ......வெப்துனியா 08.06.2010

  9. #1233
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ரயில்வே துறை மெகா ஊழல் ; பணியாளர் தேர்வு வினாத்தாள் விற்று வியாபாரம்: முக்கியப்புள்ளி எங்கே?......

    ஐதராபாத்: நாட்டில் அவ்வப்போது உயர்பொறுப்பில் இருப்பவர்கள் அற்ப காசுக்கு ஆசைப்பட்டு தங்களுடைய பதவியின் பெருமையையும், பொறுப்பையும் குப்பைத்தொட்டியில் தள்ளும் அளவுக்கு போய்விடுகின்றனர். சமீபகாலமாக இந்தியாவில் சி.பி.ஐ.போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவகவுன்சில் தலைவர் கேதான்தேசாய் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து இந்த கவுன்சிலை மத்திய அரசு கலைத்துள்ளது.



    தமிழகத்தில் அரசு அலுவலக சுவர் செங்கல்கள் கூட உள்ளே வருவோரிடம் கை நீட்டும் அளவிற்கு லஞ்சம் கொழிக்கத்துவங்கி விட்டது. லஞ்சப்பணத்துடன் அதிகாரிகளிடம் சிக்கிய தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி ஒருவர் பணத்தை முதலைபோல சவைத்து விழுங்க நினைத்தார், ஆனால் போலீசார் வாயில் கையை போட்டு வெளியே ரத்தக்கறையுடன் எடுத்தது நினைவு இருக்கலாம். இதில் ஒரு இளைப்பாறுதல் தரும் விஷயம் என்னவெனில் உலக லஞ்சம் பெறும் நாடுகளில் 84 வது இடத்தில் இருக்கிறது என்பது . இதில் தான் நாம் சற்று யோசிக்க வேண்டும் 84 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் வெளிவரும் லஞ்ச விவகாரம் நமது நெஞ்சை சுடு, சுடுவென எரித்து தள்ளுகிறது. டாப் 10 ல் வந்தால் என்னாவது அதற்குத்தான் லஞ்ச வழக்கில் சிக்குவோரை கண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இந்தியாவில் அதிகம் ஊழியர்களை கொண்ட ரயில்வே துறையில் தற்போதைய ஊழல் சற்று வித்தியாசமானது. கடந்த 6 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 50 ஆயிரம் பதவிகளுக்கான ( அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர், அசிஸ்டண்ட் லோகோ பைலட் ) தேர்வில் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் பணியாளர் நியமனத்தில் ஊழல் செய்தால் தானே சிரமம் என யோசித்த ரயில்வே தேர்வானைய ஊழியர்கள் தேர்வு எழுதும் கேள்வித்தாளை விற்று காசாக்கியுள்ளனர். ஒரு விடைத்தாள் விலை 3. 5 லட்சம் வரை போயிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் புரண்டிருக்கிறது. இது தொடர்பான விஷயம் லீக் ஆகவே சி.பி.ஐ., அதிகாரிகள் டிஐ.ஜி., லஷ்மி நாராயணா தலைமையில் யார் , யார் இதில் ஈடுபட்டுள்ளனர் என மோப்பம் பிடித்து 8 பேரை கைது செய்திருக்கிறது. ஐதராபாத், மும்பை, பெங்களூரு, ராய்ப்பூர், கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ளவர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மேற்கூறிய நகரங்களில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரயில்வே தேர்வானைய வாரிய சேர்மன் மகன் விவேக்பரத்வாஜ், மற்றும் ரயில்வே ஏ.டி.ஆர்.எம்., மற்றும் ஏஜன்டாக செயல்பட்ட 8 பேர் கைது செயய்யப்பட்டு ஜெயிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம் இருந்தது லீக் செய்யப்பட்ட கேள்வித்தாள், மற்றும் லேப்டாப், கோடிக்கணக்கில் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 400 பேருக்கு வினாத்தாள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் இருந்து தவணை முறையிலும் பணம் பெறப்பட்டு இதற்கு சூரிட்டியாக அவர்களது ஒரிஜினல் சான்றுகள் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள். முழுப்பணம் செட்டில் செய்யப்பட்ட பின்னர் சான்றுகள் திருப்பி வழங்கப்படும் என்ற ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் விவகாரம் வெளியானதும் தேர்வானைய தலைவர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில் இந்த ஊழலில் தனது அப்பாவுக்கும் தொடர்பு உண்டு என கைதான தேர்வானைய தலைவர் சர்மாவின் மகன் விவேக் பரத்வாஜ் கூறியுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் இவரும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பலர் சிக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    ரயில்வே தேர்வு ரத்தாகுமா? : இந்த ஊழல் விவகாரத்தை அடுத்து வரும் 27 ம்தேதி நடக்கவிருக்கும் ஏனைய பதவிகளுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தேர்வானைய தலைவர் சர்மாவை கைது செய்ய ரயில்வே துறை அமைச்சகம் கிரீன் சிக்னல் தந்தால்தான் முடியும். ரயில்வே துறை அமைச்சர் மம்தா இதில் என்ன பதில் சொல்லபோகிறார்?

    ...தினமலர்..19.06.2010

  10. #1234
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    ராவணன்...படத்தை வாங்கியது ராஜ் டிவி!........

    ராவணன் தமிழ்ப் படத்தை ரிலையன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ 5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜ் டிவி.

    சிவாஜி, தசாவதாரம் மற்றும் குசேலன் படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு டிவி உரிமை விற்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே.

    இந்தப் படத்தை வாங்க தமிழ் சேனல்கள் சில போட்டியிட்டன. ஆனால் அதிக விலை கூறப்பட்டதால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டது சன் டிவி. கலைஞர் டிவியும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.

    இதற்கிடையில் ரூ 5 கோடியைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தது ராஜ் டிவி.

    இதைவிட நல்ல விலை இந்தப் படத்துக்குக் கிடைக்காது என்ற நிலையில் கப்பென்று ராஜ்டிவியை பிடித்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள்.

    இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜ் டிவி இந்தப் படத்தை வாங்கியிருப்பதை பெரும் ஆச்சர்யத்தோடு பேசுகின்றனர் திரையுலகில்.

    மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை சன் டிவி வாங்கியதில்லை. இருவர்,உயிரே, ஆயுத எழுத்து மற்றும் கடைசியாக வெளியான குரு போன்ற படங்களின் உரிமையை ஜெயா, விஜய் மற்றும் ராஜ் டிவிதான் வாங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

    .....தட்ஸ் தமிழ் 17.06.2010

  11. #1235
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    பிரேசில் 3-1 ஐவரிகோஸ்ட்: சாக்கர்சிட்டியில் காகா அடாவடி, களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.....

    ஜோகனஸ்பர்க், ஜுன்.21 (டிஎன்எஸ்) சாக்கர்சிட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்ட் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பிரேசிலின் பேபியானோ இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஐவரிகோஸ்ட் வீரரின் மார்பில் முழங்கையால் தாக்கிய காகா சிவப்பு அட்டைக் காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'ஜி' பிரிவில் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் நிறைந்த ஐவரிகோஸ்ட் அணி 5 முறை உலக சாம்பியன் பிரேசிலை எதிர்கொண்டது. பிரேசிலுக்கு எல்லாவிதத்திலும் ஐவரிகோஸ்ட் ஈடுசெய்யக் கூடிய அணி என்பதால் போட்டி நடந்த சாக்கர்சிட்டி மைதானம் நிரம்பி வழிந்தது. துவக்கம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் பிரேசிலின் காகா,ரொபின்கோ ஆகியோர் ஐவரிகோஸ்டின் கோலி ஏரியாவுக்குள் பந்தை கடத்தி வந்து பேபியோனோவுக்கு பாஸ் செய்தனர். பேபியானோ அதனை எளிதாக கோலாக மாற்றினார். சுமார் 9 மாதங்கள் கழித்து பிரேசில் அணிக்காக பேபியானோ அடித்த கோல் இது. பயிற்சியாளர் துங்கா இவர் மீது வைத்த நம்பிக்கையை இந்த கோலால் காப்பாற்றி விட்டார்.

    இந்த கோலையடுத்து, பிரேசில் 1-0 என்று முன்னிலை பெற்றது.தொடர்ந்து ஐவரிகோஸ்ட் கடும் போராட்டம் நடத்தியது. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் டின்டேன் அடித்த பந்து பிரேசில் தடுப்பாட்டக்காரர் பிலிப் மெலோவின் கையில் பட்டு சென்றது.டின்டேன் பெனால்டி கேட்க நடுவர் அதனை ஏற்கவில்லை.இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்று பிரேசில் முன்னிலை பெற்றது.

    பிற்பாதி ஆட்டம் துவங்கியதும் 51வது நிமிடத்தில் பேபியானோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஐவரி கோஸ்டின் 3 தடுப்பாட்டக்காரர்களுக்கு அவர் தண்ணி காட்டியது சம்பா சாக்கர் அழகு. இதனால் பிரேசில் 2-0 என்று முன்னிலை பெற்றது. ஆனால் இந்த கோலுக்காக பேபியோனோ பந்தை கடத்தும் போது, அவரது கையில் பந்து பட்டது இதனை நடுவர் கவனிக்கவில்லை.தொடர்ந்து 61வது நிமிடத்தில் காகா கோலை நோக்கி அடித்த பந்தை ஐவரிகோஸ்ட் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.

    இதற்கு அடுத்த நிமிடத்தில் எலானோ பிரேசிலுக்கான 3வது கோலை அடித்தார்.காகா கொடுத்த பாஸ் எலானோ கோல் அடிக்க உதவியது.ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் ஐவரிகோஸ்ட் கேப்டன் திடையர் டிரோக்பா தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார்.இந்த கட்டத்தில் ஆட்டம் பரபரப்படைந்தது.இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டம் ஆடினர். 85வது நிமிடத்தில் காகா ஒரு மஞ்சள் அட்டை பெற்றார்.இதற்குஅடுத்த 3வது நிமிடத்தில் ஐவரிகோஸ்ட் வீரர் கீய்டாவின் மார்பில் காகா முழங்கையால் தாக்க,ஐவரிகோஸ்ட் வீரர்கள் காகாவை அடிக்க பாய்ந்தனர்.மைதானத்தில் இரு அணி வீரர்களுக்கும் அடிதடி உருவாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பிரான்ஸ் நடுவர் ஸ்டீபானே லேனி காகாவுக்கு சிவப்பு அட்டைக்காட்டி களத்தை விட்டு வெளியேற்றினார். மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது.இறுதியில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தற்போது 'ஜி' பிரிவில் பிரேசில் இரு வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐவரிகோஸ்ட் இரு ஆட்டங்களில் ஒரு புள்ளி மட்டும் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் பிரேசில் போர்ச்சுகல் அணியுடன் மோதுகிறது. மற்றொரு ஆட்டத்தில் ஐவரிகோஸ்ட் வட கொரியாவை சந்திக்கிறது.
    (நன்றி தமிழ் ஸ்போர்ட்ஸ் நியுஸ்.காம்)....சென்னை ஆன்லைன் 21.06.2010

  12. #1236
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0

    கவுரவ கொலைகளை தடுக்க புதிய சட்டம் மத்திய அரசு கொண்டு வருகிறது.....

    புதுடெல்லி, ஜுன்.22-

    கலப்பு காதல் திருமண விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே, தங்கள் குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதாக கருதி அந்த காதலர்களை கொல்லும் சம்பவம் வட மாநிலங்களில் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இத்தகைய கவுரவ கொலைகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் பதிலை கேட்டு உள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லி, கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையிலும், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையிலும் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரஇருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பான மசோதா ஏற்கனவே தயாராகி விட்டதாகவும், அந்த மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    ......தினத்தந்தி 22.06.2010

Page 103 of 232 FirstFirst ... 3 53 93 99 100 101 102 103 104 105 106 107 113 153 203 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •